வைணவர்களுக்கு நடாதூர் அம்மாள் என்ற பெயர் மிகவும் பரிச்சயமானது. 'அம்மாள்' என்றதும் யாரோ பொம்பளையாக்கும் என்று நினைத்துவிடவேண்டாம்.
அவருடைய இயற்பெயர் வரதகுரு. ஊர் காஞ்சி. அவர் வாழ்ந்த காலம் துருக்கர்கள் டில்லியிலிருந்து தென்னாடு வருவதற்குச் சற்று முன்னர்.
காஞ்சியில் எங்களாழ்வான் என்றொரு வைணவப்பேரறிஞர் இருந்தார்.
வரதகுருவின் தந்தை அவரை எங்களாழ்வானிடம் ஸ்ரீபாஷ்யம் கேட்டறிவதற்காக அனுப்பினார்.
வாசல் கதவைத திறந்திருக்கிறார். அரவம் கேட்டு எங்களாழ்வான் "யார்ராது?" என்று கேட்டிருக்கிறார்.
ஏற்கனவே நன்கு பரிச்சயமான ஆளல்லவா. ஆகவே "நான் தான் வந்திருக்கிறேன்" என்றார். குரலை அடையாளம் கண்டுபிடித்துவிடுவார் என்ற எண்ணம்.
"ஓஹோ. அப்படியா? நான் செத்த பிறகு வந்து பார்", என்று சொல்லிவிட்டார்.
அதிர்ச்சியுடன் வீடு திரும்பிய வரதகுரு தம் தந்தையாரிடம் விஷயத்தைச சொன்னார்.
அவர் சிரித்துக்கொண்டே, "நான் என்னும் தன்மையில்லாமல் வந்து பார்க்கச் சொல்கிறார். அது உண்மையிலேயே குருவிடம் ஸ்ரீபாஷ்யம் போன்ற ஒன்றைக் கேட்டுப் புரிந்து உணர்வதற்குத் தடையாக இருக்கும்"., என்றார்.
வரதர் மீண்டும் சென்றார்.
ஆழ்வான் மீண்டும் "யார்ராவன்?"
இம்முறை வரதர் மிகவும் பவ்வியமாக, "அடியேன் தாஸானுதாஸன் ஸ்ரீமத் ராமானுஜதாஸன்", என்று சொல்லி நெடுஞ்சாங்கிடையாக விழுந்து வணங்கினார்.
பாடம் ஒழுங்காக நடந்தது. தெளிவாகக் கற்றுக்கொண்டார்.
சரி.
ஆண்பிள்ளையாகிய இவரை ஏன் 'நடாதூர் அம்மாள'் என்கிறார்கள்? என்று இன்னும் நீங்கள் கேட்கவில்லை.
வரதர் பெருமாளுக்குப் பால் நைவேத்தியம் வைப்பார். நன்றாகக் காய்ச்சி வற்ற வைத்து எடுத்த பாலைத்தான் வைப்பார். சூடு தணிந்திருக்கிறதா என்று பாலுக்குள் விரலை விட்டுப ்பார்ப்பார்.
இதைப் பெருமாள் கவனித்து வந்தார்.
ஒருநாள், "ஏனப்பு! பெத்த பிள்ளைக்குத் தாயார் பால் காய்ச்சி ஊட்டி விடும்போது சூடு தணிஞ்சாச்சா என்று பார்ப்பதுண்டு. நீயும் பாக்கிறியேப்பா? நீ என்ன எங்க அம்மாளோ?"
பெருமாளே அவரை 'அம்மாள்' என்று குறிப்பிட்டதால் அவரை 'அம்மாள்' என்றே அனைவரும் அழைத்தனர்.
அவர் கதாகலட்சேபம் செய்து வந்தார். மிக ஆழமான கருத்துக்களைக் கொண்டு
மிக விரிவாக அமைந்திருந்தது. அந்தக் காலட்சேபத்துக்கு ஸ்ரீபராச பட்டர் என்றொருவர் வருவார். அவர் மிகச் சாதாரணர். எளிமையானவர்.
ஒருநாள் அவர் காலட்சேபத்துக்கு வரவில்லை.
வரதர் பேசாமலிருந்தார்.
மற்றவர்கள் காலட்சேபத்தைத் தொடருமாறு வற்புறுத்தினர்.
ஆனாலும் பட்டருக்காகக் காத்திருந்தார்.
பட்டர் வந்ததும் அவரிடம் "நீ இதுவரை என்னிடம் கேட்டதையெல்லாம் இவர்களிடம் சொல்", என்று ஆணையிட்டார்.
அவ்வளவுதான்.
அதுவரை நடந்திருந்த காலட்சேபம் அவ்வளவையும் அவர் திருப்பிச ்சொன்னார்.
மகிழ்வுற்ற வரதர் ஸ்ரீபட்டர் சொன்னதையெல்லாம் அப்படியே எழுதிவித்து அதற்கு அருமையானதொரு பெயரையும் இட்டார்.
'சுருதப பிரகாசிகை'.
'சுருத' என்னும் சொல் அதெல்லாம் 'கேட்கப்பட்ட சமாச்சாரம'் என்பதைக் காட்டி விடுகிறது அல்லவா?
வரதர் திருநாடு அடைந்தபின்னர்(காலமாகியபின்னர்) சிலகாலம் கழித்து துருக்கர் படையெடுப்பு நடந்தது.
அப்போது ஸ்ரீபட்டர் தம்முடைய இரண்டு பிள்ளைகளையும் சுருதப ்பிரகாசிகையையும் பத்திரமாக இன்னொருவரிடம் ஒப்படைத்து தப்பிச்செல்லச
்செய்தார்.
அந்த நூல் துருக்க வெள்ளத்திலும் தப்பி காலவெள்ளத்திலும் நீந்தி வந்துவிட்டது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$