சகர யகரப் போலி
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர். எஸ்.ஜெயபாரதி
JayBee


                   [இது சகர யகரப்போலி என்னும் இலக்கண மரபைப் பற்றிய மடலாடல். இதனை எடுத்தவர் டாக்டர் குமார் மல்லிகார்ஜுனன். தொடுத்தவன் நான். முடிக்கவில்லை. 1997-1998-இல் தமிழ் இணையம் என்னும் தமிழ் டாட் நெட்டில் லூட்டி அடித்துக்கொண்டிருந்த சமயத்தில் எழுதியது].

                    'வங்காளம்' என்னும் சொல் வாங்களியர்களின் வாக்கில் "பங்களா" ஆகிறது. 'விசுவாசம்' அங்கு சென்றதும் "பிஸ்பாஸ்" ஆகிறது.

                   இதனைத் தமிழ் மொழியிலக்கணத்தில் "பகர வகரப் போலி" என்று சொல்வார்கள். ப"வும் வ"வும் ஒன்றுக்கொன்று மாறிக்கொள்ளும்.

                    'வ'கரம் 'ப'கரமாகிறது. (ஏதோ கதைக்குத் தலைப்பு போல இருக்கோ? 'ஒரு வகரம் பகரமாகிறது'. நல்லாத்தானிருக்கு.)

                    தமிழில் இந்த வழக்கு உண்டு. 'இருபது ரூபாய்' நாட்டுப்புறத்திற்கு போகும்போது 'இருவது ரூவாயா'கிறது அல்லவா? 'நாட்டுப்புறம்', 'ரூவா' என்றவுடன் ஞாபகம் வருகிறது. ஒரு குஷ்பூ பாட்டு இருக்கிறது.

                    "நான் ஒத்த ரூவா தாரேன், நீ ஓடைப்பக்கம் ஒதுங்கு..."
    
                    மேலே உள்ள உதாரணத்தில் 'பகரம் 'வகரமாகிறது. ஒன்றுக்கொன்று substitute ஆகிக்கொள்கின்றன.

                    இதைப்போல "லகர ரகரப் போலி"யும் உண்டு. தாய்லந்திலும் சீனத்திலும் ஜப்பானியத்திலும் இதைக் காணலாம்.

                    சீனத்தில் ரகரம் லகரமாகிறது.
                    ஸ்ரீ ராஜேந்திர சோழரை சீன வரலாற்றுக் குறிப்புகள் 'சீலி லோட்ச்சா-யிண்-த்தோலோ சூலோ' என்று குறிப்பிடுகின்றன. அந்த மட்டுக்கும் ஸ்ரீ ராஜராஜ சோழர் கொடுத்து வைத்தவர ்(இல்லை. அவர் வட்டிக்கடை ஏதும் நடத்தவில்லை). அவரை 'சீலி லோட்ச்சா லோட்ச்சா' என்று மட்டுமே அழைத்தார்கள். இது ரகரம் லகரமாக மாறும் விதம்.

                    ஜப்பானில் இதற்கு மாறுபாடு. அங்கு லகரம்தான் ரகரம் ஆகிறது.
                    இரண்டாம் உலகப்போ¡¢ன்போது, பினாங்கின் தெருவோரத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சி. இரண்டு தமிழர்கள் அங்கு நின்று ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தனர். அந்தப் பக்கத்தில் ஒரு ஜப்பானியப் போர்வீரன் பாராவில் நின்றிருந்தான்.

                    திடீரென்று இவர்களின் பக்கம் திரும்பினான்.    

                    "குர்ரா.." என்ற உறுமலுடன் இருவரையும் அழைத்தான்.

                    தமிழர்கள் அவனருகில் சென்று குனிந்து தலைவணங்கினர். சாதா சிப்பாய்க்கும்கூட அப்படித்தான் தலைவணங்கவேண்டும்.

                    நிமிர்ந்தவுடன் ஆளுக்கு ஓர் அறை - இழுத்து விட்டான். பொறி கலங்கிப்போன தமிழர்கள் பு¡¢யாமல் பார்த்தனர்.
                    ஜப்பானியா¢ன் போர்க்கால நியாயம் அப்படித்தான். தண்டனை கொடுத்தபின்னர், தேவைப்பட்டால், ஆளிருந்தால் விளக்கம் கொடுப்பார்கள். பெரும்பாலும் கேட்கும் நிலையில்
யாரும் இருப்பதில்லை. எங்கள்
தந்தையா¡¢டம் நாற்பதாண்டுக்காலம் சமையற்காரராகப் பணி
பு¡¢ந்த, காலஞ்சென்ற சேவுகண்ணனுக்கு அந்த அனுபவமெல்லாம் உண்டு.


                    பிறகு உடைந்த மலாய்மொழியில் ஜப்பானியம் கலந்து சொன்னான்:
                    "றூ இங்கிறீஸ¤ சக்காப்பு, றொண்டொன் றெண்டகா!"

                    ("லூ இங்கிலீஸ் சக்காப், லண்டன் ரெண்டகா!" - "நீ இங்கிலீஷ் பேசுவதானால்
லண்டனுக்குப் போ!")


                    பார்த்தீர்களா! எப்படிப்பட்ட லகர யகரப் போலி உதாரணம்.

                    இன்னொன்றும் உண்டு. அதனை 'சகர யகரப் போலி' என்பார்கள்.
                    'ச' வும் 'ய'வும் ஒன்றுக்கொன்று மாறிக்கொள்ளும். 'பயல்கள்' என்பது 'பசங்கள்' ஆகிறது. 'தயிர்' சில இடங்களில் 'தசிர்' ஆகவும் 'மயிர்' மிக மிகக் கடுப்பான சமயத்தில் 'மசிர்' ஆக மாறுகிறது. இதைப்பற்றி ஒரு சிறிய சம்பவம். சிலருக்குச் சற்று விரசமாகத் தோன்றும்.
                    ஆனால் அந்த சம்பவம் உண்மைச் சம்பவம். அப்படித்தான் நடந்தது. அந்த சம்பவத்தைப் பற்றிச்சொன்னவரும் ஒரு தமிழாசிரியர்தான்.

                    ஒரு நெல்லை மாவட்டத்துத் தமிழாசி¡¢யர். அந்தக் காலங்களில ் 'தமிழய்யா' என்று மா¢யாதையுடன் குறிப்பிடுவார்கள். அவர் நாஞ்சில் நாட்டுப்பக்கம் சென்றிருக்கிறார். அங்கு சமையலுக்குக் காய்கறி வாங்க வேண்டியிருந்தது. ஆகவே கடைக்குச் சென்றார். அந்த மலையாளத்துக்  கடைக்காரர் அப்போது பிஸியோ பிஸி, படுபிஸி.

                    நமது நெல்லைத் தமிழய்யா தமது வட்டார வழக்கப்படி ஒவ்வொன்றையும் விலை விசா¡¢த்திருக்கிறார்.

                    "புடலங்கா எவ்வளவு?"
                    "ஒந்நு எம்பது காயு"
                   "வாழைக்காய் என்ன விலை?"
                    "ஒந்நு முப்பது காயு"
                    "சுரைக்காய் எப்படி?
                    "ஒரு ரூவெ பத்துக்காயு"

                    தமிழய்யா அல்லவா? என்னடா, இப்படி சகரத்தை உச்சா¢க்கவே மாட்டேனென்கிறானே! 'காசு' என்னும் சொல்லை 'காயு காயு' என்று காய்கிறானே என்ற ஆதங்கம்.

                    ஆகவே கடைக்காரரைக் கேட்டார்,

                   "எந்தா சாரே! 'ச'கரம் எவ்விடே போயி?"

                    கடைக்காரரருக்கு பயங்கர ஆத்திரம்.

                    "ஓஓஓ! சகரமோ? சகரம் மசிருக்குள்ளே போயி!"

                    இலக்கணம் தொ¢ந்த தமிழய்யா,
                    "அஸ்ஸலாயிட்டு பறைஞ்யு. சகரம் அவ்விடே போயி. யகரம் இவ்விடே வந்நு!"

                    ('காசு'வில் இருக்கும் சகரம் 'மயிர்' என்னும் சொல்லில் உள்ள யகரத்துடன் இடம் மாற்றிக்கொண்டது. இதுவே சகர யகரப்போலி. ஆனால் கடைக்காரர் சொன்னது வேறு
நோக்கத்தில்).

        
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU