கீழ்க்கண்ட பாடலின் காலம் ஆயிரத்தைந்நூறு
ஆண்டுகளுக்கு
முற்பட்ட காலம்.
பல்லவர்களை மூன்று பிரிவாகப் பிரித்திருப்பார்கள்.
காலத்தாலும்
அவர்களின் சாசனங்களின் மொழிகளாலும் அவர்கள் ஆண்ட பிரதேசத்தின்
பரப்பாலும் அந்தப் பகுப்பு ஏற்படுத்தப்பட்டது.
பல்லவர்களில் மூன்று பேர் 'நந்திவர்மன்'
என்ற பெயரைக் கொண்டவர்கள்.
இதில் முதலாவது ஆசாமி கிபி 525-இல் ஆண்டவர். இந்த ஆசாமியின்
பங்காளி
விஷ்ணுகோபன். விஷ்ணுகோபனுடைய பேரர் சிம்மவிஷ்ணு. இவருடைய
மகன்தான் மஹேந்திரவர்மர். மத்தவிலாசப் பிரவசனம் எழுதியவர்.
இந்த நந்திவர்மரைப் பற்றி ஏதும் தெரியவில்லை.
மகேந்திரவர்மருடைய நேரடி கொடிவழி ஆறு தலைமுறைகளுக்கு
விளங்கியது.
அதன்பின்னர் ஏதோ கசகல்கள்.
ஆகவே தரணிகொண்ட போசர், காடகமுத்தரையர், கடிகையார்
ஆகியோர் இரண்யவர்மரைச் சந்தித்தனர்.
சிம்மவிஷ்ணுவின் தம்பி -அதாவது மகேந்திரவர்மரின்
சிற்றப்பா -
பீமவர்மன் என்பவருடைய பரம்பரையில் வந்தவர் இரண்யவர்மன்.
அவரிடம்போய் தங்களுக்கு ஓர் அரசனைத் தருமாறு
கேட்டனர்.
இரண்யவர்மன் தம் மகன்கள் நால்வரையும் அழைத்து
"உங்களில்
யார் அரசராக விரும்புவது?" என்று கேட்டபோது, மூத்த மூவரும் மறுத்து
விட்டனர். கடைசி ஆளாகிய பல்லவமல்லன் தானே அரசனாக விரும்புவதாகக்
கூறினான்.
இரண்யவர்வனைத் தரணிகொண்ட போசர் அதற்கு இசையுமாறு
வற்புறுத்தினர்.
பிறகு இரண்யவர்மன் கொடுத்த அரச உரிமைக்குரிய
ஆயுதத்தையும்
தரணிகொண்ட போசர் கொடுத்த ஆயுதத்தையும் ஏந்தியவாறு பல்லவமல்லன்
புறப்பட்டான்.
இந்த இடத்தில்தான் ஆராய்ச்சியாளர்களைச் சற்று
யோசிக்கவைக்கிறது.
'பல மலைகளையும் காடுகளையும் தாண்டிக் காஞ்சிக்கு
வந்தான்'.
பல மலைகளையும் காடுகளையும் தாண்டி வருவதென்றால்,
இரண்யவர்மன், பல்லவமல்லன் ஆகியோர் இருந்த ஊர் எது? எந்த நாட்டில்
அவர்கள் வாழ்ந்தனர்?
காஞ்சியிலிருந்து வெகு தூரத்தில் இருந்திருக்கவேண்டும்.
அப்படியானால் பல்லவர்களின் கிளைவழி அரச பரம்பரைகள்
காஞ்சியைத் தவிர வேறு
இடங்களிலும் இருந்து ஆட்சி செய்திருக்கின்றனர்.
பல்லவமல்லன் வருவதை அறிந்த பல்லவடி அரையன்
என்பவன் பெருஞ்
சேனையுடன் அவனை எதிர்கொண்டு அழைத்து யானையின்மீது பத்திரமாகக்
காஞ்சிக்குக் கூட்டிவந்தான்.
காஞ்சி நகரத்துப் பிரமுகர்களும் காடகமுத்தரையரும்
பல்லவமல்லனுக்கு
'நந்திவர்மன்' என்னும் அபிஷேகப்பெயருடன் முடிசூட்டினர்.
இரண்டாம் நந்திவர்மருடைய காலம் முழுவதும்
பெரும் பெரும் போர்களில்
கழிந்தது.
இவருடைய பேரன் மூன்றாம் நந்திவர்மன்.
இவருடைய காலத்தில்தான் பல எதிரிகளைப் பலமுனைகளில்
எதிர்
கொண்டு தெள்ளாறு என்னும் இடத்தில் தோற்கடித்தார். ஆகையால் அவரைத்
'தெள்ளாறெறிந்த நந்திவர்மன்'
என்று குறிப்பிட்டார்கள்.
மிகச் சிறந்த கல்விமான்.
பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர்.
இவருக்கு 'அவனிநாராயணன்' என்னும் பெயரும்
உண்டு.
நான் வசிக்கும் கடாரத்திற்கு நேர் வடக்கே
தாய்லந்தின் தென்பகுதியில்
தாக்குவாப்பா என்னும் ஊர் இருக்கிறது.
பழங்காலத்தில் இதற்குத் 'தக்கோலம்' என்று
பெயர்.
'கலைத் தக்கோர் புகழ் தலைத் தக்கோலம்' என்று
ராஜேந்திர சோழர்
இந்த ஊரைக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஊரில் ஒரு பெரிய விஷ்ணு
கோயிலை 'கொடும்பாளூர் மணிக்கிராமம்' என்னும் வணிகர் குழு கட்டியிருந்தார்கள்.
அந்தக் கோயிலின் முன்னால் 'அவனிநாராணம்' என்ற பெயரில்
ஏரி ஒன்றை ஏற்படுத்தினார்கள்.
இந்த நந்திவர்மன் பல காரணங்களால் மிகவும்
புகழ்பெற்று
விளங்குகிறார்.
சுந்தரமூர்த்தி நாயனார் தம்முடைய திருத்தொண்டத்தொகையில்,
'கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்'
என்று பாடியிருக்கிறார்.
ஆகவே அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர்
இவர்.
அவருக்கும் அவருடைய தம்பிக்கும் இடையே பகைமை.
பெரும்போர்கள் அவருடைய காலத்திலும் நடந்தன.
பல திசைகளிலும்
இருந்த பல வலுவான எதிரிகளை அவர்களின் பிரதேசத்துக்குள் சென்று
சக்கரவட்டமாக ஆயிரக்கணக்கான கீலோமீட்டர்கள் படைகளை விரைவாக
நடத்தி, அனைவரையும் முறியடித்தார்.
நந்திக் கலம்பகம் என்னும் பிரபந்தத்தின்
பாட்டுடைத் தலைவர்
நந்திவர்மர்.
அந்தப் பிரபந்தம் அறம் வைத்துப் பாடப்பட்டது.
அதை யாராவது பாடி, அதை நந்திவர்மர் கேட்டால்,
அவர் இறந்து
விடுவார்.
அது தெரிந்தே அந்தக் கலம்பகத்தை அரங்கேற்றம்
செய்யச்செய்து
இறந்துபோனார்.
நந்திவர்மருக்கு இரண்டு பட்டமகிஷிகள் இருந்தனர்.
நந்திவர்மர் காலத்தில் இன்றைய மஹாராஷ்ட்ரா,
கர்நாடகா,
தெலிங்கானா, மத்தியப்பிரதேசம், குஜராத், ஆந்திரம் ஆகியவற்றின்
பகுதிகள் அடங்கிய பெரிய பிரதேசத்தை ராஷ்டகூடர் என்னும் மன்னர்
பரம்பரையினர் ஆண்டுவந்தனர்.
அவர்களில் சிறந்தவராகக் கருதப்படுபவர் அமோகவர்ஷர்
என்பவர்.
நந்திவர்மருக்கும் அவருக்கும் ஏற்பட்ட போரில்
நந்திவர்மர் வென்ற
பின்னர் அவருக்குத் தன் மகளாகிய சங்கா என்னும் பெண்ணைத்
திருமணம் செய்துகொடுத்தார்.
அமோகவர்ஷர் ஒரு மிகச்சிறந்த கல்விமான்.
கன்னடமொழியிலேயே மிகவும் பழைமையான இலக்கிய
இலக்கண
நூலை எழுதியவர் அமோகவர்ஷர். 'கவிராஜமார்க' என்னும் அந்த நூல்
புலவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்குவது.
மிகச் சிறந்த நிர்வாகி. தம் நாட்டில் அமைதியும்
நிம்மதியும் வளமும்
நிலவவேண்டும் என்பதில் மிகவும் கருத்தாக இருந்தவர்.
தம்முடைய பேரரசுக்காக மிகவும் அழகும் சிறப்பும்
மிகுந்த புதிய
தலைநகரமாகிய மான்யகேடத்தை நிர்மானித்தவர். பிற்காலத்தில் அதற்கு
ராஜராஜசோழர் நெருப்பிட்டு அழித்தார். தமிழர்கள் அந்த ஊரை
மன்னைக்கடகம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அமோகவர்ஷர் காலத்தில் சுலைமான் என்னும் அரபுப்
பயணி ஒருவர்
இந்தியாவுக்கு வந்தார். அவர் ராஷ்ட்ரகூட நாட்டைப் பார்த்துவிட்டு
மிகச்
சிறப்பாக எழுதியுள்ளார். இந்த உலகில் நான்கே நான்கு மிகச் சிறந்த
சாம்ராஜ்யங்களே இருக்கின்றன. அவற்றில் ஒன்று ராஷ்டரகூடப் பேரரசு
என்று கூறுயிருக்கிறார்.
ஒருமுறை அவருடைய பேரரசின் குடிமக்களுக்கு
ஏதோ பேரிடர்
ஏற்படப்போவதாகத் தெரிந்தது.
அதற்கு ஒரு பிராயச்சித்தத்தை மந்திர சாஸ்திர
ஆகம நூல்களிலிருந்து
அறிந்து சொன்னார்கள்.
கோலாப்பூரில் ஸ்ரீலட்சுமி கோயில் இருக்கிறது.
மிகவும் சிறப்பு
வாய்ந்த கோயில். லட்சுமி துதிகளில் ஒன்றான,
'நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸ¤ர பூஜிதே,
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே'
என்ற துதியில் கோலாப்பூர் லட்சுமியே போற்றப்படுகிறாள்.
அகத்தியர் இயற்றிய லட்சுமி தோத்திரம் ஒன்று
உண்டு.
அந்தத் தோத்திரமும் கோலாப்பூர் லட்சுமியைப்
போற்றும் தோத்திரம்தான்.
அகத்தியத்தின் ஆவணத்தில் அது இருக்கிறது.
அந்தப் பிராயச்சித்தத்தின்படி அமோகவர்ஷரின்
விரல்களில் ஒன்றை
வெட்டி பலியாகக் கொண்டார்கள்.
குடிகளின் நலனுக்காக அவர் அவ்வாறு தியாகம்
செய்ததை சாஸனம்
ஒன்று மிகவும் புகழ்கிறது. பலிச்சக்கரவர்த்தி, ஜீமுதவாகனர்,
ததீசி,
சிபிச்சக்கரவர்த்தி ஆகியோர் தியாகத்துக்குப் பேர் போனவர்கள்.
அமோகவர்ஷர் இவர்கள் அனைவரையுமே விஞ்சிவிட்டார் என்று ஒரு
சாசனம் கூறுகிறது.
ஏதோ பிரச்னையைத் தவிர்ப்பதற்காக அவர் தம்முடைய
பதவியையும்
தியாகம் செய்தாராம்.
அப்பேற்பட்ட பெரும் மன்னரின் மகள் சங்கா.
அந்த அம்மையாரும் கல்வியில் சிறந்தவர். பல
கலைகளைக் கற்றுத்
தேர்ந்தவர்.
இன்னொரு பட்டமகிஷி பாண்டிய ராஜகுமாரி.
மூன்றாம் நந்திவர்மராகிய தெள்ளாறெறிந்த நந்திவர்மர்
தமிழின்மீது
தீவிரமான பற்றுக்கொண்டிருந்தார். அவர் இசைச் சங்கம் ஒன்று
வைத்திருந்திருக்கிறார். அதன்மூலம் அவர் இசையை வளர்த்திருக்கிறார்.
அப்பேற்பட்ட நந்திவர்மருடைய பாணன் ஒருவன்
இருந்தான்......
பழங்காலத்தில் பாணர்கள் என்னும் குடியினர்
இருந்தனர்.
அவர்கள் பாடல் பாடுவது, நடனம் ஆடுவது போன்றவற்றைச் செய்வார்கள்.
அவர்களைப் பல மன்னர்கள், குறுநில மன்னர்கள், செல்வர்கள் முதலியோர்
ஆதரித்து வந்தனர். அவர்களில் பெண்பாலர்களை 'விறலியர்' என்பார்கள்.
பாணர்களின் முக்கிய இசைக்கருவி யாழ் என்பது. அதிலேயே ஒன்றுக்கும்
மேற்பட்ட வகைகள் இருந்தன. சகோட யாழ், சீறியாழ், பேரியாழ் போன்றவை.
ஆயிரம் நரம்புகள் உள்ள யாழும் இருந்திருக்கிறது.
பாணர்களில் சிலர் மன்னர்களுக்காக தூதுகூட
சென்றிருக்கிறார்கள்.
சங்ககாலத்திலிருந்து பிற்காலப் பாண்டியர்கள் காலம்வரைக்கும்
பாணர்
குடி இருந்திருக்கிறது.
நம்பியாண்டார்நம்பியைக் கொண்டு ராஜராஜசோழர்
திருமுறைகளைத்
தொகுத்த சமயத்தில் தேவாரப்பாடல்களுக்குப் பண்முறையை வகுக்க
வேண்டியிருந்தது. அப்போது அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான
நீலகண்ட யாழ்ப்பாணர் குடியில் தோன்றிய ஒரு பெண்மணியை வைத்துப்
பண்முறை வகுத்தனர்.
மாறவர்மன் சுந்தர பாண்டியர் சோழநாட்டின்மீது
படையெடுத்தபின்னர்
சோழனுடைய திருமுடி ஆகியவற்றைப் பாணனுக்குப் பரிசிலாகக்
கொடுத்ததாக அவருடைய கல்வெட்டுக் கூறுகிறது.
துருக்கர் படையெடுப்புக்குப் பின்னர் இக்குடியினர்
என்ன ஆனார்கள்
என்பது தெரியவில்லை.
நந்திவர்மனுடைய இசைச் சங்கத்தின் பேரரங்கத்தில்
அவருடைய
பாணர்களில் ஒருவன் பாடினான்.
இந்தப் பாணனை ஏதோ காரணத்தால் மகாராணிக்குப்
பிடிக்கவில்லை.
ஒருநாள் இரவில் நந்திவர்மருடைய இசைப்பேரரங்கில் பாணனுடைய
கச்சேரி நடந்தது. அவன் பாடியதைப் பற்றி அடுத்தநாள் மகாராணி
பாணனிடம் சொல்லியிருக்கிறாள்:
பேணி இசை வளர்க்கும் நந்திபெம்மான் பேரரங்கில்
ஏணொலி நென்னல் இரவெழலும் - பாணகேள்!
"பேய்"என்றாள் அன்னைதான், பேதையென் தங்கையும்
"நாய்"என்றாள், "நீ"யென்றேன் நான்!
"இசையைப் பேணி நன்றாக வளர்க்கும் நந்திவர்ம பெருமானுடைய
இசைப் பேரரங்கில் நேற்று இரவு பயங்கர கூச்சல் எழுந்தது. அவ்வாறு
எழுந்தவுடன் பயந்துபோய்க் குழப்பத்துடன் 'இந்தச் சப்தத்தைப்
போடுவது
பேய்', என்று என் தாய் சொன்னாள். பேதையாகிய என் தங்கையோ
'நாய்' என்றாள்.
"'பேயுமில்லை; நாயுமில்லை. நீதான் பாடுகிறாய்' என்றேன் நான்"
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$