பிராணிகளின் மொழி
பாகம் 2
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
இவற்றில் "மத்யமா" மட்டத்தில் உயர் பிராணியினங்கள்
செயல் படுவதாக அறிஞர்கள் சொல்கிறார்கள்.
பிராணிகளின் சங்கேத ஒலிகள், கூக்குரல்
முதலியன இதில் அடங்கும்.
இதற்கும் கீழ்மட்டத்தில் செயல்படும்
செயற்பாடுகள் "பஸ்யந்தி" அளவில் நிலவும்.
பசிக்கு இரை தேடுவது; தன் இனத்துக்குரிய
உணவையே தேடுவது; வேட்டையாடுவது; புலியின் மோப்பமறிந்து மான் மிரண்டு ஓடுதல்
போன்ற "instinctive behaviour" போன்றவை இந்தநிலையில்
உள்ளனவாம்.
மூளையின் வெவ்வேறு இடங்களில் இருக்கும்
மையங்களில் இவை நிலைகொண்டிருக்கும்.
வைகரி என்பது cortical levelஇல்
frontal and pre-frontal cotical வட்டாரத்தில் நிகழும்.
இத்துடன் Broca's area,temporal cortex, ஆகியவை மிக
நெருங்கிய சம்பந்தமுற்றிருக்கும்.
மத்யமா என்பது frontal முதலிய
டங்களின்ஆழப்பகுதிகளிலிருந்து mammalian brain என்று
கூறப்படும் பகுதியிலிருந்து தோன்றும்.
பஸ்யந்தி என்பதெல்லாம் reptilian
brain என்றுசொல்லப்படும் பகுதியிலிருந்து தோன்றக்கூடியது.
ஆனால் யோக நூல்களின்படி பார்த்தால் நடு
நரம்பு நாளத்தின் சில பகுதிகளில் நிகழ்வதாகச் சொல்லியிருப்பதாகத் தோன்றும்.
ஏனெனில் முதுகுத்தண்டில்தான் 'வீணாதண்டம்'
என்று சொல்லப் படக் கூடிய அது இருப்பதாகக் காணப்படும்.
இந்த வாக்குகளின் நிலைகள் ஆதாரசக்கரங்களில்
நிலை பெற்றிருப்பதாக நூல்கள் சொல்லும்.
அடுத்து பிராணிகளின் மொழியியல்(?)
இப்போது இதனுடன் சம்பந்தப்பட்ட நேரடியாக சில விஷயங்களைச்
சொல்கிறேன்.
இந்த விபரங்கள் மலேசிய இதழாகிய இதய"த்தில் 1994-1996வரை
நான் எழுதிய தொடர்நீள்கட்டுரையான "வருங்கால இயல்" 35ஆம்
அத்தியாயத்தின் பகுதியை முன்வைக்கிறேன்.
..................மனிதனுக்கு மட்டுமே மொழியறிவு
இருக்கிறது என்று எண்ணுகிறோம். ஆனால் எல்லாப்பிராணிகளும் ஒன்றுடன் ஒன்றுடன்
ஏதோ வகைகளில் தொடர்பு கொள்கின்றன.
காட்டில் எங்கோ ஓரிடத்தில் தேன்
சிந்தும் மலர்க் கூட்டம் இருக்கிறது. அந்தக் காட்டின் வேறொரு பகுதியில் தேன்கூடு
ஒன்று இருக்கிறது. அந்தக் கூட்டைச் சேர்ந்த ஒரே ஒரு தேனீ இந்த மலர்க் கூட்டத்தைக்
கண்டுவிடுகிறது. தேன்கூட்டிற்குத் திரும்பி, மற்ற தேனீக்களிடம் இந்த விஷயங்களைத்
தெரிவிக்கிறது. அதை அறிந்த மற்ற தேனீக்கள் ஆயிரக்கணக்கில் புறப்பட்டு அந்த இடத்திற்குச்
சற்றும் பிசகாமல் சென்று மலர்க்கூட்டத்தை அடைந்து, தேனுண்டு
இம்மியும் பிசகாமல் மீண்டும் தம் கூட்டிற்கே பொழுது சாய்வதற்குள் வந்து சேர்ந்து
விடுகின்றன.
அந்தத் தகவலை முதற் தேனீ ஒருவகையான ரீங்காரத்துடன்
பறந்தவண்ணம் ஒருவிதமான நடனத்தை ஆடி மற்ற தேனீக்களிடம் தெரிவிக்கிறது. இதனைத்
"தேன் நடனம்(Honey Dance) என்று சொல்வார்கள். அதே சமயம்
எங்கு, எப்படி, எத்தனை தூரம் என்பதனை ஏதோ ஒரு ரீங்காரத் தொனியில் உணர்த்திவிடுகிறது.
இந்தத் தேனுண்ணும் வண்டின் ரீங்காரத்தை
வைத்தே இசை மேதை பீதோவன் "The Flight of the Bumble Bee"
என்ற இசைக் கோவையை சிருட்டித்திருக்கிறார்.
எறும்புகள் ஒன்றை ஒன்று சந்தித்து, தங்களின்
கண்களுக்கு மேலே நீட்டிக்கொண்டிருக்கும் அண்ட்டெனாக் கொம்புகளின் மூலம் தகவல்
பரிமாறிக் கொள்ளும். அதைத் தவிற வேறு வகையிலும் பேசிக் கொள்கின்றன.
எறும்புகளின் பேச்சை அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள்
இருந்திருக்கிறார்கள். எறும்புப் பேச்சை "பிபீலிக வாதம்" என்று கூறு வார்கள்.
இது அறுபத்துநான்கு கலைகளில் ஒன்றாகக் கருதப்
படுகிறது.
விக்ரமாதித்தன் கதையில் பட்டிக்கும் மகாபாரதத்தில்
விதுரனுக்கும் இந்த மொழி தெரியும்.
நபிமார்களில் ஒருவர் சுலைமான் நபி. அவருக்கு
இந்த மொழி தெரிந்திருப்பதாக திருக்குர்'ஆனில் காணப்படுகிறது.
அதில் உள்ள "அல் நம்ல்" என்னும் பகுதியில் காணலாம்.
நம்ல் என்றால் எறும்பு. கீழ்க்கண்டவாறு......
"16. பின்னர்
ஸ¤லைமான், தாவூதுக்கு வாரிசாகி, "மனிதர்களே! பட்சிகளின் மொழி எங்களுக்குக்
கற்பிக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கு (வேண்டிய) சகல பொருள்களும்
(ஏராளமாகவே) கொடுக்கப்
பட்டிருக்கிருக்கின்றன. நிச்சயமாக இது (இறைவனின்)
மிகத் தெளிவான ஓர் அருளாகும்." என்று கூறி (நன்றியும் செலுத்தி)னார்.
17. ஜின்கள்,
மனிதர்கள், பட்சிகள் முதலியவர்களைக் கொண்ட ஸ¤லைமானுடைய ராணுவம் அவர்முன்
திரட்டப்பட்டு, இனவாரியாக அணிவகுக்கப்பட்டது.
18. அவைகள்,
எறும்புகள் வசிக்கும் ஓர் ஓடையின் சமீபமாக வந்த பொழுது (அவற்றில்) ஒரு
பெண் எறும்பு, (மற்ற எறும்புகளை நோக்கி,) "எறும்புகளே! நீங்கள் உங்கள்
வீடுகளுக்குள் நுழைந்து
கொள்ளுங்கள். ஸ¤லைமானும் அவருடைய
ராணுவமும் (நீங்கள் இருப்பதை) அறியாது, உங்களை (த் தங்கள் கால்களால்)
மிதித்து விடவேண்டாம்" என்று கூறியது.
19. அதன்
சொல்லைக் கேள்வியுற்ற ஸ¤லைமான், புன்னகை புரிந்து "என் இறைவனே! நீ என்
மீதும், என் தாய்தந்தை மீதும் புரிந்த உன்னுடைய அருள்களுக்கு (உனக்கு)
நான் நன்றி செலுத்த அருள்
புரிவாயாக! உனக்குத் திருப்தியளிக்கக் கூடிய
நற்கருமங்களையும் நான் செய்ய(க்கூடிய பாக்கியத்தை எனக்கு) அருள் புரிந்து, உன்னுடைய
கிருபையைக் கொண்டு உன்னுடைய நல்லடியார்களுடன் என்னைச் சேர்த்துவிடுவாயாக!" என்று
பிரார்த்தனை செய்தார்."
இந்த விளக்கத்தின் நான்காம் பாகம். இதுவும்
"இதயம்" இதழில் வருங்கால இயல்" தொடர்கட்டுரையில் நான் எழுதியதுதான்.
கூனல் முதுகுத் திமிங்கலம் என்று ஒருவகைத் திமிங்கலம்
(Hump-back Whale) இருக்கிறது. அது பலவிதமாகக் கூவும்.
பலநூறு மைல்களுக்கு அப்பால் ஆழ்கடலை ஊடுருவி, இந்தக் கூவல் செல்லும்.தூரத்தில்
உள்ள சம்பந்தப்பட்ட இன்னொரு திமிங்கலம் பதில் கூவலை விடுக்கும். இதனை ஸோனார
(sonar) (Whale Song) என்னும் கருவியின் மூலம் கேட்கமுடிகிறது.
திமிங்கலக் கூவலை திமிங்கல இசை என்று கூறுவார்கள்.
பார்ப்பாய்ஸ் என்னும் இன்னொரு பிராணி
விசிலடித்துத் தங்களுக்குள் பேசிக்கொள்ளும். அதே ஓசை மொழியில் அவை மனிதனுடனும்
பேசும்.
பூனை "மியாவ்" என்று கத்துகிறது அல்லவா?
இந்த "மியா"வில் மட்டுமே இருபது வெவ்வேறு வகையான மியாவ்கள் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்த வெவ்வேறு மியாவ்களை வெவ்வேறு வகைகளில் கலந்து பூனை பேசுகிறது.
தாய்ப்பூனை, குட்டிப்பூனைகளிடம் பேசுவதை, அடுத்தமுறை
வாய்ப்பு ஏற்படும்போது கேட்டுப்பாருங்கள். ஆண்பூனை பெண்பூனையை அழைப்பது ஒரு தனிமுறை.
ஆகையால்தான் இளைஞர்கள் இளம்பெண்களைக் கேலி செய்யும்போது போடும் சத்தத்தை cat-call
என்று சொல்கிறார்கள்.
ஆனால் மனிதர்களிடம் வேறு முறையில் கத்தி
பூனைகள் பேசுகின்றன. வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த பிராணிகளும்கூட மற்ர மற்ற இனங்களுக்கிடையே
பேசும் என்று அறிந்திருக்கிறார்கள். நாய் பூனையுடன் அப்படித்
தொடர்பு கொள்ளும்.
ஓசையற்ற மொழியும் உண்டு. மனிதக் காது உணர்ந்துகொள்ள முடியாத
அலைவரிசையில் சில பிராணிகள் ஒலிகளை எழுப்பி, தகவல் அனுப்பும். எலிக்குஞ்சுகள்
தாயை அந்த ஓசையால்தான் அழைக்கும். வௌவாலும் அப்படித்தான்.
புலனறிவுக்கு அப்பாற்பட்ட முறையில்கூட
பல பிராணிகள் தகவல் அனுப்பும். டெலிப்பதி(Telepathy) என்று இதனை அழைப்பார்கள்.
மொனார்க்(Monarch Butterfly)
என்றொரு பட்டாம்பூச்சி இருக்கிறது.
இந்த முறையைப் பயன்படுத்தி, பல மைல்களுக்கு
அப்பால் உள்ள பட்டாம்பூச்சிகளுக்குத் தகவல் அனுப்பும். சில மனிதர்களுக்குக்கூட
இந்த ஆற்றல் உண்டு.
Pheronomes
மூலமும் தகவல் பரிமாற்றம் நடைபெறுமாம்.
சில மரங்கள் அப்படி சில செய்திகளைக்
குறிப்பாக மற்ற மரங்களுக்கு உணர்த்திவிடுமாம்.
ஆனாலும்கூட மனிதனிடம் உள்ளதைப் போன்ற
இலக்கண முறை கொண்ட மொழியமைப்பு பிராணிகளிடம் கிடையாது. இவ்வளவு சிக்கலான மொழியமைப்பை
நாம் கொண்டிருந்தும்கூட, மொழியின் மூலம் இன்னொருவர் முழுமையாகப்
புரிந்துகொள்ளும் வகையில் நம்மால் பேசமுடிவதில்லை, பார்த்தீர்களா!
அன்புடன்
ஜெயபாரதி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU