அதிவீராம பாண்டியர்
இயற்றிய

ஆனைமுகக் கடவுள் போற்றி

கடாரத்தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee

    

சுங்கைப்பட்டாணி ஸ்ரீசித்திவிநாயகர் கோயில்
ஸ்ரீசித்திபுத்தி விநாயகர்


                இது காசிக்காண்டத்தின் மொழிபெயர்ப்பில் காணப்படும்
'ஆனைமுகக் கடவுள் போற்றி' வழிபாடு.
    மொழிபெயர்ப்புச் செய்தவர் அதிவீரராம பாண்டியர்.
    
                   விநாயகர் சம்பந்தப்பட்ட எந்த வழிபாடும் செய்த பின்னர் இதைச் செய்வது வழக்கம்.
                    உதாரணமாக,
                    விநாயகர் கவசத்தை ஒரு நாளைக்கு மூன்றுமுறை வீதம் இருபத்தோரு நாள் பாராயணம் செய்வது போன்ற நியமங்களின்போது இதனைச் செய்வார்கள். காரியசித்தி மாலையை நாளன்றுக்கு மும்முறை வீதம் எட்டுநாட்களுக்குப் பாராயணம் செய்யும்போதும் பூஜையின் பூர்த்தியின்போது படிப்பதுண்டு.

        ஆனைமுகக் கடவுளைப் போற்றுதல்

                விநாயகர் பஞ்சகம்
 
        தத்துவா தீத போற்றி            
                            தத்துவப் பொருளே போற்றி
       தத்துவ முதலேஎ போற்றி
                        தத்துவ சொரூப போற்றி
     தத்துவத் தியன்ற தாத்து
                                விதங்களும் ஆனாய் போற்றி
        தத்துவ அறிவுக் கெட்டாத்
                            தயங்கு பே ரறிவே போற்றி.

    உடலினுக் குயிரே போல
                                உயிர்க்குயிர் ஆனாய் போற்றி
         உடலுக்குயிர்க் கறிவு நல்கி
                                    உடலினைக் கழிப்பாய் போற்றி
      டலுயிர் எனப்பின் நீங்கா
                                    ஒற்றுமைப் பொருளே போற்றி
             உடனுறை உயிர்க்கும் எட்டா
                                ஒளிர்பெருஞ் சோதி போற்றி.
    
        விரவுதத் துவத்தின் நீங்கி
            மேலென நின்ற வாவி
        வரமுற உருவு கொண்டு
                  வந்தருள் குரவ போற்றி
            பரவும் ஐந் தொழிலை நீக்கி
                                    உயிரினைப் பணிப்பாய் போற்றி
                  துரியத்தின் உயிரை வாங்கும்
                                சுடர்ப் பெருங்கடலே போற்றி.
        
     பத்தர்கள் வழங்க நின்ற
                                            பலவுங்கைக் கொள்வாய் போற்றி
             புத்திகள் போக த்தார்க்குப்
                                புணர்த்தருள் போகி போற்றி
            முத்தியை யோகத்தார்க்கு
                            முடித்தருள் யோகி போற்றி
            எத்தொழி லவர்க்கும் அந்த
                            பயனருள் இறைவ போற்றி.
        
                        வேண்டிய அடியார்க் கெல்லாம்
                                    விக்கினங் கெடுப்பாய் போற்றி
                           வேண்டிவந் தனை செய் யார்க்கு
                                        விக்கினங் கொடுப்பாய் போற்றி
                                  வேண்டுவார் வேண்டிற் றெல்லாம்
                                    விளைத்தருள் விமல போற்றி
                               மாண்டதுட் டர்களைக் கொல்லும்
                        மறமிகு மள்ள போற்றி.

அன்புடன்

ஜெயபாரதி

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


RETURN TO MAIN MENU