நூற்றுக்கு நூறு
பாகம் 2

டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee

 

ஜார்ஜ் பர்ன்ஸ்


                    "நம்ம மஹாஜனங்கள் அடிக்கடி என்னைக் கேட்கிறாங்க, "என்னா ஜார்ஜ், உனக்குத்தான்
87
வயசாகீறுச்சே? எப்படி இருக்கே நீ? இன்னமும் படங்கள் செய்துக்கிட்டு இருக்கே. டெலிவிஷன் பண்ணுறே. நாடகத்தில நடிக்கிற. இசைத்தட்டெல்லாம் போடுற. சீகார் பிடிக்கிற. மார்ட்டீனீ
குடிக்கிற. அழகான சின்னப்பொண்ணுங்களோட சுத்தற......எப்புடி அதையெல்லாஞ் செய்யிற?"

                    ரொம்ப சிம்ப்பில்.    
                    அலட்டிக்கவே வேண்டியதில்லை.
                    உதாரணமா ஒரு பேச்சுக்கு எடுத்துக்குவம். மார்ட்டீனீ இருக்கே, அதையே
எடுத்துக்குவம். ஒரு கிலாஸில ஐஸ் கட்டிய ரொப்பிக்கிறணும். அடுத்தாப்புல கொஞ்சம்
ஜின் போடணும். அதுக்குமேல இம்புட்டூண்டு ட்ரை வெர்மத் லேசா, லேசா. ஒரு ஆலிவையும் போடு. அம்புட்டுத்தான். இப்ப ஒனக்கு ஒரு மார்ட்டீனீ ரெடி. இல்லையா?

                    இப்ப எல்லாம் வயசாகிக்கிட்டிருக்கேன்னுட்டு கவலையே படக்கூடாது. துருப்பிடிச்சு போயிடுவோமோன்னுட்டுத்தான் கவலைப்படணும். ஆகையினால நான் என்ன செய்யிறேன்னாக்க..... தெனசரி நெறையா எக்ஸர்ஸைஸ் செய்யிறேன்....ரொம்ப தூரம்
நடக்கிறேன். நடக்கிறது இன்னம் சுளுவானது. ஒரு மார்ட்டீனியச் செய்யறதவிட ரொம்ப
ரொம்ப சுளுவானது. இப்பப் பாரு. மொதல்ல்ல ஒரு கால முன்னால தூக்கி வைப்பேன். அடுத்தாப்புல அதுக்கு முன்னால இன்னொரு கால வைப்பேன். அதுக்கப்பறம் முந்துன கால். இப்புடியே...... எனக்கே தெரியிறதுக்கு முன்னால, என்ன அறியாமலயே நான் நடந்துகிட்டே இருப்பேன். இதுக்கு ஆலிவும் வேண்டியதில்லை.

                    தெனசரி காலாங்காத்தால நான் ஒண்ணரை மைல் நடந்திர்ரேன்.
                    அதான் என்னக் கேட்டா என்ன சொல்லுவேன்னாக்க... எப்ப எப்பவெல்லாம் சந்தர்ப்பம் கெடக்கிதோ, அப்பல்லாம் நடந்திருங்க. இது இலவசமா உள்ளதுதானே. காசா பணமா. ஒண்ணு
மில்ல. நீ நல்லாவும் இருப்பே. கட்டாவும் இருப்பே. இல்லியா?

                    நடக்கிறது போரடிக்கும்னுட்டு நெனக்கிறவனுவ இருப்பானுவ. அவனுஹ என்ன செய்யனும்னாக்க, கோல்·ப் வெளயாடப் போயிறணும். அது ஒரு அருமையான வெளையாட்டு. அதுல நெறய காத்தோட்டமா இருக்கும். தெறந்தவெளி வேற. என்ன ஒரு பிரச்னைன்னாக்க, நான் மெம்பரா இருக்கிற க்லபுல கோல்·ப் வெளையாடுறவனுவ நடக்குறதேயில்ல. சின்னச் சின்ன வண்டியில போறானுவ. ஆகையினால என்னாச்சு? மெம்பரெல்லாம் சொங்கியா இருக்கானுவ. ஆனால் கோல்ப்· பையத்துக்கிக்கிட்டே பின்னாலயே வந்துக்கிட்டிருக்கானுவல்ல. அந்தப் பசங்க கட்டுமஸ்தா இருக்கானுவ.
                    என்னத்தச் சொல்றது?
                    இப்ப நீ நூறு வயசுக்கோ அல்லது அதுக்குமேலயோ உசிரோட இருக்கணும்னு நெனச்சய்னாக்க சும்மா ஒரு எடத்துல்ல ஒக்காந்துகிட்டு அது வரட்டும்னுட்டு நீ எதிர்பார்த்துக்கிட்டு இருக்கக்கூடாது. அத நீதான் எதிர்நோக்கித் தேடிக்கிட்டுப் போகணும்.
                    இதுல ஒன்னையவே நீ ஏமாத்திக்கக்கூடாது.
                    ஒனக்கு வயசாகிறபோது கொஞ்சம் தேஞ்சு போயிறுவே. கொஞ்சம் ஸ்லோவாப் போயிறுவே.
                    ஆனா இப்பப் பாரு. எனக்கு 87 வயசாச்சு. எனக்குப் பதினெட்டு வயசுல செய்ய
முடியாதது எதையும் இப்ப எம்பத்தேழுல என்னால செய்யமுடியாதுங்கறது இல்லை.
ஆனால் ஒண்ணு. அப்ப பதினெட்டுல ரொம்ப பரிதாபமா இருந்தேன். இருவத்தஞ்சுலயும்
அப்புடி ஒண்ணும் ஹாட்டா இல்ல. எல்லாத்தையும் இப்ப இன்னைக்காக சேத்து வச்சிருந்தேன். பீத்திக்கிறது எனக்குப் பிடிக்காது. இருந்தாலும் சொல்றெனே. இப்பங்குற தற்காலம்ங்கிறதுலதான் நான் எக்ஸ்பெர்ட். யாரும் பிடிச்சுக்க முடியாது.

                    நீண்ட ஆயுளுக்கு என்னோட மத்த ரகசியமெல்லாமே இதுதான்.

                    பாசிட்டிவா எப்பவும் எதையும் நெனை. இப்ப நீ நீண்ட ஆயுளுக்கு எது ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரே சங்கதின்னு என்னைய கேட்டேன்னாக்க இதத்தான் சொல்லுவேன். கவலைய வுடு. ஸ்ட்ரெஸ¤க்கு எடம் கொடுக்காத. டென்ஷனை ஏத்தி வச்சுக்காத. அதெல்லாம் நல்லதேயில்ல.  நீ கேக்கலைனாலும் இதைத்தான் நானே சொல்லுவேன். கவலை, ஸ்ட்ரெஸ், டென்ஷன் எல்லாமே நல்ல விஷயமில்லை. அத்தோட ஆயுளக் குறுக்கிவிட்டுரும். வேணாம் அதெல்லாம்.
                    என்னோட மனப்பான்மை என்னன்னாக்க.....இப்ப ஏதாவது ஒண்ணு நம்ம கண்ட்ரோல்ல இல்லையா, அப்புறம் அதப் பத்தின கவலையே படப்படாது. அதைப் பத்தி என்னமும் நம்மனால செய்யமுடியும்னாக்க.....அப்பவும் கவலயே படப்படாது. அதான் என்னமாவது செஞ்சு சரி
பண்ணிக்க வழியிருக்கே. அப்பறம் ஏன் கவலைப்படுறே?

                    நான் ஏரோப்பிலேன்ல போறபோது அப்படித்தான். ஏரோப்பிலேன் ஏர் பாக்கெட்டுல மாட்டிக்கிட்டு குதிச்சாக்க நான் கவலையே படமாட்டேன். ஏரோப்பிலேன ஓட்டுறதுக்கு எக்கச்சக்கமா சம்பளம் வாங்கிக்கிட்டு ஒர்த்தன் - பைலட் இருக்கான். அவனுல்ல கவலைப்
படணும்.  நான் சின்னச் சின்ன ஏரோப்பிலேனுலயெல்லாம் பறக்குறதேயில்லை. அதுக்கு
வேற காரணம் இருக்கு. அப்புடி கீழ விழுகிறதுன்னாக்க ஒரு ஆடியன்ஸோட விழுகணும்னு நெனக்கிறேன்.

                    சில வருஷத்துக்கு முன்னால ஹார்ட்டுல பைப்பாஸ் செஞ்சுக்குறபோதும் அப்புடித்
தான். கொஞ்சமும் பயப்படல. அதெல்லாம் நம்மகிட்ட இல்லையே. அந்த சர்ஜனோட சமாச்சாரமாச்சே.
அனெஸ்தீஸியாவுலயிருந்து வெளில வந்ததும் டாக்டர் கேட்டார்," ஜார்ஜ்
நீ இப்ப ரொம்ப நல்லா இருக்கே".

                    நான் சொன்னேன், "நான் ஆப்பரேஷன் சமயத்துலகூட கொஞ்சமும் அலட்டிக்கவே யில்லை."
                    டாக்டர் கேக்கிறார், "அதான். அதெப்படி நீ அவ்வளவு ரிலேக்ஸ்டாக இருந்தே? நான் அப்படியே பயத்துல பதறிப்போயிருந்தேன்".
                    அப்புறமும் நான் கொஞ்சமும் அலட்டிக்கவேயில்லை.
                    அப்புறம் பில்லைக் கையில குடுத்தங்கள்ல......அப்பத்தான் மயக்கம் அடிச்சுருச்சு.
                    எப்பவும் சுறுசுறுப்பா இருக்கணும்.
                    சில ஆசாமிகளுக்கு ரிட்டயர்மெண்ட்டுன்னா நல்லா இருக்கும். அவங்க ரொம்ப
சந்தோஷமா இருப்பாங்க. ஆனால் ரொம்பப் பேருக்கு அது நெறயா பிரச்னையக் கொடுக்கும்.

                    வேலைல இருக்கும்போது எதை எதையெல்லாம் சொகுசாவும் கேளிக்கையாவும் நெனச்சமோ அதெல்லாம் ரிட்டயரான பின்னாடி அப்படியெல்லாம் தோணமாட்டாது.
                    ஒரு கோல்·ப் பைத்தியம் ஒர்த்தன். மேஜைய விட்டுக் கெளம்பினதும் நேர கோல்·ப் கிலப்தான். ஒம்போது ஹோல் போட்டுறுவான். அப்புறம்தான் வீட்டுக்கு. இப்ப ரிட்டயர்மெண்ட்டுக்கு அப்புறம் அவன் எத்தனை ஹோல் வேணுன்னாக்க ஆசை தீர வெளையாடலாம். ஆனா ஒண்ணு. ஒரு மாசத்துக்கப்புறம் இது சலிச்சுப்போயிரும். மீன் பிடிக்கப்போயிறுவான். அதுக்கு வேண்டப்பட்ட தளவாடச்சாமானெல்லாம் வாங்கிப்பிடுவான். எங்கடா தண்ணி கெடக்குன்னுட்டு தேடிக்கிட்டு, பெரிய கார வாங்கி, அதுக்குமேல கூரையில
ஒரு நல்ல படகைக் கவுத்துக்கிட்டு போயிறுவான். அங்க ஒரு மாசத்துக்கு மீனயே பிடிச்சுக
்கிட்டு மீனயே பாத்துக்கிட்டு இருப்பான். இதுவும் சலிச்சுப்போயிறும். இன்னோரு மீன அவன் பாக்குறதுக்குக்கூட அவனுக்குப் பிடிக்காமப் போயிறும். அது பரவாயில்லை. ஏன்னாக்க மீனுஹளுக்கும் அப்படித்தான். அவனப் பாக்க அதுஹ சகிக்கமாட்டாதுஹ. ஆகையினால வீட்டுலயே இருக்கலாம்னுட்டு முடிவு பண்ணிக்கிட்டு வீட்டுல இருப்பான். அவன் பொண்டாட்டி மூஞ்சிய ஒரு மூணு மாசத்துக்குப் பாத்தப்புறம் அவன் மறுபடியும் மீனே தேவலைன்னுட்டு
மீன் பிடிக்கப்போயிறுவான்.

                    என்னைப் பொறுத்தவரைக்கும் ரிட்டயர்மெண்ட்டுல என்ன டெஞ்சர்னாக்க, உன்னோட் அட்டிட்டியூட அது எப்படியெல்லாம் பாதிக்கும்ங்கறதுதான்.
                    ஒனக்கு அத்தனை நெறயா நேரம் ஒங்கையில இருக்குன்னாக்க நீ வயாகிப்போயிட்டதா நடிப்பே. அப்படியே நடந்துக்குவே. அது ரொம்பப் பெரிய தவறு. நானும் ரொம்பப் பேரைப் பாத்திருக்கிறேன். அவங்களுக்கு அறுவத்தைஞ்சாகட்டும். உடனேயே முதுமையா
இருக்கறதுக்குப் ப்ராக்டிஸ் பண்ணுவானுவ. ஒக்காந்தா எந்திரிச்சா முக்குறது மொணங்குறது இதுக்கெல்லாம் பயிற்சி பண்ணிக்கிட்டு இருப்பானுஹ. இப்படியே செய்துகிட்டேயிருந்து அவனுஹளுக்கு எழுவதாகும்போது அவனுஹ முதுமைங்குறதுல எக்ஸ்பெர்ட்டாகிவிடுவானுவ.

                    நான் அப்படியில்லை.
                    என் வயசுக்கு நீயெல்லாம் வரும்போது ரொம்ப சுறுசுறுப்பா நீ இருக்கவேண்டி
யிருக்கும். சுறுசுறுப்பா இருக்கிற மாதிரி என்னத்தையாவது செய்துக்கிட்டே இருக்கவேண்டும். படுக்கைய விட்டு ஜரூராக ஏந்திரிக்கிறதுக்கு நீ என்னத்தையாவது செய்யணும். நானெல்லாம் படுக்கையில இருந்துக்கிட்டு ஒரு காசயும் சம்பாதிச்சதேயில்லை. ஆமா. படுக்கையிலேர்ந்து ஏந்திரிக்கிறதுக்கு என்னமாவது வழி கண்டுபிடி. ஏதாவது பொழுதுபோக்கு, ஒரு கடமை, ஒரு பிசினஸ், ஒரு அழகான இளம்பெண் - பாத்தியா, பாத்தியா.....மறுபடியும் படுக்கைக்கே போயிட்டம். என் வயசில கொறஞ்ச பட்சம் அதப் பத்திப் பேசவாவது விடுங்கப்பா.

                   ஒனக்கே நீ சவால் விட்டுக்க.
                    என் பொஞ்சாதி கிரேஸ் அம்பத்தெட்டு வயசில ரிட்டயர் ஆனபோது நானுமே
ரிட்டயராகி யிருக்கலாம்தான். எல்லா வசதியும் இருந்துச்சு. இப்பவும்கூட நான் இப்ப என்னவெல்லாம் செய்துட்டு இருக்கேனோ அதெல்லாம் ஒண்ணக்கூட செய்யவே வேண்டியதில்லைங்கிறேன். உலகம் பூறா சுத்திக்கிட்டு டாக் ஷோ, பாட்டுக்கச்சேரி,
காமெடி ஷோ, சினிமாப் படம், டெலிவிஷன் ஷோ, ரிக்கார்டிங், அப்புறம் எல்லாத்துக்கும்
மேல ஒரு ஸெக்ஸ் ஸிம்பலாகத் திகழுறது....இதுஹளயெல்லாம் வச்சிக்கிட்டு திரியவே வேண்டியதில்லை. தேவையுமில்ல. நெஜமாலுமே.

                    எங்கிட்ட ஒரு மானேஜர் இருக்கான். இர்விங்னு பேரு. அவன் எனக்கு இன்னம் ஐஞ்சு வருஷத்துக்கு ஷோ, நிகழ்ச்சியெல்லாம் புக் பண்ணிவச்சிருக்கான். நான் எப்பவாவது ரிட்டயர்மெண்ட் பத்தி பேசினாக்க ஒடனேயே அழ ஆரம்பிச்சுர்ரான். நான் இப்ப ரிட்டயராக
முடியாது. பாவம் அந்தப் பொடியனோட மனசு ஒடைஞ்சிபோயிரும். ஆகையினால பாருங்க, இர்விங்குக்கு வயசாகுற வரைக்கும் நான் வேலை பாத்துக்கிட்டேயிருக்கவேண்டியதுதான்.

                    எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலத்துக்கு வேலை செஞ்சுக்கிட்டேயிருக்கணும்னு நான் ரொம்ப அழுத்தமா நம்புறேன். அப்படி முடியலைன்னாக்க ஏதாவது ஒனக்கு இண்டரஸ்ட் குடுக்குறதா பாத்துவச்சுக்க.  அதது நடக்கட்டும்னு காத்துக்
கிட்டு இருக்காதே. அதத நடக்கவையி; அதத நடத்திவையி.

                    தோ பாரு. இத ஞாபகம் வச்சுக்க. ஒனக்கு வயசாகுறத நீ தடுத்துக்கமுடியாது. ஆனால்
நீ முதுமை அடையுறத நீ நிச்சயமா தவுத்துக்கமுடியும்.

                    நான் என்னைய இளமையா நெனச்சி அப்படியே நடந்துக்குறதப்பத்தி பேசும்போது,
நான் உண்மையிலயே என்ன பேசுறன்னா, இதுதான். சுறுசுறுப்பா இருக்கிறது, உற்சாகமாக இருக்கிறது, அடுத்தாப்புல உள்ளதுஹளுக்கு திட்டம் வச்சிருக்கிறது, நாளக்கின்னு ப்ரோஜெக்டுகள் வச்சிக்கிறது, ஆட்களச் சந்திக்கிறது, ஏதாவது உருப்படியாச் செய்யிறது
இப்படி இதுஹளப் பத்தித்தான் பேசுறேன்.

                    நான் பிற்காலத்த - எதிர்காலத்த - அதைத்தான் பார்க்குறேன். ஏன்னாக்க அதுலதான்
நான் என்னோட சொச்ச வாழ்நாளயெல்லாம் கழிக்கப்போறேன்.

                    கடந்தகாலத்துல வாழ்ந்துக்கிட்டு இருக்காங்களே பல ஆட்கள் - அவங்களப் பாத்து
நான் உண்மையிலேயே பரிதாபப்படுறேன். பழைய காலத்துல எல்லாமே ரொம்ப மலிவா இருந்ததுங்குறது எனக்கும் தெரியும். ஆனால் காருல நீ ரியர் வியூ கண்ணாடியயே பாத்துக்
கிட்டு கார ஓட்டுனாக்க எங்கயாவது போயி இடிச்சுப்புடுவே. கொறஞ்சபட்சம் கழுத்துப் பிடிச்சுக்கும்.

                    இப்ப உன் வாழ்க்கையில ஒண்ணுமே இல்லை; போக்கிடமும் இல்லைன்னு நீ நெனச்சாக்க, சிறு சிறு அடியா எடுத்து வச்சு வாழ்க்கைய கடக்கப் பாரு. சிறு சிறு அடிகளா எடுத்துவச்சா, போயிச் சேர்ரதுக்கு அதிக காலம் பிடிக்கும்ல?         
                    நான் கடந்த காலத்துல வாழல்லை.
                    பெவர்லி ஹில்ஸில ஒரு அழகான பெரிய வீட்டுல நான் வாழுறேன். அது இன்னும் ரொம்ப சொகுசா இருக்கு. உண்மையிலேயே சொல்றேன். நம்புனா நம்பு. நான் என்னோட நடிப்பு முதலிய சமாச்சாரம் சம்பந்தப்பட்ட நியூஸையெல்லாம் வெட்டி நோட்டுப் புஸ்தகத்துல ஒட்டி எடுத்துவச்சு பாத்துக்கிட்டு இருக்கிறதேயில்லை. அதெல்லாம் பழைய குப்பை. அப்ப, அந்தக் காலத்துல அந்த விமரிசனம் முதலிய விஷயங்களை மொதமொதல்ல்ல படிக்கும்போதே மனசுக்குச் சங்கடமாயிருந்துச்சு. இப்ப என்ன செய்யிறேனோ அத விரும்புறதே எனக்குப் பிடிக்குது. நேத்து எனக்குப் பிடிச்சதைப் பத்தி இப்ப நெனைக்கிறது இல்லை. நேத்து உள்ள காதல் நேத்தோட போச்சு.
                    ஒரு பழைய சொல்வழக்கு இருக்கு: "வாழ்க்கை நாற்பதில் தொடங்குகிறது".
                    அது என்ன கேணத்தனம்?
                    ஒவ்வொரு நாளும் காலையில ஏந்திரிக்கும்போதுல்ல வாழ்க்கை தொடங்குது?
                    மனச தொறந்து வச்சுக்க. சும்ம ஒக்காந்துக்கிட்டு இருக்காதே. என்னத்தையாவது
செய்யி. இங்கிலிஷ் கால்வாய நீந்து. தடுமனுக்கு மருந்து கண்டுபிடி. சாய்வு நாற்காலியில
நயாகரா நீர்வீழ்ச்சியில எறங்குகிற மொத ஆளா இரு. பாத்திய! சாத்தியக்கூறுகளுக்கு
முடிவேயில்ல.
                   
                    எதுவுமே தோணலைனா யாராவது எதிர்பார்க்காத ஆளாப்பாத்து ஏதாவ்து நல்லதச்
செய்யி. எத்தனையோ கொஞ்ச வயசுப்பொண்ணுங்களுக்கு ரோட க்ராஸ் பண்ணுறதுக்கு கையப்பிடிச்சிக் கூட்டிக்கிட்டுப்போயி அந்தாண்டப்பக்கம் விட்டுப்புட்டு ஒதவி செஞ்சிருக்கேன்.

                    நல்ல பாசிட்டிவ் அட்டிட்டியூட்; அதோட கொஞ்சம் அதிர்ஷ்டம். இது மட்டும் இருந்தா
ஏன் நீ நூறு வயசுக்கு இருக்கமுடியாதுன்னு தோணலை. அத மட்டும் நீ பிடிச்சுக்கிட்டே, நீ நிச்சயமா ஒரு சாதனையாளந்தான். ஏன்னாக்க நூறு வயசுக்கு மேல ரொம்ப ரொம்பக் கொஞ்சப்பேருதான் செத்துப்போறவங்க இருப்பாங்க.

    
ஜெயபாரதி

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


RETURN TO MAIN MENU