அந்த ஊமத்தை சர்பத் ஓர் உண்மைக்கதை. ஒரே ஒரு சிறு திருத்தம். ஊமத்தை விதை
சர்பத்.
ஊமத்தைச் செடி யாரும் விரும்பாத செடி. அது நச்சுத்தன்மை பொருந்தியது. ஆனால்
அதே சமயத்தில் மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. Datura Stramonium என்று
இதனை அழைப்பார்கள். மருத்துவக் கல்லூஊரியில் Forensic Medicine பாடத்தில் Toxicology பிரிவில் இதைப ்பற்றி படித்தது.
ஊமத்தையின் பூவைத்தான் ஆஸ்துமாவுக்கு அந்தக் காலத்தில் பயன் படுத்தி இருக்கிறார்கள். முன்னொரு காலத்தில் ஆரம்பப்பள்ளிகளில் சிலேட்டுப் பலகையையும் பலப்பத்தையுமே(சிலேட்டுக்குச்சி) எழுதுவதற்குப் பயன்படுத்தினார்கள்.
மட்டித்தாளில் கடுக்காய் மையைத் தொட்டு, தக்கைப் பேனாவால் எழுதுவது மேல்வகுப்புகளில். அப்படியும் ஒரு காலம்.
சிலேட்டுப்பலகையைச் சுத்தமாகத் துடைப்பதற்கு, சிறார்கள் ஊமத்தம்பூவைப் பயன
்படுத்துவ துண்டு. ஊமத்தம்பூவின் மொட்டை அமுக்கி வெடிக்கவைப்பார்கள்.
ஊமத்தையின் காய் பசுமையாய் முள்போன்ற மயிர்களுடன் விளங்கும்.Thorn-apple என்றொரு பெயரும் அதனாலேயே அதற்கு உண்டு.
இதன் விதை நச்சுத்தன்மை பொருந்தியது. அதனை அரைத்து சாப்பிட்டால் சித்த பிரமை உண்டாகும். பழங்காலத்தில் இதை வைத்து சர்பத் செய்து வழிப்போக்கர்களுக்குக் கொடுத்து சித்தபிரமை ஏற்படுத்தி அவர்களைக் கடத்துவார்கள். தக்கிகள்(Thuggee) என்னும் ஒரு குழுவினர் இதைப் பயன் படுத்தி ஆட்களை மயக்கிக்கொண்டு சென்று காளிக்கு பலி கொடுத்ததுண்டு. இதுவும், accidental poisoning, தற்கொலை முயற்சி ஆகியவையுமே ஊமத்தைக்கு Forensic முக்கியத்துவத்தை ஏற்படுத்தித் தந்தன.
உன்மத்தத்தை ஏற்படுத்துவதால் இந்தச்செடிக்கு சமஸ்கிருதத்தில் 'உன்மத்தம்' என்று பெயர். பித்தனாகிய சிவன் அணிந்திருக்கும் சில சமாசாரங்களில் உன்மத்தமும் ஒன்று.
அதான் படித்திருப்பீர்களே -
திருப்புகழில்
-'மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்,
மற்பொருள் திரள்புய மதயானை'?
ஏன் தேவாரத்தை விட்டுவைக்கவேண்டும்?
'கோளறு திருப்பதிக'த்தின் இரண்டாவது பாடல்......
'என்பொடு கொம்பொடு ஆமை, இவை மார்பிலங்க,
எருதேறி ஏழையுடனே,
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்.....'
ஊமத்தையைத்தான் 'மத்தம்' என்று சுருக்கி அழைக்கிறார்கள். எருக்கம்பூவையும் சிவன் அணிந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
Coming to think of it......
இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. ஈராண்டுகளுக்கு முன்னர் அகத்தியத்தில்
எருக்கைப் பற்றியும் ஏதோ எழுதியிருக்கிறேன்.
இப்பேர்ப்பட்ட hallucinogen சரக்கை ஏதோ ஒரு வகையில் பக்குவப்படுத்தி, அந்தக
்காலத்திய காபாலிகர்கள் பயன்படுத்திக்கொண்டு 'உன்மத்த தாண்டவம்' என்ற நடனத்தை ஆடியிருக்கிறார்கள். ஏதோ ஒரு பழங்காலக்கோயிலின் பக்கச்சுவரில் இந்தத் தாண்டவச் சிற்பம் இருந்தது.
அப்பைய தீட்சிதர் என்றொரு சிவனடியார். அவர் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். அவர் ஒரு பெரும்பேரறிஞர். ஞானி.
அவர் எந்நேரமும் சிவ பஞ்சாட்சரத்தையே மனதில் ஓட விட்டுக்கொண்டிருப்பார். அவருக்குத் திடீரென்று ஒரு சந்தேகம்.
'நினைவு இருக்கும்போதெல்லாம் சிவநாமத்தை ஜபித்துக்கொண்டே இருக்கிறோம். சுயநினவு இல்லாத சமயத்திலும் சிவநாமம் மனதில் ஓடுமா? அப்படி ஓடவில்லையானால் சிவநாமம் மனதிலும் உள்ளத்திலும் ஆவியிலும் அழுந்திப் பதியவில்லை என்றுதான்
பொருள். இதை எப்படி அறிந்துகொள்வது?
நமக்கே சித்தபிரமை ஏற்படவேண்டும். நமக்குப் பித்துப்பிடித்தால் அல்லவா அதனை அறிந்துகொள்ளமுடியும்? நமக்கு எங்கே அதெல்லாம் பிடிக்கப் போகிறது? அப்படியே பிடித்தாலும்கூட என்னெவெல்லாம் புலம்புகிறோம் என்பதை நாம் என்னத்தைக் கண்டோம்? ஆகவே நாமே சித்தபிரமையை ஏற்படுத்திக்கொண்டு அதைப் பரிசோதித்துப் பார்த்து விடவேண்டியதுதான்'.
ஊமத்தை விதையை நைத்து, நீருடன் சேர்த்துத் தயார் செய்து கொண்டார்.
'பித்தம் தெளிய மருந்து ஒன்றிருக்குது பேரின்பமன்றுள்ளே,
மற்ற மருந்துகள் உள்ளுக்குச் சாப்பிட்டும்
வல்லேன் வல்லேன்
ஐயே அடிமை',
என்று இருந்துவிடாமல் ஊமத்தைக்கு மாற்று மருந்தையும் தயார் செய்து கொண்டார்.
சீடர்களை அழைத்தார்.
'நான் இந்த ஊமத்தை வி¨தையை அருந்தப்போகிறேன். சற்று நேரத்தில் சித்தப்பிரமை ஏற்பட்டுவிடும். அந்த நிலையில் நான் என்னெவெல்லாம் சொல்கிறேன் என்று ஒன்று விடாமல் ஏட்டில் எழுதி வைத்திருங்கள். ஒரு முகூர்த்தகாலம் கழித்து, ஊமத்தைக்கு முறிவு மருந்தைக்கொடுத்துவிடுங்கள்', என்றார்.
ஊமத்தையையும் அருந்தினார். சிறிதுநேரத்தில் பிரமை ஏற்பட்டு, அரற்ற ஆரம்பித்தார். ஓர் எழுத்து விடாமல் சீடர்கள் எழுதிக்கொண்டனர். பின்னர் மாற்று மருந்தையும் கொடுத்தனர்.
சுயநினவு வந்ததும் அப்பைய தீட்சிதர் ஏடுக¨ளை வாங்கிப் பார்த்தார்.
ஐம்பத்தோரு அழகிய சுலோகங்கள் அவற்றில் இருந்தன.அனைத்துமே சிவனைப் பற்றியவை.
தம் சுயநினவு இல்லாத நிலையிலும் அவர் சிவ சிந்தனையிலேயே இருந்திருக்கிறார்.
ஊமத்தையை உண்டு உன்மத்தநிலையிலிருந்துகொண்டு அந்தப் பாடல்களைப் பாடியதால் அந்த பாடல்களுக்கு 'உன்மத்த பஞ்சாசத்' என்ற பெயரைக் கொடுத்தார்கள்.
சுந்தரர் பாடியிருக்கிறார் அல்லவா.......
'நற்றவா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமச்சிவாயவே'
அது இதுதான்.
அன்புடன்
ஜெயபாரதி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$