சிவப்பிரகாச முனிவர் என்று ஒரு புலவர்/சாமியார். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தார். நல்ல புலவர். அவர் சிறுவயதிலேயே கவி பாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார். பல நூல்களை இயற்றியுள்ளார்.
அவருடைய சொந்த ஊர் திருக்காட்டுப்பள்ளி.
அவருக்குப் பதினைந்து வயதாகும்போது நடந்த சம்பவம். அப்போது இன்னும் அவர் சன்னியாசம் வாங்கவில்லை.
ஒருநாள், அவர்கள் இருந்த வீதியில் ஒரு பெண் உப்பு விற்றுக்கொண்டு போனாள்.
சுவாமிகளின் தாயார் அப்போது கைவேலையாக இருந்தார்.
ஆகவே உப்புக்காரியை அழைக்குமாறு சுவாமிகளை ஏவிவிட்டார்.
அவர் சும்மா போய் அழைக்காமல், வெண்பாவாக அமைத்து அவளை அழைத்தார் -
நிறைய உளதோ வெளிதோ கொளுவோம்
பிறையை முடிக்கணியும் பெம்மான் - உறையும்
திருக்காட்டுப்பள்ளி திரிபாவாய் நீயுங்
கிருக்காட்டுப்பள்ளி யெமக்கு
பிறையணிந்த சீமானாகிய இறைவன் இருக்கும் இடமாகிய திருக்காட்டுப்பள்ளியில் உப்பு விற்பதற்காக வீதி தோறும் திரியும் பெண்ணே!
உன்னிடம் உப்பு நிறைய உள்ளதோ? நல்ல தரமான வெண்மையான உப்பாக இருக்கிறதோ? அப்படியானால் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். ஆகவே நீ இங்கு இரு! எங்களுக்கு உப்பு அள்ளிக் காட்டு.
நீயிங் கிருக்காட்டுப்பள்ளியெமக்கு =
நீ + இங்கு + இரு + காட்டு + உப்பு + அள்ளி + எமக்கு
கொஞ்சம் குறும்புடன் பாடிய பாடல். அப்போதெல்லாம் பதினைந்து பதினாறு வயதிலேயே திருமணம் ஆகிவிடும். இளவட்ட வயது.
அதன்பின்னர் சிவப்பிரகாசர் ஒரு மடத்தில் சேர்ந்துவிட்டார்.
தமிழ்நாட்டு சைவ ஆதீனங்களுக்கென பல சம்பிரதாயங்கள் இருந்தன. அவர்களுக்கென Hierarchy எனப்படும் அதிகார/அந்தஸ்துத் தட்டுக்கள் இருந்தன.
அப்போதெல்லாம் ஆதீனங்களில் hierarchy நிறைய உண்டு. சாமியார்களிலேயே பண்டார சன்னிதி எனப்படும் ஆதீனகர்த்தர். அவருக்கு அடுத்தபடியாக தலைமைத்துவத்துக்கு வரவேண்டிய அடுத்த பட்டம் அல்லது இளையபட்டம் அல்லது இளவரசு; பின்னர் தகுதி, பதவி, அதிகாரம் முதலியவற்றின் அடிப்படையில் உள்ள ஸீனியர் சுவாமிகள், ஜூனியர் சுவாமிகள், ஸப்ஜூனியர் சுவாமிகள் என்றெல்லாம் ஏணிப்படிகள் இருந்தன. ஸீனியர்கள் முதலியோரைத் தம்பிரான் என்று சொல்வார்கள்.
பெரிய ஆதீனங்களுக்கு வெவ்வேறு இடங்களில் சொத்துக்கள் இருந்தன. கோயில்களும் இருந்தன. அவற்றை நிர்வகிப்பதற்கு ஆங்காங்கு கிளை மடங்கள் இருந்தன. அவற்றை நிர்வகிப்பதற்கு தனித்தம்பிரான்கள் இருந்தனர். அவர்களைக் 'கட்டளைத் தம்பிரான்கள்' என்பர். ஸப்ஜூனியர் சுவாமிகளை 'குட்டி'கள் என்று அழைப்பார்கள். அவர்களில் சிலர் மடத்திலேயே ஸீனியர் தம்பிரான்களிடமோ அல்லது ஆதீனப் புலவர்களிடமோ அல்லது அவ்வப்போது அங்கு அழைப்பின்பேரில் வரக்கூடிய பெரும்புலவர்களிடமோ படித்தனர். அவ்வாறு படிப்பவர்களைக் 'கற்றுக்குட்டி'கள் என்று குறிப்பிடுவார்கள்.
சாமியார்கள் தவிர மேல்காட்டு உத்தியோகம், ராயசம், காறுபாறு, கற்றுச்சொல்லி, கணக்கர், தவசிப்பிள்ளை, ஓடும்பிள்ளை, எடுபிடி என்று பலவகையான வேலைகளில் இருப்பவர்களும் இருந்தார்கள். இவர்களையும் அங்கு வந்து செல்லும் சன்னியாசம் வாங்காதவர்களையும் 'வெள்ளைவேட்டிக்காரர்கள்' என்று அழைத்தார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் மரியாதை, அதிகாரம். அதற்கேற்ப சாப்பாட்டுப்பந்தியிலும் வா¢சை; வா¢சையில் இடம்; இப்படியிருக்கும்.
பொ¢ய சன்னிதானம் சாப்பிட ஆரம்பித்த பின்னரே மற்றவர்கள் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். அவர் சாப்பிட்டுவிட்டு எழும்போது அனைவரும் இலையைவிட்டு எழுந்துவிடவேண்டும்.
சாப்பிட்டுமுடிக்கவில்லையானால் அது அவனவன் தலையெழுத்து.
சிவப்பிரகாசர் ஒரு ஜூனியர் சுவாமிகளாக இருந்தபோது அவர் இருந்த மடத்திற்கு கோயம்புத்தூர்ப்பக்கத்திலிருந்து ஒரு சமையற்காரன் வந்திருந்தான்.
பொ¢ய சுவாமிகள் அனைவருக்கும் நல்ல அ¡¢சியையும் மற்றவர்களுக்குக் குறுணை அ¡¢சியையும் போட்டு சோறாக்கி வைத்திருந்தான்.
பந்தி ஆரம்பமாகியது. இலை போட்டாயிற்று. சோறு பா¢மாறப்பட்டது. குறுணை அ¡¢சிச்சோறு; குழைந்தும் போயிருந்தது. நெல்லும் கல்லும் இடையிடையே.
பார்த்தார் சிவப்பிரகாசர்; திகைத்தார்; தயங்கினார்.
பின்னர் சொன்னார்.....
"கொங்கன் வந்து பொங்கினான் கொழியா¢சிச் சோற்றினை"
அருகில் அமர்ந்திருந்த ஒரு ஜூனியர்சுவாமிகள், அவரைப் பார்த்து ஜாடையாக எச்சா¢த்தார்,
"சங்கமங்கள் கூடியே சாப்பிடத்தொடங்கின"
அருகில் அமர்ந்திருந்த மற்றொரு ஜூனியர் சுவாமிகள்,
"இங்கும் அங்கும் பார்க்கிறீர்; இலையிலே கண்ணில்லையே!" என்று அங்கலாய்த்தார்.
பயந்துபோனார், சிவப்பிரகாசர். மற்றவர்கள் உண்டு முடித்து எழுந்துவிடுவார்கள்; தயங்கி நின்ற சிவப்பிரகாசர் பட்டினியாக எழவேண்டியிருக்குமே! எப்படியும் சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும். சாப்பிடாமல் இருந்தால் இரவில்தான் மறு உணவு. நடுவில் எதுவும் கிடைக்காது. அதுவும் ஏதாவது இரவு விரதமாக இருந்தால் அதுவும் கிடையாது. முழுப்பட்டினிதான்.
ஆகவே,
"எங்கள் பாவம்! எங்கள் பாவம்! எங்கள்பாவம், ஈசனே!"
என்று சொல்லிமுடித்து சிவனேயென்றுசோற்றை விழுங்கிவைத்தார்.
இது பிற்காலத்தில் தர்மபுர ஆதீனத்தில் வழங்கப்படும் ஒரு பாடலாகிவிட்டது. One of the "Sagas of Dharmapura Adheenam".
முழுப்பாடல் இதோ:
"கொங்கன் வந்து பொங்கினான், கொழியரிச் சோற்றினை:
சங்கமங்கள் கூடியே சாப்பிடத் தொடங்கின!
இங்கும் அங்கும் பார்க்கிறீர்! இலையிலே கண்ணில்லையே!
எங்கள் பாவம்! எங்கள் பாவம்! எங்கள் பாவம், ஈசனே!"
இதை "நட்டகல்லைத் தெய்வமென்றே" என்ற சந்தத்தில் சொல்லிப் பாருங்கள்; நன்றாகயிருக்கும்.
இதனை மதுரையில், குழந்தையானந்தசுவாமிகளின் சமாதியையும் அவர் நிறுவிய, கல்லில்வரையப் பட்ட ஸ்ரீசக்ரயந்திரத்தையும்பார்த்துவிட்டு, பாண்டியர்கள் அரண்மனையிருந்த இடம், கோவலன்
பொட்டல் ஆகிய இடங்களுக்கும் செல்வதற்காக டாக்ஸியில் சென்றுகொண்டிருந்த சமயத்தில், பேரறிஞர் டாக்டர் ஏ.வீ. ஜெயச்சந்திரன் சொன்னார். அதைக் காரிலேயே டேப் பதிவு செய்துகொண்டேன்.
சீர்காழியைச்சேர்ந்த டாக்டர் என்.வி. ஜெயராமன் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது டெலிபோனில் ஒருமுறை இதே பாடலைச்சொன்னார். அவர்சீர்காழி கோவிந்தராஜனின் சிற்றப்பா பிள்ளை. அவர் சொன்னபோதுதான் இது தர்மபுர வழக்கு என்று புரிந்தது. ஏ.வி.ஜே.யும் தர்மபுரத்து ஆதீனம் நிறுவிய அனைத்துலக சைவ சித்தாந்த நிறுவனத்தின் இயக்குனராக அப்போது இருந்தவர்தான்.
ஒரு காலகட்டத்தில் சிவப்பிரகாச முனிவர் ஒரு மடத்துக்குத் தலைவரானார்.
அப்போது அவரிடம் மடத்துச் சமையற்காரனான தவசிப் பிள்ளை வந்து என்ன சமையல் செய்வது என்று பணிவுடன் கேட்டான்.
அன்று அவர் சாப்பிடவேண்டிய மெனுவை அப்படியே ஒரு வெண்பாவாகச் சொன்னார்.
"சற்றே துவையல் அறை; தம்பி ஒரு பச்சடி வை,
வற்றல்ஏ தேனும் வறுத்துவை - குற்றம்இலை
காயமிட்டுக் கீரைகடை; கம்மென வேமிளகுக்
காயரைத்து வைப்பாய் கறி."
மிளகுக்காய் என்பது மிளகாயின் பழையபெயர். மிளகுக்கு பதிலாக நம் சமையலில் இடம் பெற்றது; போர்த்துகீசியரின் உபயம்.
'பெருங்காயம் சேர்த்துக் கடைந்த கீரை; மிளகாய் அரைத்துவைத்த கறி; வற்றல்; ஒரு பச்சடி; ஒரு துவையல்' - நல்ல ருசியான உணவு. 'கொங்கன் வந்து பொங்கியதைச் சரிக்கட்டிவிட்டிருக்கும். பன்மடங்கு.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$