சகரன,் சாகரம், பகீரதன் தபஸ்
பாகம் 2
கடாரத ்தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
இந்தக் கதையில் பார்க்கும்போது பகீரதன்
பெரும்பிரயாசைப் பட்டிருப்பது புலப்
படுகிறது. ஆகையால்தான் செயற்கரிய பெரும் சாதனையைப் புரிவதற்காக
மிகக்கடுமையான விடாமுயற்சியைக் கைக்கொள்வதை 'பகீரதப் பிரயத்தனம்' என்று சொல்கிறோம்.
பகீரதன் தவத்தை இயற்றி சிவனை வேண்டி ஆகாசகங்கையை பூமிக்குக்
கொண்டுவந்ததைக் கதையில் கண்டோம்.
அதை ஒரு பெரிய பாறையில் சிற்பக்கூட்டமாக மாமல்லபுரத்தில்
காணலாம். ஆனால்
அந்த சிற்பக்கூட்டத்தைத் தவறுதலாக 'அர்ஜுனன் தபஸ்' என்று அழைக்கிறார்கள்.
அது உண்மையிலேயே பகீரதன் தபஸ்தான்.
பகீரதன் தபஸ்
மாமல்லபுரம்
ஆகாசகங்கையை பகீரதன் பகீரதப் பிரயத்தனம்
பண்ணி பூமிக்குக் கொண்டுவந்ததால் கங்கைக்கு 'பாகீரதி' என்ற் பெயர் ஏற்பட்டது.
பகீரதனுடைய தபஸ் பற்றிய மாமல்லபுரத்துச் சிற்பக்கூட்டத்தைப்
பார்த்தீர்கள்.
("ஸ¥ப்பரா இருக்கு ஐயா" - அபிராமி பட்டர்)
ஒரு பெரும்பாறையில் அமைந்திருக்கும் இந்த சிற்பக்கூட்டத்தை
'அர்ஜுனன் தபஸ்'
என்றே அனைவரும் அழைக்கிறார்கள்.
ஆனால் உண்மையிலேயே பார்த்தால் அது பகீரதன் தபஸ்தான். அந்தப்
பெரும்
பாறையில் இயற்கையிலேயே அமைந்திருந்த வெடிவு போன்ற அமைப்பை அப்படியே
சிற்பி பயன்படுத்திருக்கிறார். அதை மேலிருந்து கீழே இறங்குகின்ற கங்கைப் பிரவாகமாகக்
கொண்டு அதையே மையமாக வைத்து அதன் இரு மருங்கிலும் பகீரதன் தவக்காட்சிகளை
உருவாக்கி யிருக்கிறார். அனேகமாக சிறந்த சிற்பக்கலை நிபுணராக இருந்த நரசிம்மவர்ம
பல்லவரேகூட அவருடைய மனக்கண்ணில் அந்தப் பாறை வெடிவை வைத்துப் பார்த்து ஒரு
பெரிய Panel of Sculptures-ஆக உருவகப்படுத்திப் பார்த்து,
அந்தக் காட்சியை வரைபடமாக வரைந்து
சிற்பிகளிடம் கொடுத்திருப்பார்.
இது ஓவியர்கள், சிற்பிகளிடையே சகஜமானதொரு விஷயம்தான்.
மைக்கல் ஏஞ்செலோ ஒரு மலையின் உச்சியிலிருந்து தாம் பார்த்த மேகங்களின்
தோற்றங்கள்
தம் மனதில் ஏற்படுத்திய கற்பனையையும் உணர்ச்சிகளையும் வைத்துத்தான்
அவருடைய
சிறந்த படைப்புகளில் ஒன்றாகிய ஸிஸ்ட்டைன் செப்பெலின்(Sistine
Chaple) மேல் விதானத்தில் இறைவன் மனிதனைப் படைக்கும் காட்சியைச்
சித்தரித்தார்.
அந்த இடத்தில் கங்கை மட்டும் பிரவாகமெடுத்து ஓடவில்லை.
ஓவியர்களுடன் சிற்பக்கலைஞர்களின் கற்பனையும் பிரவாகம் எடுத்து
ஓடுகிறது.
அந்த வெடிவில் தண்ணீரில் வாழும் நாகர்கள் போன்றோர் காணப்படுகின்றனர்.
ஆகாச கங்கை இறங்கி பூமிக்கு வந்து விட்டதைக் காண்பதற்காக ஆகாயமார்க்கமாக
தேவர்கள் முதலியோர் கங்கை இறங்கும் இடத்துக்கு வருகின்றனர். பலவிதமான பிராணிகளும்
வருகின்றன. அனைத்தும் அனைவரும் கங்கையாக விளங்கும் வெடிவை நோக்கியிருப்பதாக
அமைத்திருக்கிறார்கள். ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் பகீரதனை அங்கே பார்க்கலாம்.
நீண்டகாலம் தவம் செய்ததில் வயிறெல்லாம் ஒட்டி, நெஞ்சுக்கூடு தெரியும் நிலையில்
தாடி மீசையுடன் தலைவிரித்த நிலையில் தலைக்குமேல் கூப்பிய கரங்களுடன் பகீரதன்
காட்சியளிக்கிறார். கங்கையை வழங்கிக்கொண்டிருக்கும் நிலையில் சூலபாணியாக
சிவபெருமானின் திருக்கோலத்தைக் காணலாம்
சில முனிவர்கள் தபஸ்விகளையும் காண்லாம். அங்கே ஒரு
வேடிக்கையான காட்சியையும் கார்ட்டூன் காட்சி போல் சித்தரித்திருக்கிறார்கள்.
ருத்ராக்ஷப் பூனையைக் காணலாம். தவம் செய்துகொண்டிருக்கும் பூனை; அருகில் வந்து
நின்று பார்க்கும் எலிகள்.
ருத்ராக்ஷப் பூன
பாறையில் கால்வாசிப் பகுதி பூர்த்தியில்லாமல் விளங்குகிறது.
சில சிற்பங்கள்
அரைகுறையாக இருக்கின்றன. சில சிற்பங்களைச் செதுக்குவதற்காகப் பாறையின்
மேற்பரப்பை விளிம்புகட்டி சித்தப்படுத்தியிருக்கிறார்கள்.
அந்த கால்வாசிப்பகுதியில் என்னென்ன சிற்பங்கள் இருந்திருக்குமோ?
ராஜா ரவிவர்மா என்னும் ஓவியரைப் பற்றி எத்தனை பேருக்குத்
தெரியும் என்பது தெரியவில்லை.
ஏனெனில் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர்
இருந்த ஆட்களுக்கு இந்த மாதிரி விஷயங்களெல்லாம் கொஞ்சம் விட்டகுறை தொட்ட குறை
மாதிரி 'தொட்டுக்க தொடைச்சுக்க' என்ற அளவில் தெரிந்திருந்தது.
ஆனால் இப்போதுள்ள இளைஞர்களுக்கு ரவிவர்மாவெல்லாம் தெரிந்திருக்குமா
என்பது தெரியவில்லை. அவர்களெல்லாம் அதைப் பற்றியெல்லாம் பேசக்காணோமே?
ஆங்கிலத்தில் Thumbnail sketch என்று
சொல்வார்கள். பேப்பரெல்லாம் கிடைக்காத காலத்தில் ஓவியத்துக்குண்டான தீம் அல்லது
காட்சி ஏதாவது தட்டுப்பட்டால் உடனேயே
ஏதாவது ஒன்றில் அதனை வரைந்துகொள்ளவேண்டும்; அல்லது
குறித்துக்கொள்ளவேண்டும். ஆகவே சிறியதாக தம்முடைய பெருவிரல் நகத்தின்மீதே வரைந்து
அல்லது எழுதிக்கொள்வது வழக்கம்.
உண்மையிலேயே அப்படித்தான். காதுல பூ இல்லை.
சுருக்கமாகக் கொடுக்கும் அறிமுகத்தை Thumb
nail sketch என்று இக்காலத்தில் சொல்கிறோம்.
அந்த மாதிரி தம்நெய்ல் குறிப்பு - ராஜா ரவி வர்மா 19-ஆம்
நூற்றாண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் ராஜ குடும்பங்கள் ஒன்றில் பிறந்தவர்.
அவர் மேல்நாட்டு ஓவியக்கலையில் ஆர்வம்கொண்டு மிகச்சிரமத்தின்
பேரில் தக்க ஆசிரியரைக் கொண்டு அந்த பாணி ஓவியக்கலையைக் கற்றுக்கொண்டார். படம்வரையும்
பலகை அல்லது சீலை, வர்ணக்கலவை முறைகள், தூரிகையால் தீட்டும்
முறை, Perspective drawing உத்தி ஆகியவற்றை மேல்நாட்டு
மரபின்படி பின்பற்றினார்.
அந்தக் காலத்து கேரளீய ராஜரீக அந்தப்புர
உடை, ஆபரணங்கள், ஒயில், தோற்றம் போன்றவற்றைத் தம் ஓவியங்களில் புகுத்திக்கொண்டார்.
சிவபெருமானுக்கு மீசை, பெண் தெய்வங்கள்
விரித்துவிட்ட கூந்தலுடன் இருப்பதுபோன்றவை அவர் ஏற்படுத்திய மரபுகள்.
மாடல்களாக அந்தப்புரத்துப்பெண்கள்,
இளவரசிகள், வீரர்கள் முதலியோரைப் பயன ்படுத்திக ்கொண்டார்.
அவர் வரைந்த பல ஓவியங்கள் இன்று காணாமல் போய்விட்டன.
'Descent of Ganga' என்ற
தலைப்பில் ஆகாசகங்கை சிவபெருமான் தம்முடைய சடாமுடிக்குள் இறக்கிக்கொள்வதை வரைந்திருக்கிறார்.
ஆகாச கங்கையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க தயாரான நிலையில்
இடுப்பில் இரு
கைகள், பின்புறமாக நீட்டி திரிசூலத்தை இறுகப்பற்றிய மற்றிரு கைகள்,
அகட்டிவைக்கப்பட்ட கால்கள், மேலே உயர்த்திய தலை, விரித்துவிட்ட
விரிசடை ஆகியவற்றுடன் சிவபெருமான் இருப்பதைக் காணலாம். பக்கத்தில் பகீரதன்.
மேலே ஆகாசகங்கை. அருகில் ரிஷபவாகனத்தின் மீது கைய ைவைத்துக் கொண்டு சாய்ந்திருந்தவாறு
பார்வதி. இதனை 'ரிஷபாந்திக' கோலம் என்று சொல்வார்கள்.
கீழேயுள்ள யூஆரெல்லில் அந்தக் காட்சியைக் காணலாம்.
அன்புடன்
ஜெயபாரதி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU