நூற்றுக்கு நூறு
பாகம் 1
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
ஜார்ஜ் பர்ன்ஸ்
எனக்கு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுத்தும் சிலருடைய எழுத்துக்களை
அடிக்கடி படிப்பேன். சிலர் நடித்த படங்களைப் பார்ப்பேன்.
அவ்வாறு உள்ள சிலரில் பழம்பெரும் நடிகர் ஜார்ஜ் பர்ன்ஸ - George
Burns.
நான் ரிட்டயர் ஆன வருடத்தில் அவர் மார்ச் மாதத்தில் இறந்தவர். ஆகவே அது ஞாபகத்தில்
இருக்கும். இப்போது மார்ச் 2006. அவர் மறைந்து பத்தாண்டுகள் ஆகின்றன.
அவர் நூறாண்டுகள் வாழ்வது எப்படி என்று கட்டுரைகள் எழுதி உரைகளும் நிகழ்த்தியர்.
அவர் சொன்னமாதிரியே நூறாண்டுகளும் இரண்டு மாதங்களும் வாழ்ந்தவர்.
அவரும் கொரோனரி பைப்பாஸ் சர்ஜரி செய்துகொண்டவர்தான். ஆனாலும் கடைசிவரை
ரொம்பவும் கலகலப்பாக, பரபரப்பாக, ஏராளமாக வேலை செய்துகொண்டு நடிப்பு, Talk
Shows, Comedy என்று அலையோ அலை என்று அலைந்தவர்.
அவருடைய ட்ரேட் மார்க் நல்ல கறுப்பான கனமான கண்ணாடி, நரைத்த மயிர், எப்போதும்
உதட்டில் தொங்கிக்கொண்டிருக்கும் கனத்த சீகார் சுருட்டு. சீகாருக்கும் சுருட்டுக்கும்
இடையே நிறைய வித்தியாசம் உண்டு. சுருட்டை ஆங்கிலத்தில் Cheroot
என்பார்கள்.
மிகவு ஏழைப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர் நாலாப்புக்குமேல் படிக்கவில்லை.
அவருடைய மனைவியோடு சேர்ந்து நடத்திய ஷோக்கள் கிட்டத்தட்ட இருபதாண்டுகள்
நடந்தது.
அத்தனை ஆண்டுகள் நடித்தபின்னர் அவருடைய எண்பதாவது வயதில் ஆஸ்கர் பரிசு வாங்கினார்.
இதுவரைக்கும் ஆச்க்கர் வாங்கியவர்களிலேயே அவர்தான் மிகவும் வயசாளி.
பல ஆண்டுகளாகப் பல படங்களில் நடித்து விட்டார். பல நாடகங்கள். பல ஷோக்கள்.
பல டாக் ஷோக்கள். பல காமெடி ஷோக்கள். ஆயிரக்கணக்கில் இருக்கும்.
அவர் ஒரு ரிஷி மாதிரி. அதாவது ரிஷி மூலம் போல
அவர் எங்கு பிறந்தவர், எந்த இனத்தைச்சேர்ந்தவர் என்பது எதுவுமே வெளியிடப்பட்டதில்லை.
பர்ன்ஸ் என்னும் பெயர்கூட ஒரு நிலக்கரிக் கம்பெனியின் பெயர்தான். ஜார்ஜ் என்பது
தம்மை அழைப்பதற்குப் பயன்படுத்திக்கொண்ட செல்லப்பெயர்.
மிகச்சிறு வயதிலேயே தெருமுனைகளில் பைசாவுக்காகப் பாடியவர்.
கடைசியாக நான் பார்த்த ஜார்ஜ் ப்ர்ன்ஸ் படம் 18 Again என்னும்
படம். அதில் எண்பத்தோரு வயதான பர்ன்ஸ¤ம் அவருடைய பதினெட்டு வயதுப்பேரனும்
விபத்தில் அடிபட்டுப்போனதில் பர்ன்ஸின் உயிர் அவருடைய பேரனுடைய உடலுக்குள்
போய்விடும்.
எண்பத்தோரு வயது ஆசாமியாக அவர் நடிக்கும்போது அவருக்கு உண்மையிலேயே வயது தொண்ணூற்று
இரண்டு.
இன்னொரு படத்தில் அவர் கடவுளாக நடித்திருப்பார். சீகார் பிடிக்கும் கடவுள்.
ஒரு காட்சியில் ஒரு பிதுங்கிய பல்பசை டியூபிற்குள் மீண்டும் பல்பசையை
நுழையச் செய்துகொண்டிருப்பார்.
இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால்தான் அவருடைய கடைசிப்
புத்தகம் வெளிவந்தது. 110 Years 100 Stories என்னும்
தலைப்பு.
நான் பழைய ரீடர்ஸ் டைஜெஸ்ட் இதழ்களைச் சேகரிப்பவன். இப்போது பத்தாண்டுகளாக
நிறுத்திவிட்டேன்.
அவற்றில் உள்ள கட்டுரைகள், கதைச்சுருக்கங்கள் ஆகியவற்றைப்
பிய்த்து எடுத்து அவற்றை சப்ஜெக்ட் வாரியாக பைண்ட் செய்துவைத்துக்கொள்வேன்.
'Betterment' என்ற தலைப்பில் உள்ள வால்யூமில்
ஜார்ஜ் பர்ன்ஸின் கட்டுரையைப் போட்டு வைத்திருக்கிறேன்.
'How to Live to Be 100 - Or More' என்பது கட்டுரையின் தலைப்பு.
1983-ஆம் ஆண்டில்
அவர் எழுதிய புத்தகமாகிய 'How to Live to Be 100 - Or
More: The Ultimate Diet, Sex, And Exercise Book'-இன் சுருக்கம்.
அருமையான கட்டுரை.
மென்மையான ஹாஸ்யம்; நல்ல வேகமான எளிமையான நடை'
எத்தனையோ முறை படிதுவிட்டேன்.
இன்று காலையில் அதை படிக்கும்போது, 'அதில் அந்த ஆசாமி என்னதான் சொல்லியிருக்கிறார்
என்பதைத் தமிழில் நாமே சொன்னால் என்ன?' என்று தோன்றியது.
திருக்குறள் முனுசாமி என்னும் தமிழறிஞர் திருக்குறளில் மிகவும் பாண்டித்தியம்
பெற்றவர். அவர் திருக்குறளுக்கு உரை நூல் ஒன்று எழுதியிருக்கிறார். இப்போது
கிடைக்கும் உரை நூல்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. எளிமையான உரை. காலத்துக்கு
ஏற்றவாறு அமைந்துள்ளது. எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். யாருக்கும் பயப்படவே
மாட்டார்.
அவர் பெரிய சிந்தனையாளர்.
அவரை முதன்முதலில் மதுரை மருத்துவக் கல்லூரியில் ஒரு பொங்கல் விழாவில் பார்த்தேன்.
அப்போது மருத்துவக் கல்லூரியில
ஜாதீயம் தலை தூக்கியிருந்த சமயம். மாணவர்கள் ஜாதியின் அடிப்படையில் இயங்கிக்
கொண்டிருந்தார்கள். கல்லூரி தேர்தலில்களிலும் அவ்வப்போது ஹாஸ்டல் வளக்கத்தில்
நடைபெறும் ஜாதிச்சண்டைகள், சச்சரவுகள் முதலியவற்றிலும் இந்த மனப்பான்மை பிரதிபலித்தது.
ஆகவே சொற்பொழிவுக்கு முன்னர் அவரிடம் விஷயத்தைச் சொன்னோம்.
அன்று அவர் கிட்டத்தட்ட முழுக்க முழுக்க ஜாதீயத்தைச் சாடியே பேசினார். பாரதியாரைப்
பற்றி சில இடங்களில் குறிப்பிட்டார். அப்போது சொன்னார், "இப்ப பாரதி இருந்தான்னாக்க
"சாதிகள் இல்லையடி பாப்பா",ன்னுட்டுப் பாடியிருக்க மாட்டான். "ஜாதிகள் இல்லையடா
தடியா", என்றுதான் பாடியிருப்பான்", என்றார்.
அவருடைய பேச்சு மிகவும் எளிய நடையில் அன்றாடம் வழங்கும் தமிழில் இருக்கும்.
மிகவும் மெதுவாக அதாவது slow-வாகப் பேசுவார். ஒவ்வொரு வாக்கியத்தில் உள்ள கருத்தையும்
சொற்களை மாற்றிப் போட்டு இரண்டு மூன்று முறை சொல்வார். கருத்தைச் சொல்லிவிட்டு
அதன் பின் அதன் தொடர்பாக விளக்கங்கள், எடுத்துக்காட்டுகள், சம்பவங்கள்,
கதைகள் போன்றவற்றை யெல்லாம் சொல்லிவிட்டு மீண்டும் கருத்தைச்சொல்லி வலியுறுத்துவார்
அவருடைய சொற்பொழிவுகள் தமிழகத்தில் கிடைக்கின்றனவா என்பது தெரியாது.
அவர் கடைசியாக மலேசியாவுக்கு வந்திருந்தபோது அவர் ஜோகூர் என்னும் மாநிலத்தில்
சில உரைகள் நிகழ்த்தினார். அவற்றில் சிலவற்றை அந்த மாநிலத்தைச் சேர்ந்தஊலுத்திராம்
என்னும் சிற்றூரில் இருந்த தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர்
பதிவு செய்திருந்தார்.
அவ்வாறு ஆறு டேப்புக்கள் இருக்கின்றன. எனக்கு அவற்றில் மூன்று
கிடைத்தது.
ஜார்ஜ் பர்ன்ஸ் பேசியிருந்ததை திருக்குறளார் பாணியில் அப்படியே போட்டிருக்கிறேன்.
ஒத்துவருகிறது. அதனால்தான்.
RETURN TO MAIN MENU