மாலைமாற்று
PALINDROME
பாகம் 1
சாக்தஸ்ரீ டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
பிரான்மலை மங்கைபாகர் பாகம்பிரியாள்
இந்தச்
சிறப்புக்கட்டுரை மாலை மாற்று என்னும் பொருளைப் பற்றியது. திருஞானசம்பந்தரின்
திருமாலைமாற்றுத்திருப்பதிகமும் அதன் பொருளும் இணைத்துக்கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆங்கில மொழி பெயர்ப்பையும் காணலாம்.
இதைப் பற்றி ஒரு விசேஷம் இருக்கிறது.
இதை நாங்கள் முதன்முதலில் 1997-ஆம் ஆண்டில் தமிழ் இணையம்
எனப்படும் தமிழ்
டாட் நெட் மடற்குழுவில் பேசினோம்.
நான் தமிழ் டாட் நெட்டில் சேர்வதற்கு முன்னால் தமிழ் வெப் என்றொரு குழுவில்
ஆங்கிலத்தில் எழுதிகொண்டிருந்தேன். அங்கிருந்து இண்டாலஜி குழுவிற்குச் சென்றேன்.
அங்கு எழுதிக்கொண்டிருக்கும்போது பாலா பிள்ளை, என்னைத் தமிழ் டாட் நெட்டிலும்
ஸாங்காஞ்ச்சில் என்னும் மடற்குழுவிலும் சேரச்சொல்லி, அவரே சேர்த்துவிட்டார்.
ஆரம்பத்தில் எவ்வளவுதான் முயன்றும் தமிழ் எழுத்துருக்கள் வரவேயில்லை. ஆகவே
ரோமனைஸ்ட் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் எழுதிக்கொண்டிருந்தேன்.
Palindromes என்ற இழை தொடங்கிய புதிதில் ஆங்கிலத்தில்
நான் எழுதிய மடல் கீழே.
Dear Netters.
S O S!!!!
I am not able to send any mail through Eudora Light.
Don't know how to get rid of the snag, whatever it is.
Since I can't use Tamil characters, I have to confine myself to English
Palindromes
The most famous palindrome is supposed to have been uttered by Napoleon.
He was at first sent to the Island of Elba.
His second and final exile was to St Helena.
Even though, he made a come back after his confinement in Elba, he lost his
element.
He was never at his best, thereafter.
So, the literary historians have him say,
"ABLE WAS I ERE I SAW ELBA"
This is a very interesting palindrome since it has a nice story behind
it.
Personally, I , very much doubt that Napoleon would ever have uttered
this
at all, being the staunch "Anglophobe" that he was.
There are some interesting palindromes in Tamil.
Sambandar has composed a Thiruppadhigam of 10 verses. His padhigam is
known as 'mAlai mARRu thiruppadhigam".
Palindrome is known as "mAlai mARRu". The grammatical rules are found in
"aNiyilakkaNam".
If and when I get out of this glitch, I will give you some very interesting
anecdotes about palindromes which are best expressed in Tamil.
Selva Ganesan ! Can you help me?
JAYABARATHI
Sungai Petani
Kedah
Malaysia.
அதில் -
" If and when I get out of this glitch, I will give you some very interesting
anecdotes about palindromes which are best expressed in Tamil".
என்று எழுதியிருந்தேன்.
அடுத்த நாளே, எழுத்துருப் பிரச்னை தீர்ந்தது.
தமிழில் எழுதமுடிந்துவிட்டது.
அப்படி நான் தமிழில் எழுதிய முதல் மடல் மாலை மாற்று பற்றிய மடல்தான்.
அது ஒரு சுவாரஸ்யமான கலந்துரையாடல்.
முதலில் Palindrome எனப்படும் ஆங்கிலச்சொல் பற்றிதான்
மடலாடல் ஆரம்பாகியது.
Palindrome
என்றால் முன்னாலிருந்து பின்னுக்கும் பின்னாலிருந்து முன்னுக்குமாக
வாசித்தாலும் ஒரே மாதிரியான எழுத்துக்கள் - அதாவது ஒரே சொல் - பிறழாமல் வரும்
அமைப்பு.
இந்தச் சொற்களைப் பாருங்கள்:
ஆங்கிலச்
சொற்கள்:
RADAR
ROTOR
MINIM
MAHAMAHAM (மஹாமஹம்)
"TAMAT" (மலாய் மொழியில்,"END")
தமிழில்
மிக அதிகமாக அடிபடும் சொல்:
விகடகவி
சில
வாக்கியங்களும் இருக்கின்றன:
தேரு வருதே
தேளு மீளுதே
Palindrome சொற்களாகவும் அமையலாம்.
வாக்கியங்களாகவும் இருக்கலாம்.
MADAM I AM ADAM
இந்த வாக்கியத்தைத் திருப்பி வாசித்தாலும் அதேதான் வருகிறது.
இதைவிட விசேஷமான வாக்கியம் ஒன்று உண்டு.
" ABLE WAS I ERE I SAW ELBA"
நெப்போலியன் கூறிய வாசகம் என்று இதைச்சொல்வார்கள்.
.
தென்காசிப்பட்டணத்திலோ, சீவலப்பேரிப் பாண்டியிலோ, கிழக்குச்சீமையிலோ
வரும் வசனம் என்று ஆட்கள் நினைத்துவிடப்போகிறார்கள். இப்பவெல்லாம் அந்த கார்ஸிக்கக்
குள்ளரை விட 'தும்பைப்பூ மல்லு கட்டி, தொடை தெரியத் தூக்கிக் கட்டி' உலா வரும்
அந்த நெட்டையரைத்தான் நம்ம ஆட்கள் அதிகம்
அறிவார்கள்.
இவர் வேறு ஆள்.
·
பிரான்ஸ் நாட்டு நெப்போலியன்.
·
பிரான்ஸ்நாட்டின் மாவீரரும் சக்கரவர்த்தியுமாகிய நெப்போலியன்
தம்முடைய
க்ராந்த் ஆர்மீ என்று அழைக்கப்பட்ட படையை வைத்து, மிகச் சிறந்த ராணுவ நுட்பங்களுடன்
கூடிய உத்திகளைப் பயன்படுத்தி, பல நாடுகளைப் பிடித்தார். ரஷ்யாமேலும் படையெடுத்தார்.
அதன் தலைநகரம் மாஸ்கோவைக்கூட கைப்பற்றிவிட்டார். ஆனால் ரஷ்யாவின் பனிக்காலம்
அவருடைய படையை அழித்து அவரையும் தோல்வியடையச் செய்துவிட்டது.
விரைவில் அவரைப் பதவியிறங்கச் செய்துவிட்டார்கள்.
அவரை மத்தியதரைக்ககடலில் உள்ள எல்பா Elba என்னும் தீவுக்கு நாடு கடத்தினார்கள்.
விரைவில் அவர் அங்கிருந்து தப்பிவிட்டார்.
சில ஆதரவாளர்களுடன் அவர் ·பிரான்ஸ் நாட்டின் மண்ணில் காலடியெடுத்துவைத்தார்.
அவரைப் பிடித்து சங்கிலிபோட்டுப் பிணைத்து பிடித்துவருவதாக அவருடைய முன்னாள்
தளபதியாகிய மார்ஷல் நேய் சூளுரைத்துச் சென்றார். அவர் கூட்டிச்சென்ற பெரும்படையினர்
நெப்போலியனைப் பார்த்தவுடன் வேகமாக ஓடிப்போய் அவருடன் சேர்ந்துகொண்டார்கள்.
மார்ஷல் நேயும் சேர்ந்துகொண்டு வழக்கம்போல தலைமைத் தளபதியாக்கப்பட்டார்.
நெப்போலியன் மீண்டும் பாரிஸ¤க்குள் நுழைந்து தம் பழைய எதிரிகளுடன்
போரிட ஆரம்பித்தார்.
நூறே நாட்கள்.
வாட்டர்லூ போர்க்களத்தில் தோல்வியுற்றார்.
இத்தனை விரைவாகத் தாம் தோல்வியடைந்ததை அவரால் ஏற்றுக்கொள்ளமுடிய
வில்லை. தவறான சில நம்பிக்கைகளின்பேரில் முடிவுகள் எடுத்ததாலும் சந்தர்ப்பவசமாக
அவருக்கு வந்துசேரவேண்டிய துணைப்படைகள் தாமதமாகியதாலும் அப்படி நேரிட்டுவிட்டது.
தம்முடைய திறனும் திறமையும் செயலாற்றும் ஆற்றலும் குன்றிவிட்டதாக அவர் எண்ணினார்.
எல்பாத் தீவில் அடைபட்டதாலேயே அவ்வாறு தாம் ஆகிவிட்டதாக நம்பினார்.
அப்போதுதான் அவர் சொன்னாராம்:
" ABLE WAS I
ERE I SAW ELBA"
"எல்பாவைப் பார்க்கும்வரைக்கும் நான் வல்லமையுடையவனாக இருந்தேன்".
து ஒரு கப்ஸா.
ஏனெனில் நெப்போலியன் ஆங்கில மொழியில் Palindrome அமைக்கும்
அளவுக்கு ஆங்கிலப் புலவருமல்லர்.
யாரோ ஆங்கிலேயர்தான் அவரே இந்த மாதிரி Palindrome வாக்கியத்தை அமைத்துவிட்டு
அந்த வாக்கியத்தை நெப்போலியன் வாயில் திணித்து கற்பித்துவிட்டிருக்கிறார்.
RETURN TO MAIN MENU