கிறுக்கு வரலாமோ?
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
"கிறுக்கி எழுதுவது" என்றதும் ஒரு நிகழ்ச்சி
நினைவுக்கு வந்தது.
மதுரகவிராயர் என்பவர் ராமநாதபுரத்துக்கு அருகில் வசித்தவர்.
அவர் சேதுபதி மன்னரின்
அவைக்களப்புலவர்களில் ஒருவர்.
ஒருமுறை அவரைப் பாம்பு கடித்துவிட்டது.அதனால் அவரது உயிர்நிலை
அடங்கிப்போய்விட்டது. ஆனால் உறவினர்கள் அவர் இறந்துவிட்டார் என்றுஎண்ணிவிட்டனர்.
ஆகையால் எல்லா இடங்களுக்கும் செய்தி சொல்லிவிட்டனர். சேதுபதி
மன்னரும் தம்முடைய ஆஸ்தானப்புலவர் இறந்துவிட்டார் என்பதால் வரிசைகள் அனுப்பியிருந்தார்.
உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.
அப்போது ராமேஸ்வரம் சென்றுகொண்டிருந்த வடநாட்டு பைராகிகள்
கவிராயரின் உயிர்நிலை மட்டுமேஅடங்கியுள்ளதை அறிந்துகொண்டனர். கவிராயருக்கு காருட
மந்திரப ்பிரயோகம், விஷ வைத்தியமெல்லாம் செய்து அவரை எழுப்பினர். சில பரிகாரங்களுடன்
வீட்டில் சேர்த்துக்கொள்ளப்பட்ட கவிராயரின் உடல்நிலை தேற பல நாட்கள் ஆயின. வறுமையாலும்
வாடிய கவிராயர் சேதுபதியிடம் உதவி கேட்கச் சென்றார்.
ஆனால் உடல் மெலிந்து, தாடிமீசையுடன்அழுக்குடைஅணிந்து காணப்பட்ட
கவிராயரை யாருக்கும் அடையாளம்தெரியவில்லை. வாயிலோன் சென்றுசேதுபதியிடம் தெரிவித்தான்.
அனுமதி கிடைக்கவில்லை.
கட்டாயம் பார்த்தே தீரவேண்டும் என்றுசொல்லியனுப்பினார். மன்னரும்
அழைத்து வரச்செய்தார்.
விஷயத்தைக் கவிராயர் விளக்கினார். மனமகிழ்ந்தமன்னரிடம் பத்திய
உணவுக்கு பழைய நெல் வேண்டும் என்று கேட்டார்.
சேதுபதியும் கணக்குப்பிள்ளையை அழைத்து நூறு கலம் பழைய நெல்
கொடுக்குமாறு களஞ்சியக்காவலுக்கு ஓலை எழுதச்செய்தார். அவனோ நூறு என்பதற்கு
பதில் இருநூறு என்று எழுதிவிட்டான்.
ஓலையைச் சரிபார்க்கும்போது, சேதுபதி,
"என்னய்யா இது? நூறு என்று எழுதச்சொன்னால் இருநூறு என்று
எழுதியிருக்கிறாயே? சரி! சரி! அந்த "இருநூறு" என்பதில் உள்ள "இரு"
என்பதை கிறுக்கித் திருத்தி விடு", என்றார்.
அப்போது மதுர கவிராயர் கணக்கருக்குக்கையைக்காட்டி தடுத்து,
"கிறுக்காதே!" என்றார்
அதிர்ந்துபோன மன்னர், "என்ன காரணம்?" என்றார்.
அதற்கு பதிலைப் பாடலாகவே சொன்னார் மதுர
ராயர்,
உருக்குமணி வேந்தருக்கும் கள்ளருக்கும்
நீதிதப்பி ஒழுகி னோர்க்கும்
கிருக்குவரச் செயும் துரை நீ! பாவாணர்
ஓலைதனில் கிருக்குண்டாமோ?
வருக்கைமணி சேதுபதி மாநிலத்தை
ஒருகுடைக்கீழ் ஆள வந்த
நிருக்குமணி முத்திருளப்பா!
அருளப்பா!உனது நிருபந் தானே!
பெரும் மன்னருக்கும் திருடர்களுக்கும் நீதி தவறியவர்களுக்கும்
கிருக்கு வரச்செய்யும் தலைவன் நீ! நீ பாவாணருக்கு எழுதிக்
கொடுக்கும் ஓலையில் கிருக்கு உண்டாகலாமோ?
சேதுநாட்டை ஆளவந்த முத்திருளப்பா, அடித்தல் திருத்தல்
இல்லாமல் - கிருக்கல் இல்லாமல் அப்படியே உன்னுடைய
அந்த நிருபத்தை அருளப்பா!
இதைக்கேட்ட சேதுபதி மகிழ்ந்து இருநூறுகலத்தையே கொடுத்தார்.
நூறுகலம் பழையநெல்; நூறு கலம் புதிய நெல்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU