கிலிங்
KELING



    இந்தக்கேள்வியை தமிழ் இணையத்தின் நிறுவனரும், சியா பசி·பிக் இணைய நிறுவனத்தின் உரிமையாளரும், 'தமிழ் இணைய எறும்புகள்' இயக்கத்தைத் தோற்றுவித்தவரும், இணையத ்தமிழின் தந்தையும் ன சிட்னி பாலா பிள்ளை, தம்முடைய புகழ் பெற்ற மழலைத ்தமிழில் எழுப்பினார். நாங்களெல்லாம் தமிழில் இணையத்தில் தமிழ் மொழியில் சக்கை போடு போட்டுக கொண்டிருக்கிறோம் என்றால், அதற்குப் பெரும் காரணகர்த்தா பாலா பிள்ளையே. He got us together.

Bala Pillai writes:

>இரண்டு உதாரணங்கள்:-
>
>1) கலிங் (keling): மலேசியாவில் தமிழர்களை யாரவது இந்த பேரை வைத்து கூப்பிடாதீர்கள். ஆனாள் அந்த
>காலத்தில் இவ்வார்த்தை வைத்து தான் தமிழர்களை கூப்பிட்டார்கள். டாக்டர் ஜேபீ தான்
நமக்கு இவ்வார்த்தை

>எப்படி தோங்குனுது என்று சொல்லவேண்டும் :-)


JayBee writes:

                சுருக்கமாகச் சொல்கிறேன். பழங்காலத்தில் பருவக்காற்றை  அனுசரித்தே  தென ்கிழக்காசியாவுக்கும் பாரதத்துக்கும் இடையே கப்பல்  போகுவரத்து இருந்தது.

                அக்காலத்தில் வங்கக்கடற்கரையில் இருந்த துறைமுகங்களில் முக்கியமானவை, கொற்கை(நெல்லை), பௌத்திரமாணிக்கப்பட்டினம் என்னும் வகுதாபுரி("பாக்தாத்" என்னும் பெயரின் மருவல்) என்னும்         காயல்பட்டினம் அல்லது கீழக்கரை, தொண்டி, நாகைப்பட்டினம்,  பூம்புகார், திருமலைராயன்பட்டினம், புதுகை, கடல்மல்லை, கடல்மயிலை,  பாலூர் என்னும் கலிங்கப்பட்டினம் கியவை. இவற்றில் காலப்போக்கில்       மறைந்தவை, தேய்ந்தவை போக 
நாகை, கீழக்கரை, பாலூர்  
கியவையே முக்கிய துறைகளாக விளங்கின.

                இவற்றுள் பாலூரே தென்கிழக்காசியாவுக்கு அதிக சமீபமாக  இருந்தது. இது கலிங்க
நாட்டின் முக்கிய துறைமுகம். பருவக்காற்றின்  வீச்சும் இங்கிருந்துதான் மிக வசதியாக
விளங்கியது. வெகு விரைவாக

        கடல் பயணத்தை நடத்துவதற்கு இதுவே சிறந்த இடமாக இருந்தது.
        இங்கிருந்து கடலுக்கு அடியில் ஒரு நீரோட்டம் ஓடியது. அது கோதாவரி  நதியின்  முகத்துவாரத்திலிருந்து வட சுமாத்ரா, தென் தாய்லந்தைத் தழுவிக்கொண்டு ஓடியது.
        தென்மேற்கு பருவக்காற்று, வடகிழக்குப் பருவக்காற்று கியவற்றுக்கும் ஏற்ற துறைகள் கலிங்கத்திலிருந்தன.

        அன்றைய இந்தியாவின் முக்கியமான பிரதேசங்கள் பலவற்றுக்கும் முக்கிய துறைமுகங்கள் கலிங்கத்திலேயே விளங்கின. ஈராயிரத்தைநூறு ண்டுகளுக்கும் மேலாக கலிங்கத்தை ஒட்டிய
பல நாடுகளுக்கும் பேரரசுகளுக்கும் கலிங்கத்தின் துறைகள் பெரிதும்  பயன்பட்டன. வாகாடகர், சாளுக்கியர், மேலைச்சாளுக்கியர், மாளவர், பரமார போஜர் போன்றவர்களின் பேரரசுக்களுக்கு அவையே வடிகால்களாக இருந்தன


 

        இன்னொன்றும் உண்டு.
        கலிங்கத்திலிருந்து அரசகுடியினர் பெரும்பெரும் கப்பல்களில் தம்முடைய குடிபடைகளில் முக்கியமானவர்களுடன் நாடு தேடி கீழ்த்திசை நோக்கி வந்தனர். அவர்களின் அரசகுடியினர்
பல இடங்களில் புதிய அரசமரபுகளைத் தோற்றுவித்தனர். சிங்கள அரசு, ஜாவாவின் கலிங்க
அரசு போன்றவை அப்படிப்பட்ட மரபுகள்.


                அங்கிருந்து புறப்பட்டு, நேராக நக்காவரத்தை(Nicobar)  அடைவார்கள். அங்கிருந்து
நேரே மேற்கே சென்றால் தக்கோலம்

        (Ta Kua Pa - Thailand) அடையலாம். தெற்கில் சென்றால் அக்ஷயமுனைப்
        பட்டினத்துக்கு(Acheh-Sumatra)வரலாம். அங்கிருந்து தென் கிழக்கில்
        நாங்கள் இருக்கும் கடாரத்தை(Kedah-Malaysia)அடையலாம்.

                அக்காலத்தில் பாரதத்திலிருந்து வந்த இனத்தார் - ந்திரர்,  கலிங்கர், வங்கதேசத்தார்,
தமிழர் கியோர். இவர்களில், கலிங்கர் ஒரு காலகட்டத்தில் அதிகமாக வந்திருக்கின்றனர்.

                பாரதத்துணைக்கண்டத்தின் உட்பகுதிகளாக விளங்கும்  தக்காணம், மராத்தியம் கிய பிரதேசங்களிலிருந்து வருபவர்கள் கலிங்கத்தின் பாலூரிலிருந்தே புறப்பட்டனர். கவே இருக்கும் துறைகளிலேயே அதிக போக்குவரத்தையும் பொருளாதார வர்த்தக முக்கியத்துவத்தையும்  கொண்டதாக பாலூரும் அதனால் கலிங்கமும் விளங்கின.

                கப்பல்களில் பெரும்பான்மையானவை கலிங்கத்திலிருந்து  வருவதாலும், பயணிகளில்
பலர் கலிங்கராக இருந்ததாலும் பொதுவாக பாரதத்திலிருந்து வர்ம் வேற்று மக்களும்கூட
பெரும் எண்ணிக்கையில் கலிங்கத்துத் துறைகளிலிருந்து புறப்பட்டு வந்ததாலும்,
வருபவர்களில் அனைவரையும் பொதுப்படையாக "கலிங்கர்" என்றே தென்கிழக்காசியர்கள் அழைக்கலானார்கள்.


                மலாய் மொழியில் பாரதத்தினருக்குப் பொதுப்படையாக "கெலிங்"  என்ற பெயர் ஏற்பட்டது. சீனத்தில் 'க்லேஙா' என்றும் அழைத்தார்கள். சீனர்களும் இந்தியர்களைக் கலிங்கர் என்ற
பெயரிலேயே அழைத்தனர். Ka-ley-nga கா-லெய்-ஙா என்பது பழைய பெயர். இப்போதும் அப்படித்தான் அழைக்கின்றனர். 'க்லே்ஙா என்பது இப்போதுள்ள பெயர். ஆனால் சீனர்கள் தமிழர்களைப் பொதுவாக மிகவும் இழிவாகக் கருதுவார்கள். ஆகவே 'க்லே்ஙா' என்பதுடன் 'கி' என்னும் சொல்லையும் சேர்த்து 'க்லே்ஙாக்கி' என்று சொல்கிறார்கள
்.. 'கி' என்பது பேயைக்
குறிக்கும்.

                அறுநூறு ண்டுகளுக்கு முன்னர் வங்கத்தினர் இனம்பிரித்துப் பார்க்கப் பட்டனர். அப்போது அவர்களை 'பங்கலி'(Banggali) என்று அழைக்கலானார்கள்.
    வடநாட்டிலிருந்து வருபவர்களைப் பொதுவாக அவர்கள் வங்காளத்திலிருந்து வருபவர்களாகக் கருதினார்கள். ஏனெனில் வடநாட்டுக் கப்பல்களில் பல, அங்கிருந்துதான் புறப்படும்.
    பிரிட்டிஷ் ஆட்சியில் பஞ்சாபிலிருந்து சீக்கியர்கள் கணிசமான எண்ணிக்கையில் வந்தார்கள். அவர்கள் எல்லாருமே பஞ்சாபிலிருந்து கல்கத்தா வந்து அங்கிருந்துதான் தென்கிழக்காசியாவுக்குக் கப்பலேறுவர்கள்.
    ஆகவே அவர்களை 'பங்கலி' என்று குறிப்பி
ட்டனர். தமிழர்கள்கூட சீக்கியர்களான அவர்களை
'சீக்கு வங்காளி' என்றுதான் குறிப்பிடுவார்கள்.

                போர்த்துகீசீயர் முதன்முதலில் வரும்போது அவர்களை இனம்கண்டுகொள்ளாமல்
 'பங்கலி பூத்தே' (Banggali Puteh-வெள்ளை வங்காளி) என்று அழைத்தனர். ஏனெனில் அவர்கள் வங்காளிகளில் ஏதோ வெள்ளையான வகையினர் என்று நினைத்துவிட்டனர்.

                பிறகே அவர்களை Ferringgi என்று அழைக்கலானார்கள்.

                அறுநூறு ண்டுகளுக்கு முன்னரேயே கலிங்கத்தார்களின் வருகை  நின்றுவிட்டது.
தமிழர்கள் வந்து சென்றவண்ணமிருந்தனர். இருப்பினும் 'கெலிங்' என்னும் பெயர் ஒட்டிக்
கொண்டது. ஒவ்வொரு பெரிய ஊரிலும் தமிழர்களின் குடியிருப்புகள் இருந்தன. அவற்றை
'Pekan Keling',
'Tanjong Keling', 'Kampong Keling' என்றெல்லாம் அழைத்தனர்.

        மலாக்காப் பேரரசு விளங்கிய காலத்தில் அங்கு தமிழ் வர்த்தகர்கள் மிகவும் செல்வாக்குடன் இருந்தனர். அவர்களைப் பற்றி போர்த்துகீசியப்பயணிகள் விரிவாக எழுதியுள்ளனர். அந்தத்
தமிழ் வர்த்தகர்களை அவர்கள் 'கிலிங்' என்றும் 'சிட்டி' என்றும் அழைக்கின்றனர். 'சிட்டி'
என்பது 'செட்டி' என்ற சொல்லின் போர்த்துகீசிய மருவல்தான். அவர்கள் வசித்த நகர்ப்
பகுதியே மலாக்கா நகரின் ஏனைய பகுதிகளையெல்லாம்விட பெரிதாகவும், அழகாகவும்,
உன்னதமாகவும், செல்வம் கொழிக்கும் இடமாகவும் இருந்ததாக அந்தப் பயணிகளின்
குறிப்புகள் கூறுகின்றன. அந்தப் பகுதி இன்றும் மலாக்காவில் 'தஞ்சோங் கிலிங்' என்ற
பெயரில் விளங்குகிறது.


    Castanheda என்னும் போர்த்துகீசிய பயணியார் ஒருவர் மலாக்காவின் மிகச் சிறந்த கால
ட்டத்தில் வந்தவர். அவர் 1528-இலிருந்து 1538வரைக்கும் மலாக்காவில் இருந்தவர்.
    அவர் கிலிங்’ களைப்பற்றை எழுதியிருக்கிறார்.
   
Castanheda:
"In the northern part of the city, live merchants known as Quelins(Kling, the people of
Kalinga, from India); In this part, the town is much larger than at any other. There are
at Malacca many foreign merchants, who I said before live among themselves. They
are moors and pagans. The pagans come principally from Paleacate; they are installed permanently. They are very rich. They are the greatest merchants of the world at this
period".

    "They evaluate their wealth only in Bahars of gold.; there are some possessing
60 quintals of gold( 1 quintal = 700 kilograms). They do not consider as rich, the
merchant who, in a single day, does not buy three or four ships charged with merchandises
of grear value, and make them reload(the ships) and pay them their proper amounts.
Thus, this port is the most important in the world and has the richest merchandise known
to the whole world".


    காஸ்டானெடா: "இந்த நகரத்தின் வடக்குப் பாகத்தில் கலிங் என்னும் வணிகர்கள் வசிக்கிறார்கள்('இந்தியாவின் கலிங்க நாட்டைச் சேர்ந்த க்லிங்'-சிரியர் குறிப்பு). இந்தப் பகுதியில் மலாக்கா நகரம் வேறெங்கையும்விட இன்னும் பெரிதாக இருக்கிறது. மலாக்காவில் வெளிநாடுகளைச்செர்ந்த பல வணிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்குரிய இடங்களில் அவர்களுக்குள் வசித்துக்கொள்கிறார்கள். அவர்களில் முஸ்லிம்களும் இருக்கின்றனர்; முஸ்லிம்/கிருஸ்துவர் அல்லாதாரும் இருக்கின்றனர். முஸ்லிம் அல்லாதார்கள் பளையக்காட் பகுதியிலிருந்து வந்தவர்கள்".
    (பளையக்காட் என்பது தொண்டைமண்டலம். னாலும் சோழமண்டலத்தையும் சேர்த்தே அப்பெயரால் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  பிற்காலத்தில் பலெக்காட் என்றும் புலிக்காட் என்றும்
இந்தப் பிரதேசம் வழங்கலாயிற்று. தமிழ் முஸ்லிம்களை பலெக்காட் சாமி என்று மலாய்க
காரர்கள் குறிப்பிட்டதுண்டு. பிற்காலங்களில் பெருமளவில் கைலி, லுங்கி, சாரொங் 
கியவை பளையக்காட்டிலிருந்து கொண்டுவரப்பட்டன. கவே கைலிக்கே பலேக்காட் என்னும்
பெயர்கூட ஏற்பட்டுவிட்டது.)

    காஸ்டானெடா: "இந்த முஸ்லிம் அல்லாத வணிகர்கள் மலாக்காவிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்கள். அவர்கள் மிகப்பெரிய செல்வந்தர்கள். இந்தக் காலகட்டத்தில் உலகிலேயே
மிகச் சிறந்த பெரிய வணிகர்கள் அவர்கள்தாம்".

    காஸ்டானெடா: "அவர்களுடைய செல்வத்தை அவர்கள் எத்தனை பஹார் பொன் என்பதை வைத்தே கணக்கிடுவார்கள். அவர்களில் சிலர் 60 குவிண்டால் பொன்னை வைத்திருக்கிறார்கள்.
ஒரு குவிண்டால் என்பது 700 கீலோகிராம்களுக்குச் சமம்".

    காஸ்டானெடா: "பெரும் மதிப்பு மிக்க சரக்குகள் நிறைந்த கப்பல்கள் மூன்று அல்லது
நான்கை ஒரே நாளில் சரக்குகளுடன் அப்படியே முழுசாக வாங்கி அவற்றின் சரக்குகளை
மாற்றி ஏற்றி அவற்றிற்குரிய விலையை உடனேயே பட்டுவாடா செய்யமுடியாதவர்களை
அவர்கள் வணிகர்களாகவே கருதுவதில்லை".

    “காஸ்டானெடா: "கவே இந்தத் துறைமுகம்தான் உலகிலேயே மிக முக்கியமானது.
உலகத்தோர் அறிந்த அளவில் மிக விலையுயர்ந்த சரக்குகளும் பண்டங்களும் உடைய
நகரம் இதுதான்.”

    காஸ்டானெடாவின் கூற்றுப்படி, பளையக்காட் என்னும் தொண்டைமண்டலம் சோழ
மண்டலம்
கியவற்றிலிருந்து வரும் முஸ்லிம்/கிருஸ்துவர் அல்லாத வணிகர்களையும்
அவர் கலிங் என்றுதான் குறிப்பிடுகிறார்.


        தமிழ் முஸ்லிம்களின் பள்ளிவாசல்  ஒன்று பினாங்கில் இருக்கிறது. அதன் பெயர் 'Mesjid
Kapitan Keling'. 'Kapitan Keling'
என்பது அக்காலத்து    மலாய்க்கார மன்னர்களால் நியமிக்கப்பட்டதொரு பதவி. தமிழர்களின் நாட்டாண்மையாக விளங்குபவருக்குரியது. மேற்
கூறிய பள்ளிவாசல், Chulia Street என்னும் வீதியில் இருக்கிறது. சூலியா என்னும் சொல்
தமிழ் முஸ்லிம்களைக் குறிக்கும் சொல். சோழியர் என்னும் பெயரிலிருந்து மலாய்
மொழிக்குச் சென்று அங்கு அது சூலியா என்று மருவியிருக்கிறது.      

                யிரம் ண்டுகளுக்கு முன்னர், சோழர்களின் திக்கம் மேலோங்கிய சமயத்தில்
மட்டும் தமிழர்களை 'சூலியா'(சோழியன்=சோழநாட்டான்) (Chulia) என்று அழைத்
திருக்கின்றனர். சீனர்களும்கூட 'Chu-Li-Yen' என்று குறிப்பிட்டுள்ளனர்.

                னால் பிற்காலத்தில் இச்சொல் நாகைப்பட்டினத்திலிருந்துவந்த தமிழ்
முஸ்லிம்களைக் குறிப்பிட மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

        இப்போது அந்தச் சொல்லும் மறைந்து அவர்களுக்கு வேறொரு புதுப்பெயர் ஏற்பட்டு
விட்டது. மலாயில் 'மாமாக்' என்று கூறுவார்கள்.

                தற்சமயம் 'கெலிங்' என்னும் பெயர், முஸ்லிம் அல்லாத தென்னிந்தியர்களுக்கு
மட்டுமே உரித்தான பெயராக இருக்கிறது.


                னால் மலேசியாவில் மட்டுமே இந்தப்பெயர் ஓர் அவச்சொல்லாகக்  கருதப்படு
கின்றது. அதை ஓர் இழிவுச்சொல்லாக மற்றவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

        கவே தமிழர்கள் அந்தச ்சொல்லால் குறிப்பிடப்படுவதை விரும்புவதில்லை.              
        ஜாவா,  சுமாத்ரா கிய இடங்களிலுள்ள தமிழர்களுக்கும்  'கெலிங்'  என்ற  அதே பெயர்தான்.  னால் அங்கோ இது உள்ளர்த்தம் ஏதுமில்லாது யதார்த்தமான பெயர்ச் சொல்லாக 
விளங்குகிறது.



       கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ். ஜெயபாரதி


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


RETURN TO MAIN MENU