FUNNY NAMES
வேடிக்கையான பெயர்கள்
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
மலேசியா



                மலேசியாவில் சில பெயர்களும் அவற்றின் உச்சரிப்பும் சில பெயர்களை உச்சரிக்கும்விதமும் வேடிக்கையாக இருக்கும்.

                கோலாலும்பூரில் புக்கிட் பிந்த்தாங் என்னும் இடம் இருக்கிறது. அங்கு ஒரு தனியார் மருத்துவமனையின் பெயர்ப்பலகை எப்போதுமே கவனத்தை ஈர்க்கும்.
            "Chin Ear Nose Throat Clinc" என்று எழுதியிருப்பதைக் காணலாம்.
                "யென்னடாயிது? தொண்டை,காது,மூக்கு வைத்தியத்தைத்தான் ENT என்று கேள்விப்பட்டிருக்கிறோம். தாடைக்குமா வைத்தியம்? தாடையில் அப்படி என்னதான் ஸ்பெஷலிஸ்ட் வைத்தியம் பண்ண வேண்டியிருக்கும்? ஒருவேளை தாடையில் ப்லாஸ்டிக் சர்ஜரி செய்கிறாரோ?" என்றெல்லாம் குழம்பவைக்கும்.
                ஒன்றுமில்லை. அந்த டாக்டரின் பெயர் Chin Boon Kheng. Chin என்று சீன வழக்கப்படி தன்னுடைய surname-ஐ வைத்து Chinஉக்குச் சொந்தமான Ear Nose
Throat Clinic என்று எழுதிவைத்திருக்கிறார்.
   
                கோத்தா பாரு என்னும் ஊரில் நான் இருக்கும்போது அங்கிருந்த இளைஞர் இயக்கத்தின் தலைவர் ஒருவர், "நான் எப்போதும் மலேசியா டெய்லரிடம் மட்டுமே தைத்துக்கொள்வது. ஏனெனில் அவன்தான் பெயர்ப்பலகையில் தமிழில் எழுதியிருக்கிறான்". என்றார்.
                "அப்படியானால் நீங்கள் பக்கத்துக் கடையில் அல்லவா தைக்கவேண்டும்?, என்றேன்.
                "ஏன்?" என்று கேட்டார்.
                அந்த சீனன்தான் அசல் தமிழிலேயே பெயர் வைத்திருக்கிறான்" என்றேன்.
                "அப்படியா? இது நாள்வரை தெரியாதே? அது யாரவன்?" என்று கேட்டார்.
                "Poh Wah Tailors", என்று சிரிக்காமல் சொன்னேன்.

                ஒரு தமிழர். அவருக்கு தமிழ் சரளமாகப் பேசவராது. ஆனால் தமிழ் நன்றாகப் புரியும். ஒருநாள் வந்து,
                "I say, Doc! You should hear this. I heard a China man talk beautiful Tamil in the radio-lah. Really suprised-lah boss. How one Chinaman can talk so well? He was talking about  Thirukural, you know-ah, boss?"
                எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. செக்நாட்டினர், ·பின்லாந்துக்காரர், பிரெஞ்சுக்காரர்கள், அமெரிக்கர்களாக உள்ள சில தமிழாய்வாளர்கள் தமிழ் பேசுவதை அறிந்திருக்கிறேன். அவர்களுக்கெல்லாம் திருக்குறளெல்லாம் தெரியும். ஆனால் சீனர் தமிழில் சரளமாக...... அதுவும் திருக்குறளைப் பற்றி ரேடியோவில் பேசுவதாவது?
                ஆகவே கேட்டேன், "Really-ah? Never heard about  Chinaman talking Tamil like that! Do you remember his name?"
                "Yah-lah boss. Sure. His name was Kee Aah Pey or something like that."
                "அடப் பாவி. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதத்தையே சீனராக்கிவிட்டாயே!" என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.
                பிறகு சமாளித்துக் கொண்டு, "Oh! He is a Tamil alright. His name is Visvanathan. His initials are K.A.P. In Tamil they become Kee Aa Pey. He is always addressed by his initials only. And that is out of great respect", என்றேன்.
            "Oh! Yah-kah. No wonder-lah! How come China man have name like Kee Aah Pey? It might mean some thing bad".
                "Yup. Sure the Chinese will never give that type of name. Because, in Chinese, it would mean, "Old devil" or "Devilish old man".
   
                கிளந்தான் என்னும் மாநிலத்தின் மலாய்க்காரர்கள் பேசுவது மிகவும் வித்தியாசமாகயிருக்கும். அவர்கள் பெயர்களைச் சுருக்கிவிடுவார்கள்.
                ஒருமுறை ஒரு நர்ஸ் பழங்கள் வாங்கிவைத்திருந்தாள். மருத்துவமனை ஊழியர்கள் சிலருக்குத் தோப்பு துரவு இருக்கும். அங்கிருந்து பழங்கள் கொண்டுவந்து மற்ற ஊழியர்களிடம் விற்பார்கள்.
                நான் அவளிடம்,"Oi, How much you buy fruit?" என்று கேட்டேன்.
                "Wan dollah" என்றாள்.
                "Aiyaaah! I din ask who sell the fruit. How much?"
                "Yah-lah. I tol you, wan dollah."
                "No. The price. Harga. Harga." என்றேன்.
               "Yaah-laaah! Its price, wan dollah. So' riyal."
                அப்போதுதான் தெரிந்தது One Dollar என்பதைத்தான் அவள் அவ்வளவு அழகாக "wan dollah" என்று உச்சரித்திருக்கிறாள்.
                Abdullah என்னும் பெயரைச் சுருக்கி Dollah என்பார்கள். Wan Dollah என்பது ஆசாமியின் பெயர். அந்த வட்டாரத்தில் Wan என்பது அதிகமாக வழங்கும் பெயர். Riyal என்பது கிளந்தானில் ரீங்கிட் பணத்தைக் குறிக்கும். Satu என்பதை so' என்றே சொல்வார்கள்.
                கிளந்தானின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருவர் மலேசியாவின் முன்னாள் நிதிஅமைச்சராக இருந்தார். அவருடைய பெயர் Tengku Razali Hamzah என்பது. அதனைச் சுருக்கிச் செல்லமாகக் "Ku Li" என்று அழைப்பார்கள். Tengku Razali என்னும் பெயர்களின் கடை யெழுத்துக்களை மட்டும் சொல்வார்கள்.
                கிளந்தான் தமிழர்கள் அந்தப் பெயரை அப்படிச் சொல்ல கூச்சப்படுவோம்.
                ஏனெனில் தமிழில் "கூ லி" என்றால் வேறு அர்த்தமாகி விடுகிறது அல்லவா?
                அவராவது பரவாயில்லை. அவருடைய பங்காளி ஒருவர் இருக்கிறார்.
                பெயர் Tengku Radhi.
                அந்தப் பெயரைமட்டும் தமிழர்களாகிய நாங்கள் மறந்தும் சுருக்கிச் சொல்வதில்லை.

அன்புடன்

ஜெயபாரதி


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU