தேன் குடிக்கும் பிள்ளையார்
ஸ்வேதவிநாயகர்
பிரளயம் காத்த விநாயகர்


சாக்தஸ்ரீ டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee




                    திருவலஞ்சுழியில் உள்ள பிள்ளையாரை "வெள்ளைப் பிள்ளையார்"என்றும் "ஸ்வேத விநாயகர்" என்றும் அழைப்பார்கள்.
                    பால்கடலைக் கடைந்தபோது அமிர்தம் தோன்றாமையினால், தேவர்கள் கடல்
நுரையைப் பிடித்து வைத்து விக்னேசுவரப் பூசை செய்ததாக ஐதீகம். மூர்த்தமும் வெள்ளை நிறமாக இருக்கிறது.
வாணி, கமலா என்னும் இரு தேவியர் உற்சவமூர்த்திக்கு இரு மருங்கிலும் இருக்கின்றனர். இவர்தான் அந்த கோயிலின் முக்கிய மூர்த்தியாக இருக்கிறார்.
                    சிறிய உருவம். "மூர்த்தி சிறிசானாலும் கீர்த்தி பெரிசு", என்ற வழக்கு இவருக்குத்தான்
மிகப் பொருந்தும்.

                    மூர்த்தத்தைக் கையால் தொடமாட்டார்கள். பச்சைக் கற்பூரத்தைக் கொண்டே
அபிஷேகம் செய்கிறார்கள். வேறெந்தப் பொருளும் பயன்படுத்தப்படுவதில்லை.

                    இவர் ஒரு வலம்புரி விநாயகர். வலது பக்கமாக துதிக்கை சுழித்திருக்கும்.
                    ஆகவேதான் இந்தத் தலத்திற்கு "வலஞ்சுழி" என்று பெயர் என்றும் சொல்வார்கள்.
அருகே ஓடும் ஆறு, இந்தத் தலத்தின் அருகே வலப்புறமாக சுழித்துச் செல்வதால் இப்பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.

                    இவரைப் போன்றே இன்னொரு பிள்ளையாரும் இவர் அருகிலேயே இருக்கிறார். கும்பகோணத்திற்கு அருகிலேயே ஐந்து மைல் தூரத்தில் உள்ள திருப்புறம்பியம் என்னும் தலத்தில்தான் இவர் இருக்கிறார். ஒரு யுகத்திற்கும் இன்னொரு யுகத்திற்கும் இடையே ஏற்பட்டதொரு ஊழிப்பெருவெள்ளம் கட்டுக்கடங்காது போயிற்று. அப்போது வருணன்
கடலிலிருந்து கிடைத்த பொருள்களைக் கொண்டு பிள்ளையார் பிடித்து வழிபட்டார்.

                    விநாயக வழிபாட்டிற்குப் பின்னர் பிரளயமும் ஒடுங்கியது.
                    ஆகவே பிள்ளையாருக்கு "பிரளயம் காத்த விநாயகர்" என்ற பெயர் ஏற்பட்டது. விநாயகரின் சிலாவுருவத்தில் கடற்சங்கு, நத்தை, கிளிஞ்சல் ஆகியவை தெரியும்.
                    இந்த பிள்ளையாருக்குத் "தேன் குடிக்கும் பிள்ளையார்" என்ற பெயரும் உண்டு. இவருக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அபிஷேகம் நடக்கும். மற்ற நாட்களில் கிடையாது.விநாயகர் சதுர்த்தியன்று தேன் அபிஷேகம்  செய்யப்படும். இரவு 8-00 மணிக்கு மேல் தொடங்கி விடிய விடிய தேன் அபிஷேகம் செய்வார்கள். குடம் குடமாக ஊற்றப்படும் அவ்வளவு தேனையும், சிந்தாது சிதறாது பிள்ளையார் சிலை அப்படியே தன்னுள் உரிஞ்சிக்கொள்கிறது. ஒரு டன் தேன் அவ்வாறு உரிஞ்சப் படுவதாக கணித்திருக்கிறார்கள்.

                    இங்கே யாரும் போயிருக்கிறீர்களா?

    SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

RETURN TO MAIN MENU