மாயா கிரகம்
VULCAN


வித்யாலங்கார
டாக்டர் எஸ்.ஜெயபாரதி


                08-06-2004 தினத்தன்று விண்ணில் ஒரு சிறிய அதிசயம்  ஏற்பட்டது.
                    அவ்வப்போது நிகழ்கிற அதிசயம்தான்.
                    சுக்கிரன் என்னும் வெள்ளி கிரகம் அன்று சூரிய பிம்பத்தின்  குறுக்கே கடந்து சென்றது.

                    முதலில் ஒரு சிறிய பிரியம்பல் - Preamble என்பதைத்தான் அவ்வாறு எழுதினேன்.
அதான் அறிமுகம் கலந்த முன்னுரை.

                    சூரியனைச் சுற்றி வரும் கோள்கள் ஒன்பது என்பதுதான் எல்லாருக்கும் தெரியும்.

                    பூமி இவற்றில் மூன்றாவது கோள்.

                    பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இரண்டு கோள்கள் இருக்கின்றன.
                    சுக்கிரன் என்னும் வெள்ளியும் புதனும்.

                    பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் நேர்குறுக்கே வந்து சூரியனை மறைக்கும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

                    பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இந்த இரண்டு கிரகங்களும் இருப்பதால் அவையும் குறுக்கே வரும்.

                    ஆண்டுக்கு இரண்டு முறை அவை இடையே வரும். ஆனால் பெரும்பாலும் சூரிய பிம்பத்துக்கு மேலோ அல்லது கீழோ சென்று விடும்.

                    பாவம். சூரிய பிம்பத்தைப் பற்றி யாரும் பாடவேயில்லை.
                    ஏதோ ப்ரிஜூடிஸ்.......

'வதனமே சந்த்ர பிம்பமோ'

'வானமே எனது மனது நிறைந்த சந்த்ரபிம்ப வதனம்'

'சாரஸம் வசீகர கண்கள் சீர்தரும்
முகம் சந்த்ர பிம்பம்'

                    ஆச்சரியம் என்னவெனில் இதில் வரும் மூன்று சந்த்ர பிம்பங்களும்  டீ ஆர் ராஜகுமாரியின் முகத்தைக் குறிக்கின்றன. (நாற்பது வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கு - ஐம்பது அறுபது  ஆண்டுகளுக்கு  முன்னர் 'கனவுக் கன்னி' என்று புகழப்பட்ட அழகிய நடிகை. நடித்தவை சில படங்களில்தாம். ஆனால் புகழோ பெரும்புகழ். முதலிரண்டும் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடியவை.  மூன்றாவது பியூ சின்னப்பா பாடியது. மூன்றையும் இயற்றியவர் பாபநாசம் சிவன். அப்படியானால் யாருடைய மன வானில் டீ ஆர் ராஜகுமாரியின் முகம் சந்திரபிம்பமாகத் தெரிந்தது என்பதைத் தனி மனோதத்துவ Behavioural ஆராய்ச்சியாகச் செய்யலாம்.

விஷயத்துக்கு வருகிறேன்.

                    ஏகதேசமாக ஓரொரு சமயத்தில் புதன் சுக்கிரன் ஆகியவை சூரியனுக்கும் பூமிக்கும் நேரே குறுக்கே செல்லும்.
                    ஆனால் அவை மிகச் சிறியவையாக இருப்பதால் அவை நாம் கற்பனை செய்துகொள்கிற கிரகணத்தைப் போன்ற நிழலையோ மறைப்பையோ ஏற்படுத்துவதில்லை.

                    சூரிய பிம்பத்தைக் கடந்து ஒரு பெரிய புள்ளி செல்வதுபோல தோன்றும்.
                    சூரியனில் உள்ள சூரியப் புள்ளிகளிலிருந்து இவை வித்தியாசமானவை.
                    இந்த மாதிரி குறுக்கே செல்வதை Occultation என்று சொல்வார்கள்.
                    இதுவும் தன் இயல்பில் ஒரு கிரகணம் போன்ற ஒன்றுதான்.



                    சூரிய பிம்பத்தை சுக்கிரன் கடந்துசெல்வதை பழங்காலத்திலேயே கண்டு அறிந்திருக்கிறார்கள்.
                    கி.பி 1639-ஆம் ஆண்டில் சுக்கிரன் கடந்துசென்றது. அதைக் கவனித்து படமாக வரைந்திருக்கிறர்கள். அந்தப் படத்தை மேலே பார்க்கலாம். அவர்களுடைய கணிப்பையும் குறித்துவைத்திருக்கிறார்கள். இலத்தீன் மொழியில் எழுதியிருப்பதைக் கவனிக்கவும். அப்போதெல்லாம் விஞ்ஞான மொழியாக இலத்தினும் பண்டைய கிரேக்க மொழியும் இருந்தன.
                    அப்போதெல்லாம் டெல்ஸ்கோப் இன்னும் வழக்கத்திற்கு வரவில்லை.
இல்லாமலேயே துள்ளிதமாகக் கணடு, அந்தக் காட்சியையும் வரைந்து, கணிப்புகளையும் செய்திருக்கின்றனர்.
                    சூரியனிலிருந்து பூமி இருக்கும் தூரத்தை துல்லிதமாகக் கணிப்பதற்கு இந்த occultation உதவியது. Parallex என்னும் கணித முறையைப் பயன்படுத்திக் கணிக்கமுடிந்தது.

                    இவற்றில் புதன் குறுக்கே செல்லும்போது புதனின் நகர்வில் சில சலனங்கள் தென்பட்டன.

                    அவை மிகவும் மர்மமாக இருந்தன.

                    அந்த மாதிரிச் சலனங்களை இன்னொரு கிரகமே ஏற்படுத்த முடியும். அதுவும் புதனுக்கு மிக அருகில் உள்ள கிரகமாக இருக்கவேண்டும். அப்போதுதான் தன்னுடைய ஈர்ப்பு சக்தியால் அந்த அளவுக்குச் சலனங்களை ஏற்படுத்தலாம்.

                    புதன்தான் சூரியனுக்கு மிகவும் அருகாமையில் உள்ள கோள் என்று நினக்கப்பட்டது. அதைவிட சூரியனுக்கு மிக அருகில் மிக நெருக்கமாக இன்னொரு கோள் இருக்கிறது என்றும் அதுதான் புதனுடைய போக்கில் சலனங்களை ஏற்படுத்துகிறது என்றும் நம்பினார்கள்.

                    ஆனால் அந்த கோளைப் பார்க்கமுடியவில்லை.

                    அது சூரியனுக்கு மிக மிக மிக அருகில் இருப்பதாலேயே சூரிய ஒளியின் பிரகாசத்தில் அது கண்ணுக்கு அறவே தென்படுவதில்லை என்றும் காரணம் கொடுத்தார்கள்.

                    ஆனால் அந்த மாதிரி ஒரு கோள் இருப்பதாகப் பெரும்பான்மையான வான சாஸ்திரிகளால் ஒப்புக் கொள்ளப்பட்டது.

                    ஆகவே அதற்கு ஒரு பெயரையும் கொடுத்தார்கள்.

                    Vulcan - வல்க்கன் என்ற பெயர்.
                    வல்க்கன் என்பவன் ரோமர்களின் அக்கினி தேவன். விஸ்வகர்மா என்று நம் புராணத்தில் சொல்லப ்படும் தேவதச்சன் போலும் இருப்பான். ஒரு கலப்படமான புராண பாத்திரம்.

                    நீங்கள் Star Trek பழைய ஸீரிஸ் பார்த்திருப்பீர்களா, தெரியாது. வில்லியம் ஷேட்னர் நடித்தது. அதில் மிஸ்டர் ஸ்பாக்(Mister Spock) என்றொரு பாத்திரம் வருவார். அந்த ஆசாமி வல்க்கன் என்னும் கிரகத்தைச் சேர்ந்தவர் என்று கதையில் வரும்.
                    ஆனால் அந்தக் கதையில் வரும் வல்க்கன் வேறு இடத்தில் இருப்பதாகக் கூறப்படும் கற்பனை கிரகம். எரிடானி எப்ஸிலன் என்னும் நட்சத்திரத்தின் அருகில் இருப்பதாகக் கதையில் வரும்.
                    ஆனால் நான் குறிப்பிடும் இந்த வல்க்கன் வேறு.

                    பல ஆண்டுகள் வல்க்கன் இருக்கிறதா இல்லையா என்ற சர்ச்சை நடந்தது.

                    கடைசியில் இதனை விடுவித்தது ஐன்ஸ்டைனின் புகழ்பெற்ற
                    சூத்திரம்: E = mc squared.

                    இதனை அப்படியே புரட்டிப்போட்டுப் பார்த்தார்கள்.
                   E / c squared = m

சூரிய - புதன் ஈர்ப்பு சக்தி மண்டலம் அந்த இடத்தில் ஏதோ ஒரு mass இருப்பதுபோல தோற்றுவித்தது. அது ஒரு சிறு கிரகத்தின் அளவுக்கு இருப்பது போல் இருந்தது. அதையும் புதனின் போக்கில் ஏற்பட்ட சலனங்களில் தன்மைகளிலிருந்து கணக்கிட்டுக் கண்டறிந்தார்கள். தோராயமாக அந்தக் கிரகத்தின் அளவு, கன பரிமாணங்களைக்கூட கணித்துவிட்டார்கள். அது சூரியனைச் சுற்றிவரும் பாதையையும் சுற்றிவரும் கால அளவையும் சூரியனிலிருந்து அது இருக்கும் தூரத்தையும்கூட கணித்துவிட்டார்கள்.

                    பிற்காலத்திலேயே உண்மை தெரிந்தது.
                    அந்த இடத்தில் ஒன்றும் ஸ்தூலப் பொருள் இல்லை.

                    சூக்ஷ¤ம சக்தி மண்டலம் அங்கு ஒரு ஸ்தூல மையத்தை இருப்பதுபோலச் செய்தது.
               விண்வெளியில் இதே போல நிலவும் சக்தி மண்டலங்கள், ஈர்ப்பு மண்டலங்கள் பற்றிய குறிப்புகள் இந்திய வான சாஸ்திரத்திலும் கணிசமான அளவுக்கு இருக்கின்றன. இன்னின்ன பெயரால் குறிப்பிடப்பட்டவை இன்னின்னவற்றைக் குறிக்கின்றன என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது அறியக் கிடைக்கிறது.
                    இவற்றையெல்லாம் எப்படி எந்தக் காலத்தில் கண்டறிந்திருக்கிறார்கள் என்பது ஒரு வியப்புக்குரிய விஷயம்.

                    இன்னும் சில விஷயங்களையும் விபரங்களையும் விஸ்வாக்காம்ப்லெக்ஸில் உள்ள
வேறு சில கட்டுரைகளில் காணலாம்.
                    இந்திய வானசாஸ்திரத்தில் 'சாயா கிரஹம்' என்றொரு வகை உண்டு. அதுபோல மாயா கிரஹங்ளும் உண்டு.

சாயா........ சாயா சாயா சாயா எல்லாம் சாயா....
மாயா........ மாயா மாயா மாயா எல்லாம் மாயா.....

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU