கருடபுராண
நாராயண கவசம்
சாக்தஸ்ரீ டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
'அன்னியன்' படத்தின்மூலம் 'கருட புராணம்'
எப்படியோ புகழ் பெற்றுவிட்டது.
இந்து சமயத்தில் முக்கியமானவையாக ஒரு காலத்தில் இருந்தவை
புராணங்களும் இதிகாசங்களும்.
வேதங்கள் ஆகமங்கள் சாஸ்திரங்கள் நீதி நூல்கள், கலைகள், அற்புதங்கள்,
பக்தி முதலியவற்றைத் தனித்தனியாகக் கற்றுக்கொள்ள இயலாதவர்கள், பாமர மக்கள்
ஆகியோருக்குப் பயன்படும்வண்னம் புராணங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.
பதினெட்டுப் புராணங்களும் பதினெட்டு உபபுராணங்களும் இருக்கின்றன.
அவற்றில் ஒன்று கருடபுராணம்.
அதன்மூலம் பலவிதமான நரகங்களும், பாவியருக்கு அவற்றில் கொடுக்கப்படும்
தண்டனைகளும் அந்தப் புராணத்தில் இருப்பதாகவே அறியப்படும்.
ஆனால் கருட புராணத்தில் இன்னும் பல விஷயங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன.
மற்ற சில புராணங்களுடன் ஒப்பிட்டால் கருட புராணம் சற்றுச் சிறிய புராணம்தான்.
சூரியனையும் ஸ்ரீலக்ஷ்மியையும் விஷ்ணுவையும் வழிபடும் விதங்களை
விலாவாரியாக இப்புராணம் சொல்லும்.
இதிலும் ஒரு விஷ்ணு சகஸ்ரநாமம் உண்டு.
விஷ்ணுவின் பெயரால் தன்னைப் பாதுகாக்கும் ஒரு சிறிய கவசமும்
உண்டு.
தாயத்துக்கள், ரட்சைகள் முதலியவற்றைப் பற்றியும் கருடபுராணம் சொல்கிறது.
இந்த நூலில் 'விஷ்ணு கவசம்' என்னும் மிக சக்திவாய்ந்த கவசம்
உண்டு.
"எல்லா வகையான நோய்களுக்கு எதிராக எனக்குப் பாதுகாப்பு ஏற்பட
மகாப்
பிரபுவாகிய ஜனார்த்தனரை வணங்கி இந்த ரட்சையை அணிகிறேன்.
விஷ்ணு என் முன்புறத்தைக் காக்க
கிருஷ்ணர் என் பின்புறத்தைக் காக்க
ஹரி என் தலையைக் காக்க
ஜனார்த்தனர் என் இதயத்தைக் காக்க
ஹ்ரிஷீகேசர் என் மனதைக் காக்க
கேசவர் என் நாவைக் காக்க
வாசுதேவர் என் கண்களைக் காக்க
சங்கர்ஷணர் என் காதுகளைக் காக்க
ப்ரத்யும்னர் என் மூக்கைக் காக்க
அநிருத்தர் என் தோலைக் காக்க
வனமாலி என் கன்னங்களைக் காக்க
ஸ்ரீவத்சர் என் கீழ்ப்பகுதியைக் காக்க
விஷ்ணுவின் சக்கரம் என் இடது பக்கத்தைக் காக்க
விஷ்ணுவின் கதை என் வலப்பக்கத்தைக் காக்க
கருடன் என் முயற்சிகள் அனைத்திலும் உதவட்டும்
வராஹம் நீரில் காக்க
வாமனர் ஆபத்தில் காக்க
நரசிம்மர் வனங்களில் காக்க
கேசவர் எல்லா இடங்களிலும் காக்க
ஹிரண்யகர்ப பிரபு பொன்னைத் தருவார்
கபில மகாப்பிரபு உலோகங்களைத் தருவார்
விஷ்ணு என் எதிரிகள் எல்லாரிடமிருந்தும் காப்பாற்றுவார்
விஷ்ணு என் பாவங்கள் அனைத்தையும் போக்கிவிடுவார்
விஷ்ணு என் மனதை ஆட்சி புரிந்து எனக்கு ஞானத்தையும்
அறிவையும் தருவார்
நான் விஷ்ணுவைத் தியானித்துவிட்டு இந்த ரட்சையை
அணிந்துகொள்கிறேன்.
இப்போது நான் பயமின்றி உலகில் சஞ்சரிக்கலாம்.
பூதங்கள் என்னை வெல்லமுடியாது.
தேவர்கள் என்னுடன் இருக்கிறார்கள்.
ராட்சதர்கள், பிசாசுகள், சிக்கலான வழிகள், அடர்ந்த வனங்கள்,
நீரில் மூழ்குதல் முதலியவற்றிலிருந்து நான் பாதுகாக்கப்படுகிறேன்.
திருட்டு, மின்னல், பாம்புக்கடி, நோய்கள் முதலியவற்றிலிருந்து நான்
பாதுகாக்கப்படுகிறேன்.
ஜெயபாரதி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU