'தோஸ்த்தி லண்டன்'
'லண்டனின் நண்பன்'


டாக்டர் எஸ்.ஜெயபாரதி

JayBee





    மேவார் நாட்டு
 'தோஸ்த்தி லண்டன்' காசு

                    அவ்வப்போது புதுக்கோட்டைத் தொண்டைமான் அரசர்களின் தனிப்பட்ட நாணயமான புதுக்கோட்டை அம்மன் காசைப் பற்றி எழுதியிருக்கிறேன்.
                    565 சுதேசி சமஸ்தானங்களில் சிலவற்றுக்குமட்டுமே கொடுக்கப்பட்ட விசேஷ
உரிமை அது. தமக்கென நாணயம், ஸ்டாம்பு முதலியவை வெளியிட்டுக்கொள்ளலாம்.

                    ஆனால் அங்கெல்லாம் பிரிட்டிஷ் இந்தியா நாணயங்களும் செல்லுபடியாகும்.
                    வடநாட்டில் உள்ள இன்றைய ராஜஸ்தான் மாநிலம், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்
 'ரஜபுதனா' என்ற பெயரில் விளங்கியது. அது முழுமையும் ரஜபுத்திரர்களுடைய சமஸ்தானங்களால் ஆனது. மேப்பைப் பார்த்தாலேயே ரஜபுதனா, மத்திய பாரத், மத்திய
இந்திய சமஸ்தானங்கள், ஒரிஸ்ஸா ஆகியவை கஜபுஜ கஜபுஜவென்று காட்சியளிக்கும்; எந்த எல்லைக்கோடு யாருடையது என்பதுகூடத் தெளிவாகத் தெரியாது.

                    அப்பேற்பட்ட ரஜபுதனாவில் ஒரு சமஸ்தானம் இருந்தது. அந்த சமஸ்தானத்துக்கும் சொந்த நாணயம் அடிக்க உரிமை இருந்தது.
                    அதன் பெயர் மேவார்.
                    ஒரு காலத்தில் மிகவும் புகழும் சிறப்பும் மிக்கதாக இருந்தது.  இதன் கோட்டையும் தலைநகருமான சித்தூர் வரலாற்றுச் சிறப்பு பெற்றது.
                    சித்தூர் ராணி பத்மினியின் வீர வரலாறு பெரும்பான்மையினருக்குத் தெரியும்.
                    அந்த வரலாற்றை விஸ்வாக்காம்ப்லெக்ஸில் இன்னொரு  கட்டுரையில் காணலாம்.
                    மேவார் நாட்டு மன்னர்கள் பிற்காலத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் ஒத்துழைப்பு நல்கினார்கள்.
                    அந்த நாட்டின் மன்னர் வெளியிட்ட நாணயத்தில் ஒரு விசேஷம்.
                    அந்த சமஸ்தானத்தின் மகாராஜாவுக்குப் பல பிருதாக்கள் - விருதுகள் உண்டு.
அவற்றில் மிகச் சிறப்பாக ஒரு விருதுவைக் கருதியிருக்கிறார், அந்த மஹாராஜா.


    'தோஸ்தி லண்டன்'.
    'லண்டனின் தோழன்'


                    இதை அந்தக் காலத்து பிரிட்டிஷ் அரசு அவருடைய பரம்பரையினருக்குக் கொடுத்த
பட்டம்.

                    லண்டனின் தோழனாக இருப்பதையே அந்த மகாராஜா மிகப் பெரிய பெருமையாகக் கருதியிருக்கிறார்.
                    இந்த நாணயத்தைத்தான் மேலே காண்கிறீர்கள்.                   

ஜெயபாரதி

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


RETURN TO MAIN MENU