கண்டசுத்தி -#2

காளிதாசனின்

டண்டண்ட டண்டம் டட டண்ட டம்டம்

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி


    ஓசையை வைத்தோ, வேறு அடையாளங்கள் கொண்டோ, மனக்குறிப்பை வைத்தோ, பார்க்காமலேயே பாடுவதை 'கண்டசுத்தி' என்பார்கள். "பெண்கள் கூந்தலில்  இயற்கையாகவே  நறுமணம்  இருக்கிறதா?" என்று செண்பக பாண்டியமன்னனின் மனதில் தோன்றிய சந்தேகத்துக்கு ஏற்ற பதிலாக ஆலவாய் இறையனார்,  
'கொங்குதேர் வாழ்க்கை, அஞ்சிறைத்தும்பி' என்னும் பாடல் பாடியதும் கண்டசுத்திதான். கம்பன், காளிதாசன் வரலாற்றில் சில இடங்களில் இம்மாதிரிச் சம்பவங்கள் வரும்.

    போஜமன்னன் ஒருநாள் குளிப்பதற்காக ஸ்நான கட்டம் என்னும் குளியற்குளத்துக்குச் சென்றான். பெண்கள் அந்தக் குளத்திலிருந்து பொற்குடங்களில் நீர் எடுத்து வந்து, குளத்தருகே இருந்த அலங்காரத் தொட்டியில் ஊற்றுவார்கள். அதில்தான் ஜலக்கிரீடை என்னும் குளியல் வளையாட்டு நடைபெறும். அக்காலத்தில் அரசர்களுக்குக் குள்யல் என்பது ஒரு சடங்காகவும் விளையாட்டாகவும் கேளிக்கையாகவும்
இருந்திருக்கிறது.
    அப்படித்தான் ஒரு பெண் அந்த நாளன்று குளத்தில் நீர் எடுத்த பின்னர் இடையில் பொற்குடத்தை வைத்துக்கொண்டு அந்தக்குளத்தின் படிகளில் ஏறி  வந்து கொணிருந்தாள். ஏதோ வேற்று நினைவலைகள்  அவளுடைய மனதுபூராவையும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன.
    ஆகவே அவள் தன் எதிர்புறத்தைக் கவனியாமல் காலடியில் தெரிந்த படிகளை மட்டும் கீழ்நோக்கிப் பார்த்தவாறு சிந்தனையாக நடந்துவந்தாள்.
    படிக்கட்டின் உச்சிக்கு வருவதற்கும் அங்கு போஜமன்னன் வருவதற்கும் சரியாக இருந்தது. திடீரென்று தலை நிமிர்ந்த அந்தப்பெண், தன் முன் போஜமன்னனைக் கண்டாள்.
    அவ்வளவுதான். வாய் திறந்து ஓசையில்லாக் கூவலொன்றை விட்டு விட்டுத் தன் ¨காநழுவவிட்டாள்.
    அவள் இடையில் இருந்த பொற்குடம் கீழே விழுந்து படிகளில் உருண்டு சென்றது.
    அப்போது அது  ஓசை எழுப்பியவண்ணம் உருண்டுசென்றது.

    அந்த ஓசை, போஜமன்னனின் மனதில் பதிந்துகொண்டது.

    அரசவைக்கு வந்ததும் அங்கிருந்தவர்களைப் பார்த்து அந்த குடம் உருண்டு சென்ற ஓலித் தொகுப்பைச் சொன்னான்.

    டண்டண்ட டண்டம் டடடண்ட டம்டம்

    இதுதான் அந்த ஒலிக்குறிப்பு.

    அங்கிருந்த மகாகவி காளிதாசன் எழுந்து ஒரு சுலோகத்தைச் சொன்னான்:

ராஜாபிஷேகே - மத விஹ்வலாயா
ஹஸ்த்தா ச்யுதோ - ஹேமகடோ யுவத்யா
ஸோபான மார்கேஷ¤ - கரோதி ஸப்தம்
டண்டண்ட டண்டம் டடடண்ட டம்டம்

              சிறிய hyphen சந்தத்துக்காக நான் கொடுத்திருக்கிறேன். அவை அங்கு இல்லை. அந்த இடத்தில் நிறுத்திப்படித்தால் அந்தக் கவிதையின் அழகு வெளிப்படும்.
              
           அரசனுடைய குளியலுக்காக(ராஜாபிஷேகம்) தண்ணீர் எடுத்துவர அழகிய இளம்பெண்(யுவதி) பொற்குடத்துடன்(ஹேமகடம்) குளக்கரைக்குச் செல்கிறாள். எதிர்த்தாற்போல போஜமன்னனே வந்துவிடுகிறான். அதிர்ச்சியில் குடத்தைக் கைநழுவிடுகிறாள் (ஹஸ்த்தாச்யுதோ). அது படிக்கட்டுகளில் உருண்டு செல்கிறது; அந்த வழியில் அது அவ்வாறு செல்லும்போது(ஸோபான மார்கேஷ¤) ஓசையை செய்கிற (கரோதி ஸப்தம்) சப்தம். 
            அதுதான் "டண்டண்ட டண்டம் டட டண்ட டம்டம்
்!"

        காளிதாசன் பாடிய அந்தப் பாடலில் அந்தச்சம்பவம் அப்படியே அடங்கிவிட்டது.
             
             
    நிகழ்ச்சியைப்பற்றி கோடி கூட காட்டாமல், படிகளில் பொற்குடம் உருண்டு செல்லும் ஓசையை மட்டுமேதான் போஜமன்னன் வெளியிட்டான். ஆனால் அந்த நிகழ்ச்சி முழுவதையுமே காளிதாசன் வர்ணித்துவிட்டான் அல்லவா!
  
GO TO குலுகுக் குலுகுக் குலு

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU