அருட் புலமை - 1
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
சியாமளா
அவ்வப்போது நான்
எழுதும் மடல்களில் "சியாமளா" என்னும் பெண்ணைப்பற்றியும் அவளுடைய சங்கீத ஆற்றலைப்பற்றியும்
சிறிது குறிப்பிடப்படுவது உண்டு.
சியாமளா ஒரு சக்தி. மாதங்கி, ராஜசியாமளா, மகாசியாமளா,
மந்த்ரிணி என்றெல்லாம் அவளுக்குப
்பெயருண்டு.
ராஜராஜேஸ்வா¢ என்பவள்தான் பேரரசியென்றால்,
அவளுடைய மந்திரியாக விளங்குபவள் சியாமளா. ராஜராஜேஸ்வரிதான்
காமாட்சியாக காஞ்சியில் இருப்பவள். ராஜசியாமளா மதுரையில் மீனாட்சியாக இருந்து
வருகிறாள். பேரரசிக்கு commander-in-chief வேண்டுமே!
இருக்கிறாள். அவள் பெயர் தண்டநாதா. திருவானைக்காவில்
இருக்கும் அகிலாண்டேஸ்வா¢யே அவள்.
காளிதாசன் தன்னுடைய பூர்வீகத்தில் ஒரு படிப்பறியா மூடனாக
இருந்தான். அவன் காளிகோயிலுக்கு நடுநிசியில் சென்று காளியிடம் வரம் வாங்கியவன்.
அவன் காளிகோயிலுக்கு வரம் வாங்கச் சென்றாலும் அவனுக்கு கவிதா சக்தியை அளித்தவள்
சியாமளாதான். காளியாக
அவள் அவனுக்குத் தோன்றவில்லை; சியாமளாவாகத்தான் தோன்றியிருக்கிறாள்.
அவளைக் குறித்துத்தான் அவன் தன்னுடைய
முதல் துதிநூலான "சியாமளா தண்டகத்"தைப் பாடினான்.
அதன் முதல் பாடலில் அவன் கண்ட சியாமளா
உருவினளை வர்ணித்திருக்கிறான்.
"மாணிக்ய வீணாம் உபலாலயந்தீம்
மதாலஸாம், மஞ்சுளவாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதிம் கோமளாங்கீம்,
மாதங்க கன்யாம்! மனஸா ஸ்மராமி"
மாணிக்கவீணையை மடியில் ஏந்தியவளும்,
சுறுசுறுப்பானவளும், இனிய சொல்லுடையவளும், நீலமணியின் ஒளிபொருந்தியவளுமாகிய
மாதங்கியை தியானிக்கிறேன்.
பிறகு அவள் ராஜராஜேஸ்வரியாகக்
காண்கிறான். அவளையும் வர்ணிக்கிறான்.
"சதுர்புஜே! சந்த்ரகலாவதம்ஸே!
குசோன்னதே! குங்குமராக சோனே!
புண்ட்ரேக்ஷ¤ பசாங்குச புஷ்பபாண ஹஸ்தே!
நமஸ்தே! ஜகத் ஏக மாதா!
பிறகு மீண்டும் சியாமளாவுக்கே சென்றுவிடுகிறான்.
இதிலிருந்துதான் "தண்டகம்" என்னும் காவிய அமைப்பின் உண்மையான தன்மை
ஆரம்பமாகிறது.
அப்படியே தங்கு தடையின்றி,
ஓட்டமும் நடையுமாக, பீ¡¢ட்டெழும் பிரவாகமாக, பாய்ந்து பாய்ந்து
துள்ளிச்செல்லும், அதனுடைய நடை.
"மாதா! மரகத ச்யாமா! மாதங்கீ! மதசாலினீ!
குர்யாத் கடாக்ஷம்! கல்யாணீ! கதம்பவன வாசினீ!
ஜய மாதங்க தனயே! ஜய நீலோத்பலத்யுதே!
ஜய சங்கீதரஸிகே! ஜய லீலா சுகப்¡¢யே!"
"ஜயஜனனி ஸ¤தா-ஸமுத்ராந்த ஹ்ருத்யந்-மணித்வீப ஸம்ரூட பில்வாடவீ-மத்ய
கல்ப-த்ருமா-கல்ப-காதம்ப காந்தார-வாசப்ரியே! -க்ருத்திவாஸப்¡¢யே!-ஸர்வலோகப்ரியே!"
இதை நிறுத்தாமல், மூச்சுவிடாமல் படித்துப் பாருங்கள். பார்க்கலாம்.
இப்படித்தான் ஓட்டமாகச் செல்லும்.
இதனைத் தமிழில் "தாண்டகம்" என்பார்கள். இதில் திருநாவுக்கரசர்தான் சிறந்து
விளங்குபவர். அவர் போல் அந்நடையை வேறு யாருமே லாகவமாகக் கையாண்டதில்லை. அதனால்தான்
அவருக்குத் "தாண்டக வேந்தர்" என்றொரு பெயருமுண்டு.
"அ¡¢யானை, அந்தணர்தம் சிந்தையானை, அறுமறையின் அகத்தானை, அணுவை,
யார்க்கும் தொ¢யாத தத்துவனைத்,
தேனைப், பாலைத், திகழ் ஒளியைத், தேவர்கள்
தங்கோனை, மற்றைக் கா¢யானைப், நான்முகனைக், கனலைக், காற்றைக்,
கனைகடலைக், குலவரையைக் கலந்துநின்ற பொ¢யானைப், பெரும் பற்றப்
புலியூரானைப் பேசாத
நாளெல்லாம் பிறவா நாளே!"
இதெல்லாம் Divine Inspiration என்பார்கள்.
"பாடு! முத்து முத்தாகப்பாடு!" என்று முருகன் சொன்னதும் அருணகி¡¢க்கு
சந்தக்கவியாக தங்குதடையின்றி வந்ததுவும் அப்படித்தான்.
"முத்தைத்தரு பத்தித்திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு
வித்துக்குருபர எனவோது முக்கட்பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமுவர்கத் தமரரும் அடிபேண பத்துத்தலை தத்தக்கணைதொடு ஒற்றைக்கி¡¢
மத்தைப்பொருதொரு பட்டப்பகல் வட்டத்திகி¡¢யில் இரவாக பத்தர்க் கிரதத்தைக்
கடவிய பச்சைப ்புயல் மெச்சத் தகு பொருள் பட்சத்தொடு ரட்சித்தருள்வதும் ஒருநாளே!"
ஊமையாக இருந்தவன் ஒருவன். அவனுக்கு ராஜராஜேஸ்வரி அருளால் "மூக
பஞ்சசதி" என்னும் ஐந்நூறு பாடல்கள் பாடமுடிந்து "மூககவி" என்று பெயர் பெற்றான்.
அகிலாண்டேஸ்வா¢யாகிய தண்டநாதாவின் அருளைப்பெற்றவன் ஒருவன் இருக்கிறான்.
அவனும் படிப்பறியாதவன்; கோயில் சமையற்காரன். அவனே எதிர்பாராதவிதமாக,
கவித்துவத்தை அவனுக்கு அகிலாண்டேஸ்வரி அருளினாள்.
அன்றிலிருந்து அவன் ஆசுகவி காளமேகம் ஆனான்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU