மூலபலசேனை வதை
AN UNTOLD STORY FROM RAMAYANA
பாகம் 3

கடாரத்தமிழ்ப் பேரறிஞர
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee

                    மூலபல சேனையின் ஒரு பாதி இன்னொரு பாதியைக் கொன்றது.
                    பாதியில் ஒரு பாதி இன்னொரு பாதியில் பாதியைக் கொன்றது. இப்படி  பாதியில் பாதியாக பாதிப்படைந்த மூலபலசேனையில் இரண்டு நாமதாரி அரக்கர்கள் மட்டுமே எஞ்சினர். அவர்களில் ஒருவன் இன்னொருவனைக் கொன்றுவிடுகிறான். அப்படியானால் அந்தக் கடைசி நாமக்கார அரக்கனை யார் கொன்றது?
 
                     இப்படி நடந்திருக்கிறது......

                     அந்தக் கடைசி நாமதாரி அரக்கன் ஆரம்பத்திலிருந்தே போடு போடென்று போட்டுத்தள்ளிகளைத்துவிட்டிருக்கிறான். அந்த நிலையில் அவன் AFS என்னும் Acute Fatigue Sydrome என்னும் நிலையில் இருந்திருக்கிறான்.

                     அப்போது பார்த்து, வானரசேனையிலிருது ஒரு சிறிய வானரம் வந்து, அந்த நாமக்கார அரக்கனின் பின்புறமாகச் சென்று, "Booo", என்று சொல்லியிருக்கிறது.

                     ஏற்கனவே மேற்கண்ட ஸிண்ட்ரோமால் பாதிப்புற்றிருந்த நாமக்கார அரக்கன் திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியால் Cardiac Arrest ஏற்பட்டு இறந்துவிட்டான்.

                     அந்த வானரத்தை அனைவரும் புகழ்ந்தனர்.

                     கள்ளத்தனமாக அது நாமதாரி அரக்கனின் பின்புறமாகச் சென்று அவனை பயமுறுத்தி இறக்கச் செய்ததற்காக அதற்கு ஒரு சிறப்புப் பெயரைக் கொடுத்தார்கள்.

                     அன்றிலிருந்து அது 'கள்ளவானரப்பெருமாள்' என்று அழைக்கப் பட்டது.

                     இப்போது 'கள்ள வாரணப் பெருமாள்' என்ற பெயரில் தமிழகத்தில் ஓரிடத்தில் கோயில் கொண்டிருக்கும் பெருமாளுக்கும் இதற்கும் ஏதும் சம்பந்தமிருக்குமா என்று ஆய்வுகள் நடக்கின்றன.

                     சைவ அரக்கர்களுக்கு, அவர்களுக்கே தெரியாமல் நாமத்தைச் சார்த்தி, அவர்களை ஏமாறச் செய்ததால், ஏமாற்றும் செயலை 'நாமம் போடுதல்' என்றும் 'நாமத்தைச் சார்த்துதல்' என்றும் சொல்லலாயிற்று என்று கூறுவாரும் உளர்.

                     சைவர்களுக்கு எதிராக வைணவர்கள் செய்த சதி வேலை என்றும், திராவிட அரக்கர்களை ஆரிய வானரங்கள் சதி செய்து அழியச்செய்ததாகவும் இணையத்தில் விவாதங்கள், மடல்களின் மூலம் நடைபெறுவதும் உண்டு.

அன்புடன்
ஜெயபாரதி


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


RETURN TO MAIN MENU