மொங்கான்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
மலேசியா
JayBee
சிவகங்கைப் பகுதிகளில்
"மொங்கான்"என்று ஒரு சொல் உண்டு.
"ஏன்ப்பூ, ஏதோ யாவாரத்துல பங்கு
போட்டுருந்தாப்புல? எப்புடி லாவமெல்லாம்? நல்ல வருதா?"
"எங்கங்கிறேன் வர்ரது? சேந்த பயலெல்லாமா காச மொங்காம் போட்டுட்டாங்க்ய!"
இன்னொரு இடத்தில்,
"அட அந்த ஆளா நிதி மந்திரி? அவுரு பெரிய மொங்கானாச்சே! எசறி விழுந்தாம்
மலேல பாதி அவுருதுவாமுல்ல?"
மொங்கான் என்பது பெருந்தவளையிலேயே மிகவும் பெரியதாம். இரண்டு
கைப்பிடிக்குமேல் இருக்குமாம். கோலிக்குண்டு மாதிரி கண்களாம்.
அடித்தொண்டையில் கத்துமாம். (இதே மாதிரி மலேசியாவின் பழைய மந்திரி மொகமட்
ரஹ்மாட் இருந்தார். பாவம். இப்போது ஆள் எங்கிருக்கிறார் என்பது
தெரியவில்லை. மொங்கான் என்றதும்தான் ஞாபகத்துக்கு வருகிறார். ஆனால்
அப்படியே
மொங்கான் மாதிரி இருப்பார் எனமுடியாது. மொங்கானைப்
பிடித்து, உப்புத் தண்ணீரில் ஊறவைத்து,வெய்யிலில் காயவைத்தால் எப்படி
இருக்கும்? அந்தமாதிரி பாடம் பண்ணிய mummified மொங்கான் போல
இருப்பார். குணமும் அதே மாதிரிதான்.)
மொங்கான் என்னும் பெருந்தவளை இப்போது இருக்கிறதா?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$