பழம்பெரும்
மோட்டிவேஷன் குரு
அப்துல் றஹீம்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
தமிழ் இளைஞர்கள்
அறிந்துகொள்ளவேண்டிய, படிக்கவேண்டிய நூல்களைப் பற்றி எழுதுவதும் அகத்தியத்தின்
முக்கிய குறிக்கோள்களில் ஒன்று.
இந்த மாதிரி விபரங்களையெல்லாம் ரொம்பவும் ஆர்வமாக படிப்பார்கள்
என்று எதிர்பார்க்கமுடியாது.
ஏதோ ஒரு சிறுபான்மையினர் பட்டிக்கிறார்கள். அவர்களுக்காவது
ஆகட்டுமே. ஜாதி, ஆரியதிராவிட சம்வாதம், கவிதை, சிறுகதை என்று பேசுவது ஒரு ட்ரெண்ட்,
The In-thing
என்பது உண்மை. இவையே வெளி மீடியாக்களால் கவனிப்படுகின்றன; கவருகின்றன.
அதையெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தால் வேண்டும் சிறுபான்மைக்கு
வேண்டிய விஷயங்கள் கிடைக்காமலும் இருப்பவையெல்லாம் அழிந்தும் போய்விடும்.
கல்லாடம் முதல் பல நூல்களைப் பற்றி ஏற்கனவே எழுதப்பட்டிருக்கிறது.
நீண்ட நாட்களாக இந்த லைனைத் தொடவேயில்லை.
தன்முனைப்புத் தூண்டல் என்னும் Self-motivation
பற்றிய நூல்கள் பல ஆண்டுகளாக இருக்கின்றன. ஆனால் சமீபத்தில்தான்
- இருபதாண்டுகளுக்குள்தான் அது மிக அதிகமாகச் சூடு பிடித்திருக்கிறது. அது
ஒரு Cult என்று சொல்லப்படும் அளவுக்கு அது விரிவாக வளர்ந்திருக்கிறது.
19-ஆம் நூற்றாண்டிலேயே இந்ததுறையில் புத்தகங்கள் எழுதப்பட்டுவிட்டன.
Samuel Smiles என்றொருவர். அவர் நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார்.
Character
Self-Help
Thrift
Duty
Industrial Biography
Life and Labour
என்னும் ஆறு தலைப்புகளில் அவர் புத்தகங்கள் எழுதியுள்ளார்.
Self Help -இன் முதல் பதிப்பு 1866-ஆம்
ஆண்டில் வெளியாகியது. எத்தனையோ முறைகள் அது ரீப்ரிண்ட் ஆகியுள்ளது. இந்தியப்பதிப்பு
1978-இல் போடப்பட்டு என்னிடமுள்ள எடிஷன் 1990 ஆக இருக்கிறது.
பார்த்துக்கொள்ளுங்கள்.
ஸ்மைல்ஸ் புத்தகத்தைப் பற்றி இன்னொருமுறை எழுதுகிறேன்.
இவருக்கும் முன்னால் யூஎஸ்ஸின் சுதந்திரசிற்பிகளில் முக்கியமானவரான பெஞ்சமின்
·ப்ராங்க்லின் இதே துறையில் நிறைய எழுதியிருக்கிறார்.
இருபதாம் நூற்றாண்டில் இந்தத் துறையின் தலைமையான நூலாக Think and
Grow Rich என்னும் புத்தகம் Napoleon Hill எழுதியது.
அவருடைய இன்னொரு புத்தகாமிய Law of Success என்னும் புத்தகமும்
சக்கைப்போடு போட்ட புத்தகம்தான். ஆனாலும்கூட 'திங்க்க் அண்ட் க்ரோ ரிச்'தான்
வேதம்போல் கருதப்படுவது.
இந்த நூலைப் பற்றி அகத்தியத்தில் ஏற்கனவே ஓர் இழை இருக்கிறது.
தமிழில் இந்தத் துறையில் எழுதியவர்கள் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறார்கள்.
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, திரு.வி.கல்யாணசுந்தரம் முதலியார்
ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
தமிழ்வாணன் எழுதிய நூல்களும் இத்துறையில் வரலாறு படைத்தவை.
அந்தக் காலத்தில் தமிழ்வாணனுடைய அறைகூவலாகிய 'துணிவே துணை' எத்தனையோ இளைஞர்களுக்குத்
தாரக மந்திரமாக இருந்தது. அந்தத் தலைப்ப்¢ல் ஒரு சிறு நூலும் எழுதியுள்ளார்.
இன்னொருவரும் சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே மோட்டிவேஷனல் நூல்கள் எழுதியுள்ளார்.
அப்துல் றஹீம் என்பது அவருடைய பெயர்.
அவர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள தொண்டி என்னும் ஊரைச் சேர்ந்தவர். பரம்பரை வர்த்தகர்.
அவருடைய மூதாதையர் கப்பல் தொழில் புரிந்தவர்கள். ஆனால் அவர் மட்டும் எழுத்தாளராக
விளங்கினார்.
பின்னர் அவரும் வர்த்தகத்தில் ஈடுபட்டார்.
மொத்தம் நாற்பது நூல்கள் வெளியிட்டுள்ளார்.
அவற்றில் 14 நூல்கள் நேரடியான மோட்டிவேஷனல் நூல்கள்:
வாழ்க்கையில் வெற்றி
வாழ்வைத் துவங்கு
முன்னேறுவது எப்படி
உன்னை வெல்க
எண்ணமே வாழ்வு
விடாமுயற்சி வெற்றிக்கு வழி
வெற்றியின் இரகசியம்
வழுக்கலில் ஊன்றுகோல்
மனத்தை வெல்லுவாய்
வளவாழ்விற்கு வழி
கவலைப் படாதே
இவை தவிர,
நினைவாற்றல்
இல்லறம்
வாழ்வது ஒரு கலை
வாழ்வின் வழித்துணை
இளமையும் கடமையும்
போன்ற தலைப்புகளிலும் எழுதியுள்ளார்.
வர்த்தகத்தைப் ப்ற்றிய அவரது நூல், 'வியாபாரம் செய்வது எப்படி?'
மிகவும் நல்ல புத்தகம். வர்த்தகம் புரிய விரும்புபவர்களும்
மற்ற நிறுவனங்களை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்களுக்கும் ஏற்ற நூல்.
ஏராளமான மேற்கோள்கள் காட்டுகிறார். ஒவ்வொரு விஷயத்துக்கும்
பல எடுத்துக ்காட்டுக்களும் சம்பவங்களும் சுட்டிக்கட்டப்படுகின்றன.
அலுப்புத்தட்டாத நடை. எளிமையான சொற்கள். ஜார்கன் என்பது
அடியோடு கிடையாது.
இந்த நூலில் 22 அத்தியாயங்கள் உண்டு.
வியாபாரத்தேர்வும் அனுபவமும்
சிறுகக்கட்டிப் பெருக வாழ்
வியாபாரத்தை விலைக்கு வாங்குதல்
கடை அமைப்பு
கொள்முதல் செய்தல்
விலையை நிர்ணயித்தல்
வரவேற்பு விசாரணை
எடுத்துக்காட்டல்
தேர்ந்தெடுத்தல்
இணக்கப்பொருள்களைச் சேர்த்தல்
பாராட்டு
பிரயாண விற்பனையாளன்
வாடிக்கைக்காரர்கள்தாம் எஜமானர்கள்
ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து நியமித்தல்
நல்ல நிர்வாகம்
கணக்குகளை ஒழுங்காக வைத்துக்கொள்ளுதல்
மொத்த வியாபாரம் செய்தல்
தொழில் நிலையம் நடத்துதல்
கடிதம் எழுதுதல்
விளம்பரம்
தொழில்முறைத் தத்துவங்கள்
முற்றிலும் வியாபாரம் சம்பந்தமான விஷயங்களாகவே இருக்கின்றனவே;
மற்றவர்கள் இதையெல்லாம் தெரிந்து என்ன செய்யப்போகிறோம், என்ற எண்ணம் தோன்றத்தான்
செய்ய்ம்.
'Think and Grow Rich' என்னும் நூல்
முழுக்க முழுக்க Materialistic Values கொண்டது. ஆனால்
அதிலுள்ள தத்துவங்கள் செயல்பாட்டுமுறைகள் முதலியவற்றை நாங்கள் ஆன்மீகத்திலும்
ஆராய்ச்சியிலும் பயன்படுத்திக்கொண்டு வெற்றி பெற்றோம். அந்த நூல் இல்லையென்றால்
என்னால் இந்த அளவுக்கு சாதனைகளைப் படைத்திருக்கமுடியுமா என்பது தெரியவில்லை.
ஆனல் பணம் சேர்க்கவில்லை. மற்ற வகைகள்¢ல். அவையும் சாதனைகள்தாமே.
இல்லையா?
Sun Tzuவின் Art of War என்னும்
நூல் அகில உலகப்புகழ் பெற்றது. அது முழுக்க முழ்க்க யுத்தத்தைப் பற்றியும் போர்
நடவடிக்கைகள் பற்றியும் உள்ள நூல்.
இருப்பினும் இப்போது அந்த நூலில் கண்ட தத்துவங்களை வர்த்தகம்,
மேலாண்மை ஆகியவற்றில் புகுத்திப் ப்யன்படுத்தியிருக்கிறார்கள்.
நான் சில நாட்களுக்குமுன்னர் Boxing என்னும்
குத்துச்சண்டையும்கூட ஒருவகை யோகமாக விளங்குகிறது என்று சொல்லியிருந்தேன்.
அதுபோலத்தான்.
வியாபாரமும் நிர்வாகமும்கூட யோகம் மட்டுமல்ல; போரும்கூட.
அன்புடன்
ஜெயபாரதி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU