காஞ்சி பராமாச்சார்யார் மிகவும்
விவரித்துச் சொன்ன ஸ்தோத்திரம் ஒன்று உண்டு.
இடையூறுகள் தடங்கல்கள் ஏற்படாவண்னமும், ஏற்பட்ட இடைஞ்சல்களும் தடைகளும்
நீங்கும் வண்ணமும் காரியம் வெற்றி பெறுவதற்கும் அந்தத் தோத்திரம்
பயனுள்ளது.
விநாயகரின் பதினாறு நாம மந்திரங்களின் கோர்வையாக அந்த ஸ்தோத்திரம்
அமைந்துள்ளது.
இந்த ஸ்தோத்திரத்திலுள்ள சில மந்திரங்கள் வேறு பல ஸ்தோத்திரங்களிலும்
வரும்.
மந்திர சாஸ்திரத்தில் உள்ள பல உத்திகளில் இதுவும் ஒன்று.
ஒரு குறிப்பிட்ட வரிசையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிகையுள்ள மந்திரங்கள் ஒரு
குறிப்பிட்ட பலனைத் தரும்.
அந்த மந்திர நிரலில் கண்ட மந்திரங்களில் சில, வேறு சில
மந்திரங்களுடன் சேர்ந்து இன்னொரு நிரலாக விளங்கும்போது வேறு பலனைத் தரும்.
ஒரு குறிப்பிட்ட ஒரே ஒரு மந்திரத்தின் அட்சரங்களை வெவ்வேறு வரிசையில்
அமைக்கும்போதும் அவற்றிற்கு வெவ்வேறு பிரயோகங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.
திருமந்திரம் என்னும் நூல் திருமூலர் இயற்றியது.
'மூலன் மூவாயிரம்' என்றும் குறிப்பிடப்படும் அந்த நூலில் இந்த மாதிரி
விஷயங்களையெல்லாம் விவரித்திருக்கிறார்.
சித்தர்களை நாத்திகர்கள் போலவும் கிறுக்கர்கள் போலவும் சித்தரிப்பது
தமிழர்களிடையே வழக்கம்.
ஆனால் அதே சித்தர்கள்தாம் மந்திர சாஸ்திரங்களையும் பலவாறாக
வகுத்திருக்கிறார்கள். போகர், கருவூரார் என்று பலர்.
கணபதி ஹோமம் இருக்கிறதல்லவா? அதிலேயேகூட வைதிக
ஆகம முறைகளைப் போன்றே சித்தர் முறையும் இருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் தாந்திரீக முறையும் மந்திரவாத
முறையும்கூட இருக்கின்றன.
சித்தர் முறை ரொம்பவும் எளிதானதாக இருக்கும்.
அதாவது எளிதானதுபோல் விளங்கும்.
சித்தர்களின் விஷயங்களில் ஒரு சிறப்பு உண்டு.
குறைவான சடங்குகள், கைவேலைகள், ஆகுதிகள் போன்றவை
அவர்களின் முறைகளில் காணப்படும்.
மேற்கூறிய சித்தர்களின் கணபதி ஹோமத்தில் ஏகாக்ஷர
பீஜத்துடன் கூடிய கணபதி மந்திரத்தையும் உருப்போடலாம்; அல்லது பிரணவத்துடன்
கூடிய இருபத்தெட்டு அக்ஷரம்கொண்ட மகாகணபதி மந்திரமாகவும் இருக்கலாம்.
ஒரே ஒரு தேங்காயைச் சிறுசிறு பற்களாகக் கீறி வைத்துக்
கொண்டு, அந்தச் சிறு துண்டங்களைத் தேனில் நனைத்து ஆகுதியாகப் போடவேண்டும்.
மிகவும் எளிது.
இல்லையா?
கைவேலை, சடங்கு ஆகியவை குறைவாக இருப்பதற்குக்
காரணங்களில் ஒன்று, மனதை மந்திரத்தில் முழுமையாகச் செலுத்தவேண்டும் என்ற
குறிக்கோள்தான். கண்டது கடியதை யெல்லாம் நெய்யில் தோய்த்துப்
போட்டுக்கொண்டிருக்கும்போது மனது அதில்தான் பதியும்.
அதுவும் பட்டுச் சேலை, தங்க ரேக்கு, குங்குமப்பூ என்று விலைகூடிய
சரக்குகளைப் போடும்போது அங்கே ரொம்பவும் தூக்கலாக நிற்பது 'மமதா'வும்
'அஹந்தா'வும் அவற்றுடன் சேர்ந்த சில சில்லறைக் குணங்களும்தாம். 'மமதா' -
என்னுடையது என்ற எண்ணம்; அஹந்தா - 'தான்' எனும் தன்மை.
அம்பிகைக்காக ஹோமத்தைச் செய்யும்போதுகூட- "நிர்மமா, மமதாஹந்த்ரீ" என்று
சொல்லி சரக்குகளைப் போடும்போதுகூட - மமதாவும் அஹந்தாவும்தான் அங்கே
நர்த்தனமாடிக் கொண்டிருக்கும்.
செய்பவனும் செய்யச் சொல்பவனும் முற்றும் துறந்த முனிவர்களா என்ன?
ஏதோ ஒரு காம்யபலனுக்காகச் செய்பவர்கள்தாமே?
இதெல்லாம் இல்லாமல் எங்கு போய்விடும்?
சித்தர்கள் முறையில் மனம்தான் அதிமுக்கிய பங்கெடுக்கும். மந்திரம்
மனதோடும், மனம் மந்திரத்தோடும் இயைந்து செயல்படவேண்டும்.
இன்னொன்றும் உண்டு.
மூச்சு.
எந்த இடத்தில் மூச்சை இழுக்கவேண்டும், எத்தனை நொடிகளுக்கு மூச்சைப்
பிடித்து, எத்தனை தடவை உருப் ப்போடவேண்டும் என்பதற்கெல்லாம் கணக்கு
இருக்கிறது.
இருபத்தெட்டு அக்ஷரம் கொண்ட மந்திரத்துக்கு இருபத்தெட்டு நொடிகள் என்று
எண்ணிவிடக்கூடாது.
ஸ்ரீமுக்கும் ஹ்ரீமுக்கும் கம்முக்கும் வெவ்வேறு
எண்ணிக்கையில் நொடிகள் அமைந்திருக்கும். இதை மாத்திரைக் கணக்கு
என்பார்கள்.
அகத்தியர் ஆவணத்தில் உள்ள சில மடல்களில் இதைப் பற்றி காணலாம்.
எழுத்தில் எவ்வளவை அடக்கிவிடமுடியும்?
சொல்லிக்காட்டினால்தான் நன்கு பிடிபடும்.
மூச்சு, மந்திரம், மனம் ஆகிய மும்மகாரங்கள் இணைகின்றன.
சித்தர்களின் முறைகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவையாக இருப்பதற்கு
இவையெல்லாம் காரணங்கள்.
பரமாச்சாரியார் சொன்ன அந்த ஸ்லோகத்துக்கு வருகிறேன்.
ஸ¤முகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்ணக:
லம்போதரச்ச விகடோ விக்னராஜோ விநாயக:
தூமகேதுர் கணாத்ய§க்ஷ¡ பாலச்சந்த்ரோ கஜானன:
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:
விநாயகருக்குப் பதினாறு வகையான மூர்த்தங்கள் இருக்கின்றன என்று சொன்னேன்.
அவருக்குச் சிறப்பாக பதினாறு நாமங்கள் கொண்ட சோடச நாமாவளியும் இருக்கிறது.
இந்தச் சிறப்பான நாமாவளி விநாயகரின் விக்னநாசன கணபதி அம்சத்துக்கு உரியது.
விநாயகரை விக்னநாசனனாக வழிபடுவதற்கென்று தனிப்பட்ட மந்திரங்கள்
இருக்கின்றன. 'விக்னேஸ்வர சோடச நாமம்' என்று பெயர் பெற்றவை.
சங்கடங்களை நீக்குவதற்கென்று சங்கடஹர கணபதி.
அதுபோலவே விக்னங்களை நிக்குவதற்கு விக்னநாசனன் அல்லது
விக்னஹரன்.
விக்னநாசன கணபதியின் சோடச நாமங்களைத் தனித்தனியாகவும் சொல்லலாம்.
பதினாறையும் ஒரே மந்திர சுலோக தோத்திரமாகவும் சொல்லலாம்.
ஸ¤முகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்ணக:
லம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக:
தூமகேதுர் கணாத்ய§க்ஷ¡ பாலச்சந்த்ரோ கஜானன:
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:
இதனையே நாமாவளியாக:
ஸ¤முகாய நம:
ஏகதந்தாய நம:
கபிலாய நம:
கஜகர்ணகாய நம
லம்போதரய நம
விகடாய நம
விக்நராஜாய நம
விநாயகாய நம
தூமகேதவே நம
கணாத்யக்ஷ¡ய நம
பாலச்சந்த்ராய நம
கஜானனாய நம
வக்ரதுண்டாய நம
சூர்ப்பகர்ணாய நம
ஹேரம்பாய நம
ஸ்கந்தபூர்வஜாய நம
இவை அனைத்திற்கும் சுருக்கமான பதார்த்தமும் - பத
+அர்த்தம் - சொல்லும் அதன் பொருளும் - இருக்கிறது. அதே சமயத்தில் நீண்ட
விரிவான பாஷ்யம் போன்ற விளக்கவுரையும் இருக்கிறது.
சுருக்கமான பதவுரையை எளிமைப்படுத்திச் சொல்கிறேன்.
ஸ¤முகாய நம: = மங்கலகரமான முறுவலுடன் கூடிய இனிய முகத்தோன்
ஏகதந்தாய நம: = ஒற்றைத் தந்தமுடையவன்
கபிலாய நம: = கபில நிறமுடையவன்
கஜகர்ணகாய நம = யானைக்காது உடையவன்
லம்போதராய நம = தொப்பையான வயிற்றையுடையவன்
விகடாய நம = வேடிக்கையானவன்
விக்நராஜாய நம = விக்னங்களை மேலாதிக்கம் செய்து தன் கட்டுப்பாட்டுக்குள்
வைத்து அடக்கி ஆளும் அரசன்
விநாயகாய நம = தனக்கு மேலாக உள்ள நாயகன் - தலைவன் யாரும் இல்லாதவன்.
தூமகேதவே நம = புகை போன்ற வண்ணம் கொண்ட உருவம் உடையவன்
கணாத்யக்ஷ¡ய நம = கணங்களுக்கு அதிபதியாக உள்ளவன்
பாலச்சந்த்ராய நம = நெற்றியில் சந்திரனை அணிந்துள்ளவன்
கஜானனாய நம = யானை முகத்தோன்
வக்ரதுண்டாய நம = வளைந்த துதிக்கையை உடையவன்
சூர்ப்பகர்ணாய நம = முறம் போன்ற காது உடையவன்
ஹேரம்பாய நம = ஐந்து செம்முகங்களும் மஞ்சள் நிறமும் பத்துக்கரங்களும்
கொண்டு, சிம்ம வாகனத்தில் அமர்ந்திருப்பவன்.
ஸ்கந்தபூர்வஜாய நம = முருகனுக்கு முன்பு தோன்றியவன்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$