பிர்ரிக் வெற்றி

PYRRHIC VICTORY

டாக்டர் எஸ்.ஜெயபாரதி


            அகத்தியர் மடற்குழுவில் கேட்கப்பட்ட கேள்வி:

            >"ஐயா, பைரிக் வெற்றி என்பது எதைக்குறிக்கும்?"

            பதில்:

            சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைய கிரேக்கத்தில் எப்பைரஸ் என்னும் சிறு நாட்டை பிர்ரஸ் Pyrrhus என்னும் மன்னன் ஆண்டுவந்தான்.
            சங்க கால தமிழ்நாட்டைப் போன்றே கிரேக்கத்திலும் City States,  குறுநாடுகள், சிறுநாடுகள் எல்லாம் இருந்தன. நம்ம ஆட்களைப்போலவே அவர்களும் அவர்களுக்குள் அடிக்கடி போரிட்டுக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தனர். நம்மை போலவே இல்கிழத்தி, இல்பரத்தை, வெளிப்பரத்தை என்றெல்லாம் வைத்து அமர்க்களப ்படுத்திக் கொண்டிருந்தனர்.                         

            கிரேக்கர்கள் கிரேக்கத்தில் மட்டுமில்லாமல் இன்றைய துருக்கி, ஸிஸிலித்தீவு, ஸைப்ரஸ் தீவு, இத்தாலி ஆகிய இடங்களில் காலனிகளை ஏற்படுத்திக்கொண்டு வளமுடன் வாழ்ந்தனர். Troy படத்தில் அவர்களில் சிலரைச் சந்திக்கலாம்.

            இத்தாலியில் இருந்த டரெண்ட்டம் என்னும் கிரேக்கக் காலனி ரோமாபுரிக்கு எதிரான போரில் உதவி செய்யுமாறு பிர்ரஸைக் கேட்டது. பிர்ரஸ் உடனே இருபத்தையாயிரம் போர்வீரர்கள், இருபது யானைகள் ஆகியவற்றுடன் இத்தாலிக்குச் சென்றான்.

            அங்கு ரோமர்களுடன் நடந்த சண்டையில் பெருஞ்சேதம் பெருஞ்செலவுடன் வெற்றி பெற்றான்.
            ரோமர்கள் சும்மா இருக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து இன்னொரு இடத்தில் போர் புரிந்தனர்.

            அங்கும் பெரும் சேதத்துடன் பிர்ரஸ் வெற்றி பெற்றான்.

            "இன்னும் ஒரு முறை, ஒரே ஒரு முறை....இதே மாதிரியான இன்னும் ஒரே ஒரு வெற்றி மட்டும் பெற்றால் போதும். நொடித்துப்போய் அடியோடு போண்டியாகி விடுவேன்" என்று மனம் நொந்து சொன்னான்.

            இத்தாலியில் நிலைத்து அவனால் இருக்கமுடியவில்லை.     மிச்சம் சொச்சம்
இருந்த படையைக் கட்டிக் காக்க வேண்டியிருந்தது.


            'யானைக் கட்டித் தீனி போடுவது என்ற பழமொழி பணடைய கிரேக்கமொழியில் இருந்ததோ என்னவோ, பண்டைய கிரேக்கத்து யானைகளும் தீனி தின்னத்தானே செய்திருக்கும்? இல்லையா? அவற்றையும் கட்டித் தீனி போடத்தானே வேண்டி யிருந்திருக்கும்?  இல்லையா?

            பலவீனமான அவனுடைய படையை பலப்படுத்த மேலும் எப்பைரஸிலிருந்து இன்னும் அதிகப் படைகளையும் கொண்டுவர முடியவில்லை. அது இன்னும் பெரிய செலவு.
            பாவம்.
            அவனுக்கு, என்ன, ஜான் மேஜர் மாதிரி ஆசாமியின் தலைமையில் இங்கிலீஸ் காரர்கள் போன்றோர் அகப்பட்டார்களா, என்ன?
            என்ன செய்வான்?

            பலவீனமான நிலையில் படையை வைத்திருந்தால் ரோமர்கள் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் படையையும் வென்றோ தோற்றோ அழித்துவிடுவார்கள்.

            ஆகவே இத்தாலியை விட்டு விட்டு ஸிஸிலித் தீவுக்குச் சென்றான். அங்கு ஒரு Client ராஜ்யத்தை நிறுவ முயன்றான்.
           பாவம்.
            ஆ·ப்கானிஸ்தான் மாதிரியான க்லையண்ட் ராஜ்யம் அவனுக்கு அமையவில்லை.
            ஸிஸிலியர்கள் பிர்ரஸைப் புரட்சி செய்து விரட்டிவிட்டனர். அங்கெல்லாம் Mafia பயம் ஜாஸ்தி.
            மீண்டும் இத்தாலிக்கு பிர்ரஸ் சென்றான். அங்கு ரோமர்கள் முடிவாக அவனைத் தோற்கடித்தனர்.
            'துண்டு போச்சு, துணி போச்சு' என்று எப்பைராஸ¤க்குச் சென்ற பிர்ரஸ், சும்மா இருக்கமாட்டாமல் மாஸிடோனியாவைப் பிடிக்கப்போனான். ஸ்பார்ட்டா என்னும் வலுவான கிரேக்க நாட்டையும் தாக்கினான்.
            அர்க்கோஸ் என்னும் ஊரைப் பிடிக்கச்சென்றபோது அங்கு நடந்த தெருச்சண்டையில் கொல்லப்பட்டான்.

            ஆக.......

            எப்பேற்பட்ட வெற்றிகள் பெற்றாலும்கூட அதனால் ஏற்படும் இழப்புகள் அதிகமாக இருந்தால், அத்தகைய வெற்றியை பிர்ரஸ் மன்னனின் பெயரால் பிர்ரிக் வெற்றி PyrrhicVictory   என்று குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டது.

அன்புடன்

ஜெயபாரதி

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


RETURN TO MAIN MENU