அரிய கெரிஞ்ச்சி லிபி சாசனம்

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee



                    மலாய் மொழியிலேயே உள்ள மிகப் பழைமையான கையெழுத்துப் பிரதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, வாசிக்கவும் பட்டிருக்கிறது.

              Kerinci என்னும் இடம் இந்தோனேசியாவின் மத்திய சுமாத்ராவில் இருக்கிறது. சுமாத்ராவில் பல மொழிகள் இருக்கின்றன. இருந்தாலும் மலாய்மொழியே அங்கு எல்லாரையும் இணைக்கும் மொழியாகப் பல நூற்றாண்டுகளாக இருக்கிறது.

                    இந்தோனேசியாவில் மலாயைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை விட ஜாவானிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே அதிகம். இந்தோனீசியா சுதந்திரம் அடைந்த
போது நாற்பது சதவிகிதம் ஜாவானியர் இருந்தனர்.

                    இருந்தாலும் மலாய் மொழியிலேயே சில மாறுதல்களுடன் இன்னும் பலசொற்களை ஏற்படுத்தி Bahasa Indonesia என்ற பொதுமொழியைத் தோற்றுவித்துக்கொண்டனர்.
                    இதுதான் இப்போது அங்கு இணைப்பு மொழியாகவும் அரசு மொழியாகவும் கல்வி மொழியாகவும் இருந்துவருகிறது.
                    டச்சுக்காரர்கள் இந்தோனீசியாவை ஆண்டபோது அவர்கள் மலாய்மொழியை
இணைப்பு மொழியாக வைத்திருந்தனர். அரசு மொழி டச்சு.

                    சுதந்திரம் பெற்றபோது பெரும்பான்மையினரின் மொழியாகிய ஜாவானிய மொழியை அதிகார மொழியாக்கிக்கொள்ள இந்தோனீசியாவின் தந்தை சுக்கார்ணோ விரும்பவில்லை. ஜாவானிய ஆதிக்கம் என்று மக்கள் எடுத்துக்கொள்வார்கள்; அது பல தீவுகள், இனங்கள்,
மொழிகள், மதங்கள் கொண்ட இந்தோனீசியாவின் ஒற்றுமைக்கு ஒவ்வாது என்று அவர்
நினைத்தார்.

                    மத்திய சுமாத்ராவின் கெரிஞ்ச்சி என்னும் இடத்தில் பழைய மலாய் மொழியின் எழுத்துக்களில் ஒருவகை இருந்திருக்கிறது. ஆகவே அதை Kerinci Script  என்று குறிப்பிடுகிறார்கள்.   
                    அந்த கையெழுத்துப்பிரதியையும் அந்த எழுத்துக்களையும் இங்கே காணலாம்.



   
                      எழுத்துக்கள் தென்னிந்திய மூலத்தைக் கொண்டவை. பல்லவ கிரந்தத்தையே
ஆதியாகக் கொண்டவையாகத் தோன்றுகின்றன.


                    அதில் எழுதப்பட்டிருப்பது பண்டைய மலாய்மொழி. ஆனால் பல சம்ஸ்கிருத சொற்களையும் அதில் காணலாம்.
                    அதன் Transliteration இங்கே இருக்கிறது.

                    சும்மா ஒரு ஸாம்பிலுக்கு ரெண்டு பக்கத்தைத் தமிழில் தருகிறேன்.




..cri...ka...satita..........
masa wesaka //
.. ong //..// djyasta masa titi
kresnapaksa //.. // diwasa ...
pdoeka sri maharadja karta.........
cri gandawangca mradanamaga...
... saka....... kartabe..........

ஸ்ரீ....க....ஸதித ........
மாஸ வஸாக...
....
ஓம் ஜ்யஸ்ட மாஸ திதி க்ரஸ்ணபக்ஷ
திவச பாதுகா ஸ்ரீ மஹாராஜா கர்த்த........
ஸ்ரீ கண்டவம்ஸ ம்ருதனமக.....
ஸக...
கர்தப......


                    இந்தப் பகுதியில் வருஷ மாசந் தேதியுடன் அரசன் பெயரும் காணப்படுகிறது.
                    கீழ்க்கண்ட பகுதியில் இடத்தின் பெயரைக் காணலாம்.



Halaman 3:
anoegraha at..sang...kamtta
nrang pda mandalika di boemi koerintji ...
si loendjoer koerintji maka ma...
t prabalang-balangngan disa pra...
di s..idangnga desa hallat...
hallat di desa pradesa ba
nwa sahaja, djangan.............



அன்புடன்
ஜெயபாரதி

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


RETURN TO MAIN MENU