சித்தர்கள்
ஒரு பார்வை-#1


கடாரத் தமிழ்ப் பேரறிஞர்

டாக்டர் எஸ்.ஜெயபாரதி

JayBee



சித்தர் முத்துவடுகநாதர்
சிங்கம்புணரி

                    தமிழ் மரபில் சித்தர்கள் எனப்படும் குழுவினர் பல காலமாக இருக்கின்றனர். 'சித்துக்கள் கைவரப்பெற்றவர் சித்தர்' என்று பொருள்கொள்ளப்படுகிறது.
                    ஆனால் அதுமட்டும்தான் பொருள் என்று பொருளின் வியாபகத்தை ஒடுக்கிவிடக்கூடாது.
                    சித்துக்கள் என்பவை என்ன?
                    முதலில் அதைப் பார்ப்போம்.
                    திருவிளையாடல் புராணம் என்றொரு புராணம் இருக்கிறது.
                    மதுரையம்பதியில் சொக்கேசப்பெருமான் நிகழ்த்திய அறுபத்துநான்கு திருவிளையாடல்களைக் கூறும் புராணம். இயற்றியவர் பரஞ்சோதி முனிவர்.
                    அவரைப் பற்றியும் அந்தப் புராணத்தைப் பற்றியும் அகத்தியத்திலும் விஸ்வாக்காம்ப்லெக்ஸிலும் வெவ்வேறு கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் இருக்கின்றன.

                    பழைய திருவிளையாடல் புராணம், ஹாலாஸ்ய மாஹாத்ம்யம் போன்ற பழம் நூல்களும் உண்டு.
                    பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தில் பல படலங்கள் இருக்கின்றன.
                    அவற்றில் சொக்கேசப்பெருமான் சித்தராக வந்து சித்துவிளையாடிய படலங்கள் சில இருக்கின்றன.
                    அவற்றில் ,
 
எல்லாம் வல்ல சித்தரான படலம்
அஷ்டமாசித்து உபதேசித்த படலம்
கல்லானைக்குக் கரும்பருத்திய படலம்

ஆகியவை முழுக்க முழுக்க சித்துவிளையாட்டுக்கள் பற்றியவை.
                    நரியைப் பரியாக்கியது, பரியை நரியாக்கியது, வைகையில் வெள்ளம் வரச்செய்தது, வெள்ளத்தை அடக்கியது, ரஸவாதம் செய்தது போன்றவையும் சித்துக்கள்தாம்.
                    மாதிரிக்கு 'எல்லாம் வல்ல சித்தரான படல'த்திலிருந்து சில பாடல்களைப் பார்ப்போம்:

சேயவெற்பினை அணியதாய்ச்செய்து, மற்று அணித்தாய்
மேய வெற்பினைச் சேயதா விடுத்து, மெய்ம்முதுமூப்பு
ஆயமக்களை இளையவர் ஆக்கியும், குதலை
வாயமக்களைக் கழிமுது மக்களா வகுத்தும்

ஆணைப் பெண்ணுருவாக்கியும், பெண்ணை ஆணுருவா
மாணக்காட்டியும், மலடியை மகப்பெறச் செய்தும்
கோணற் கூன்செவிடு ஊமைகண் குருடுபங்கெவரும்
காணத்தீர்த்து, நாலுலோகமும் கனகமாகச்செய்தும்,

வீசிமாத்திரைக் கோலினை விண்ணின் இட்டு அதன்மேல்
ஊசிநாட்டியிட்டு ஊசிமேல் பெருவிரலூன்றி
ஆசிலாயும் ஊசிமேல் தலைகிழக்காக
மாசில் சேவடிப்போதுவான் மலர்ந்திடச் சுழன்றும்,

சண்ட வெம்பணிப் பகையெனப் பறந்து, விண்டாவிக்
கொண்டலைப் பிடித்து இடியொடும் குடித்தநீர் பிழிந்து
கண்டவர்க்கதிசயம் பெறக்காட்டியும் காண
விண்டலத்தினில் பண்டுபோல் இறைகொள விடுத்தும்

எல்லாம் வல்ல சித்தரான படலம்

தூரத்தில் இருக்கும் மலையைக் கிட்டத்தில் தோன்றச் செய்து,  கிட்டத்தில்
இருந்த மலையைத் தூரத்திற்குச் செல்லவைப்பது;  ரொம்பவும் கிழட்டு
ஆசாமிகளை இளைஞர்கள் ஆக்குவது; குழந்தைகளாக இருக்கும் மக்களைக்
கிழடாக ஆக்குவது;

ஆணைப் பெண் வடிவிலும் பெண்ணை ஆண்வடிவிலும் தோன்றச்
செய்வது; மலடியைப் பிள்ளைபெறச் செய்தல்; அங்கவீனர்களுடைய
குறைகளைப் பலரும் காணும்போதே உடனே தீர்த்து அவர்களைச்
சீர்படுத்துவது; நாலு லோகத்தையும் பொன்னாக மாற்றுவது.

கையில் வைத்திருக்கும் மாத்திரைக்கோலை ஆகாயத்தில் வீசி எறிந்து,
அதை அப்படியே நெட்டுக்குத்தலாய் நிறுத்தி, அதன்மேல் ஊசியை
நெட்டுக்குத்தலாய் நிறுத்தி, அந்த ஊசியின் முனைமேல் ஒரு காலின்
பெருவிரலை ஊன்றி அசைவின்று நின்று, அதன்பின்னர் அதே
ஊசிமுனைமீது தலைகீழாக நின்று பாதங்கள் மேலே வானில் மலர்ந்திட
அப்படியே சுழல்வது;

    'சண்ட வெம்பணிப் பகை' என்பது கருடன். அதைப் போலப்
பறந்து சென்று விண்ணில் தாவிச் சென்று மேகத்தைப் பிடித்து,
இடி தோன்றச்செய்து, அந்த மேகத்திலிருந்து குடிநீரைப் பிழிந்தெடுத்து
பார்ப்பவர்களெல்லாம் அதிசயம்போல் காட்டுவது.......

                    சித்திகளைப் பற்றி ஏராளமான விபரங்களைப் பெரும் பெரும் சித்தர்கள் எழுதியுள்ளார்கள்.
                   தாயுமானவரின் மிகப் பிரபலமான 'தேஜோமயானந்தப் பத்து'  பாடல்களில் ஒன்றாகிய 'கந்துக மதக் கரி' பாடலில் ஒரு பட்டியலைக் காணலாம்.

"கந்து உக மதக்கா¢யை வசமா நடத்தலாம்;
    கரடி,வெம்புலி வாயையும்
     கட்டலாம்; ஒரு சிங்கம் முதுகின்மேல் கொள்ளலாம்;
    கட்செவி எடுத்து ஆட்டலாம்;
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்துலோகத்தையும்
    வேதித்து விற்று உண்ணலாம்;
     வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;
    விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;
சந்ததமும் இளமையோடு இருக்கலாம்; மற்று ஒரு
    சா£ரத்திலும் புகுதலாம்;
     ஜலம்மேல் நடக்கலாம்; கனல்மேல் இருக்கலாம்;
    தன்னிகா¢ல் சித்தி பெறலாம்;
சிந்தையை அடக்கியே "சும்மா" இருக்கின்ற
    திறம் அ¡¢து! சத்து ஆகி என்
     சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே!
    தேஜோ மய ஆனந்தமே!

தாயுமானவர்

மதயானையை அடக்கிவிடலாம்;
கரடி, புலி வாயைக்கட்டலாம்;
சிங்கத்தின் மீது சவா¡¢ செய்யலாம்;
பாம்பை எடுத்து ஆட்டலாம்;
இரசவாதம் என்னும் வித்தையால் உலோகங்களைப் பொன்னாக மாற்றி
வாழ்க்கை நடத்தலாம்;
மாயமாக மறைந்து புலனாகாமல் தி¡¢யலாம்;
தேவர்களையும் அடிமைப்படுத்தலாம்;
காயகல்பம் செய்து இளமையோடு இருக்கலாம்;
கூடுவிட்டுக் கூடு பாய்ந்து வேறொரு உடலுக்குள் புகுந்து கொள்ளலாம்;
ஜலஸ்தம்பனம் செய்து நீர்மேல் நடக்கலாம்;
அக்கினிஸ்தம்பனவித்தை பு¡¢ந்து நெருப்பின்மேல் இருக்கலாம்;
ஒப்பில்லாத சித்திகள் பெற்றுவிடலாம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU