சகரன,் சாகரம், பகீரதன் தபஸ்
பாகம் 1

கடாரத ்தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee



கங்கோத்ரி
கங்கைநதி பூமிக்கு இறங்கிய இடம்

                    சகரன் என்பவன் சூரிய வம்சத்தைச் சேர்ந்த மன்னன். அவனுக்கு அறுபதினாயிரத்தோரு மகன்கள். அவர்களை சகரர் என்று புராணம் அழைக்கும்.
                    சகரனுக்கு அசுவமேதயாகம் செய்ய ஆசை.
                    அசுவமேத யாகம் என்பது குதிரையை வைத்துச்செய்வது. அசுவ லட்சணங்கள் முழுமையாக அமைந்துள்ள உத்தம ஜாதிக் குதிரையை அலங்கரித்து, அதைத் தம்நாட்டி
லிருந்து புறப்படச்செய்து, அதுபாட்டுக்குப் போகுமாறு செய்வார்கள். அதன் பின்னால் ஒரு
பெரிய பட்டாளமே போகும்.
அந்தக் குதிரை எங்கெல்லாம் செல்கிறதோ அங்குள்ள அந்த நாட்டு மன்னன் அந்தக் குதிரைக்கு மரியாதைசெய்து குதிரையின் சொந்தக்காரனாகிய மன்னனைப் பேரரசனாக ஏற்றுக்கொண்டு, அவனுக்குக் கப்பம் செலுத்த வேண்டும். மறுத்தால் போர் புரிந்து அவனைப் பணியவைத்து அந்த நாட்டைக் கைப்பற்றி கப்பம் கட்டச்செய்வர்.
                    எல்லா நாடுகளையும் இந்த மாதிரி வென்றபிறகு, அந்த குதிரையை பலிகொடுத்து யாகத்தில் போட்டுவிடுவார்கள்.
                    சகரனுடைய மகன்களில் அறுபதினாயிரம் பேர் ஒரு குதிரையை முன் அனுப்பி, அதன் பின்னால் வந்தனர். சகரன் செய்யவிருக்கும் அசுவமேத யாகத்தைத் தடுக்கப்பார்த்த இந்திரன்,
அந்தக் குதிரையை வஞ்சகமாகக் கவர்ந்து அப்படியே அதைப் பாதாளலோகத்துக்குக் கொண்டு சென்றான்.

                    அங்கு ஓரிடத்தில் கபிலர் என்னும் ரிஷி ஒருவர் ஆழ்ந்த தவத்தைச் செய்து
கொண்டிருந்தார்.

                    இந்திரன் அந்தக் குதிரையைக் கபிலமுனிவரின் பின்னால் கட்டி வைத்துவிட்டு
அகன்றான்.

                    குதிரையைத் தேடி வந்த சகரர்கள், அது கபிலரின் பின்னால் நிற்பதைக் கண்டு
கபிலரிடம் அதட்டி விபரம் கேட்டனர். ஆனால் ஆழ்ந்த நிஷ்டையிலிருந்த கபிலரிடமிருந்து பதிலேயில்லை. அதனால் கோபமடைந்த
சகரர்கள், கபிலரை அடித்து உசுப்பிவிட்டனர். விழித்துப்பார்த்த கபிலரின் பார்வையின் ஆற்றலால் சகரர்கள் சாம்பலாகிப் போயினர்.
                    சகரனுடைய பேரன் அம்சுமான் அவர்களுடைய சாம்பலை எடுத்து ஓரிடத்தில் சேர்த்துவைத்தான்.
                    அவனுடைய வம்சத்தில் பகீரதன் என்பவன் தோன்றினான். அவனுக்கு ஒருகாட்சி தென்பட்டது. தன்னுடைய முன்னோர்கள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு நற்கதிகிட்டாமல் வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பதாகக் கண்டான்.
                    முனிவரின் கோபத்தீயால் சாம்பலானதால் அவர்கள் ஆத்மா சாந்தியடையாமல்
இருந்த வரலாற்றை அவன் அறிந்தான்

                    தன்னுடைய குலகுருவாகிய வசிஷ்டரிடம் விபரம் கேட்டான். பின்னர் சகரர் நற்கதியடையவேண்டி பிரமனை நோக்கி பத்தாயிரம் ஆண்டுகள் தவமிருந்தான்.
                    பிரமன் தோன்றி ஆகாசகங்கையைக் கொண்டுவந்து அந்த நீரில் சாம்பலைக்
கரைத்தால் அவர்களுக்கு நற்கதி கிட்டும் என்றும் அதற்கு ஆகாசகங்கையையும் சிவனையும் நோக்கித் தவமியற்றும்படிக்கு
சொல்லிவிட்டு மறைந்தார்.
                    அவ்வாறே தவமியற்றினான்.
                    ஆகாசகங்கை தோன்றினாள். தான் ஆகாசத்திலிருந்து இறங்கிவரத் தயாராக இருப்பதாகவும், தான் அவ்வாறு இறங்கிவரும்போது தன்னுடைய வேகத்தைத் தாங்கிக்
கொடுக்கும் வல்லமை உடையவர் தாங்கிக்கொள்ளவேண்டும் என்று நிபந்தனையிட்டாள்.

                    ஆகவே பகீரதன் சிவனை நோக்கித் தவமியற்றினான். சிவபெருமான் தோன்றியதும் சிவனிடம் ஆகாசகங்கையைத் தாங்கிக்கொள்ளுமாறு வேண்டினான்.
                    அடுத்தாற்போல மீண்டும் கங்கையை நோக்கித் தவமியற்றினான்.
                    ஆகாசகங்கை மிகவும் உக்கிரத்துடன் பிரளயத்தையும்விட  அதிவேகத்துடன்
பூமியையை நோக்கி இறங்கினாள்.

                    பூமியையே மூழ்கடித்துக்கொண்டுசெல்லக்கூடிய வேகம் அவளுடைய வேகம்.
                    ஆனால் சிவபெருமான் தன்னுடைய சடாமகுடத்தை உலுக்கிவிட்டுக்கொண்டார்.
                    அந்த விரித்த செஞடையில் ஆகாசகங்கையை வாங்கிக்கொண்டார்.
                    சடாகற்றைகளுக்குள் சிக்கிக்கொண்ட கங்கை திணறிவிட்டாள்.
                    அவளை அங்கேயே தங்கவைத்துக்கொண்டு ஒரு சிறிய நீர்க்கற்றையை மட்டும்
வெளியில் விட்டு விட்டு கங்காதரமூர்த்தியாக நின்றார்.

                    பகீரதன் முன் செல்ல, கங்கை பின்தொடர்ந்தாள். ஆனால் வழியில் ஒரு முனிவரின் ஆசிரமத்தைத் தாண்டும்போது தன்னுடைய ஆசிரமம் மூழ்காமல் இருப்பதற்காக முனிவர் கங்கையை விழுங்கிவிட்டார்.
                    பின்னர் பகீரதன் அவரையும் மிகவும் வேண்டி கங்கையை விடுமாறு கேட்டுக்
கொண்டான்.

                    அதன்பின்னர் கங்கையை சகரர்களின் சாம்பல் எலும்புக்குவியலில் பாய்ந்து புனிதப்படுத்தச்செய்தான்.
                    சகரர்கள் சொர்க்கத்துக்குச் சென்றனர்.
                    கங்கை பாய்ந்த இடத்தில் ஒரு கடல் தோன்றியது.
                    சகரர்களின் சாம்பல் இருந்த இடம் என்பதால் அதற்கு 'சாகரம்' என்று பெயர் ஏற்பட்டது.
                    பாரதநாட்டை மூன்று கடல்கள் சூழ்ந்து நிற்கின்றன. தமிழில் அவற்றை குணகடல், குடகடல், தென்கடல் என்று அழைத்தார்கள். இவை கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய திசைகளைச் சுட்டுகின்றன.
                    கங்கை பாயும் கடல் குணகடல். இதைத்தான் குறிப்பாக சாகரம் என்று அழைத்திருக்கிறார்கள். பின்னால் அந்தச்சொல் பொதுவாகக் கடலைக் குறிக்கும் சொல்லாகி
விட்டது.


நைடதத்தில் உள்ள பாடல்:

சகரர் தொட்டவெண் திரையெறி தடங்கடற் புகுதும்
புகரில் வெங்கதிர்க் கடவுள்முன் போக்கியகதிர்கள்
நிகரில் நித்திலம் குளிப்பவன நீர்நிலை யறிவான்
அகநெ டுங்கடல் விடுத்தபொற் கழையெனலாமால்.           
                                                                - 305

                    இந்தப் பாடலில் 'சகரர் தொட்ட வெண்திரையெறி தடங்கடல்' என்பது கவனத்துக
்குரியது.


                    'ஸாகர ஸம்பவா'வாகிய கடற்கன்னி ஸ்ரீலட்சுமியின் அருளால் இன்னொரு நல்ல கதையைச்சொல்ல நேரிட்டது.

                    'சாகரம்' என்னும் பெயர் ஏற்பட்ட காரணத்தைப் பார்த்தோம்.

GO TO PART II

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
           
RETURN TO MAIN MENU