மாலைமாற்று
PALINDROME
பாகம் 2
சாக்தஸ்ரீ டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
திருஞானசம்பந்தர்
Palindrome என்னும் அமைப்பு
தமிழில் உண்டு.
இதை 'மாலைமாற்று' என்று குறிப்பிடுவார்கள்.
'அணியிலக்கணம்' என்னும் ஐந்திலக்கண நூல் பிரிவில் இதைப் பற்றிய விளக்கத்தைக்
காணலாம்.
தமிழில் நான்கு வகைக் கவிகள் உள்ளன.
ஆசுகவி
மதுரகவி
சித்திரக்கவி
வித்தாரக்கவி
அவற்றுள் சித்திரக் கவி வகையில் மாலை மாற்று எனப்படும் Palindrome
அடங்கும்.
மாலை மாற்று என்றால் என்ன?
"ஒரு செய்யுள் முதல்,
ஈறு உரைக்கினும்,
அ·தாய் வருவதை
மாலை மாற்றென மொழி"
ஒரு செய்யுளின் கடைசி எழுத்தை முதலாக வைத்துக் கொண்டு பின்னாலிருந்து திருப்பி
எழுத்துக் கூட்டிவாசித்துக் கொண்டு முதல் எழுத்துக்கு வரவேண்டும்.
அது முன்னிலிருந்து வாசிக்கும் அதே வாசகமாக அமையவேண்டும்.
மாலைமாற்று என்று ஏன் பெயர் ஏற்பட்டது?
ஜபமாலையை முன்னிருந்து பின்னும், பின்னிருந்து முன்னுமாக உருட்டுகிறோம் அல்லவா?
அந்த முறையை ஒத்திருப்பதால், (ஜப)"மாலை மாற்று" என்று பெயர் பெற்றது.
அதற்குக் கீழேயுள்ள வரைபடத்தைப் பாருங்கள்:
வேகமாக free-hand-இல் வரைந்து உடனடியாக வலையேற்றம் செய்த
படம்.
'மாலைமாற்று என்ற சொல்லில் உள்ள 'மாலை' என்பது ஜபமாலையைக் குறிப்பதாகும்.
ஜபமாலையில் இருபத்தொன்று, ஐம்பத்தொன்று, நூற்றெட்டு என்ற கணக்கில் மணிகள் கோர்க்கப்பட்டிருக்கும்.
மாலையின் நடுநாயகமாக ஒரு பெரிய மணி தொங்கிக்கொண்டிருக்கும்.
இந்த மணியை 'மகாமேரு' என்றோ 'மேரு' என்றோ சொல்கிறோம்.
மேருவுக்கு அடுத்த மணியிலிருந்து ஜபமாலையை உருட்டுகிறோம். ஜபமாலை
மணிகளை உருட்டி உருட்டித் தள்ளி வரும்போது மேருவுக்கு மீண்டும்
வந்துவிடுவோம்.
இது ஒரு சுற்று.
மேருவைத் தாண்டுவதில்லை. அப்படியே ரிவெர்ஸில் கோஸ்ட்டானில்
மணிகளை உருட்டுகிறோம். மீண்டும் மேருவுக்கு வந்து சேர்ந்து விடுகிறோம். இது இரண்டாம்
சுற்றின் பூர்த்தியாகும். மேருவைத் தாண்டாமல் ரிவெர்ஸில் மறுபடியும் வருகிறோம்.
இது மூன்றாம் சுற்று.
இப்படியாக முன்னால் போய்விட்டு, அதே கணக்கில் திரும்பி, மீண்டும் புறப்பட்ட
இடத்துக்கே வருகிறோம்.
உதாரணத்துக்கு ஒரு பாடல். திருஞானசம்பந்தரின் திருமாலைமாற்றுத் திருப்பதிகத்தின்
முதற்பாட்டு:
"யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா"
மணிகளையெல்லாம் பாடலின் அட்சரங்களாகப் போட்டுக் கொள்ளுங்கள்.
மேருவிலிருந்து ஆரம்பித்து 'யாமாமா' என்று அட்சரங்களைச் சொல்லிக்கொண்டே வாருங்கள்.
'மாமாயா'வுக்கு வரும்போது மேரு வந்து விடுகிறது.
'மாமாயா'வை ரிவெர்ஸில் 'யாமாமா' என்று போட்டு அப்படியே திரும்பி ஆரம்பத்துக்கு
வந்து 'மாமாயா' என்று முடியுங்கள்.
இதனால்தான் மாலைமாற்று. இதுதான் மாலைமாற்று.
மாதி¡¢க்கு ஒரு பாடல்:
"பூவாளை நாறு நீ பூ மேக லோகமே
பூநீறு நாளை வா பூ"
இதையே திருப்பி வாசித்துப் பாருங்கள்.
ஒன்றுமில்லை.
"பூச்சூடி, திருநீறு பூசிக்கொண்டு, நாளைக்கு வா", என்பதே இச்செய்யுளின்
கருத்து.
மாலை மாற்றுப் பாடுவதில் சம்பந்தர் மன்னர். ஒரு முழுப்பதிகமே அவர் பாடியுள்ளார்."மாலைமாற்றுத்
திருப்பதிகம்."
முதற்பாடல்:
"யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா"
தமிழ்தான்! Japanese அல்ல.
"
"நேணவராவிழ யாசைழியே, வேகதளோ¢ய ளாயுழிகா
காழியுளாயா¢ ளேதகவே, யேழிசையாழவி ராவணனே!"
முதல் "ந"கரம் கடைசியில் "ன"கரமாகியிருக்கிறதேயழிய மற்றபடிக்கு
சா¢யான பாடல்
தான்.
ஏழிசையை யாழில் வாசிக்கும் ராவணனை சீர்காழியில் இருக்கும் ஈசனுடன் சம்பந்தப்
படுத்தி ஏதோ பாடியிருக்கிறார் என்று தோன்றுகிறதா? நன்றாகப்
பாருங்கள். வரால் மீனெல்லாம் குதித்து விளையாடுவதெல்லாம் தொ¢யும்.
"பா¡¢ன் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன்" என்று அவர் தன்னையே
அழைத்துக் கொள்வது எவ்வளவு பொறுத்தம்!
அவரைப் பற்றியும் அவர் பாடிய பதிகம் பற்றியும் சொல்கிறேன்.
சைவ சமய முதல்வர்கள் நால்வரில் ஒருவராகிய திருஞானசம்பந்தர் பலவகையான பாடல்களைப்
பாடியிருக்கிறார். அவர் பதினாறு ஆண்டுகளே உலகில் வாழ்ந்தவர். அந்த காலத்துக்குள்
அவர் பதினாறாயிரம் பாடல்கள் பாடினாராம். அவற்றில் நமக்கு இப்போது கிடைத்துள்ளவை
மூவாயிரத்துச் சொச்சம் பாடல்கள்தாம். முந்நூற்று எண்பத்து மூன்று பதிகங்கள்.
மீதிப்பாடல்கள் எங்கே போயின? அந்தத் தில்லைவாழ் நடேசனையும் அவனிடம் தமிழை இன்றுவரை
அண்டவிடாமல் அணுகவிடாமல் வைத்திருக்கிறார்களே, அந்தத் தில்லைவாழ் பட்டர்களையும்தான்
கேட்கவேண்டும்.
பெரிய புராணத்தில் உள்ளவை நாலாயிரத்து இருநூறு எண்பத்தாறு பாடல்கள். அவற்றில்
ஆயிரத்து இருநூற்று ஐம்பத்தாறு பாடல்களைக் கொண்டது திருஞானசம்பந்தர் சரித்திரம்.
எண்பது ஆண்டுகள் வாழ்ந்த அப்பர் பெருமானுக்கே நானூற்று இருபத்தெட்டு பாடல்கள்தாம்.
திருஞானசம்பந்தர் தம்முடைய வாழ்நாளில் சென்ற திருத்தலங்கள் இருநூற்று இருபது.
அவர் பாடியுள்ள இருநூறு எண்பத்து மூன்று பதிகங்கள் அவற்றிற்குரியன.
அவருடைய பதிகங்களில் மிக அதிகமான எண்ணிக்கையைப் பெற்றது அவர் பிறந்த ஊராகிய
சீர்காழிதான். அடுத்தபடியாக திருவீழிமிழலை.
சீர்காழியை அவர் பாடியவை அறுபத்தெட்டு.
அந்த அறுபத்தெட்டில்தான் அவர் சித்து விளையாட்டுக்களைப் புரிந்திருக்கிறார்.
பலவகையான நூதனமான செய்யுள்வகைகளில் அவர் சீர்காழிப் பதிகங்களை அமைத்திருக்கிறார்.
திருமாலைமாற்று, திருத்தாளச்சதி, பல்பெயர்ப்பத்து, திருவிருக்குகுறள், மொழிமாற்று,
ஏகபாதம், திருவெழுகூற்றிருக்கை, ஈரடி, திருவியமகம், திருச்சக்கரமாற்று, திருக்கோமூத்திரி,
வழிமொழித்திருவிராகம், ஈரடி, திருவிராகம் ஆகியவை.
மிழலைக்குரிய பதிகங்களையும் இவ்வாறே அமைத்துள்ளார்.
இவற்றில் 'திருமாலைமாற்று' எனப்படும் திருப்பதிகம் 'மாலைமாற்று' என்னும் செய்யுள்வகையைச்
சேர்ந்தது. பாடுவதற்கு மிகவும் கடினமானதாகக் கருதப்படுவது.
திருஞானசம்பந்தர் இயற்றியவற்றில் மாலைமாற்று அமைப்பில் மாலைமாற்றுத் திருப்பதிகம்
எனப்படும் ஒரே ஒரு பதிகம்தான் கிடைத்திருக்கிறது.
ஒரே சொல் மாலைமாற்றாக Palndrome-ஆக அமைவதே வேடிக்கையாக
இருக்கும்.
ஒரு வாக்கியம் அவ்வாறு அமைவது அதிசயமாகப் பார்க்கப்படும்.
ஆங்கிலத்தில் சில வாக்கியங்கள் அவ்வாறு Palindrome-ஆக
அமைந்துள்ளன என்பதை மேலே கண்டோம்.
ஒரு பாடலை அவ்வாறு அமைப்பது இன்னும் சிரமமான விஷயம். சமஸ்கிருதம்
போன்றவை தவிர வேறு மொழிகளில் என்றால் சிரமம் அவ்வளவு இல்லை. அந்த
மொழிகளில் உள்ள செய்யுள் இலக்கணம் கடினமானவை யில்லை.
தமிழில் உள்ள யாப்பிலக்கணம் மிகவும் கடினமானது. அதன் விதிகளுக்கேற்ப சாதாரண
விருத்தப்பாக்களை அமைப்பதேகூட சிரமம்.
திருஞானசம்பந்தரோ ஒரு பாடல் மட்டுமல்லாமல் பதினோரு பாடல்கள் கொண்டதொரு திருப்பதிகத்தையே
அருளியிருக்கிறார்.
'அருளியிருக்கிறார்' என்றுதான் சொல்லவேண்டும்.
அத்தகைய பதிகம், அருளப்படும் ஒன்றுதான்.
இப்போது திருஞானசம்பந்தரின் திருமாலைமாற்றுத் திருப்பதிகத்தைப் பார்ப்போம்.
GO TO PART 3
MAALAI MAARRU THIRUPPADHIGAM
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU