சித்தரின் சாபம்

டாக்டர் எஸ்.ஜெயபாரதி



துக்லகாபாத்
                    இப்போது உள்ள டில்லி மிகப்பெரிய மாநகரம் என்று  பெயர் பெற்றது. தற்காலத்தில் இன்னும் விரிவடைந்துவிட்டது. ஆனால் இந்த விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன்பே அது பெரியதுதான்.
                    வரலாற்றுக்குறிப்புகளைப் பார்க்கும்போது அது இன்னும் பிரம்மாண்டமானதாக இருந்திருக்கும்போல் தெரிகிறது.
                    டில்லியின்மேல் படையெடுத்து வந்த பலரால் டில்லியின் பகுதிகள் அழிக்கப் பட்டிருக்கின்றன. டில்லியைச ்சுற்றியும் டில்லியிலும் பெரிய கோட்டைகளும்
அவற்றுடன் ஊர்களும் சேர்ந்து அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் இப்போது இருப்பது
ஒரேஒரு நகரம்தான்
என்று சொல்கிறார்கள்.

                    இல்லாமற்போனவற்றில் ஒன்று துக்லக்காபாத் எனப்படும் பெருநகரமும் அதை உள்ளடக்கிய கோட்டையும்.

                    மிகப் பெரிய கோட்டையாகிய அதைப் போன்ற பாதுகாப்புமிக்க கோட்டை அக்காலத்து உலகில் வெகு சிலவே இருந்தன என்று சொல்வார்கள்.    
                    டில்லியின் குதுப் மினார் மிகப்புகழ் பெற்ரது. அது இருக்குமிடத்திலிருந்து சில கீலோமீட்டர்கள் தூரத்தில் அது இருக்கிறது.

                    ஆனால் அத்தனை சிறப்பாகத் திட்டமிட்டு விஸ்தாரமாகவும் பாதுகாப்பாகவும் நிர்மாணிக்கப்பட்ட அந்த கோட்டை/ஊர் குடியேறப்படாமல் அப்படியே அழிந்துபோய்விட்டது.
                    டில்லியை 1290-இல் ராஜபுத்திர மன்னனாகிய முஹம்மது கோர் பிடித்துக ்கொண்ட
பின்னர் அவனுக்கு வாரிசு இல்லாததால் அவனுடைய அடிமை குத்புத்தீன் அய்பாக் என்பவன் டில்லிக்கு சுல்த்தான் ஆகினான். அவனுக்குப் பின் அவனுடைய அடிமை; அதன்பின்னர் அவனுடைய  அடிமை என்ற ஹோதாவில் கியாஸ¤தீன் பல்பான், இல்தூத்மிஷ் முதலியவர்கள் ஆண்டனர்.
                    கிட்டத்தட்ட நூறாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்தவன் அலாவுதீன் கில்ஜி.
அவனுடைய அடிமைகளில் ஒருவன் காஸி மாலிக் என்பவன். சுல்த்தானுக்கு மிகவும் அணுக்கமானவன். நீண்ட காலம் சேவை புரிந்தவன். ஒருநாள் டில்லிக்கு அருகில் குதிரையில் சென்று கொண்டிருந்த போது பாறையால் ஆன பெரிய மேட்டுப்பிரதேசத்தைப் பார்த்தான்
காஸி மாலிக். அதைச் சுட்டிக் காட்டி, சுல்த்தான் கில்ஜியிடம் இந்த இடத்தில் பாதுகாப்பு
மிக்க மிகப்பெரிய கோட்டையைக் கட்டினால் டில்லியை யாராலும் பிடிக்கமுடியாமல் போய்
விடும் என்று கூறினான். அதற்கு கில்ஜி, "நீ சுல்த்தானாகும்போது அதைச்செய்", என்று சொன்னான்.

                    ஆனால் அப்போது காஸி மாலிக் சுல்த்தானாகும் வாய்ப்பே சிறிதும் இல்லாமல்
இருந்தது.

                    ஏனெனில் சுல்த்தானுடைய தளபதியாகவும் வேண்டியவனாகவும் இன்னொரு அடிமையாகிய மாலிக் க·பூர் இருந்தான். சுல்த்தானுக்கு அடுத்த நிலையில் அவன் இருந்ததால் அவனுக்கு 'மாலிக் நைப்' என்ற பட்டம் இருந்தது.

                    அலாவுத்தீன் கில்ஜி தன்னுடைய மாமனாராகிய ஜலாலுதீன் கில்ஜியைக் கொன்று
விட்டு பட்டத்துக்கு வந்தவன். அவன் மாலிக் க·பூரை அளவுக்கு மீறி நம்பினான்.


                    க·பூர் அலாவுத்தீனுடைய கடைசி காலத்தில் அலாவுத்தீனுக்கு வேண்டியவர்களை யெல்லாம் கொன்றுவிட்டு அலாவுத்தினையும் இறக்கச்செய்தான். அலாவுத்தீனுடைய
மகன்களில் சிறுவனாகிய ஒருவனை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களையெல்லாம் கொன்றுவிட்டான். ஆனாலும் ஒரே ஒரு மகன் மட்டும் தப்பினான். அந்தச் சிறுவனை ஆட்சியில் வைத்துவிட்டுத் தான் சர்வாதிகாரியாக ஆகிக்கொண்டான்.


                    மாலிக் க·பூரை யாரோ கொன்றுவிட்டார்கள். எல்லாருமாகச்சேர்ந்து கில்ஜியின் தப்பிச்சென்ற மகனை அழைத்துவந்து பட்டம் சூட்டினார்கள். முபாரக் கில்ஜி என்ற பெயரில்
அவன் ஆண்டான். ஆனால் அவனுக்கும் ஓர் அடிமை இருந்தான். குஸ்ராவ் கான் என்பவன்.
மிகவும் குடூரமானவன். சுல்த்தான் இவனை மிகவும் நம்பினான். ஆனால் ஒருநாள்
முபாரக்கைக் குஸ்ராவ் கொன்றுவிட்டான். அவனே தன்னை சுல்த்தானாக்கிக்கொண்டான்.    


                    ஆனால் பல காரணங்களால் குஸ்ராவை வெறுத்த துருக்கர் தலைவர்கள் தங்களுக்குள் ஒருவனான காஸி மாலிக் தலைமையில் எதிர்த்துச்சென்று அவனைக் கொன்றார்கள்.

                    குழப்பமான சூழ்நிலை. தலைமைத்துவம் இல்லாத சாம்ராஜ்யம். துருக்கர்கள் அந்த நிலையில் காஸி மாலிக்கையே சுல்த்தானாக்கினார்கள்.
                    கியாஸ¤த்தீன் துக்லக் என்ற பெயரில் டில்லிப்பேரரசுக்கு காஸி மாலிக் சுல்த்தானாகினான்.
                    ஆட்சிக்கு வந்ததும் தன்னுடைய பெயரால் ரொம்ப காலத்துக்கு முன்னால் அலாவுத்தீன் கில்ஜியுடன் உலாவச ்சென்ற சமயத்தில் பார்த்த அதே இடத்தில் பிரம்மாண்டமான கோட்டையையும்  ஊரையும்  நிர்மாணிக்க ஆரம்பித்தான்.

                    13 வாயில்கள். ஒன்றுக்குள் ஒன்றாக இரட்டைச் சுவர்கள்.பல அரண்மனைகள். மசூதிகள்; அரங்கங்கள்; சபைகள்; கோபுரங்கள்; கொத்தளங்கள். அந்த மாதிரியான கோட்டை இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. அதற்குத் துக்லகாபாத் என்று பெயரிட்டான்.

                    லட்சக்கணக்கான ஆட்களைக் கொண்டு நான்கே ஆண்டுகளில் நிர்மாணித்தான்.
              இந்தியாவின் மிகப் பெரிய கோட்டைகளில் ஒன்றாக அதை சிருஷ்டித்தான்.



துக்லகாபாத்


                    அதே சமயத்தில் வங்களத்தில் புரட்சி. கியாஸ¤த்தீன  படையெடுத்து அங்கு சென்றான்
. படைக்கும் ஆள் தேவை; அதே சமயம் துக்லகாபாத் கட்டுமானப்பணிக்கும் ஆள்தேவை.

                    அதே காலகட்டத்தில் ஹஸ்ரத் நிஸாமுடீன் அவுலியா என்னும் ஸ¥·பி ஞானி
டில்லியில் இருந்தார். அவர் தம்முடைய ஆசிரமத்துக்கு படிக்கட்டுகள் அமைந்த கிணறு வெட்டுவித்துக் கொண்டிருந்தார்.
                    சுல்த்தானின் ஆணைப்படி அங்கு வேலை செய்தவர்களையெல்லாம்  துக்லகாபாத் கட்டடவேலையில் ஈடுபடுமாறு கூட்டிச்செல்ல வந்தனர். ஆனால் நிஸாமுடீன் அவர்களை
விட மறுத்தார். அவர்கள் கிணற்றுவேலையில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தனர்.
                    கிணற்று வேலையில் ஈடுபட்டவர்களை கோட்டைகட்ட கூட்டிச்செல்லப்பட்டார்கள்.
இருப்பினும் கிணற்றுவேலையிலும் மனமுவந்து ஈடுபட்டனர்.
                    அந்த வேலைக்கு சுல்த்தான் தடையிட்டான். இருந்தாலும் இரவில் விளக்கொளியில் வேலை செய்தனர்.
                    கோபமேலிட்ட சுல்த்தான் விளக்குகளுக்கு எண்ணெய் விற்கப்படாமல் தடுத்தான்.                                         நிஸாமுடீன் தண்ணீரை விளக்குகளில் ஊற்றி எரியச்செய்தார். இது சுல்த்தானுக்கு
இன்னும் அதிக ஆத்திரத்தை ஏற்படுத்தியது.


                    இதனால் நிஸாமுடீன், "இந்தக் கோட்டை இடையர்களின் குடியிருப்பாகவும்
பாழடைந்த பாலையாகவும் விளங்கும்" என்று சபித்தார்.


                    இதைக் கேட்ட சுல்த்தான் தான் டில்லிக்கு வந்ததும் நிஸாமுடீனைக் கவனித்துக ்கொள்வதாகவும் சூளுரைத்தான்.

                    அதற்கு நிஸாமுடீன், "டில்லி உனக்கு இன்னும் வெகு தூரம்", என்றார்.

                    போர் முடிந்து கியாஸ¤த்தீன் டில்லிக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தான்.

                    அவனுடைய மகன்களில் ஒருவன் முஹம்மது ஜுனா என்னும் முஹம்மது துக்லக். தன்னுடைய தந்தைக்கு விமரிசையாக வரவேற்பு விழாவைச் செய்யவேண்டும் என்று
சொல்லி, அதற்கென விசேஷமாக டில்லிக்கு அருகிலுள்ள ஆ·ப்கன்பூர் என்னுமிடத்தில்
அழகிய மண்டபங்கள் நிர்மாணித்து வைத்தான்.
                    ஒரு பெரிய மண்டபமே வெற்றிவிழா மண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. மிகவும்
கனமான மர உத்தரங்கள், தூண்கள் ஆகியவை கொண்ட மண்டபம் அது. ஆனால் எங்கும்
ஆணியால் தைக்கப்படவில்லை. மரத்தூண்கள், உத்தரங்கள் எல்லாமே ஒன்றுடன் ஒன்று பொருதப்பட்டு விளங்கிய
.
                    கியாஸ¤டீன் வந்தவுடன் அவனையும் அவனுடைய மற்ற மகனையும் உள்ளுக்குள் அமரச்செய்தான்.
                    நடுவில் ஏதோ காரணம் சொல்லி வெளியில் சென்றான். அப்போது யானைப் படையைச ்சேர்ந்த யானைகளை ஒன்றாக ஓடச் செய்தான்.
                    அவை மண்டபத்துக்கு அருகில் ஓடியபோது அந்த அதிர்ச்சியில் மண்டபம் சரிந்து விழுந்தது.  
                    மிகவும் கனமான உத்தரங்களும் தூண்களும் மேலே விழுந்து கியாஸ¤டீனும் அவனுடைய மகன்களும் மற்ற பிரபுக்களும் இறந்துபோயினர்.

                    முஹம்மது துக்லக் அலறியடித்துக்கொண்டு வந்து அழுது அரற்றி புலம்பி..........
                    அடுத்த சுல்த்தானானான்.

                    கடைசிவரைக்கும் டில்லிக்கு கியாஸ¤டீன் வரவேயில்லை.
                    அவனப் பொருத்தவரைக்கும் டில்லி எட்டாத தூரத்திலேயே இருந்துவிட்டது.
                    துக்லகாபாதில் குடியேற்றம் நடைபெறவேயில்லை.



துக்லகாபாத்

                    முஹம்மது துக்லக் தனக்கென ஆடிலாபாத், ஜஹன்பனா என்னும் பெயரில் தனியாக கோட்டையை நிர்மாணித்துக்கொண்டான். அத்துடன் டில்லியிருந்து தேவகிரிக்கு டில்லி
மக்களைக் குடிபெறச்செய்தான்.

                    இதனால் துக்லகாபாத் காலியாக இருந்து பாழடைந்து பாலையாக மாறியது.
                    அவ்வப்போது ஆடு மேய்ப்பவர்கள் அங்கு தங்கும் இடமாகியது.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU