பாராக்கூடா எங்கே?


டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
கடாரம்
மலேசியா




                    நான் 1976-ஆம் ஆண்டில் பெஸ¤ட் என்னும் இடத்தில் மாவட்ட சுகாதார அதிகாரியாக இருந்தேன். இது மலாயா தீபகற்பத்தின் கிழ்க்குப் பகுதியில் உள்ளது.
                    இதுவும் அத்துவானமாக உள்ள இடம்தான்.
                    கோலாலும்ப்பூரில் அச்சிட்டு வெளியாகும் தினசரிப்
பத்திரிக்கை இரவு பத்து மணிக்கு வெளியூர்களுக்கு அனுப்பப்படும்.
                    அது பெஸ¤ட்டில் இருக்கும் எனக்கு அடுத்த நாள் மாலை ஆறு மணிக்குத்தான் கிடைக்கும்.
                    போக்குவரத்து அவ்வளவு சிரமமும் சிக்கலும் நிறைந்தது. Bentong Bends
என்றொரு இடத்தைச் சொல்வார்கள். எழுபது கீலோமீட்டர்களுக்கு மலைகளில் ஏறி இறங்கி வளைந்து நெளிந்து செல்லும் குறுகலான சாலை; அப்படிப்பட்ட இடங்களையெல்லாம் கடந்துதான் வரும்.
                    ஒரு வாரத்தில் இரு முறை விமான சர்வீஸ் இருக்கும். அதுவும் குவாலத் திரெங்காணு என்னும் ஸ்டேட் தலை நகரிலிருந்துதான். இல்லையென்றால் கோத்தா பாரு என்னும் ஊருக்குச் செல்லவேண்டும்.   
                    குவாலத் திரெங்காணுவிலிருந்து செல்லும் விமானம் Fokker Friendship என்னும் வகையைச் சேர்ந்தது. சிறிய விசிறிகள் இரண்டு. பன்னிரண்டு பயணிகள் மட்டுமே உட்காரலாம். கனமான சாமான்களை அனுமதிக்கமாட்டார்கள்.

                    பறக்கும்போது மேகங்களுக்குள் நுழைய மாட்டாது. மேகத்தைச் சுற்றித்தான் செல்லும். மட்ட மத்தியானத்தில் பூமியிலிருந்து மேலே செல்லும் Convection Currents என்னும் மேல் அழுத்தக் காற்றால் அடிக்கடி மேலே தூக்கியெறியப்படும். உயரமான
மலைகளின் மீது பறக்காது. உயரக் குறைவான மலைகளைத் தேடிப் பிடித்து அவற்றின்மீது பறந்து கடக்கும். சீதோஷ்ண நிலை சரியாக இல்லையென்றால் பள்ளத்தாக்குகளின் ஊடே சில இடங்களில் பறந்து செல்லும். Central Range என்னும் பெரிய மலைத் தொடரை அப்படித்தான் கடக்கும்.
   
                    Adventure-ஆக நினைப்பவர்களுக்கு அது அப்படியாக இருக்கும்.
                    பயப்படுகிறவர்கள் பயந்து கண்களை மூடிக்கொண்டு இருப்பார்கள்.
                    ஒவ்வொரு முறை குலுங்கும்போதும் தன் இஷ்ட தெய்வத்தை நினைத்துக ்கொண்டு வருபவர்கள் அதைச் செய்வார்கள்.
                    வாந்தியெடுப்பவர்கள் அதைத் தீவிரமாகச் செய்து கொண்டிருப்பார்கள்.
                    இந்த ஏரோப்பிலேனிலெல்லாம் ஹை ப்லட் ப்ரெஷர்,
                    இருதய நோயுள்ளவர்களை அனுமதிப்பதில்லை.
                    அப்போதெல்லாம் இருதய நோயர்கள் அதிகமாக இருந்ததில்லை.
                    "அப்பவெல்லாம் லை·ப் ஸ்டைல் நன்னா இருந்தது. நெறைய நடப்பா. சாப்பாடு ஜன்க் ·பூடெல்லாம் அப்பொ ஏது? அதுனால ஹார்ட் டிரபிளெல்லாம் கொறச்சலா இருந்திருக்கும்", என்று யாராச்சும் சொல்வா.
                    அப்பெல்லாம் கொரோநரி பைப்பாஸ், ஸ்டெண்ட், இப்ப இருக்கற மாத்திரை மருந்து, கொரோநரி கேர் அது இதுன்னு கெடையாது.
                    நடையுடை இல்லாமல் ஒரே இடத்தில் இருந்துகொண்டு, சத்தம் கித்தம் கேட்காத இடமாகப் பார்த்து இருந்துகொண்டு, அதிர்ச்சியான விஷயம் ஏதும் கேட்காமல், லாக்ஸட்டிவ் சாப்பிட்டுக் கொண்டு, ரொம்பவும் பத்திய உணவைச் சாப்பிட்டுக்கொண்டு ரெண்டொரு வருஷம் அதிக பட்சம்  இருப்பார்கள்.
                    ·போக்கர் ·ப்ரெண்ட்ஷிப்பாவது.......?
                    ஆகவே அவர்கள் அதில் ஏறமாட்டார்கள்.

                    ஆனால் ஒன்று......
                    மிக அழகிய பணிப்பெண்கள்.
                    உரசிக்கொண்டு செல்வார்கள்.
                    விமானத்தின் நடுவில் செல்லும் பாதை-Aisle, ஓர் ஒடுக்கமான பாதையாக இருக்கும்.
                    அதில் அப்படித்தான் செல்லமுடியும்.
                    விமானம் குலுங்கும்போது மேலே விழும் சாத்தியக் கூறுகளும் உண்டு.
                    விமானத்தின் நடுவில் செல்லும் பாதை -Aisle-ஐ ஒட்டியிருக்கும் இருக்கையில் இருந்தால் இதெல்லாம் நடக்கும்.
                    இதுவும் நடக்கும்.
                    இன்னமும் நடக்கும்.
                    ஜன்னல் ஓரத்து இருக்கையிலுள்ள பயணிக்கு எட்டி எட்டி, கா·பி, கேக் கொடுக்கும்போது அது நடக்கும்.
                    அந்த ·போக்கர் விமானப் பயணத்தைப் பற்றி ஓரளவுக்குக் கற்பனை செய்திருப்பீர்கள்.
                    பெஸ¥ட் மாவட்டத்தில் கம்போங்க் ராஜா என்னும் ஊரில் பெரிய சுகாதார நிலையமும் இன்னும் மூன்று சிற்றூர்களில் ஸப்ஸெண்ட்டர்களும் இருந்தன.
                    ஸப்ஸப்ஸெண்ட்டர் ஒன்று ஒரு தீவில் இருந்தது.
                    ஜெர்த்தெ என்னும் ஊரில்தான் தலைமையகமும் மாவட்ட மருத்துவமனையும் இருந்தன.
                    மாநில இயக்குனர் குவாலத்ரெங்காணுவில். அங்குதான் பெரிய மருத்துவமனையும்.

                    கடலுக்கு அப்பால் சில தீவுகள் இருந்தன.
                    அவற்றில் ஒன்று பூலாவ் பெர்ஹெந்த்தியான் என்பது.
                    மிக அழகிய தீவு.
                    Tropical Island என்பார்கள் அல்லவா.
                    அது.
                 Jessica Alba போன்றவர்கள் நீருக்கு அடியில் மூழ்கி நீந்துவதாகக் காட்டுவார்கள் அல்லவா? அந்த மாதிரிப்பட்ட தீவு.
                    ஒரு ட்ரோப்பிக்கல் தீவைக் கற்பனை செய்து பார்த்தால் எப்படி இருக்கும்?
                    அப்படி இருக்கும்.
                    அங்கு ஒரு குட்டி குட்டி ஸெண்டர்.

                    மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அங்கு லான்ச் பெரும் படகில் சென்று அங்கேயே தங்கி அங்குள்ள மக்களுக்கு வைத்திய செய்து, மருத்துவப் பரிசோதனையும் செய்யவேண்டும். ஒரு மெடிக்கல் டீமைத் தயார் செய்து கொண்டு செல்லவேண்டும்.
                    அங்கு மீனவர்கள் ஏராளமாக குடித்தனமாக வாழ்ந்தனர். சொல்வழக்கில் உள்ளதுபோல 'குடியும் குடித்தனமுமாக' என்று நான் சொல்லவில்லை. அவர்கள் மலாய்க்காரர்கள். ஆகவே குடிக்க மாட்டார்கள்.
                    நான் அங்கு வேலை செய்த காலகட்டத்தில் வியெட்நாமிலிருந்து அகதிகள் அங்கு வந்து கரையிறங்குவது உண்டு. ஆனால் அவர்கள் வேறொரு அரசு துறைக்கு உட்பட்டவர்கள். அவசரத்துக்கு மட்டுமே நாம் தலையிடமுடியும். அவர்களுக்கென்று எல்லாமே தனி.
                    வேலை அதிகமாகத்தான் இருக்கும்.
                    கொஞ்சம் வெள்ளென ஆரம்பித்து, வேலையை ஜரூராகப் பார்த்து,  நெருக்கிக் கொண்டுவந்துவிட்டால் மதியத்துக்கு மேல் நேரம் கிடைக்கும்.
                    அந்த நேரத்தில் கடலில் இறங்கி நீந்தலாம்; மூழ்கலாம்; மீன் பிடிக்கலாம்.
                    அந்தக் கடற்கரையைப் பற்றி சொல்ல மறந்துவிட்டேன்.
                    அது ஒரு Coral Island.
                    கோரல் என்பதை நாம் பவளச்செடி என்று கூறுவோம்.
                    நாம் மோதிரமாக அணிவது ஒரு வகைக் கோரல்.
                    அது ஒரு மாதிரியான சிவப்பாக இருக்கும்.
                    "அது சரி எல்லாமே சிவப்புத்தானே; அதென்ன ஒரு மாதிரியான சிவப்பு?" என்று யாராவது கேட்கலாம்.
                    கேட்கக்கூடியவர்கள்தாம் இருக்கிறார்களே? அதை நான் சொல்லித் தெரிவதில்லை.
   
                    இதற்கு உவமையியலைக் கொஞ்சம் பார்க்கவேண்டும்.

                    வித்ரும ஜபபடீகா.....
                    நவவித்ரும ந்யக்காரி ரதனச்சதா

குனித்த புருவமும் கொவ்வைச்
    செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த செஞ்சடையும் பவளம்போல்
    மேனியில் பால்வெண்ணீறும்....

                    வித்ரும என்பது பவளம். 'ப்ரவாள' என்றும் சொல்வார்கள்.
   
                    தமிழும் சமஸ்கிருதமும் கலந்து தமிழ் கிரந்தத்தில் எழுதப்படுவதை 'மணிப்ரவாளம்' என்று குறிப்பிடுவார்கள்.
                    அதனைத் தமிழில் 'மணிமிடை பவளம்' என்று சொல்வார்கள்.
                    அகநானூற்றை யாரோ அந்தக் காலத்தில் மூன்றாகப் பகுத்திருக்கிறார்கள். நித்திலக்கோவை, மணிமிடை பவளம், களிற்றியானை நிரை.
                    பவளச் செடிகளில் எல்லாமே விலை மிகுந்த பவளத்தைத் தரமாட்டா.
                    அதற்கு இத்தாலி, துருக்கி ஆகிய இடங்களுக்குப் போக வேண்டும். இல்லையேல் சீனா, பர்மாவுக்குப் போகவேண்டும்.
                    பெர்ஹெந்த்தியானில் உள்ளது சாதாரண பவளச் செடிகள்.
                    இந்தச் செடிகள் மிகுதியாக வளர்ந்து, அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் இறந்து, படுகைகளாகப் படிந்து, அவற்றின் மேல் கடல் நீரோட்டத்தால் மணல் படிந்து, அவற்றின் மீது தென்னை முளைத்து, செடிகொடிகள் படர்ந்து, அவற்றின் மக்கலிலிருந்து வளமான மண் தோன்றி தீவு உற்பத்தியாகும்.
                    கல்தோன்றி மண்தோன்றா என்று கோரல் தீவுகளுக்குச் சொல்லமுடியாது.
                    இவை சில ஆயிரம் ஆண்டுகளில் தோன்றிவிடும். மூத்த குடிகள் அப்போதெல்லாம் இருந்திருக்கத்தான் செய்வார்கள்.
                    ஆகவே அங்கு மக்கள் குடியேறிவிடுவார்கள்.
                    மேலே சொன்ன அந்த மக்கல் வேறு; இந்த மக்கள் வேறு.

                    தீவைச் சுற்றியிருக்கும் கடல் மணல் வெண்மையாக முறுமொறுவென்று இருக்கும்.
                    நொறுங்கி மணலாகிப்போன பவளச்செடிகளால் அப்படி ஏற்படுகிறது.
                    கடல் நீர் மிகவும் தெளிவாக இருக்கும்.
                    தெளிவான நீல நிறம்.
                    அடியில் தரை தெரியும் - நீலம் படர்ந்த வெண்மையாக.    
                    உடைந்துபோன பவளச்செடிகள்; கொத்துக் கொத்தாக உயிருடன் உள்ள பவளச்செடிகள்; செத்துப்போன செடிகளின் கூட்டால் ஏற்பட்ட பவளப் பாறைகள்.....
                    அந்த தெளிந்த நீரில் விதம் விதமான மீன்கள் நீந்தித் திரியும்.
                    எல்லாம் Tropical Fish எனப்படும் வகையைச் சேர்ந்தவை
                    Scuba Diving, Snorkel Diving என்ற கடலாடல் அதிகம் நடக்கும்.
                    என்னிடம் ஸ்நார்க்கலெல்லாம் இல்லை.
                    பேசாமல் மூச்சைப் பிடித்துக்கொண்டு கடலுக்குள் மூழ்கி மீன்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு பவளச்செடிகளை எடுத்துக்கொண்டிருந்தேன்.
                    அவற்றை எடுப்பது சுலமல்ல.
                    சுலபமாகத் தோன்றும்.
                    ஆனால் உயிருள்ள பவளச்செடிகூட மேலே போர்த்த சுண்ணாம்புக் கூட்டால் ஆனதாக இருக்கும். உடைத்துதான் அந்தச் செடியை எடுக்கமுடியும்.
                    கிடைத்தது லாபம் என்று எடுக்கமுடிந்தவற்றை மட்டும்  எடுத்தேன்.
                    முப்பதாண்டுகள் கழித்து இன்னும் இரண்டு செடிகள் வீட்டில் இருக்கின்றன.   மற்றவற்றை அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டேன்.
                    இவ்வாறு மூன்று நான்கு தடவைகள் கடலாடல். போதாததற்கு ஸாம்ப்பான் என்னும் சிறிய ஆழமில்லாப் படகை எடுத்துத் துடுப்புப் போட்டுக் கொண்டு கடலுக்குச் செல்வது.
                    இப்படியாக ஓய்வு நேரம் சென்றது.......

                    நான் தங்கியிருந்த ஷாலே விடுதி தனியானது. அதற்கு அடுத்த விடுதியில் ஒரு மலாய்க்காரர் இருந்தார்.
                    அடிக்கடி கடற்கரைக்குப் போய் ஸ்நார்க்கெல் மாட்டிக் கொண்டு கடலுக்குள் மூழ்கிவருவார்.
                    மிக அழகான அரிய சங்குகள், அரிய பவளச் செடிகள் ஆகியவற்றைக் கொண்டுவருவார். கையில் ஒரு மெல்லிய கூர்மையான வலுவான ஈட்டி இருக்கும்.
                    அதைத் தொடவிட மாட்டார்.
                    ஈட்டியின் தலையின் ஓரங்கள் மிகவும் பதமாக இருக்கும். ரம்பமும் அரமும் கலந்து செய்ததுபோல் பொடிப் பொடிப் பற்கள் அதற்கு உண்டு.
                    லேசாகத் தடவினாலும் அறுத்துவிடும்.

                    "அதைத் தொடக்கூடாது. ஏனென்றால் அதில் நெர்வ் பாய்ஸன் (நரம்பு மண்டலத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் விஷம்) தடவப்பட்டிருக்கிறது", என்றார்.

                    சங்குகளைவிட அவர் அதிகமாகப் பிடித்தவை விதம் விதமான Tropical Fish
மீன்களைத்தாம்.
                    அவற்றை விசேஷப் பாலிதீன் பைகளில் உள்ள கடல் நீரில் போட்டு, ஆக்ஸிஜன் வாயுவை நிரப்பி, காற்றுப் புகாவண்ணம் கட்டிவிடுவார்.
                    இவற்றை வேகப் படகுகள் மூலம் குவாலத்ரெங்காணுவுக்கு அனுப்பி, அங்கிருந்து அந்த பிரபல ·போக்கர் விமானத்தில் குவாலலும்ப்பூருக்கு அனுப்பி வைப்பார்.
                    நல்ல விலைக்குப் போகுமாம்.
                    நம்பினேன்.
                    ஏனெனில் தங்கத்தில் வைரம் பதித்த பதினையாயிரம் ரீங்கிட் கைக் கெடிகாரம் கட்டியிருந்தார். அவருக்குச் சொந்தமான ·பைபர்க்லாஸ் வேகப் படகு, யா·க்ட் எனப்படும் உல்லாசச் சிறுகப்பல் ஆகியவை தீவுக்கு அருகில் நின்றிருந்தன.
                    "பைகளில் இருக்கும் மீன்களுக்கு மூச்சு முட்டாதா?". சும்மா கேட்டுவைத்தேன்.
                    "இதில் இருக்கும் ஆக்ஸிஜன் மூன்று நாட்களுக்குப் போதும்".
                    "சாப்பாட்டுக்கு என்ன செய்யும். பசியால் ஒன்றை ஒன்று சாப்பிட்டுவிடாதா?"
                    "உணவை முதலிலேயே போட்டுவிடுகிறேன்".
                    மேலும் தொடர்ந்தார்.
                    "இந்த மீன்களை மட்டும் அனுப்பிப் பிரயோசனமில்லை. அவற்றை எந்த இடத்தில் பிடித்தேனோ, அதே இடத்தில், அதே ஆழத்திலிருந்து கடல்நீரை விசேஷ காண்ட்டேய்னர்களில் நிரப்பி எடுத்துவருவேன்".
                    "மீனைவிட இந்த கடல் நீரில்தான் அதிக லாபமிருக்கிறது. ஏராளமான கடல்நீர் கேனிஸ்டர்கள் விற்கின்றன. சப்லை செய்வது சிரமமாக இருக்கிறது. மீன் வளர்ப்பவர்கள் வாங்குகிறார்கள்".
                    அந்த ஈட்டியைச் சற்று விலகி நின்று பார்த்தேன்.
                    "அது என்ன ஸ்டீலா?", என்று கேட்டேன்.
                    "அது செயற்கையான சங்கதியில்லை. அது ஒரு வகை மீனின் கொம்பு."
                    இப்போதுதான் கொஞ்சம் சிரமப்பட்டது.
                    நரிக்கொம்பு, குதிரைக்கொம்பு என்று கேள்விப் பட்டிருக்கிறேன். மிகவும் அரிதான விஷயங்கள்.
                    மீன் கொம்பு?
                    இங்கேதான் உதைத்தது.

                    "Sword Fish என்று கேள்விப்பட்டதில்லையா? அதன் மூக்கிலிருந்து கூர்மையாக நீட்டிக்கொண்டிருக்கும். அதைத்தான் நீண்ட கைப்பிடியில் பொருத்தி, பயன் படுத்துகிறேன்".
                    இதுவரைக்கும் பொறுமையுடன் படித்த ஆத்மாக்களே - பார்த்துக்கொள்ளுங்கள் ஸார்ட்மீனை.





                    வேறொரு வகையான ஸார்ட்மீனின் கொம்பை நான் சிவகங்கை மாவட்டத்தின் தொண்டி நகரின் கடற்கரையருகே இருக்கும் இடைக்காலப் பாண்டியர்கள் கோயிலில் வைக்கப் பட்டிருப்பதைப் பார்த்திருகிறேன்.
                    சும்மாவே அந்தக் கொம்பு பாய்ந்ததென்றால் அதில் உள்ள இயற்கையான விஷம் கொன்றுவிடும்.
                    இந்த நிலையில் இந்த ஆசாமி நியூரோப் பாய்ஸனை வேறு தடவி வைத்திருக்கிறான்!
                    ரொம்பவும் அதிசயமான ஆள்தான்.
                    அக்காலத்தில் மலேசியாவில் பிரபலமாக இருந்த ஓர் இசைக் கலைஞியின் காதலராகவும் இருந்தார்.
                    அந்த நியூரோப்பாய்ஸன் ஈட்டியைக் காட்டி, "அதை நான் கடலுக்குச் செல்லும்போது கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. இது இல்லாமல் கடலுக்குள் இறங்குவதில்லை."
                    மௌனம்.
                    "இந்தத் தீவின் ஒரு பக்கத்தில் பாராக்கூடா இருக்கிறது".
                    பாராக்கூடா என்பது தலையெல்லாம் வாய்; வாயெல்லாம் பல். அதுவும் மிகவும் கூர்மையான பல். பெரிய மீன்.

                    பாராக்கூடாவை காணவும்.




                    எந்த இடம் என்று சொன்னார்.
                    உள்ளே வாங்கிய மூச்சை வெளியே விடமுடியவில்லை.
                    அவர் சொன்ன இடத்தில்தான் நான் கடந்த இரண்டு மூன்று நாட்களாக நீந்திக்கொண்டும் மூழ்கிப்பார்த்துக் கொண்டும் இருந்தேன்.
                    அதன் பின்னர் ஒரு நாள்தான் அங்கு இருந்தோம்.
                    "பாஸ், கீத்தோ பெலாஹ்", என்று சொல்லியவாறு எங்கள் டீம் புறப்பட்டு விட்டது.
                    ஆனால் அங்கு இருந்த மிச்ச நாட்களில் கடல் பக்கம் போகவேயில்லை.
                    கனவில் பாராக்கூடா வந்தது.
                    கரைக்கு வந்து வீடு சேர்ந்தபிறகும் பாராக்கூடா மனதில் சுழன்று சுழன்று நீச்சலடித்துக் கொண்டிருந்தது.
                    அதன்பின், சில மாதங்களில் அரசினர் ஸ்காலர்ஷிப் கிடைத்து மலாயாப் பல்கலைக்கழகத்தில் பப்லிக் ஹெல்த் மாஸ்டர்ஸ் செய்யச் சென்றுவிட்டேன்.
                    பின்னர் எங்கெங்கோ மாற்றலாகிச் சென்றுவிட்டேன்.
                    பல ஆண்டுகள் கழித்து, ஒருநாள் நான் வைத்திருக்கும் கோரல் செடிகளை எடுத்துப் பார்க்கும்போது மின்னல் வெட்டிய மாதிரி ஓர் எண்ணக்கோர்வை மனதை ஊடறுத்துச் சென்றது.
                    நான் இருந்தவரைக்கும் அல்லது அதற்கு முன்னும் யாரும் பாராக்கூடாவால் தாக்கப்பட்டதாக எந்தச் செய்தியுமே கிடையாது. அப்படி இருந்திருந்தால் எங்களுத்தான் விஷயம் தெரிந்திருக்கும். யாரும் கடலில் காணாமற் போனதாகவும் தகவல் இல்லை. கடற்கொள்ளைக்காரர்களிடம் மாட்டியவர்கள், கடலில் மூழ்கினவர்கள் பற்றிய தகவல்கள்தாம் வந்தன.
                    பூலாவ் பெர்ஹெந்த்தியானுக்குச் செல்வதற்கு வாய்ப்புக் கிடைத்தும் அந்த அழகிய கடலில் கடலாடுவதை நிறுத்திக்கொண்டு புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்.
                    காரணம்?
                    இல்லாததொரு மீன்.
                    அதைப் பற்றிய பயம்.
                    அந்த பாராக்கூடா கடலில் இல்லை.
                    என் மனதில்தான் இருந்தது.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU