எவனாவது இந்தச் சாமியாரை...
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
கடாரம்
மலேசியா
JayBee
பல ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் ஆங்கிலப்படம் பார்த்தேன்.
Becket என்பது அந்தப் படத்தின் பெயர்.
Lawrence of Arabia படத்தின் நாயகன் Peter O'Tooleலும்
Cleoptra
நாயகனும் Elizabeth Tailor-இன் கணவருமான Sir
Richard Burton ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்தில் யார்தான் நாயகன் என்பது தெரியாது. படத்தின் பெயர் பெக்கெட்.
பெக்கெட் என்பது ஒரு நபரின் பெயர். அந்த நபராக நடிப்பவர் ஸர் ரிச்சர்ட் பர்ட்டன்.
கதைக்கு வருவோம்.
இரண்டாம் ஹென்ரி என்பவர் இங்கிலாந்தின் ஆரம்பகால மன்னர்களில் ஒருவன்.
இங்கிலாந்தை ஆங்கிலோ சாக்சானியர்களிடமிருந்து கைப்பற்றிய ·பிரெஞ்சு
நார்மன் சிற்றரசராகிய வில்லியமின் கொள்ளுப்பேரன்.
·
பிரான்ஸ் நாட்டின் உட்பிரிவாகிய ஆங்ஜூ நாட்டின் சிற்றரசனின்
மகன். தாயாகிய மாடில்டா, வில்லியத்தின் பேத்தி. நார்மண்டி என்னும் நாட்டிற்கும்
ஹென்ரியே அதிபதி. எலியனார் என்னும் இளவரசியை மணந்ததால் ஸ்பெய்ன், பிரான்ஸ்
ஆகியவற்றின் பெரும்பகுதிக்கும் ஹென்ரி அரசனானான்.
'எலியனார்' என்பது ஏதோ சங்க காலத் தமிழ்ப் புலவரின் பெயர் போலத் தோன்றுகிறது.
பண்டைக்காலத்திலேயே தமிழர்கள் இங்கிலாந்தில் இருந்தனர் என்ற கருத்தை வெளியிட்டு
அங்கும் தமிழ் இருந்தது; சேக்குச் சுப்பய்யர், எலியனார், சாசர் போன்ற தமிழர்கள்
அங்கு இருந்து ஆங்கிலமொழியை வளப்படுத்தினர் என்று முடிச்சுப் போட்டுப் பார்க்கலாம்.
ஆனால் பாருங்கோ... எலியனார் என்பது Eleonor என்னும்
ஆங்கிலப் பெண்பால் பெயர்.
வில்லியமின் மகனும் ஹென்ரியின் பாட்டனுமாகிய முதலாம் ஹென்ரியின் காலத்தில்
இங்கிலாந்து கைமாறியது.
ஆகவே தன்னுடைய தாயாகிய மாட்டில்டா அரசியின் சார்பில் இங்கிலாந்தின்மீது படையெடுத்து
அதைக் கைப்பற்றிக்கொண்டான்.
அப்படியாக இங்கிலாந்து, ஸ்காட்லாந்தின் சில பகுதிகள், ·பிரான்ஸ் நாட்டின்
பெரும் பகுதி, ஸ்பெய்ன் நாட்டின் சில பகுதிகள் ஆகியவற்றுக்கு ஹென்ரியே மன்னர்மன்னன்
ஆனான்.
நார்மண்டியில் ஒரு வர்த்தகரின் மகனாக விளங்கிய தாமஸ் பெக்கெட் என்பவன் மிகவும்
சூட்டிக்கையான இளம் அறிஞன். பாரிஸின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் சட்டம்
முதலியவை படித்துவிட்டு இங்கிலாந்துக்குச் சென்று இங்கிலாந்தின் தலைமை சமய
நிறுவனமாகிய Church of England-இன் தலைமை பாதிரியாராகிய
கேண்டர்பரி ஆர்ச்பிஷப்பின் அலுவலகத்தில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவ்வமயம் ஹென்ரியிடம் பெக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டார்.
1154-இலிருந்து ஹென்ரியும் பெக்கெட்டும் நகமும் சதையும் போன்று
இணைபிரியாத நெருங்கிய நண்பர்களானார்கள்.
குடியிலிருந்து, கலை, கேளிக்கை போன்றவற்றில் இருவருக்கும் நெருங்கிய ஒற்றுமை
இருந்தது. கவியரசு கண்ணதாசன் ஏதோ ஒரு சொந்தத்தை மிகவும் நெருங்கிய சொந்தம்
என்று சொல்வாரே. அவருடைய 'மனவாசம்' நூலில்கூட இதைப் பற்றி காணலாம். அந்த வகைச்
சொந்தமும்கூட இருவருக்குமிடயே இருந்தது.
விரைவில் பெக்கெட், இங்கிலாந்தின் தனாதிபதியாகிய Chancellor of the
Exchequer என்னும் பதவிக்கு நியமிக்கப்பட்டார்
1164-இல் கேண்டர்பரி ஆர்ச்பிஷப் இறந்தார். ஆர்ச்பிஷப்ங்க்றப்
பட்டவாள்லாம் நம்ம ஊருப் பீடாதிபதி, ஆச்சார்யாள், பண்டாரசன்னிதி மாதிரி. அவாள்
மதத்துக்கு அவாள் அப்படிப்பட்டவா.
அந்த மாதிரியான தலைமை சமயப் பதவியில் தனக்கு வேண்டப்பட்டவா இருப்பது ரொம்பவும்
சிரேஷ்டமாப் போச்சே என்று ஹென்ரி எண்ணினான். ஐரோப்பாவின் மிகவும் வலிமையான
அரசனாக ஏற்கனவே விளங்கிய ஹென்ரிக்கு தட்டிக் கேட்க ஆளில்லை. ஆனால் கேண்டர்பரி
ஆர்ச்பிஷப் அவனுக்கும் மேற்பட்ட ஆசாமி. அரசனையும் தட்டிக் கேட்கலாம். விரும்பினால்
மன்னனையேகூட Ex-communication எனப்பட்ட மதப்பிரஷ்டம்
செய்யமுடியும்.
ஆகவே தனக்கு வேண்டப்பட்டவா என்ற ஹோதாவில் கேண்டர்பரி
ஆச்சாரியாளாகத் தாமஸ் பெக்கெட் நியமிக்கப்படவேண்டும் என்று ஹென்ரி
பெரிதும் விரும்பினான்.
ஆனால் அதில் ஒரே ஒரு சிக்கல் இருந்தது.
ஆச்சாரிய பீடத்தில் அமர்ந்து மடாதிபதியாக ஆகவேண்டுமென்றால் சாமியார்த்தனத்துக்குக்
குவாலி·பை ஆகவேண்டும். அதற்கு ordainment என்று
சொல்லப்படும் ஒருமாதிரியான தீட்சையைப் பெறவேண்டும்.
அது ஒன்றும் சிரமமாக ஹென்ரிக்கு இருக்கவில்லை. முதல்நாள் மதியம் பெக்கெட்டுக்கு
தீட்சை வழங்கப்பட்டது. அடுத்தநாள் காலை கேண்டர்பரி அதிமேற்றிராணியாராக - ஆம்
அதான் ஆர்ச்பிஷப் என்னும் அந்தப் பதவிக்குரிய தமிழ்(?)ச்
சொல்.
அந்தப் பதவியை பெக்கெட் அடைந்ததும் அவர் அந்தப் பதவிக்குரிய ஹோதாவில் நடக்க
ஆரம்பித்தார். ஆகவே பல விஷயங்களில் ஹென்ரியின் விருப்பங்களைத் தட்டிக்கேட்க
ஆரம்பித்தார்.
ஹென்ரிக்கு வேண்டப்பட்டவா சிலரை அவர் ஜாதிப்பிரஷ்டம் பண்ணிவைத்தார்.
இப்படியே சில ஆண்டுகாலம் சென்றது.
ஹென்ரியை மிகவும் அதிகமான முக்கிய விஷயங்களில் எதிர்த்துக்கொண்ட பெக்கெட்டுக்கு
எதிராக ஹென்ரியும் சில நடவடிக்கைகளை எடுத்தான்.
அவர் தனாதிபதியாக இருந்த சமயத்தில் செலவிட்ட சில பெருந்தொகைகள் பற்றிய விபரத்தை
நோண்டியெடுத்தான்.
உயிருக்கு அஞ்சிய பெக்கெட், ·பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று அங்கேயே
ஆறாண்டுகாலம் வாழ்ந்துவந்தார்.
·
பிரான்ஸில் இருக்கும்போது அவர் லண்டன், ஸாலிஸ்பரி ஆகிய
நகரங்களின் தலைமை பிஷப்புக்களை மதப்ரஷ்டம் செய்தார். அவர்கள் ஹென்ரியின் ஆதரவாளர்கள்
என்பதுதான் முக்கிய காரணம்.
1170-இல் ஒரு மாதிரியாக இருவருக்குள்ளும் சமாதானம் ஏற்பட்டமாதிரி
தெரிந்தது. ஆகவே பெக்கெட் இங்கிலாந்துக்குத் திரும்பினார்.
ஆனால் அந்த இரண்டு போக்கிரிச் சாமியார்களையும் மன்னித்து மீண்டும் பதவியில்
அமர்த்த அவர் விரும்பவில்லை.
இந்த விஷயம் ஹென்ரியின் காதில் போடப்பட்டது.
அவ்வளவுதான். ஒரு பயங்கர கோபாவேசத்துக்கு ஆளாகினான், ஹென்ரி.
அப்போது கத்தினான், "Will no man rid me of this meddlesome priest?"
உடனே ராஜாவுக்கு வேண்டப்பட்ட நான்கு தாதாக்கள் விரைந்து கேண்டர்பரி தேவாலயத்துக்குள்
சென்றார்கள்.
அங்கு தனுர்மாஸ்ய பூசனையில் பெக்கெட் ஈடுபட்டிருந்தார்.
டிஸம்பர் மாதம் 29-ஆம் தேதி.
மார்கழித் திங்களல்லவா...............
அது தனுர் மாஸ்யம் அல்லவா?
அப்போது செய்யப்படும் பூசனையை என்னாண்டு சொல்றது?
போட்டுத்தள்ளிவிட்டனர்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU