திரிபுர சம்மாரம்
பாகம் 1

சாக்தஸ்ரீ டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee




தஞ்சைப் பெரிய கோயில்
சோழர் கால சுவர் ஓவியம்
திரிபுராந்தகர்
   
                    ஒரு காலகட்டத்தில் மூன்று அசுரர்கள் இருந்தனர். தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி ஆகிய மூவரும் சகோதரர்கள். மூவருமே பிரம்மாவைக் குறித்து பயங்கரமான
தவம் செய்தனர். பிரம்மா தோன்றினார். சிரஞ்சீவித்தன்¨மாயை வரமாகக்கேட்டனர். சர்வேஸ்வரனாகிய சிவன் மட்டுமே பிறப்போ இறப்போ அற்றவர் என்று சொல்லி மறுத்து
விட்டார்.

                    ஆகவே பொன், வெள்ளி, இரும்பு ஆகிய உலோகங்களால் ஆன மூன்று கோட்டைகளைக் கேட்டனர். அவை விண், மண், நடு ஆகிய மூன்று இடங்களிலும் சஞ்சாரம் செய்யக்கூடிய
வையாக இருக்கவேண்டும்.

                    இந்த மூன்று பரிமாணங்களிலும் அவை எந்த இடத்துக்கும் எப்போதுவேண்டுமானலும் நினைத்தவுடன் உடனடியாகப் தடங்கலின்றி போகமுடியவேண்டும்.
                    பிறப்போ இறப்போ இல்லாத சர்வேஸ்வரனால் மட்டுமே அவை அழைக்கப்படம்டியவேண்டும். அந்த சர்வேஸ்வரனும்கூட ஒரே ஒரு அஸ்திரத்தால் மட்டுமே அழிக்கமுடியவேண்டும். முப்புரங்களும் ஒரே இடத்திற்கு ஒரு கணத்தில் ஒரு சிறிய பகுதி நேரத்திற்கு மட்டுமே வந்து ஒன்று சேரும்போது அந்த அஸ்திரம் அழிக்கமுடியவேண்டும்.
அந்த குறிப்பிட்ட நேரமும் தை மாதத்தின் பூச நட்சத்திரன்போது நிகழவேண்டும். அந்தப்
புரங்களில் மாநகரங்கள் இருக்கவேண்டும். அவற்றில் சகலவிதமான செல்வங்களும்
போகங்களும் வசதிகளும் கேளிக்கைகளும் நிறைந்திருக்கவேண்டும். முக்கிய அசுரர்கள்
எல்லாவித வசதிகளுடன் அங்கு வசிக்கக்கூடிய வண்ணம் அவை அமைந்திருக்கவேண்டும்.  அசுரர்கள் அளவிடமுடியாத தைரியமும் வீரமும் உடையவர்களாக இருக்கவேண்டும்.

                    இவை அனைத்தையுமே பிரமா நிறைவேற்றினார்.
                    இதை அறிந்த எல்லா அசுரர்களும் வந்து கூடினர்.
                    மயன் என்னும் அசுரத் தச்சன் பிரம்மா கொடுத்த வரத்தின் பிரகாரம் அசுரர்கள் சொல்லியபடி மூன்று பறக்கும் கோட்டைகளை அமைத்துக்கொடுத்தான்.
                    இவைதாம் திரிபுரங்கள் என்பவை.
                    தொடர்ந்து மயன் அவர்களுக்குச் சில நற்புத்திமதிகளைச்சொன்னான்.
                    "சிவனே தேவர்களுக்கும் தேவரான சர்வேஸ்வரன். அவரிடம் மிக சக்திவாய்ந்த வேகமான அஸ்திரங்களும் மிகவும் வலுமிக்க விற்களும் இருக்கின்றன. அவரே அனைத்து உயிர்களுக்கும் இருப்பிடமாக திகழ்பவர். அவருடைய விரோதிகளிடம் பொறுமையக் காட்டமாட்டார். ஆனால் அவரை வணங்கி வழிபடும் பக்தர்களிடம் அளவற்ற அன்பைக்காட்டுவார்.
                    அவருடைய பக்தர்கள் செய்யும் குற்றங்களையெல்லாம் பொறுத்துக்கொள்வார். அவரிடம் கூர்மையான வலுகிக்க ஆயுதங்கள் இருப்பதாக வேதங்கள் கூறும்.
                    ஆகவே சர்வேஸ்வரனாகிய சிவனை எல்லாரும் வழிபடவேண்டும் என்பது கட்டாயமாகும். அவரை வழிபட்டால் எல்லாத் துன்பங்கள், எத்ரிகள், நோய்கள், கெட்டகிரகங்கள் முதலியவை நீங்கிவிடும். மனதுக்குப் பெரும் நிம்மதி ஏற்படும்.
                    நீயும் உன் உறவினரும் சிவனை சிவலிங்க வடிவில் வழிபடவேண்டும். எல்லா உலகங்களுக்கும் நன்மையைத் தருபவரான சிவனை வழிபட்டால், உங்களுடைய எதிரிகள் அனைவரும் அவருடைய அருளால் அழிக்கப்பட்டுவிடுவார்கள். ஆகவே உங்கள் மனதுக்குள் சங்கல்பம் செய்துகொண்டு பக்தியும் பொருப்பும் மிகுந்து அவரை வழிபடவேண்டும். அவருடைய அருளும், வெற்றிகளும், செல்வங்களும் உங்களுக்குக் கிடைக்கும்".
                   மயனுடைய புத்திமதியை அந்த அசுர சகோதரர்கள் ஏற்றுக்கொண்டு அதன்படியே நடக்கலாயினர்.
                    பூஜைக்குரிய சிவலிங்கங்களையும் மயனிடமிருந்து பெற்றனர்.

                    மிகவும் நியம நிஷ்டையுடன் சிவபூஜையைச் செய்து அந்த அசுரர்கள் அவர்களுக்கு வேண்டியவற்றையெல்லாம் பெற்றனர். மற்றவர்களின் உடைமைகள் அனைத்துமே அவர்கள் வசமாயின. தேவர்களும் அவர்களின் தேவியரும் அசுரர்களுடைய அடிமைகள் ஆயினர். அசுரர்கள் தாம் நினைத்த இடங்களுக்குச்சென்றனர். முழு உலகங்களின்மீது அந்தப் பறக்கும் கோட்டைகள் இறங்கி அமர்ந்து அவற்றை அப்படியே நொறுக்கி நசுக்கி அழித்துவிடும்.
                    ஆகவே விஷ்ணு, பிரம்மா மற்ற தேவர்களுடன் மேரு மலையில் கூடினர். எப்படி அந்த அசுரர்களை வெல்வது என்பதுபற்றி ஆலோசித்தனர்.
                    அவர்கள் அப்போது செய்த முடிவின்படி ஒரு பயங்கர யாகத்தைச்செய்தனர். அந்த யாக குண்டத்திலிருந்து பெரும் எண்ணிக்கையில் பூதங்கள் புறப்பட்டு வந்தன. அசுரர்களை அழிக்குமாறு அவற்றை ஏவிவிட்டனர். ஆனால் அவை அனைத்தும் அழிந்துபோயின. இவ்வாறு தேவர்கள் செய்ததனால் அசுரர்கள் கோபமடைந்து இன்னும் அதிகமாகத் தொந்தரவு கொடுத்தனர். தேவர்கள் அவர்களிடமிருந்து ஓடிச்சென்று மேரு மலையில் ஒளிந்துகொண்டனர்.
                    அதன்பின்னர் விஷ்ணு, பிரம்மா, தேவர்கள் ஆகியோர் ஒரு புதிய தந்திரத்தைக் கையாண்டனர்.
                    திரிபுராதிகள் ஏன் வலுவுடனும் ஆற்றலுடனும் இருந்தனர் என்றால் அவர்கள் கடுமையான நியம நிஷ்டை ஆசாரத்துடன் சிவபூஜையைச்செய்துவந்தனர். இவற்றையெல்லாம் அவர்கள் நிறுத்திவிட்டால் சிவபெருமானே அவர்களை அழித்துவிடுவார்.
                    ஆகவே விஷ்ணு புத்த அவதாரத்தை எடுத்துக்கொண்டார். நாரதர் அவருடைய சீடராகினார். இருவரும் அசுரர்களிடம் சென்று அவ்ர்களிடம் அநாசாரமான போதனைகளைச்செய்து அவர்களை நம்பவைத்து, அவர்களின் தீவிர பூஜை உபாசனைகளிலிருந்து வழுவிவிடச்செய்தனர்.

                    அவர்களின் நியம நிஷ்டைகள் குலைந்துபோகச்செய்தனர். மாயையால் அவர்களின் மனங்களை மயக்கி புத்தரே பெரும் கடவுள் என்று நம்ப்பச்செய்தனர். இவ்வாறு அசுரர்களைச் சிவபூஜை செய்வதிலிருந்து தடுத்துவிட்டனர்.
                    இதையெல்லாம் நம்பிய அசுரர்கள் தாங்கள் அணிந்திருந்த ருத்ராட்சம், ரட்சைகள், திருநீறு, பூஜை திரவியங்கள் முதற்கொண்டு சிவவழிபாட்டுக்குரிய சாதனங்கள் அனைத்தையுமே நீக்கிவிட்டனர்.
                    ஆனால் திரிபுராதி சகோதரர்கள் மட்டுமே இந்தப் புரட்டால் மயங்காமல் மனம்சிதறாமல் தீவிர சைவர்களாக இருந்தனர்.
                    இதன்பின் விஷ்ணுவும் மற்ற தேவர்களும் மானச சரோவர் ஏரிக்குச்சென்றனர். அங்கு கழுத்தளவு ஆழத்தில் விஷ்ணு நின்றுகொண்டு ஸ்ரீருத்ர மந்திரத்தைச்சொன்னார். மற்ற எல்லா தேவர்களும் நீரில் அவரைச்சுற்றி நின்றுகொண்டு தீவிரமாகத் தவம் இயற்றினர்.
                    சிவன் தோன்றி, விரஜா ஹோமம் செய்து அதன்மூல திருநீறு தயாரித்து அணிந்து கொண்டு,  பாசுபத விரதத்தை அனுஷ்டிக்குமாறு சொன்னார்.
                    அப்போது பாலனாக இருந்த முருகன் தன்னுடைய தந்தையின் மடிமீது ஆனந்த தாண்டவம் ஆடினார்.

GO TO PART  II

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
 
RETURN TO MAIN MENU