ஸ¤ன் ஸ¥வின
வெற்றியின் ரகசியம்


டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
   

                    சீனத்துப் போரியல் ஞானியாகிய ஸ¤ன் ட்ஸ¤, முதன்முதலில் ஒரு சிற்றரசரின் அவைக்குத்தான் அழைத்துச் செல்லப்பட்டார்.
                    அந்த சிற்றரசருக்கு தேரோட்டப்பந்தயம் என்றால் மிகவும் விருப்பம். ஸ¤ன் ட்ஸ¤ சென்ற சமயத்தில் ஒரு பந்தயத்தில் ஈடுபட்டிருந்தார்.
                    அந்தத் தேரோட்டப்பந்தயத்தில் நான்கு குதிரைகள் பூட்டிய தேர்கள் பயன்படுத்தப்பட்டன. மூன்று முறைகள் வெவ்வேறு செட் குதிரைகள் பூட்டிய தேர்கள் போட்டியிடவேண்டும்.
                    ஆனால் அந்தச் சிற்றரசர் எப்போதும் war-lord எனப்படும் அமரநாயக்கர் ஒருவரிடம் தோற்றுக்கொண்டேயிருந்தார்.
                    ஸ¤ன் ட்ஸ¤விடம் இதை ஒரு குறையாகச் சிற்றரசர் சொல்லிக்கொண்டிருந்தார்.
                    ஸ¤ன் ட்ஸ¤ தம்மிடம் அவருடைய தேர்களை ஒப்படைக்குமாறு சொல்லிவிட்டார்.
                    அவருடைய தேர்க்குதிரைகளையும் அமரநாயக்கரின் குதிரைகளையும் அவற்றின் ஓட்டத்திறனையும் ஆராய்ந்தார்.
                    நல்ல ஓட்டம், நடுத்தர ஓட்டம், மட்டம் ஆகிய மூன்று வகைகளில் குதிரைகள் இருந்தன.
                    பந்தயம் தொடங்கியது. முதல் ஓட்டத்தில் அமரநாயக்கரின் மிகச் சிறந்த குதிரைகள் பங்குபெற்றன. அவற்றுடன் சிற்றரசரின் மட்டக்குதிரைகளைப் போட்டியிடச் செய்தார்.
                    இதைக் கண்ட சிற்றரசர் சீற்றம் மிகக்கொண்டார்.
                    "என்ன இது, நீங்கள் செய்வது? அததற்கு ஏற்ற வகையில் சம திறன் படைத்த குதிரைகளை அல்லவா ஈடுபடுத்தவேண்டும்?" என்று கோபத்துடன் கேட்டார்.
                    ஸ¤ன் ட்ஸ¤ பதிலொன்றும் சொல்லவில்லை. தம்முடைய கைகளை மடக்கித் தம் அகலமான அங்கிக்குள் விட்டுக் கைகளைக் கட்டிக்கொண்டார்.
                    என்ன செய்வது? குதிரைகளையும் தேர்களையும் ஸ¤ன் ட்ஸ¥விடம் ஒப்படைத்தாகிவிட்டது.
                    அவர் எப்படிச் செய்கிறாரோ அதுதான். அதைத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
                    முதல் ஓட்டத்தில் அமரநாயக்கரின் திறமையான செட் குதிரைகள் சிற்றரசரின் மட்டக்குதிரைகளை லகுவில் வென்றன.
                    அடுத்த ஓட்டம்.
                    அதில் அமரநாயக்கரின் நடுத்தரக்குதிரைகளுடன் சிற்றரசரின் முதல்தரக் குதிரைகளைப் போட்டியிடவிட்டார்.
                    சிற்றரசரின் குதிரைகள் வென்றன.
                    மூன்றாவது போட்டி.
                    அதில் அமரநாயக்கரின் மட்டக்குதிரைகளுடன் சிற்றரசரின் நடுத்தரக் குதிரைகள் போட்டியிட்டன.
                    சிற்றரசரின் நடுத்தரக் குதிரைகள் வென்றன.
                    மூன்று போட்டிகளில் இரண்டில் வென்ற சிற்றரசரே பந்தயத்தில் வென்று வெற்றிக்கோலைப் பெற்றார்.
                    அவ்வாறு ஸ¤ன் ட்ஸ¥வின் போர் அரசியல் வாழ்வு தொடங்கியது.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU