ஆசிரியமூலம்

டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee



                    Shakespeareஇன் உண்மைப் பெயர் தொ¢யுமோ?
                    சொல்றேன், கேளுங்க.
                    அந்தக்காலத்தில் ஆங்கில மொழி வளர்ச்சியில்லாமலிருந்தது.
                    ஜெ·ப்¡¢ சாஸருடைய "கேண்டர்பா¢ டேல்ஸ்" போன்ற சமாசாரங்களை வைத்துக்கொண்டு அழுது வடிந்துகொண்டிருந்தது.
                    ஒருநாள் காலை. லண்டன் நகா¢ல் வெஸ்ட் மின்ஸ்டர் அபியின் ஒரு பகுதி.


ரெண்டாம் எலிஸபெத்துக்கு முந்தின எலிஸபெத்

             "Arise, Sir Walter Raleigh!" என்றொரு பெண்ணின் குரல் ஒலித்தது. முதலாம் எலிசபெத் மகாராணியின் முன் மண்டியிட்டு நைட் விருதைப் பெற்றுக்கொண்ட வால்டெர் ராலி எழுந்து நின்றார்.



பெரிய கவிஞர், மகாவீரர், போரியல் நிபுணர், ஆராய்ச்சியாளர், நாடுகள்
கண்டுபித்தவர், பிரிட்டானிய சாம்ராஜ்யத்தின் சிற்பிகளில் ஒருவர்,
முதலாம் எலிஸபெதின் அவைக்களத்தில் அதிக செல்வாக்கு உடையவர்.
ராணியின் செருப்பில் சகதி படக்கூடாது என்று தம்முடைய அங்கியைச்
சகதியின் மேல் போட்டு, குனிந்து, பணிந்து, பவ்யமாக ராணியை
அடியெடுத்து வைக்குமாறு செய்தவர்.
இவ்வளவு இருந்தும் அவர் பிரபலமானது நானூறு ஆண்டுகளுக்குப்
பின்னர் தோன்றிய சைக்கில் வண்டியால்.


                    அவா¢டம் எலிசபெத் , "ஸர் ராலி! நமக்காகவும் நம் பி¡¢ட்டானியாவுக்காகவும் நீர் பெரும்தொண்டு ஆற்றிவிட்டீர். புதிய பூமியில் நமக்காக ஒரு குடியேற்றத்தைத் தோற்றுவித்து அதற்கு நம்மைப் பெருமைப்படுத்தும் வண்ணம் வர்ஜீனியா என்று பெயா¢ட்டீர். எஸ்பானிய அர்மாடாவை மூழ்கடித்தீர். இன்னும் ஒன்று பாக்கியுள்ளது. அது நம் ஆங்கில மொழிக்கு நீர் செய்ய வேண்டிய கடமை.
                நம் மொழி வளம் குன்றி இருக்கிறது. நம் பரம்பரை விரோதிகளின் மொழியாகிய ·பிரெஞ்சும் இத்தாலியமும் எஸ்பானியமும் போர்த்துகீசியமும் வளர்ந்து வருகின்றன. ஆகவே நம் ஆங்கில மொழியைத் தகுந்த விற்பன்னர்களைக் கொண்டு, இலக்கியநயம் மிகுந்த, வளமிக்க மொழியாக்க ஏற்பாடு செய்யும். ஒரு காலத்தில் பி¡¢த்தானியா எழுகடல்களையும் ஆட்சிபு¡¢யப் போகிறாள். அப்போது ஆங்கிலம் உலகெங்கும் பரவும்; அந்த  பி¡¢த்தானியப் பேரரசுக்கு உ¡¢ய வித்தை நாம் ஊன்றிவிட்டோம்.
                 ஆங்கிலம் உலகப் பொதுமொழியாகும் அடிப்படையையும் நாமே துவங்குவோம்".
                ஸர் ராலி கூறினார், " மகாராணி! அதையும் நான் யோசித்துத்தான் வைத்திருக்கிறேன். தற்சமயம் உலகில் மிக உன்னத மொழிகளாக விளங்குபவை இந்தியாவின் சமஸ்கிருதமும் தமிழும்தான் என்று  வெனிஸ் நகர அறிஞர்களும் அரபு ஞானிகளும் கூறுகின்றனர். ஆகவே நான் அடுத்த கப்பலிலேயே இந்தியா சென்று நல்ல இந்திய மொழி அறிஞரைக் கூட்டிவருகிறேன். கவலை வேண்டாம்."

அடுத்த படலம்:

                லண்டன் நகா¢ல் அரண்மனை. எலிசபெத் முன் ஸர் ராலியும் இன்னொருவரும். அந்த இன்னொருவர் - மெலிந்த தேகம்; கூ¡¢ய நாசி; இடையில் பஞ்சகச்சம் கட்டியுள்ளார். நீண்ட குடுமி ஒன்று அவருடைய தலையை அலங்கா¢த்தது.
                ஸர் ராலி அறிமுகபடுத்தினார்.
                "மகாராணி! இவர்தான் இந்தியாவின் மிகச் சிறந்த மொழியறிஞர்;   தமிழ்நாட்டிலுள்ள "அஸ்திரபாடி" என்னும் ஊ¡¢னர். சமஸ்கிருதத்திலும்     தன்னுடைய தாய்மொழி தமிழிலும் பெரும்புலவர். முத்தமிழில் இயல், இசை,     நாடகம் என்னும் வகைகளில் இவர் நாடகம் என்னும் துறையில் சிறந்தவர்.
                பெயர் சுப்பையர். சிறந்த குடுமி வைத்திருப்பதால் அவரை எல்லோரும் "குடுமி சுப்பையர்" என்று அழைப்பார்கள்."
                அதற்கு மகாராணியார்,
                "குடுமி சுப்பையர் அவர்களே! உம் வரவு நல்வரவாகுக. "ரோமில் இருக்கும்போது ரோமர்களைப்போல் இரு", என்று என் தந்தை எட்டாம் ஹென்¡¢ அடிக்கடி கூறுவார். அதற்கிணங்க
நீர் நம் ஆங்கில மொழியை வளப்படுத்தும் வேளையில், நீரும் நம் ஆங்கிலேயரைப் போன்றே மாறவேண்டும்.

                உமக்கென்று சர்வமானியமாக "அவன்" நதிதீரத்தில் ஒரு ஊரை தானம் செய்கிறோம். உம்முடைய பழைய ஊ¡¢ன் பெயரான 'அஸ்திரபாடி' என்னும் பெயரையே அதற்கு வைத்துக ்கொடுக்கிறோம்.
                ஆகவே உம்முடைய உடைகளை நீர் மாற்றிக்கொள்ளும்.     ஆங்கிலேயர் பாணியில் மீசை, குறுந்தாடி வைத்துக்கொள்ளும். ஸர் ராலி தன்னுடைய சிகையலங்காரக் கலைஞா¢டம் கூட்டிச்செல்வார். அத்துடன் உம்முடைய குடுமியை நீர் வெட்டிவிட வேண்டும். ஆங்கிலேயர் பாணியில் நீர் சேக்கு(cropped-hair style) வெட்டிக்கொள்ளும்.
                இன்றிலிருந்து உம்முடைய பெயர் "குடுமி சுப்பையர்" அல்ல.
                "சேக்கு சுப்பையர்"!"

மூன்றாம் படலம்:



சேக்குச் சுப்பையர்


                இப்படியாகத்தனே குடுமி சுப்பையர், சேக்கு சுப்பையர் ஆக மாறி, தமக்கு சர்வமானியமாக அளிக்கப்பட்ட அஸ்திரபாடியில் இருந்துகொண்டு,  

"யூரோப்பகண்டே, பஸ்சிம பார்ஸ்வே, ஆங்க்லி தேசே, அவன் நதிதீரே, அஸ்திரபாடி க்ராமே....... சேக்குச்சுப்பையர் சர்மன் நாமதேயஸ்ய..... அமுக..... அமுக.....கரிஷ்யே",

என்று சொல்லி மிகக்கிரமமாக பூஜை புனஸ்காரம், சந்தியாவந்தனம் ஆகியவற்றையும் செய்து, ஆங்கில மொழியில் மிகச் சிறந்த பல நாடகங்களைப் படைத்து, ஆங்கில மொழிக்கு உலகில் பெரும் பெருமையை ஏற்படுத்தினார்.

                
(வரலாற்றுப் பின்குறிப்பு: நாளடைவில் அவருடைய சேக்குச் சுப்பையர்" என்னும் பெயர் ஆங்கிலமயமாகி "Shakespeare" என்றாகியது.
     அவருடைய ஊ¡¢ன் பெயராகிய அஸ்திரபாடி "Stratford" என்று மருவியது. இதைத்தான் "Anglizisation" என்று மொழி வல்லுனர்கள் குறிப்பிடுவார்கள்.)  

அன்புடன்

ஜெயபாரதி  


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

             
RETURN TO MAIN MENU