'கீலப்பத்து மேலப்பத்து....'

கடாரத் தமிழ்ப் போரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி



                மலேசியத்தமிழர்களிடையே ஒருவகையான சீட்டு விளையாட்டு இருக்கிறது.
                அதன் பெயர் 'கீலப்பத்து மேலப்பத்து'.
                'கீழே பத்து, மேலே பத்து' என்பதைத்தான் இவ்வாறு  சொல்கிறார்கள்.
                'பேங்கர்' என்பவர் சீட்டுக்கட்டை நன்றாகக் குலுக்கிக்கொண்டிருப்பார்.
                தமக்கு முன்னால் இருக்கும் மேஜையில் மேல்புறமாக ஒரு சீட்டையும் கீழ்ப்புறமாக ஒரு சீட்டையும் மாற்றி மாற்றிப் வேகமாகப் போட்டுக்கொண்டிருப்பார்.
                விளையாட்டில் பங்கேற்பவர்கள் இரண்டு பிரிவாகப் பந்தயத் தொகையை வைப்பார்கள்.
                சீட்டுக்கட்டில் உள்ள பத்தாம் நம்பர் சீட்டு எந்தக் குவியலில் விழுகிறது என்பதுதான் பந்தயம்.
                'கீலப்பத்து' சொல்பவர்கள் கீழ்ப்புறமுள்ள குவியலுக்கு அருகில் அவர்களின் பந்தயத்தொகையை வைப்பார்கள்.
                அதுபோலவே மேலப்பத்துக்காரர்கள்.
                எந்தக் குவியலில் பத்தாம் நம்பர் சீட்டு விழுகிறதோ, அதற்குப் பணம் கட்டியவர்கள், எல்லாக் காசையும் எடுத்து அவரவர் ஈவுக்குத் தக்கபடி பகிர்ந்துகொள்வார்கள்.
               மிக வேகமாக இந்த விளையாட்டு ஓடும்.
                எளிதான விளையாட்டு.
                52 சீட்டுகள் கொண்ட கட்டில் பத்தாம் நம்பர் சீட்டு நான்கு இருக்கும். மேலப்பத்துக்கு 50;
கீலப்பத்துக்கு 50.
            50:50 Chance.
                அதுவும் நான்கு சீட்டுகள்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


RETURN TO MAIN MENU