கோச்சடைத் தண்ணி
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
கல்லூரி வாழ்க்கை பொதுவாகவே கலர்·புல்லாக
இருக்கும் என்று சொல்வார்கள். ரொம்பவும் சொங்கியாக இருந்தவர்கள்கூட கலர்·புல்
என்று பீற்றிக்கொள்வதைக் கேட்டிருக்கிறோம். சிலருக்கு ரொம்ப ரொம்ப
கலர்·புல்லாக இருந்திருக்கும். கல்லூரி அரசியல், பல்துறைக்கலைகள் என்று
பலமாதிரி அனுபவங்கள் ஜேய்பிக்கும் ஏற்பட்டிருக்கின்றன.
அவற்றில் இது ஒன்று.
இதற்கெல்லாம் ரொம்பவும் கிருத்திருவமும் குசும்பும் வேண்டும்.
அது இப்போதும் இருக்கிறது என்பதைத்தான் நீங்களெல்லாருமே நன்றாக அறிவீர்களே.
மதுரையைச்சுற்றி பல சிறு கிராமங்கள் அந்தக்காலத்தில் இருந்தன.
கோச்சடை, மதிச்சியம், கோ¡¢ப்பாளையம், நா¢மேடு, தல்லாகுளம் போன்றவை.
பின்னால் அவை மதுரையின் புறநகர்ப்
பகுதிகளாகின. இப்போது இவை மதுரை city properஉக்குள்
ஐக்கியமாகிவிட்டன.
கோச்சடை என்பது அப்படிப்பட்ட பகுதிகளில் ஒன்று. பாண்டியர்களுக்குச்
சடையவர்மன், மாறவர்மன் என்று பட்டங்கள் மாறி மாறி வரும். இடைக்காலப் பாண்டியர்களில்
கோச்சடையவர்மன் ரணதீரன் என்றொரு பாண்டியர் இருந்தார். அவர் பல்லவர்களுக்கு எதிரி.
;சிவகாமியின் சபதம் புகழ் புலிகேசியின் கூட்டாளி. அவருடைய பெயரால்
ஏற்பட்ட சிற்றூர் ஒன்று வைகைக்கரை ஓரத்தில் இருந்தது (வடிவேலுவைப் போல).
அதுதான் கோச்சடை.
மதுரையின் தண்ணீர் வினியோகம் வைகையிலிருந்துதான். அக்காலத்தில்
கோச்சடையில்தான் குடிதண்ணீர்ச் சுத்திகாரிப்பு
நிலையம் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மதுரையில் இருந்திருந்தால் கட்டாயம்
கோச்சடையிலிருந்து வரும் வடிகட்டிய தண்ணீரைக் குடித்தே ஆகியிருக்க
வேண்டும். அதனால்தான் கோச்சடைத் தண்ணியைப் பற்றிச் சிறப்பித்துச் சொன்னேன்.
கோச்சடையை நான் மறக்காததன் காரணம் இன்னும் ஒன்று உண்டு.
என்ன? அதையும் சொல்லவேண்டுமா?
இது வேறு கதை.
ஒரு முறை, Social and Preventive Medicine
படிக்கும்போது, terminal exam-இல் ஒரு கேள்வி; தண்ணீர்
சுத்திகாரிப்பு பற்றி. அப்போதெல்லாம் கல்லூரி
மாணவர்களிடையே சிறந்த பேச்சாளனாகவும் musician
ஆகவும் விளங்கியதால் கல்லூரியில் பல டிப்பார்ட்மெண்ட்களுக்குச்
செல்லப்பிள்ளை. மாணவர் தலைவனாக ஆவதற்கு அதெல்லாம் பெரிதும் உதவியது. அதெல்லாம்
இன்னொரு சுவாரஸ்யமான கதை.
கொனஷ்டையெல்லாம் அப்போது ரொம்பவும் இருந்தது.
பரீட்சைப் பேப்பரில் கோச்சடைத்தண்ணீர் filtration
plantபற்றியும் மதுரை water-supply பற்றியும்
எழுதிவிட்டேன்.
அடுத்து, கோச்சடையின் பெயர்க் காரணத்தையும் எழுதினேன்; அப்படியே
கோச்சடைய ரணதீரன் history.
பிறகு பார்த்தேன். இன்னும் அரைமணி நேரம் இருந்தது. வைகையைப்
பற்றி எழுதிவிட்டேன்.
மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து ஆரம்பித்து,
வைகை Dam இல் தயங்கி, "புலவர் நாவில் உறையும் பொற்கொடி;
வையை என்னும் பொய்யாகுலக்கொடி", ஓடி வந்து மதுரையின் வடகரையைத் தொட்டு, தன்னுடைய
சிறுகால்களால் மதுரையை வலம்வந்து, தொடர்ந்து சென்று ராமநாதபுரம் பொிய
கண்மாயில் சேர்வது வரை எழுதியாயிற்று.
அப்போதும் கையரிப்பு
அடங்கவில்லை. அதற்குமேல் திருவிளையாடல் புராணத்திலிருந்து மீனாட்சி கல்யாணத்தையும்,
குண்டோதரனுக்குப் பசி தீர்த்ததும், தாகம்
அடங்க வைகையை வரவழைத்தையும், அப்போது மீனாட்சி குண்டோதரனிடம் "கைவை" என்று
சொன்னதை மாற்றி அழகிய சொக்கப் பெருமான் "வைகை" என்று சொல்லி நீர் பெருக்கெடுக்க
வைத்ததையும் சொல்லியபின் 'வைகை'யென்னும் பெயர்க்காரணத்தையும் விரிய உரைத்தேன்.
எல்லாமே ஆங்கிலத்தில்தான். அது பரீட்சை answer
paper அல்லவா!
சில நாட்கள் கழித்து இந்தக் கதை எங்கெல்லாமோ
சுற்றிவிட்டு கடைசியாக வேறு
subject professor ஒருவர் தற்செயலாக எங்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது,
எங்களிடம் வந்தது. கல்லூரியின் ஆண்டிதழ் கமிட்டியில் இருந்தேன்.
கமிட்டியின் தலைவர் அப்துல் ஹக் சாயிபுடன் சென்றிருந்தேன். அந்த துணைப ்பேராசிரியர்
இதழின் ஆலோசகராக இருந்தவர்.
அப்போது சொன்னார், "அத ஏன் கேக்குறேள். இப்போ என்னவெல்லாம்
answer
paper-லே எழுதறா தொ¢யுமோ? Water fitration plant
பத்தி எழுதரச்சே, வைகை எங்கேர்ந்து தோன்ரது, எங்கெல்லாம் சுத்தி வெளெச்சுண்டு
மதுரெ வர்ரது; கடேசீலெ கடலுக்குப் போகாம ஏரில
சங்கமமாயிட்ரது; இப்டியெல்லாம் எழுதரான்னா! அதுமட்டும் போராதுண்ணுட்டு அந்த குண்டோதரன்
கதெ இருக்கோன்னோ, அதயும் சேத்துவெச்சு எழுதிப்பிடரான்னா! தலை
நென்னா சுத்தரது போங்கோ!"
நான் கேட்டேன், "யாரு ஸார் இப்பிடியெல்லாம் எழுதுராங்க்ய?"
"யாரோ மலாயாக்காரான்னும் சொல்ரா. மலாயாக்காராள் சுத்த சோப்ளாங்கின்னா?
இப்படியெல்லாம் அவாளுக்கு எழுத வருமோன்னோ? அவா ஸிலபஸ்ல தமிழே கெடயாதுன்னா.
நாமதான் பாக்கறமே. அவாள்லாம் எங்க தமிழ்ல பேசறா. ஒத்தர்க்கொத்தர் இங்லீஸ்ல, இல்ல
அவா பாஷயில பேசறா.
அதுவும் புராணக்கதேல்லாம் அவாளுக்குத் தெர்யாதுன்னா. ராமநாதபுரத்தான்னும் சொல்றா.
ராமநாதபுரத்து ஆசாமின்னா அருவாத் தூக்கறவான்னுல்லெ நெனச்சேன்! இப்டியெல்லாம்
எழுதமுடியுமோன்னோ?"
அப்துல் ஹக்குக்கு அதற்கு மேல் பொறுக்கவில்லை.
"சார். நீங்க சொல்ற ஆள் இவர்தான்".
அந்தப் பேராசிரியர், "அ...அ...அ..." என்று அரற்றியபடி பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு
அசடு வழிந்தது இருக்கிறதே.....!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU