அவிழ்க்கமுடியாததை 
வெட்டு!


SOLUTION TO UNSOLVABLE PROBLEM

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி



அலெக்ஸாண்டரின் பேரரசு.
துருக்கியின் நடுவில் கார்டியன் நகரம் இருக்கிறது
************

                    ஒரு ஸ்தூல, ஜட முடிச்சைப் பற்றியும் சொல்கிறேன். உலக வரலாற்றை மாற்றிய
முடிச்சு அது.

                    இதற்காக நாம் மூவாயிரம் ஆண்டுகள் வரலாற்றில் பின்னோக்கிச் செல்லவேண்டும். அத்துடன் நாலாயிரம் மைல்கள் வடமேற்கே செல்லவேண்டும்.

                    இப்போது துருக்கி என்று பெயர் பெற்றிருக்கும் நாட்டில் இரண்டு பகுதிகள் உண்டு.
ஒன்று ஐரோப்பிய துருக்கி. இன்னொன்று ஆசியத் துருக்கி. இது அனட்டோலியா என்னும் தீபகற்பத்தில் இருக்கிறது.

                    பழங்காலத்தில் அனட்டோலியாவின் ஒரு பகுதியின் பெயர் 'ஆசியா'. அது ஒரு சிறிய பிரதேசம்.
                    எப்படி சிந்து நதிக்கு - இண்டுஸ் நதிக்கு அப்பால் கிழக்கில் இருந்த நாடுகள் எல்லாமே இண்டிக்கா அல்லது இண்டியா என்று பெயர் பெற்றனவோ, அதுபோலவே 'ஆசியா' என்னும் பிரதேசத்துக்கு அப்பால் கிழக்கே இருந்த பிரதேசங்கள் எல்லாமே 'ஆசியா' என்ற பெயரைப் பெற்றன. ஒரிஜினல் ஆசியாவுக்கும் மற்ற இடங்களுக்கும் இடையே வேறுபாடு காணவேண்டும் என்பதால் ஆசியாவை 'ஆசியா மினோர்' என்றும் மற்றதை Greater Asia என்றும் பின்னர் வெறும் ஆசியா
என்ற பெயரால் மட்டும் குறிப்பிட்டனர். ஆசியா மைனர் அல்லது மினோர் பெயர் மறைந்து
அதற்குப் பதில் Near East என்ற பெயர் ஏற்பட்டது.

                      அனட்டோலியாவில் பழங்காலத்தில் ·ப்ரிஜியா என்னும் நாடு ஒன்று இருந்தது. ·ப்ரிஜியாக்காரர்களும் தமிழர்களைப்போல்தான். நாம் மூவேந்தர்கள், பதினென் வேளிர், தொண்டைமான், அதியமான், மலையமான், அந்தமான் இந்தமான் என்று பல மான்கள் முதலியவர்களிடையே நாட்டைப் பிரித்துவைத்துக்கொண்டு அந்தந்த குட்டி குட்டி நாட்டுக்காக அரசுக்காக போர்வெறியுடன் மூர்க்கமாக ஒருதலைமுறைக்கு நான்கு போர்கள்  என்ற வீதத்தில் போரிட்டு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பெரும் நோக்குடனும் பெருந்தன்மையுடனும் பெருவாழ்வு வந்தோமோ, அதுபோலவே இந்த ·ப்ரிஜியர், கிரேக்கர் எல்லாருமே City States அது
இது என்று பிரிந்து வாழ்ந்து சச்சரவுகளுடன் இருந்துவந்தார்கள். நாளடைவில் ·ப்ரிஜியர்கள் பல குடியினராகப் பிரிந்து கண்டதனமாக சிதறிப்போய் வாழ்ந்து வந்தனர்.


                    அப்போது ஒரு ஓரக்கல் சொல்லியது: "எப்போது ஒருவன் ஒரு பெரிய மூடுவண்டியுடன் உங்களின் தெய்வ சன்னிதிக்கு வந்து சேர்கிறானோ, அவன் உங்களின் அரசனாவான்", என்றது.

                    ஓரக்கல் தமிழ்நாட்டிலும் இருக்கின்றன. மைல் கல், சுமைதாங்கிக்கல் எல்லாமே ஓரக்கல்தான். சாலையின் ஓரத்தில் இருக்கிறது அல்லவா? ஆனால் அந்த ஓரக்கல் என்னும் சொல்லுக்குத் தமிழ் மூலம். கருணைக்கிழங்கு லேகியம்தான் கொடுக்கவேண்டும். அதுதானே
தமிழ் மருந்து. இல்லையா?


                   நான் குறிப்பிட்டுள்ள ஓரக்கல்(Oracle) என்பது கணினி மொழியும் அல்ல. அது ஒரு ஆரூட அருள்வாக்கு.

                    காலாகாலத்தில் மிடாஸ் என்பவன் தன் மனைவியுடன் அங்கு வந்தான். வந்தவன் தெய்வ சன்னிதியில் வண்டியை நிறுத்தினான்.

                    அவிழ்க்கமுடியாத முடிச்சு #2   

                    காலாகாலத்தில் மிடாஸ் என்பவன் தன் மனைவியுடன் அங்கு வந்தான். வந்தவன் தேய்வ சன்னிதியில் வண்டியை நிறுத்தினான்.

                    இதைக்கண்டவர்கள் அனைவரும் அவனையே தங்களின் அரசனாக முடிசூட்டிக்கொண்டனர்.

                    நன்றி உணர்ச்சி மேலிட்ட மிடாஸ் தன்னுடைய மூடுவண்டியை பெருந்தேவனாகிய ஸியுஸ¤க்கே அர்ப்பணித்துவிட்டான். அங்கிருந்த ஒரு தூணுடன் அந்த வண்டியின் நுகத்தடியை இணைத்துப் பிணைத்துவிட்டான். அதனைக் கட்டும்போது முனைகள் தெரியாத ஒரு முடிச்சைப் போட்டுவிட்டான். பல முடிச்சுகள் சேர்ந்த கூட்டு முடிச்சு அது. சாதாரணக் கயிற்றுக்குப் பதிலாக ஒருவிதமாக மரத்தின் பட்டையின் வார் பயன்படுத்தப்பட்டது. நாளடைவில் அந்தப் பட்டை வார் காயக் காய, நன்கு இறுகிக்கொண்டுவிட்டது. யாராலும் அதை அவிழ்க்கமுடியவில்லை. அந்த முடிச்சுக்குத் தன் தந்தையாகிய Gordius என்பவனின் பெயரை இட்டான். அது Gordian Knot என்று அழைக்கப்பட்டது. அந்த இடத்தில் Gordium என்னும் நகரமும் தோற்றுவிக்கப்பட்டது. 

                    அப்போது இன்னொரு ஓரக்கல் அருள்வாக்கு சொல்லியது: "இந்த கோர்டியன் முடிச்சை யார் அவிழ்க்கிறார்களோ, அவர்கள் ஆசியா முழுமையையும் கைப்பற்றி ஆள்வார்கள்".

                    ரொம்ப காலமாக அப்படியே அவிழ்க்கப்படாமல் கோர்டியன் முடிச்சு இருந்தது.

                   சில நூற்றாண்டுகள் கழித்து மேற்கே இருந்த மாஸிடோனியா என்னும் நாட்டின் அரசன் ·பிலிப் என்பவன் கிரேக்கம், அல்பேனியா, பல்கேரியா முதலிய இடங்களையெலாம் பிடித்துக ்கொண்டுவிட்டான். போர்முறைகளை நன்கு கற்றவன் அவன். அவனுடைய அரசவையில் அக்காலத்து பெரும்புலவராகிய அரிஸ்டோட்டல் என்பவர் இருந்தார். அவர் இன்னொரு பெரும் புலவரும் பேராசிரியருமாகிய ப்லேட்டோ என்பவரின் மாணாக்கர். ப்லேட்டோ என்பவர் ஸாக்ரட்டெஸ் என்னும் பெரும்பேராசிரியரின் மாணாக்கர்.

    ·                பிலிப்பின் ஒரே மகன் அலெக்ஸாந்தர். அவனை எல்லாக் கலைகளையும் கசடறக்
கற்பதற்கு அரிஸ்டோட்டலிடம் விட்டான். ·பிலிப்புக்குப் பின்னர் பட்டத்துக்கு வந்த அலெக்ஸாண்டர் கிழக்கே உள்ள நாடுகள் அனைதையும் பிடித்து உலகம் முழுமையிலும் ஒரே கலாச்சாரம், ஒரே ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற விருப்பத்தோடு நன்கு தேர்ச்சி பெற்ற படைகள், யாரும் அறியாத போர் நுணுக்கங்கள்,
வீரம், விவேகம், தைரியம் ஆகியவற்றுடன் புறப்பட்டான்.

                    ஐரோப்பாவிலிருந்து  அனட்டோலியாவுக்கு வந்தான்.
                    அங்கிருந்த சிலநாடுகளைப் பிடித்தபிறகு இன்னும் கிழக்கே அவனால் போகமுடியவில்லை.
                    கோர்டியன் முடிச்சு தடுத்தது.
                    ஆகவே அந்த முடிச்சு இருக்கும் இடத்துக்குச் சென்றான்.
                    ·ப்ரிஜியர்கள் எல்லாரும் அங்கு கூடினர்.
                    முடிச்சைப் பார்த்தான். நுனிகளே தெரியவில்லை.
                    எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது?
                    மேலும் நூற்றாண்டு காலமாக நன்கு இறுகிப்போய் கிடந்தது.
                    கத்தியை உருவினான்.
                    மூச்சை இழுத்துப்பிடித்தான் தலைக்கு மேலே ஓங்கினான் ஒரு
                    சுழற்று சுழற்றினான்
                    ஒர்ர்ர்ரே வீச்சு.
                    முடிச்சு அறுந்தது.
   
                    இப்படியாகத்தானே கோர்டியன் முடிச்சை அறுத்த அலெக்ஸாண்டர் தொடர்ந்து ஆசியாவின் பெரும்பகுதியை மூன்றே ஆண்டுகளில் கைப்பற்றிவிட்டான்.


                    தீர்க்கமுடியாத பிரச்னையைக் குறுக்குவழியிலோ அல்லது தடாலடியாகவோ முடிவாகத் தீர்ப்பதை 'Cutting the Gordian Knot' என்று குறிப்பிடுவார்கள்.

                    மிகவும் பேய்த்தனமான சிக்கல், அல்லது puzzle எனப்படும் குட்டுவுக்கு Gordian Puzzle என்று சொல்வார்கள்.
                    கணிதத்தில் கார்டியன் பஸ்ல் எனப்படும் வகை இருக்கிறது.
                    அதை விடுப்பதை Gordian Solution என்றும் சொல்வார்கள்.

              Puzzle அல்லது பொருள் மயக்கம் ஏற்படும்படி சொல்வதை அல்லது எழுதுவதை 'குட்டு' என்று குறிப்பிட்டு, காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகள் 'தெய்வத்தின் குரல்' நூலில் அதை விளக்கியிருக்கிறார்.
                    மகாபாரதத்தை வியாச முனிவர் சொல்லச்சொல்ல விநாயகப் பெருமான் எழுதிக்கொண்டே வந்தார். அவர் மிகவும் விரைவாக எழுதிவிடுவாராம். அவர் எழுதும் வேகத்துக்கு வியாசரால் சொல்லமுடியவில்லை.
                    ஏனெனில் விநாயகபெருமான் மகாபாரதத்தை எழுதும்போது ஒரு நிபந்தனை விதித்தாராம். அவருடைய எழுத்தாணி அவருடைய வலது தந்தமல்லவா? எழுத ஆரம்பித்ததும் ஏட்டிலிருந்து எழுத்தாணியாகிய தந்தத்தை நிறுத்தாமலும் எடுக்காமலும் எழுதும்வண்ணம் தொடர்ச்சியாக தடங்கலேயில்லாமல் வியாசமுனிவர் சொல்லிக்கொண்டே வரவேண்டும் என்பது அந்த நிபந்தனை.
                    ஆகவே வியாசமுனிவர் ஒரு உத்தியைக் கடைபிடித்தாராம்.
                    பொருள் மயக்கம் ஏற்படும் வண்ணமும் புதிர் போல் தோன்றும் விதமும் சில இடங்களில் வைத்துச் சொன்னாராம்.
                    அப்படிப்பட்ட இடங்களில் பொருளைப் பற்றி சிந்திப்பதற்காக விநாயகப்பெருமான் சற்று நிதானித்தாராம்.
                    அதற்குள்ளாக அடுத்த விஷயத்தைச் சொல்வதற்கு வியாசர் பெருமான் சித்தப்படுத்திவிடுவாராம்.
                    இந்த மாதிரி முடிச்சுகளை 'பாரதக்குட்டு' என்று குறிப்பிடுவதாக பரமாச்சாரியார் சொல்லியிருக்கிறார்.
                    'குட்டு' என்பதை 'Guttu' என்று உச்சரிக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.
                    அந்தப் புதிர் விடுபடுவதை 'குட்டு உடைவது' என்று சொல்லப்படுவதாகவும் பரமாச்சாரிய சுவாமிகள் கூறியிருக்கிறார்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU