காந்தி, கார்வர், வேர்க்கடலை

டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee




                மஹாத்மா காந்தியின் முக்கிய உணவாக வேர்க்கடலை ஆகியதற்கு ஒரு பின்புலம் உண்டு.
                    அதற்கு நாம் இருநூறு ஆண்டுகளைக் கடந்து அமெரிக்காவுக்குச்செல்லவேண்டும்.

                    இருநூறு ஆண்டுகள் இருக்கும். அமெரிக்காவில் ஆளடிமைமுறை
வழக்கில் இருந்தது.
                    ஓர் ஊரில் கார்வர் Carver என்னும் பண்ணையார் ஒருவர் இருந்தார்.
                    அவருடைய பண்ணையில் ஒரு பெண்ணடிமை இருந்தாள். அந்தப் பெண்ணுக்கு
இரண்டு பிள்ளைகள்.
                    ஒருநாள் அந்தப் பண்ணைக்கு கூக்லுக்ஸ்க்லான் என்னும் வெள்ளையாதிக்கவெறியர்கள் வந்து அந்தப் பெண்ணைப் பிடித்துக் கொண்டுசென்றனர். அந்த இரண்டு சிறுவர்களையும் கார்வர் எப்படியோ மறைத்துவைத்துக் காப்பாற்றிவிட்டார்.
    
                    அந்த இரண்டு சிறுவர்களில் ஒருவன் காசநோயில் இறந்துபோனான். ஒரு சிறுவனை ஜார்ஜ் வளர்த்து வந்தார்.
                    அந்தப் பையனுக்குப் பெயர் ஜார்ஜ் - தந்தை யார் என்பது தெரியாது. அடிமை வேறு ஆகவே அந்தப் பையனை கார்வரின் ஜார்ஜ் - Carver's George - என்றே குறிப்பிட்டனர்.
                    அவனுக்குப் படிக்கவேண்டும் என்ற பேரவா.
                    எப்படியோ பதினைந்து மைல்களுக்கு அப்பாலிலுள்ள பள்ளிக்குக் கால்நடையாகவே சென்று ஆரம்பப்பள்ளிப் படிப்பைப் படித்தான்.
                    மேலும் படிக்கவேண்டுமே.
                    அதுவும் நீக்ரோக்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் பள்ளியைத் தேடவேண்டும். அவ்வாறே பல இடங்களுக்குச்சென்று கூலிவேலை செய்துகொண்டே பல பள்ளிகளில் படித்துமுடித்தான்.
                    பள்ளியில் சேரும்போது அவனுடைய பெயரைக் கெட்டார்கள். கார்வரின் ஜார்ஜ் என்றா சொல்வது?
                    ஆகவே ஜார்ஜ் கார்வர் என்று பெயரை மாற்றிக்கொள்ளுமாறு ஆலோச்னை சொன்னார்கள். அந்தப் பையனுக்கு தேசபக்தி மிக அதிகம். இப்படிப்பட்ட ஆட்கள் நிறைய உண்டு. தம்மை அமுக்கிவைத்து மனித இனத்துக்கும் கீழ்நிலையில் வைத்துக் கருதும் ஒரு சமுதாயம் அல்லது நாட்டின்மீது விசுவாசமாக இருப்பார்கள். தான் சார்ந்திருக்கும் மதத்தின் முக்கிய நூல்களைப் பார்க்கவோ, கேட்கவோ, உரிமையில்லாத நிலையிலும் அந்த நூல்களைப் பிரமாணமாகக் கருதிக்கொண்டு புனிதமானவையாகக் கருதிக்கொண்டு அந்த ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தி, விலங்குநிலைக்கு மனிதனைத் தாழ்த்தும் அந்த மதத்திலும் இருந்துகொண்டிருப்பது ரொம்ப ரொம்ப இயற்கையான விஷயமாயிற்றே.
                    அப்படித்தான் ஜார்ஜ் கார்வரும். அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாகிய வாஷிங்டன்னின் பெயரையும் தம்முடைய பெயரில் சேர்த்து ஜார்ஜ் வாஷிங்டன் கார்வராக விளங்கினான்.

                    கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆவல்.
                    அப்போது Booker T.Washington என்பவர் ஆ·ப்ரோஅமெரிக்கர்களுக்கென்று தனிக் கல்லூரியை நிறுவியிருந்தார். அந்தக் கல்லூரிக்கு ஆசிரியர்கள் தேவைப்பட்டது.
                    ஆகவே கார்வர் அங்கு சென்று புக்கரைச் சந்தித்து வேலையில் சேர்ந்தார்.
                    தாவரயியலில் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் செய்துகொண்டே படித்துக்கொண்டே மாணவர்களுக்கு வகுப்புகளும் எடுத்தார்.
                    அமெரிக்காவின் தென் மாநிலங்களில் அப்போது முக்கிய பயிராக பருத்தி விளங்கியது.
Ball Weavil என்னும் வண்டு விழுந்து பயிர்கள் நாசமாவது அடிக்கடி நடக்கும்.
                    அத்துடன் தொடர்ந்து பருத்தியைப் போட்டுப்போட்டு, நிலத்தின் வளமெல்லாம் குன்றிவிட்டது.
                     அப்போது வண்டை அழிப்பதற்கும், நிலத்தின் வளத்தை மேம்படுத்துவதற்கும் crop rotation என்னும் பயர் மாற்று முறையை அங்கிருந்த விவசாயிகளுக்குப் போதித்தார். புதிய உரங்களைத் தயாரிப்பது போன்ற முறைகளையும் சொல்லிக்கொடுத்தார்.
                    Crop rotation-னுக்கு ஏற்றதாக வேர்க்கடலையே விளங்குவதயும் கண்டுபிடித்தார். அதை விளைவிக்கும்போது நிலமும் வளமாகும் என்றும் கருதினார்.
                    பல விவசாயிகள் பருத்தியை விட்டு விட்டு வேர்க்கடலையைப் பயிர் செய்தனர்.
                    இவ்வாறு இர்ண்டாண்டுகள் சென்றன. பருத்தி வண்டு அறவே ஒழிந்தது.
                    ஒருநாள் ஒரு பண்ணைக்குச்சென்றபொது ஓர் ஏழைக் கிழவியைப் பார்த்தார். "வண்டை ஒழித்தாயிற்று. வேர்க்கடலையை இரண்டு ஆண்டுகளாகப் பயிர் செய்தாயிற்று. இப்போது வேர்க்கலையெல்லாம் மலை போல ஒவ்வொரு பண்ணையிலும் வீட்டிலும் குவிந்திருக்கிறது. அதையெல்லாம் என்ன செய்வது. அத்தனையும் காரலடித்துக்கொண்டும் உலுத்துப்போய்க்கொண்டும் இருக்கிறது. இப்போது வருவாய் அறவேயில்லை. சாப்பாட்டுக்குக்கூட சிரமம்", என்றாள் அக்கிழவி.
                    பல குடும்பங்கள் பருத்தியில் வண்டு விழுந்த சமயத்திலிருந்ததைவிட மிக மிக வறுமையில் ஆழ்ந்திருந்தனர்.
                    அவர்களின் நிர்க்கதி கார்வரை அப்படிய்யெ உலுக்கிவிட்டது. தாம்தானே இதற்கெல்லாம் காரணம் என்ற குற்ற உஅணர்வு அவரை வாட்டியது.
                    காலையில் பொழுது புலர்வதற்குமுன்னர் அவர் சில சமயங்களில் கடவுளுடன் பேசுவார்.
அது அவருடைய அந்தரங்கத்தில் ந்டப்பது. விடிவதற்கு முன்னால் உள்ள நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். உஷத் காலம் என்பது அதற்கும் சற்று முந்திய நேரம். விடியும் முன்னர் உள்ள நேரத்தைப் ப்ராதக் காலம் என்றும் சொல்வார்கள்.

    திக்கஸ்திபிர் கனககும்பமுகாவஷ்ருஷ்ட
    ஸ்வர்வாஹினி விமல சாருஜாலாப்லுதாங்கீம்
    ப்ராதர்நமாமி ஜகதாம் ஜனனீம்அசேஷ
    லொகாதிநாதகிருஹினீம் அம்ருதாப்தி புத்ரீம்

                    இது கனகதாரா ஸ்தோத்திரத்தின் சுலோகங்களில் ஒன்று. திக்கு யானைகள் பொற்குடங்களை வைத்து ஸ்ரீலக்ஷ்மிக்கு அபிசேகம் செய்கின்றனவாம். இவ்வாறு அவள் இருக்கும் கோலத்தைதான் 'கஜலக்ஷ்மி' என்று சொல்வார்கள். இவளைப் ப்ராதக் வேளையில் போற்றுவோம் என்கிறார், ஆதிசங்கரர்.

                    அந்தப் ப்ராதக் வேளையில் தெய்வவழிபாடு செய்வது மிகச்சிறந்தது. பல ஸ்தோத்திரங்களில் 'ப்ராதர் நமாமி, ப்ராதர் நமாமி' என்று வருகிறதல்லவா?
                    ப்ராதக் வேளையில் சாமி கும்பிடவேண்டுமென்றால் அதற்குத் தக்க வேளையில் குளிக்கவேண்டுமல்லவா?
                    அவ்வாறு ப்ராதக் வேளையில் குளிப்பதை 'ப்ராதக் ஸ்னானம்' என்று சொல்வார்கள். இது உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நல்லது என்று காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகள் சொல்வார்.
                    அவ்வாறே ஒருநாள் ப்ராதக், உஷத் வேளைகளில் கார்வர் தம் கல்லூரிக்கு வெளியில் உள்ள காட்டுக்குள் நடந்து சென்றார்.
                    அப்போது இறைவனுடன் மனம் கல்ந்து உறவாடி உரையாடினார்.
                    "இறைவா, இந்த உலகத்தை ஏன் படைத்தாய்?"
                    "இது மிகப்பெரிய கேள்வி. சிறியதாகக்கேள்."
                    "சரி. மனிதனை ஏன் படைத்தாய்?"
                    "இதுவும் பெரிய கேள்விதான். உன் அளவுக்கு ஏற்ற கேள்வியாகக்கேள்."
                    "அப்படியானால் சரி. வேர்க்கடலையை ஏன் படைத்தாய்?"
                    "அப்படி வா வழிக்கு. சரி. என்னைப் பின் தொடர்ந்து ஆராய்ச்சிக்கூடத்து வா".
                    ஆய்வுக்கூடத்துக்குள் கடவுளைப் பின்தொடர்ந்து சென்ற கார்வர், கதை உட்புறமாக அடைத்துக்கொண்டார்.
                    மூன்று நாட்கள் கழித்தே வெளியில் வந்தார்.
                    அவ்வாறு வெளியில் வரும்போது வேர்க்கடலையிலிருந்து முன்னூற்றுக்கும் மேலான பொருள்களைத் தயாரிக்கும் விதத்தைக் கண்டுபிடித்திருந்தார். எண்ணெய், வெண்ணெய், பால், பலவகை உணவுப்பொருட்கள், வார்னிஷ், இன்னும் பல. வேர்க்கடலை தோலிலிருந்து செயற்கைப் பளிங்குக்கல்கூட செய்திருந்தார்.
                    இது ஒரு பெரும்புரட்சியை ஏற்படுத்தியது.
                    புக்கர் முதலிய பெரிய மனிதர்களை அழைத்து ஒரு பெரிய விருந்து ஒன்றைப் படைத்தார். அதில் சாஸேஜ் முதல் பேக்கன், ஆட்டுக்கால் ஸ¥ப், ஸ்டீக், ரொட்டி என்று பல அயிட்டங்கள். ஆனால் அவை அத்தனையுமே வேர்க்கடலையிலிருந்து செய்யப்பட்டவைதாம்.
                    வேர்க்கடலக்கு உலகமுழுவதும் தனி மவுசு ஏற்பட்டது.

                    மகாத்மா காந்திக்கு ஒருமுரை கார்வர் கடிதம் எழுதினார். அடிக்கடி உபவாசத்தையும் பத்தியத்தையும் கடைப்பிடிக்கும் காந்திக்கு ஏற்றதொரு சத்து நிறைந்த உணவு வேர்க்கடலை என்று ஆலோசனை கூறியிருந்தார்.
                    அதனை அப்படியே கடைப்பிடித்த மஹாத்மா கந்தி, தம்முடைய உணவாக வேர்க்கடலை, வேப்பிலைச்சட்டினி, ஆட்டுப்பால், ஆட்டுத்தயிர் ஆகியவற்றை ஏற்படுத்திக்கொண்டார்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
  
RETURN TO MAIN MENU