சிலநாட்களுக்கு முன்னர் கணேச
சஹஸ்ரநாமத்தைப் பற்றி எழுதலாமே என்று தோன்றியது. இன்னதைத்தான்
எழுதவேண்டும் என்று அப்போது தீர்மானிக்கவில்லை.
ஆனால் கணேச சஹஸ்ரநாமத்தை நாமாவளியாக எழுதலாம் என்ற
எண்ணம் இருந்தது.
ஒரு காலத்தில் விநாயகரைப் பற்றி மிகவும் எளிமையான -ஆனால் புதிய செய்திகள்
ஆய்வுகளைத் தாங்கிய புத்தகம் எழுதவேண்டும் என்று நினைத்தேன். புத்தகம்கூட
ப்ரூ·ப் அளவில் உருவாகிவிட்டது. ஆனால் முழுமையான அச்சுப்பிரதிகளை
வெளியிடமுடியவில்லை. அது ஒரு பெரிய கதை.
அதன் பின்னர் ஒரு நீளமான டாக்குமெண்டரி எடுப்பதற்கு முயற்சி செய்தோம்.
ஆழமான ஆய்வுகள் அடங்கியதாக இருந்தது அது. ஆனால் மேன்மேலும் தொடர்ந்து
செய்வதற்கு முடியவில்லை. எடிட்டிங் செய்யவேண்டியதுதான் பாக்கி. அப்படியே
நின்றுவிட்டது. அது இன்னொரு பெருங்கதை.
சங்கடஹர சதுர்த்தியை மலேசியாவில் நான் தான் முதன்முதலில் பிரபலப
்படுத்தினேன். அதற்குரிய விரத பூஜா விதானம் ஒன்றையும் ஏற்படுத்தினேன்.
எளிமையானது.
இந்த காணாபத்யம் சம்பந்தமாக நூல்தான் எழுத முடியவில்லை;
டாக்குமெண்ட்டரியும் எடுக்கமுடியவில்லை.
வலையகமாவது போடுவோம் என்று தீர்மானித்து ஏதோ ஒரு
ஸர்வரில் கணினி அங்கையா மூலம் போட்டுவைத்தோம்.
திடீரென்று அந்த சர்வர் ஸ்பேஸ் காணாமல் போயிற்று. அங்கையா அதன் பின்னர்
இன்னோர் இடத்தில் போட்டுவைத்தார். அதிலுள்ள சில கட்டுரைகளை
விஸ்வாக்காம்ப்லெக்ஸில் காணலாம்.
விஸ்வாக்காம்ப்லெக்ஸில் ஆரம்பத்தில் உள்ள சில கட்டுரைகள் காணாபத்யம் -
கணபதி வழிபாடு சம்பந்தமானவை.
அகத்தியரில் இன்னும் பல மடல்களை விநாயகர் சம்பந்தமாக எழுதியுள்ளேன்.
அவற்றையெல்லாம் தொகுத்து விஸ்வாக்காம்ப்லெக்ஸில் போடவேண்டும்.
நீண்ட நாட்களுக்கு முன்னர் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தைப் பற்றிய விளக்கங்கள்
அடங்கிய நூல் ஒன்றை வெளியிட முயற்சி செய்தோம்.
ஐந்து கட்டுரைகளும் அவற்றிற்குரிய படங்களும் தயாராகிவிட்டன. அச்சுப்
பிரதியின் மூலமும் தயாராகிவிட்டது. ·போட்டோப்ரிண்ட்தான் பாக்கி.
அதுவும் நின்று போனது.
அந்த மூலப்பிரதிகளுடன் இன்னும் சேர்த்து இன்னும் பெரிய நூலாக
உருவாக்கவேண்டும்.
இப்போது கணேச சஹஸ்ரநாமத்தை வலையேற்றம் செய்யலாம் என்று தீர்மானமாக முதலில்
நினைக்கவில்லை. ஆனால் எப்படியோ அந்தப் பாதையில் சிந்தனையும் செயலும்
கொண்டுசெல்லப்பட்டுவிட்டன.
பத்துநாட்களுக்கு முன்னர் கணேச சஹஸ்ரநாமத்தை எழுதலாம் என்று தோன்றியபோது
அதைப் பற்றி ஒரு புத்தகம்கூட கையில் இல்லை. ரொம்ப காலமாக - பன்னிரண்டு
ஆண்டுகளாகத் தேடப்படாமல் எங்கோ அடுக்கிவைக்கப்பட்டுவிட்ட நூல்கள். அதேபோல்
குறிப்புக்களும் ஆய்வுகளும். எங்கே வைத்தேன் என்பதுகூட நினைவில் இல்லை.
அந்த சமயத்தில் வலையில்கூட தேடினேன்.
ஏனென்றால் அந்தச் சமயத்தில் திடீரென்று சஹஸ்ரநாமத்தை எழுதுவதைப் பற்றிய
பயம் வந்துவிட்டது.
"என்னடாது வரிஞ்சு வரிஞ்சு எழுதுறோமே...... யாராவது வலையில முன்னலயெ
போட்டுருந்தா செரமமாச்சே. எதுக்கும் பாத்துப்பிடுவம்", என்ற எண்ணத்தோடு,
வலையில் கணேச சஹஸ்ரநாமம் பற்றி ஸர்ச் போட்டுப் பார்த்தேன். பலவகையான
Spelling-களைப் பயன்படுத்திப்
பார்த்தேன். தமிழில் தேடிய கையோடு ஆங்கிலத்திலும் தேடிப்பார்த்தேன். ராம்
கரன் ஷர்மா என்பவருடைய ஆடியோ ·பைல்ஸ் இருக்கின்றன.
ஆனால் இதுவரைக்கும் கணேச சஹஸ்ரநாம நிரலை டெக்ஸ்ட்டில்
பார்க்கவில்லை. தோத்திரத்தைக் கூட காணோம்.
இத்தனை வருஷங்களில் இத்தனை பேர்கள் இன்னுமா போடாமல்
இருப்பார்கள்?
எனக்குத் தென்படவில்லை.
ஒருவேளை என்னுடைய ஸர்ச் வழிமுறைகளில் பலவீனம்
இருக்கலாம்.
ஆயிரம் நாமாக்களையும் தோத்திரங்களையும் உடன்
வைத்துக்கொண்டு சரிபார்த்துச் சரிபார்த்து கணினியின் டைப் அடிப்பது
என்றால் சிரமம்தான்.
இதெல்லாம் லிகித ஜபம் போன்று லிகிதார்ச்சனையாக
Technicallly speaking
அது ஒருவகையில் நல்லதுதான்.
இருந்தாலும்
Reinventing
the Chair கதையாகவும் ஆகிவிடக்கூடாது.
முன்பு ஒரு தடவை மஹேந்திரவர்மப் பல்லவருடைய 'மத்தவிலாசப் பிரவசன'த்தை டைப்
செய்து அகத்தியரில் போட்டு...... கடைசியில் சொல்கிறார்கள் அது ஏற்கனவே
இன்னொரு வலைத்தளத்தில் இருக்கிறதாம்.
அதான் பயம்.
ஆங்கிலத்தில் கரன் என்பவர் பேசிய சங்கதிகள் தவிர நாகரியில் எழுதப்பட்ட
சஹஸ்ரநாமமும் இருந்தது.
ஆனால் தமிழில் ஏதும் இல்லை.
ஒரு வாரத்துக்கு முன்னர்தான் கணேச சஹஸ்ரநாம ஸ்தோத்திர நூல்
கிடைத்தது. பழைய நூல். ஆனால் கைக்குக் கிடைத்தவற்றில் அதுதான் முதல் நூல்.
நாமாவளி கிடைக்கவில்லை.
ஆகவே முதலில் ஸ்தோத்திரத்தைப் பிழையற எழுதிக் கொள்வோம்; பின்னர்
அதிலிருந்து ஒவ்வொரு நாமாவையும் தனித் தனியாகப் பிரித்து எடுத்து
எழுதுவோம் என்ற எண்ணம் தோன்றியது. ஆகவே நான்கு நாள்
திட்டம் போட்டு எழுத ஆரம்பித்தேன். ஸ்தோத்திரம் முழுவதையும் இரண்டரை
நாட்களிலே எப்படியோ கீ இன் செய்துவிட்டேன்.
இதன் நடுவில், எங்கோ அடுக்கிவைத்திருந்த அத்தனை நூல்களும் கிடைத்துவிட்டன.
நாமாவளியில் மூன்று வெவ்வேறு பிரதிகளும் ஸ்தோத்திரத்தில் இரண்டு
பிரதிகளும் கிடைத்தன.
நாமாவளியையும் கீன் செய்ய ஆரம்பித்தேன்.
யாராவது உதவி செய்வார்களா என்று பார்த்தேன்.
வழக்கம்போல யாரும் உதவ முன்வரவில்லை.
வழக்கம்போல வாயடைத்துப்போய் அனைவரும் இருந்தனர். ஒரு உபசாரத்துக்குக் கூட
யாரும் ஏதும் சொல்லவில்லை.
ஆனால் இந்த மாதிரி உதவியெல்லாம் வரும், வரவேண்டும் என்று எதிர்பார்த்து,
உதவி கிடைத்தால்தான் எதையும் செய்யவேண்டும் என்று நினைத்திருந்தால்
அகத்தியக்குழுவிலோ அதற்கும் வெளியிலோ இந்த அளவுக்கு உலகளாவிய விதத்தில்
எதையுமே நான் சாதித்திருக்கமுடியாது. தனிமனிதப் பிரயத்தனமும் பெரும்
சாதனைகளை வெற்றிகரமாக உருவாக்கும் என்பதற்கு என்னுடைய முயற்சிகள்
சான்றாகத் திகழ்கின்றன.
இது இக்காலத் தமிழ் இளைஞர்களுக்கு ஒரு தூண்டுகோலாகவும் ஊக்கியாகவும்
இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இதை எழுதுகிறேன்.
"முடிந்தால் செய்வோம்; முடிந்தவரை செய்வோம்" என்பது என்னுடைய
கோட்பாடுகளில் ஒன்று.
நாமாவளியை கீ இன் செய்ய ஒரு வாரமாவது ஆகும் என்று நினைத்தேன். கீ இன்
செய்ய ஆரம்பித்தேன்.
இரவு ஒரு மணிக்குத்தான் தூங்கப்போவது.
சிறிது நேரம் கீ இன் செய்தபின்னர் மானிட்டரின்
ஸ்க்ரீனின் நடுப்பகுதியை வலதுகண்ணில் இருக்கும் மேக்குலர் பிரச்னை
மறைக்கும். இடது கண் பார்வையைப் பழக்கப்படுத்திக்கொண்டு கீ இன் செய்வேன்.
கால்கள் மரத்துப்போய்விடும். மரத்துப்போவதை மறந்துவிட்டு அப்படியே
தொடர்ந்து செய்வேன்.
சஹஸ்ரநாமத்தைக் கீ இன் செய்வதே ஒரு தவம்.
தூக்கத்தையும் விடுத்து, இவ்வளவு சிரமங்களுடன் செய்வது ஒரு மாபெரும்தவம்.
பஞ்சாக்னி தபஸைப் போன்றது.
என்னளவுக்கு அது சிரமம்தானே?
நடுவில் அகத்தியரில்
Gap விடாமல்
ராஜராஜசோழர், டேக்கா கொடுப்பது, அல்வா
கொடுப்பது, கஸ்மாலம், ஜகா வாங்குதல் எல்லாமே தங்குதடையில்லாமல் தடபுடலாக
நடந்துக்கொண்டிருந்தன. இவற்றுடன் பெரிய சமாச்சாரம் ஒன்றும்
சேர்ந்துகொண்டது.
'டார்வின்
200'
ஒன்றல்ல இரண்டல்ல.....
பதினேழு மடல்களில் அது தொடர்ந்து வந்தது.
நாமாவளியை இரண்டை நாட்களில் கீ இன் செய்துவிட்டேன்.
இதிலும் சில சிரமங்கள். கிரந்தத்தில் இருந்த நாமாவளியில் காணப்படும்
பெயர்களுக்கு ஏற்ற எழுத்துக்கள் யூனிக்கோட், திஸ்கி கீபோர்டில் இல்லை.
ca, cha, ja, jha, Sa, S~, Sh
ஆகியவற்றுக்குத் தமிழில் ச, ஜ, ஸ ஷ ஆகியவைதான் இருக்கின்றன. ஆகவே இடத்தைப்
பொறுத்து
Nearest possible pronounciation-னுக்குத்
தகுந்த பொருத்தமான எழுத்தைப்போட்டு அடிக்கவேண்டியதாயிற்று.
சில நாமாக்களைப் படிக்கும்போது அப்படியே மனத்தை
ஈர்த்துவிடும். அதன் பொருள், அதில் பொதிந்திருக்கும் ஆழம் என்பவை மனதைக்
கௌவிக்கொள்ளும். தன்னை அறியாமலேயே அந்த நாமாவைப் பற்றி
சிந்தித்துக்கொண்டிருப்பேன்.
அதன் பின்னர் நாமாவளி முழுவதையும் சரிபார்க்கவேண்டி
வந்தது.
மூலப்பிரதிகளிலேயே அச்சுப்பிழை முதலியவை இருந்தன. நாமாவளியில் இருந்த
சந்தேகத்தை ஸ்தோத்திரத்தை வைத்துத் தீர்த்துக்கொள்வது.
கீ இன் செய்ததைவிட இதுவே அதிக நேரம் பிடித்தது
. Cross-reference என்பது
சிரமமாகவே இருந்தது.
வேறு பல பிரச்னைகள், வேலைகள், அழுத்தங்கள்,
நெருக்கடிகள், ஆட்கள் வருகை போன்றவற்றின் நடுவில் இதையெல்லாம்
செய்யவேண்டியிருந்தது. தினம் மூன்று மணி நேரம்தான் தூக்கமெல்லாம்.
ஒருவழியாகச் சரி பார்த்தாயிற்று.
மார்ச் 14-ஆம்
தேதி 2009, மாசி
மாதத்து சங்கடஹர சதுர்த்திக்கு முன்னால் சஹஸ்ரநாமத்தை
அகத்தியரில் வெளியிட்டுவிட்டால் அதை சங்கடஹர சதுர்த்தியன்று யாராவது
படிக்கக்கூடும் அல்லவா.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$