வரலாற்றை மாற்றிய புலிநகம்

   
>                கோலாலும்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் பழம்பொருள் சந்தைக்குச் செல்வது என்னுடைய வழக்கம்.
                 கடைசியாகச் சென்றபோது பல பொருட்கள் புதிதாக வந்திருந்தன.
>               கவனத்தை மிகவும் கவர்ந்தது 'புலிநகம்' என்னும் >ஆயுதம். இதிலேயே பலவகைகள் இருக்கின்றன.
>                நான் கெலந்த்தான் என்னும் இடத்தில் இருந்தபோது  அதிலேயே
று ஒரு வகையைப் பார்த்திருக்கிறேன்.    
>                ஒரே விரலில் மாட்டிக்கொள்வது அது.  புலிநக ஆயுதத்திலும் சில வகைகள் இருந்தன.  மூன்று விரல்களில் மாட்டிக்கொள்ளும் சமாச்சாரமும் உண்டு.  உள்ளங்கைக்குள் மறைந்திருக்குமாறு மாட்டக் கூடியது; முஷ்டி பிடித்தால் knuckle-duster என்னும் ஆயுதத்தைப்போல முன்புறமான நீட்டிக்கொண்டிருப்பது.
>                நேற்றுப் பார்த்தது சற்றுச்சிக்கலானது.
>
>                இதைப் போன்றதொரு ஆயுதத்தைக் கொண்டுதான் >சத்ரபதி சிவாஜி பீஜாப்பூர் தளபதி அ·ப்ஸல் கானைக் கொன்றார்.

தொடர்ந்து வாசியுங்கள்.   

                சிவாஜி அ·ப்ஸல்கானைக் கொன்றதைப் பற்றி எழுதினால்  இணயத்தில் இப்போதுள்ள பையர், பையிகளுக்கு மட்டுப்படமாட்டாது. பலர் வரலாறு படித்திருக்கமாட்டார்கள். வெளிநாட்டுத் தமிழர்களுக்கு
இந்திய வரலாறு பரிச்சயமாக இராது. சிவாஜி கணேசன் யாரோ ஷாருக்கான் சால்மான்கான் வகையறாவை ஏதோ ஒரு பழைய படத்தில் போட்டுத்தள்ளியதாக நினைக்கப் போகிறார்கள்.

                ஆகவே கொஞ்சமாவது லாத்தார் பெலாக்காங் என்று சொல்லப்படும் பின்னணிகளைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.
   
               முஹம்மது கஸ்னி பஞ்சாபைக் கைப்பற்றியதோடு முஹம்மது கோர் வடநாட்டில் இருந்த பல அரசுகளை வென்று டில்லியில் ஒரு சுல்தானேட்டை ஏற்படுத்தினான். அவனைத் தொடர்ந்து அடிமை மன்னர் வம்சம், கில்ஜி, துக்லக் ஆகிய துருக்கர் வம்சங்கள் ஆட்சி புரிந்தன. அதன்பின்னர் சய்யித், லோடிக்கள் ஆகிய ஆ·ப்கானியர் ஆண்டனர்.

                கில்ஜி, துக்லக் காலத்தில் இந்தியா முழுவதும் துருக்கர்கள் வசம் வந்துவிட்டது. அவர்களைத் தொடர்ந்து பல முஸ்லிம் அரசுகள்   ஏற்பட்டன. இருப்பினும் விந்தியமலைக்கு வடக்கெயுள்ள பெரும் பிரதேசமொன்று டில்லி வசமிருந்தது. அதைத் தவிர மால்வா, குஜராத், பங்கால், தக்காணத்து பாமினி, விஜயநகரம் போன்றவை இருந்தன. 'தக்காணம்' என்பது 'தக்ஷ்ணபாத' என்னும் பழங்காலச் சொல்லின் மருவல். இந்திய உபகண்டம் சில geographical regions-ஆகப் பிரிந்திருந்தது. காபூல், காந்தாரம், காஷ்மீர், பஞ்சாப், கங்கா-யமுனா தோவாப்,
கங்கைச்சமவெளி, வங்கம் முதலியவை ஆர்யாவர்த்தம் எனப்படும் பெரும்பிரதேசத்தைச் சேர்ந்தவை.
                விந்தியமலை வரைக்கும் இது இருப்பதாகக் கொள்ளப்பட்டது.
                விந்தியத்துக்குத் தெற்கேயுள்ளது தக்ஷ்ணாவர்த்தம் அல்லது தக்ஷ்ணபாதம். அதுதான் நம்ம official திராவிடநாடு. அங்குதான் பஞ்சதிராவிடம் இருந்தது. இது கொஞ்சம் வித்தியாசமான திராவிடம்.
                பிற்காலத்தில் 'தக்ஷ்ணம்' என்பது உருதுவில் 'தக்கண்' என்று மருவிவிட்டது.
                ஆனால் இந்த தக்கண் என்பது மராடம், கன்னடம், தெலிங்கானா ஆகியவை அடங்கிய பிரதேசம். தமிழ்நாடு, கேரளம் சேராது.    

                நாளடைவில் விஜயநகரம் நான்கு நாயக்க அரசுகளுக்கு இடம் கொடுத்தது. பாமினியிருந்த இடத்தில் அஹ்மத்நகர், பீஜாப்பூர், கோல்கொண்டா, பெரார், பிடார் ஆகிய ஐந்து சுல்த்தானேட்டுகள் ஏற்பட்டன.

                இது இவ்வாறிருக்கையில் சாகாட்டாய் துர்க் என்னும் மரபைச் சேர்ந்த பாபர் என்பவன் லோடியை ஒழித்து டில்லியைப் பிடித்துக்கொண்டான். துர்க் இனமாக இருந்தாலும்கூட அவர்களுக்கு மாங்கோலியர்களின் கலப்பு இருந்ததால் 'மொகொல்' என்னும் பெயரைப் பெற்றனர்.

               பாபருக்குப் பின்னர் வந்த மொகலாய மன்னர்கள் பேரரசை உருவாக்கினர். பேரன் அக்பர் காலத்தில் பல அரசுகள் போயின. அஹ்மத்நகர், பீஜாப்பூர், கோல்க்கொண்டா ஆகியவை எஞ்சின.

                அவற்றையும் முகலாயர் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

                1627-ஆம் ஆண்டில் பிறந்தார். தாய் ஜீஜாபாய்; தந்தை ஷாஜி பான்ஸ்லே.

                ஷாஜி ஆரம்பத்தில் அஹ்மத்நகர் சுல்த்தானிடம் ஜாகிர்தாராக இருந்தார். ஜாகிர்தார் என்பவர் ஜமீன்தார் போல. தன்னுடைய ஜாகிரைக் கொண்டு சுல்த்தானுக்குப் படை நடத்துவது முதலிய தொண்டூழியங்களைச்
செய்யவேண்டும்.
                அதன் பிறகு அஹ்மத்நகரை விட்டுவிட்டு டபாரென்று பீஜாப்பூர் சுல்த்தானிடம் சேர்ந்துகொண்டார். அதே நேரத்தில் ஜீஜாபாயையும் விட்டு விட்டு இன்னொரு மனைவியை மணந்துகொண்டார்.
                சில காலம் கழித்து முகலாய பாத்ஷா ஷாஜஹான் தக்காணத்துக்குப் படையெடுத்து வந்தான். அவன் ஜெயிப்பது போலிருக்கும்போது ஷாஜி பீஜாப்பூருக்கும் டகல்பாஜி கொடுத்துவிட்டு ஷாஜஹானிடம் ஒரு
மன்சப்தாராகச் சேர்வதற்கு முயன்றார். ஆனால் பல்வேறு காரணங்களுக்காக ஷாஜஹான் திரும்பிப் போகவேண்டியிருந்தது.
                ஆகவே ஷாஜி பழையபடிக்கு அஹ்மத்நகர் சுல்த்தானுடன் சேர்ந்துகொள்ள முயன்றார். ஆனால் ஷாஜஹான் திடீரென்று பீஜாப்பூருடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். இதனால் அஹ்மத்நகர்
முகலாயத்துக்குள் கபளீகரம் ஆகிவிட்டது. துரோகியாகக் கருதப்பட்ட ஷாஜியை பீஜாப்பூர் சுல்த்தான் சிறை வைத்தான்.
                பின்னர் பீஜாப்புர் சுல்த்தானிடம் கடைசிவரைக்கும் ஷாஜி விசுவாசமாக இருந்தார்.
                விஜயநகரப் பேரரசின் கீழிருந்த நாயக்க அரசுகளின் பிரதேசங்கள் பலவற்றை பீஜாப்பூருக்காகக் கைப்பற்றி பீஜாப்பூருடன் இணைப்பதில் ஷாஜி பெரும் பங்கு பெற்றவர்.

                சிவாஜி பூனே நகரிலேயே ஜீஜாபாயால் வளர்க்கப்பட்டார்.
                மராட்டியர்கள் கொண்ட சிறிய படையன்றை வைத்துக் கொண்டு சிவாஜி கெரில்லாப் போரை நடத்தி, ஆங்காங்கு பீஜாப்பூர் பிரதேசங்களைக் கொள்ளையிட்டும் வரி வசூல் செய்தும் ஆரம்பித்தார். பீஜாப்பூரை எப்படியாவது பணியவைக்கவேண்டும் என்ற பேரவா சிவாஜிக்கு இருந்தது.

                1646-ஆம் ஆண்டில் சிவாஜிக்குப் பத்தொன்பதே வயதாகும்போதுஒரு சிறிய படையைக்கொண்டு பீஜாப்பூருக்குச் சொந்தமான தோர்ணா என்னும் கோட்டையைப் பிடித்துக்கொண்டார்.
                அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் சில கோட்டைகளைப் பிடித்துக்கொண்டார். 1659-ஆம் ஆண்டில் அவரிடம் மொத்தம் நாற்பது கோட்டைகள் மேற்குத் தொடர்ச்சி மலையிலும் கொங்கணிக் கரையிலும் இருந்தன.

                    பீஜாப்பூரின் சுல்த்தான் முஹம்மது ஆதில் ஷா இறந்தபின்னர் பீஜாப்பூரைத் தன்னுடைய பேரரசுவுடன் இணைக்கவேண்டும் என்று முகலாய பாத்ஷா ஔரங்கஸெப் நினைத்தான். சிவாஜியை அழிக்க
புதிய சுல்த்தானைக் கொண்டு அப்போது பீஜாப்பூரின் மிகச் சிறந்த தளபதியான அ·ப்ஸல் கானை அனுப்பினார்கள்.                   
                    அவன் பத்தாயிரம் பேர் கொண்ட பெருஞ்சேனையை நடத்திச்சென்று கோட்டைகளைப் பிடித்து கடைசியில் பிரதாப்கட் என்னும் சிறிய கோட்டையில் சிவாஜியை அடைபடச்செய்து கோட்டையை முற்றுகை
யிட்டான்.

                மாதானம் பேசுவதற்கு சிவாஜி இணக்கம் தெரிவித்தார்.

                ஆகவே பிரதாப்கட்டுக்கு அருகில் அ·ப்ஸல்கானுடைய கூடாரத்தில் ஓர் இடத்தில் தனியாக ஒற்றைக்கு ஒற்றையாக இருவரும் சந்தித்துப் பேசுவது என்று முடிவாகியது.
                ஆனால் பயங்கர ஆகிருதியும் உயரமும் உள்ள அ·ப்ஸல்கானை சிவாஜி நம்பவில்லை. அ·ப்ஸலும் ஒரு சிறிய கத்தியை மறைத்து எடுத்துச்சென்றான்.
                சிவாஜி புலிநகம் என்னும் ஆயுதத்தை உள்ளங்கையில் மாட்டிக்கொண்டு சென்றார். அதில் நான்கு வளைந்த மிகக் கூரிய பதமான சிறு கத்திகள் இருக்கும். உள்ளங்கையை மடக்கிக்கொண்டால் வெளியே
தெரியாது.

                இருவரும் சந்தித்த போது அ·ப்ஸல் மிகவும் அன்புடன் தழுவிக்கொள்வதுபோல் தழுவிக்கொண்டான். அந்த வாக்கில் அப்படியே பிடியை இறுக்கிக்கொண்டான். சிவாஜிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நடுத்தண்டை முறித்துவிட்டாலோ உள்ளுறுப்புகள் நசுங்கி ரத்தபெருக்கு ஏற்பட்டாலோ சிவாஜியைக் கொன்றுவிடலாம்.
                அ·ப்ஸலைவிட உயரத்தில் குறைவான சிவாஜி கெச்சலான உடல்வாகு கொண்டவர். அவருடைய கைகளுக்கு நேராக அ·ப்ஸ்லின் இடுப்பும் கீழ்வயிற்றுப் பகுதியும் இருந்தது.
                அவ்வளவுதான் அ·ப்ஸல் கானுடைய அடிவயிற்றைப் புலிநகத்தை வைத்து மர்மஸ்தானத்துக்கு மேலே அழுத்தி இழுத்துக் கிழித்துவிட்டார்.

                அப்போது அ·ப்ஸல்கானுடைய மெய்க்காவலரான கிருஷ்ணாஜி குல்கர்ணி வாளை உருவிக்கொண்டு சிவாஜியை வெட்டவந்தான். ஆனால் சிவாஜியின் மெய்க்காவலன் ஜீவா மஹாலே சிவாஜியைக் காப்பாற்றி
விட்டான். குல்கர்ணியை சிவாஜி கொன்றுவிட்டார். அ·ப்ஸல்கான் குடலை உருவிவிட்டு, அவன் தலையையும் வெட்டிக்கொண்டுபோய்விட்டனர். மலைகளில் ஒளிந்திருந்த மராட்டியர் அ·ப்ஸல் கானுடைய ராணுவ முகாமைத் தாக்கினர். யானை, குதிரை, கழுதை, பொக்கிஷம், உணவு, ஆயுதம் எல்லாவற்றையும் கொள்ளையிட்டுக்கொண்டு மறைந்தனர்.    அ·ப்ஸல் கானுடைய தலையை ஓரிடத்தில் புதைத்துவிட்டுச்
சென்றனர்.

                பிற்காலத்தில் பிரதாப்கட்டில் அ·ப்ஸல்கானை ஒழுங்காக அடக்கம் செய்வதற்காக இடம் கொடுத்தார்.

                இதுதான் புலிநகக் கதை.
                இந்திய வரலாற்றை மாற்றியது........
                ஒரு புலிநகம்.

அன்புடன்

ஜெயபாரதி


RETURN TO MAIN MENU