POSITIVISM

"J'ATTAQUE"
"நான் தாக்குகிறேன்"

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்

டாக்டர் எஸ்.ஜெயபாரதி


                வாழ்க்கைக்கு உறுதுணையாகச் சில கோட்பாடுகள்,  கொள்கைகள், நம்பிக்கைகள் முதலியவை வேண்டும்.
                தன்னையே ஊக்குவித்துக்கொள்ள சில வாக்கியங்கள்,  சொற்களை வைத்திருப்பது
பலருக்கு வழக்கம்.

                அவற்றை ஆழமாக நம்புவது, தனக்குத்தானே உருபோட்டுக்கொள்வதுபோன்ற பழக்கங்களைக் கொண்டிருப்பார்கள்.
                இந்த வாக்கியங்கள் தளர்வுற்றிருக்கும் மனதைத் தூக்கி நிறுத்தும். புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். ஊக்கம் கொடுக்கும். எத்தனை பிரதிகூலமான சூழ்நிலையிலும் சமாளிக்கும் மனப்பான்மையையும் உறுதியையும் தைரியத்தையும் கொடுக்கும். மீண்டும் மீண்டும் முயற்சிகளைச் செய்யும் மன உரத்தை ஏற்படுத்தும்.

                நான் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் வாக்கியங்களில் இது ஒன்று:
                இது ·பிரெஞ்சு மொழியில் உள்ளது.
                அதன் மூலம் ஒரு வரலாறு.
                அந்த வரலாற்றை அறிய தொண்ணூறு ஆண்டுகள் பின்னால் செல்லவேண்டும்.

                முதலாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
               அதற்கும் முப்பதாண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியிலிருந்த பலநாடுகளில் பெரியதும் பலமானதுமாகிய பிரஷ்யா நாட்டின் மன்னர் வில்ஹெல்ம் அப்போதிருந்த பிரெஞ்சுச் சக்கரவர்த்தி மூன்றாம் நெப்போலியனைத் தோற்கடித்து, ·பிரான்ஸின் தலைநகரமாகிய பாரீஸ் நகரத்தைக் கைப்பற்றி, தம்மை ஜெர்மன் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டார். மூன்றாம் நெப்போலியன் பதவியிறங்கிக் கொண்டார். உலக சாம்ராஜ்யங்களில் ஒன்றாக விளங்கிய ·பிரான்ஸ் தன்னுடைய பிரதேசங்களில் சிலவற்றை இழந்து பெருமைகளையும் இழந்து பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
                1914-ஆம் ஆண்டில் ஜெர்மனியின் சக்கரவர்த்தி இரண்டாம் வில்ஹெல்ம் ஆஸ்திரியப் பேரரசு, துருக்கிப ்பேரரசு ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து ·பிரான்ஸ் நாட்டின்மீது படையெடுத்தார். ·பிரான்ஸ¤க்கு உதவியாக பிரிட்டன் ஆகிய நாடுகள் போரில் இறங்கின.

                1914-ஆம் ஆண்டில் ஆரம்பித்த போர் மிகவும் இழுவை பறிவையாக இருந்துகொண்டிருந்தது. லட்சக்கணக்கான போர்வீரகள் இருதரப்பிலும் மாண்டனர்.

                ஜெர்மனின் முன்னேற்றத்தை நிறுத்திவைப்பதே பெரும் பிரம்மப்பிரயத்தனமாக இருந்தது.
                இரண்டாண்டுகள் இப்படியிருந்தபோது, ஜெர்மனி திடீரென்று பயங்கரமான புதுத்தாக்குதலைத் தொடங்கியது.
    ·            பிரான்ஸ் நாட்டுப் படைகளால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை.  போர்முனைகளில் இருந்த தன்னுடைய தளபதிகளை ·பிரான்ஸ் மாற்றியது.
                அவ்வாறு புதிதாக அனுப்பப்பட்டவர் ஜெனரல் ·பெர்டினண்ட் ·போஷே.    
                முக்கியமான போர் முனையில் அவர் ஜெர்மன் படைகளை எதிர்த்தார். முழுக்க முழுக்க தற்காப்புப்போர். ஜெர்மன் படைகளை முன்னேறவிடக்கூடாது. அதுதான் அப்போது இருந்த நிலையில் மிகவும் அவசியமாக இருந்தது.
                ஆனால் முடியவில்லை.
    ·            போஷேயுடைய அணிகளால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை. ஒரு அணி பின் தள்ளப ்பட்டுவிட்டது. இன்னொரு அணி குலைந்துபோயிற்று. இன்னும் ஒரே ஒரு அணி. அதுவும் நிலைகுலையும் நிலை. எந்த நேரத்திலும் அதுவும் சிதறிவிடும்.

                அப்போது ஜெனரல் ·போஷே தமது தலைமையகத்துக்கு ஒரு தந்தியனுப்பினார்.

                "Ma droite est enfonc'ee, ma gauche cede - tout va bien - j'attaque"

          "My right has been pushed back, my left is giving way - Excellent - I attack!"

                "என்னுடைய வலது அணி பின்னால் தள்ளப்பட்டுவிட்டது; என்னுடைய இடது அணி குலைந்து கொண்டிருக்கிறது. நிலைமை மிகவும் பிரமாதமாக இருக்கிறது. நான் தாக்குகிறேன்."

                ஜெர்மன் படைகள் அந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்படியே தேங்கிப
்போய் நின்று விட்டது. அந்த தேக்கநிலை அப்படியே சிலகாலம் நீடித்தது. போரின் அலைகள்
திசை திரும்பின. 1918-ஆம் ஆண்டு ஜெர்மனியின் சக்கரவர்த்தி பதவியிறங்கியதோடு போர்
நிறுத்தம் ஏற்பட்டது. ·பிரான்ஸின்
பிரதேசங்கள் மீட்கப்பட்டுவிட்டன.    
                ·பெர்டினண்ட் ·போஷேயின் துணிச்சல்தான்.
    ·            பிரான்ஸின் சார்பில் ஜெர்மனியின் சரணை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டவர்
மார்ஷல் ·போஷேதான்.


                அடியோடு தோல்வியடையும் தருணத்தில் எல்லாமே போய்விடக்கூடிய சந்தர்ப்பத்தில் வேறு எந்த வழியும் இல்லாதபோது முன்னேறிச்சென்று போட்டுத்தள்ளவேண்டியதுதானே.

                சிவகங்கைப் பக்கத்து வட்டாரவழக்கு ஒன்று இருக்கிறது.

அன்புடன்

ஜெயபாரதி

$$$$$$$$$$$$$$$$$$$$$$

    

RETURN TO MAIN MENU