மூலபலசேனை வதை
AN UNTOLD STORY FROM RAMAYANA
பாகம் 2

கடாரத்தமிழ்ப் பேரறிஞர
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee


                     ராமாயணக்கதை, தமிழர்களிடையே பல வடிவங்களில் புழங்கி வருகிறது. மயில்
ராவணன் கதை போன்றவை.  செவிவழி ராமாயணக்கதைகள் சில, தமிழர்களிடையே உண்டு.
அந்தக் கதைகளில் ஒன்று 'மூலபல சேனைக் கதை'.

                     இந்த Version ராமாயணத்தில் உள்ள கதையிலிருந்து மாறுபட்டிருக்கும்.

                     ராவணனுடைய standing army, auxiliaries, etc, போக அண்டகோளத்தின் மூலை முடுக்குகளில் பெரும் எண்ணிக்கை கொண்ட reservesஆக அரக்கர் படை இருந்தது. இதனைத
்தான் மூலபலசேனை
என்பார்கள்.
                     இந்த சேனை கிட்டத்தட்ட infinity எண்ணிக்கை போன்றது. எத்தனை பேர் சேர்ந்து
எத்தனை காலம் அழித்தாலும்கூட அழியமாட்டாதது.  தன்னுடைய படையின் பெரும் பகுதி அழிந்துபோய், கும்பகர்ணன்,
இந்திரஜித் போன்றவர்கள் இறந்தபிறகு, ராவணன் தன்னுடைய மூலபல சேனையை நினைத்தான். அண்டகோளத்தின் அத்தனை பகுதிகளிலிருந்தும்
அத்தனையும் வந்து சேர்ந்து யுத்த ஆயத்தமாக நின்றது.


                     அப்போது ஒரு சிறிய மாயை ஒன்றை அனுமான் தோற்றுவித்தார்.

                     அதன்படி மூலபல சேனையின் ஒவ்வொரு அரக்க வீரனின் நெற்றியிலும் பெரிய
நாமம் தோன்றியது.


                     ராமரின் சேனாவீரர்கள் நாமம் போட்டிருந்தார்கள். அரக்கர் சேனை நாமம் போடுவ
தில்லை. பட்டையடித்திருப்பார்கள். அசல் சைவர்கள். அதாவது சிவனை முழுமுதற்
பொருளாக வழிபடக்
கூடியவர்கள். ஆனால் மாமிசமெல்லாம் சாப்பிடக்கூடியவர்கள்.
                     அதாவது அசைவ சைவ அரக்கர்கள்.

                     ஒவ்வொரு அரக்க வீரனும் தன்னருகிலிருந்த அரக்க வீரனைப் பார்த்திருக்கிறான்.
நாமம் அணிந்திருப்பதைக் கணடதும் ராமரின் வீரனாக்கும் என்று எண்ணி ஒரே போடு.
இதெல்லாம் simultaneous-
நடந்தது. ஆகவே முதல் சுற்றில் பாதி சேனை காலி. மிச்சம் இருப்பவர்கள் நாமத்தைப் பார்த்து இன்னொரு போடு. இரண்டாம் ரவுண்டு. பாதியில் பாதி
காலி. இப்படியே நடந்தது. ராமரின் வானரவீரர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

                 சில நாழிகைகளில் இரண்டே இரண்டு அரக்க வீரர்கள் மட்டுமே எஞ்சினர். அவர்களும்
போடு போட்டுக்கொண்டதைத் தொடர்ந்து மூலபலசேனை அவுட். கே.ஓ.

                 ராமாயணத்தில் ராமரே ஒற்றை ஆளாகக் கோதண்டத்தால் ராமபாணங்களை
இடைவிடாமல் தொடுத்துவிட்டு, மூலபலசேனையை அழித்துவிட்டதாகக் காணப்படும்.


                 ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது..........

GO TO PART 3

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
 

RETURN TO MAIN MENU