ஆட்கொல்லிக் காப்பியம்

தமிழடியார் சீர்பரவுவார்
கடாரத்தமிழ்ப் பேரறிஞர்

டாக்டர் எஸ் ஜெயபாரதி



    இந்தக் கதை உண்மையிலேயே நடந்த கதை.
    தென் தமிழகத்தில் உள்ள வட பாண்டி மண்டலத்தில் தற்காலத்துச் சிவகங்கை, புதுக்
கோட்டை, ராமநாதபுரம் கிய மாவட்டங்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் அவை அனைத்தும் சேதுநாடு  என்ற பெயரில் விளங்கின.

    சிவகங்கைச் சீமையில் உள்ள ஊர் வேம்பத்தூர்.
    இந்த ஊருக்குத் தனிச் சிறப்பு உண்டு.
    பல நூற்றாண்டுகளாக இந்த ஊரில் நல்ல தமிழ்ப் புலவர்களில் ஏராளமானோர் பரம்பரை பரம்பரையாக வசித்து வந்தார்கள்.
    அவ்வகையில் பல புலவர் குடியினர் இருந்தனர்.
    அவர்கள் தங்கள் ஊரிலேயே ஒரு தமிழ்ச்சங்கத்தை வைத்துக்கொண்டிருந்தனர். பழந்தமிழ் நூல்களைச் சேகரித்து வைப்பது; நூல்களைக் கற்பது, ராய்ச்சி செய்வது; புதிய நூல்களை இயற்றுவது; உரிய மாணவர்களுக்குக் கற்பிப்பது என்ற தமிழ்த் தொண்டுகளைச்  செய்து
வந்தனர்.

    அவர்கள் வைத்திருந்த தமிழ்ச் சங்கம் ‘வேம்பற்றூர் தமிழ்ச் சங்கம்’ என்ற பெயரைப்
பெற்றிருந்தது.
    பழந்தமிழ் மரபுகள் மறந்துபோய், நல்ல தமிழ் நூல்களுக்கு தரவேயில்லாமற்போய்,
போர்க்குணம் படைத்த கல்வியை மதியாத பணக்காரர்களும் நாட்டுத்தலைவர்களும்
இருந்த காலம். தமிழ்ப் புலவ்ர்கள் ஏழ்மையில் உழன்றுகொண்டு தகுதியற்ற ட்களைக்
காலுக்கும் அரைக்குமாகக் கெஞ்சிக் கூத்தாடி வலிந்து வானளாவப் புகழ்ந்த காலமது.

    அந்தக் காலகட்டத்தில்தான் நம் வேம்பத்தூரார்கள் தமிழ்ச்சங்கத்தை நிறுவி
தமிழை மூச்சுவிட வைத்துக்கொண்டிருந்தனர்.
   

    வேம்பத்தூர் பெருமாளையர் என்னும் புலவர் ‘நெல்லை வருக்கக் கோவை’ என்னும் நூலை இயற்றினார். அந்த நூலில் வரும் முதற் பாடல்களில் ஒன்றுதான் இந்தக் கதையின் மையப்புள்ளியாக விளங்கும்.
    பெருமாளையர் அந்த நூலை இயற்றிய பின்னர் ஒரு நல்ல நாளைப் பார்த்துக் கொண்டு
அரங்கேற்றம் செய்தார்.


    திருநெல்வேலியில் இந்த நூலின் அரங்கேற்றம் நடைபெற்றது.
    அந்த நூலின் காப்புச்செய்யுள்:

    தேரோரும் வீதியெலாஞ் செங்கயலும் சங்கினமும்
    நீரோடுலாவி வரும் நெல்லையே! - காரோடும்
    கந்தரத்தரந்தரத்தர் கந்தரத்தரந்தரத்தர்
    கந்தரத்தரந்தரத்தர் காப்பு!

    அந்த நூலின் காப்புச்செய்யுளில் ஓரிடத்தில்,

‘தேரோடும் வீதியெல்லாம் செங்கயலும் சங்கினமும்
நீரோடுலாவி வரும் நெல்லையே!’

என்று வரும்.
    அந்த அடியைச்சொல்லும்போது அவையில் வீற்றிருந்த புலவர்களில் ஒருவர் மறுப்பு
ஒன்றைத் தெரிவித்தார்.


    ‘தேரோடும் வீதியெலாம் செங்கயலும் சங்கினமும் நீர்ரொடுலாவி வரும் நெல்லையே’,
என்ற வரிகளில்,
 "வீதியெல்லாம் எப்படி செங்கயலும் சங்கினமும் நீரோடு உலாவி வரும்?"
என்று கேட்டிருக்கிறார்.
(‘தேரோடுகின்ற வீதியெல்லாம் ஓடும் தண்ணீரில் மீன்களும் சங்கும் நீருடன் உலாவி வரும்’
என்று அந்தப் புலவர் அர்த்தப்படுத்திக்கொண்டுவிட்டார்.)


    எடுத்த எடுப்பிலேயே மறுப்பு வந்தது, துர்நிமித்தமாகப் புலவருக்குப் பட்டிருக்கிறது.
அப்படியே இடிந்துபோய்விட்டார். னால் அவையினர் வேறுவிதமாக நினைத்துவிட்டனர்.
கூட்டமும் கலைந்துவிட்டது.


    பின்னர் அந்தக் கவலையிலேயே புலவர் இறந்துவிட்டார்.
    அவருடைய மகன் அப்போது சிறுவர்.

    பின்னர் அவருடைய மகன் நன்கு தமிழைக்கற்று, தாமே ஒரு புலவராகவும் விளங்கலானார்.

    ஒருநாள், தன்னுடைய தந்தையின் பழைய சுவடிக் கட்டுகளையெல்லாம் எடுத்து
வைத்துக் கொண்டு படித்துப் பார்க்கும்போது,  ‘நெல்லை வருக்கக்கோவை’  தட்டுப்பட்டது. அதனைப் படித்துவிட்டு தாயிடம் விபரம் கேட்டார். நடந்த விபரம் அறிந்தவுடன் தந்தைக்கு 
ஏற்பட்ட அவச்சொல்லை நீக்குவதில் முனைந்தார்.

 
    கவே, மீண்டும் ஓர் அரங்கத்தைக் கூட்டுவித்து, நூலை அரங்கேற்றலானார்.
    அந்தக் கூட்டத்திற்கும் முதற்கூட்டத்தில் மறுப்பெழுப்பிய புலவர் வந்திருந்தார்.

    அவரிடம் அந்த காப்புச் செய்யுளைப் படித்துக்காட்டினார். படிக்கும்போது,
       
    "தேரோடும் வீதியெலாம்”, என்று சொல்லி, சற்றுத் தாமதித்து, அதன்பின்னர் தொடர்ந்து
அந்த அடியைச் சொன்னார்:

    “செங்கயலும் சங்கினமும் நீரோடுலாவி வரும் நெல்லையே!"  என்று சொல்லி மேலும்
விளக்கலானார்.

    "தேரோடும் வீதியெலாம்”,   
    “செங்கயலும் சங்கினமும் நீரோடுலாவி வரும் நெல்லையே”
   
என்று பாடலின் அடி அமைந்தது.

    "அதாவது 'வீதியெலாம் தேரோடும்; சங்கினமும் செங்கயலும் நீரோடு உலாவி
வரும்; அப்படிப்பட்ட நெல்லை', என்பதுதான் இதன் பொருள்" என்று விளக்கினார்.

    பழங்காலத்தில் Comma என்று நாம் இன்று குறிப்பிடும் காற்புள்ளி இருக்கவில்லை. அது இருந்திருந்தால் ‘தேரோடும் வீதியெலாம்’ என்றதன் பின்னர்  காற்புள்ளியைப் போட்டு,
அந்த இடத்தில் நிதானித்துவிட்டுப் படித்திருக்கலாம். அவ்வாறு செய்யும்போது

பொருள் மயக்கம் ஏற்பட்டிருக்காது.
   
    பின்னர் நூல் வில்லங்கமின்றி நன்கு அரங்கேற்றம் கண்டது.
    தந்தையின் பெருமையையும் புகழையும் மானத்தையும் காத்த தனையன் என்று
புலவர் பெருமையாகப் புழகப்பட்டார்.
    மகன் தந்தைக்காற்றிய உதவியாக அது அமைந்துவிட்டது.

    இதில் "கந்தரத்தர்" என்பது  மூன்று முறையும், "அந்தரத்தர்" என்பது மூன்று முறையும் வருகிறது.
   
    தேரோரும் வீதியெலாஞ் செங்கயலும் சங்கினமும்
    நீரோடுலாவி வரும் நெல்லையே! - காரோடும்
    கந்தரத்தரந்தரத்தர் கந்தரத்தரந்தரத்தர்
    கந்தரத்தரந்தரத்தர் காப்பு!
   
    கந்தரத்தர் அந்தரத்தர் கந்தரத்தர் அந்தரத்தர்
    கந்தரத்தர் அந்தரத்தர் காப்பு.

    காரோடும் = கருமையான
    கந்தரத்தர் = கழுத்து உடையவர்
    அந்தரத்தர் = காயத்தில் உள்ளவர்
    கந்து அரத்தர் = முடியில் நீர் அணிந்தவர்
    அம் தரத்தர் = உயர்வான தரத்தையுடையவர்
    கந்தர் அத்தர் = முருகனுக்கு தந்தை
    அந்தரத்தர் = காயத்தை மேனியாகக் கொண்டவர்

அன்புடன்
ஜெயபாரதி

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU