கொட்டிக்கிழங்கோ கிழங்கு!
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
கங்கைகொண்டசோழீஸ்வரம் சரஸ்வதி
ஏற்கனவே 'நானும் அறியேன்; அவளும் பொய் சொல்லாள்' என்ற தலைப்பில்
கம்பன் 'துமி'
என்று சொல்லி மாட்டிக்கொண்டது, அபிராமி பட்டர் அமாவாசையைப் 'பௌர்ணமி' என்று
சொன்னது ஆகியவற்¨றைப் பற்றி சொன்னேன்.
கம்பனை அவ்வப்போது சரஸ்வதி தேவி வந்து Rescue செய்வது ஒரு மாமூலான விஷயம்.
கம்பன் மகன் அம்பிகாபதி ரகசியமாக சோழன் மகள் அமராவதியைக்
காதலித்தார்.
அப்போதெல்லாம் புலவர்கள் மன்னனிடம் செல்வாக்கோடு இருந்தார்கள்.
அரசனுடைய விருதுப்பொருள்களில் சாமரம், தண்டு, சங்கு, எக்காளம்,
அரசவாள், கொடி
போன்ற பதினெட்டுப் பொருள்கள் இருக்கும். அரசனுடைய மெய்க்காவல் படையினரில் பொறுக்கியெடுக்கப்பட்ட
அணுக்க வீரர்கள்தாம் அவற்றை ஏந்தி மன்னனுக்கு முன்னால் செல்ல
முடியும். தெரிஞ்ச கைக்கோளர், தென்னவன் ஆபத்துதவிகள், வேளக்காரப்படையினர்
முதலிய பிரிவினரிலிருந்து அந்த Special Squad தெரிந்தெடுக்கப்படும். மன்னனின்
வாள் தாங்கி என்னும் பதவி
பரம்பரைப் பதவி. சிற்றரசர்களின் மகன்கள், முக்கிய அதிகாரிகளின் மகன்கள் போன்றோர்
இம்மாதிரியான பதவியில் இருப்பார்கள். ராமருடைய வாள்தாங்கியாக
வாலியின் மகன் அங்கதன் இருந்தான். அடைப்பம்
என்பது அப்படிப்பட்ட கௌரமிக்க அணுக்கமான உயர் பதவி. மேலைநாட்டினர் இவர்களை King's
Pages
என்று குறிப்பிட்டார்கள்.
அரசனுடைய பொருள்களில் முக்கியமானது அவனுடைய முரசு. அதற்கு
விசேஷப் பூஜை
யெல்லாம் உண்டு. அதனை ஒரு தனி ஆசனத்தில் வைத்திருப்பார்கள். முரசுகட்டில் என்று
அதற்குப்
பெயர்.
அதில் ஒரு புலவர் அசந்துபோய்ப் படுத்து தூங்கிவிட்டார்.
அதைக் கண்ட மன்னன் அவரை எழுப்பாமல் அவருக்கு வியர்க்காமல்
இருக்கும் பொருட்டு
சாமரத்தால் விசிறிக்கொண்டிருந்தானாம். வேறு ஆள் என்றால் கழுவில் ஏற்றிவிடுவார்கள்.
சோழனுடைய அரண்மனையில் கம்பருக்கு அணுக்க உரிமைகள் இருந்தன.
ஒருமுறை ஒரே பந்தியில் அமர்ந்து சாப்பிட கம்பர், அம்பிகாபதி,
சோழர், ஒட்டக்கூத்தர்
ஆகியோர் ஆரம்பித்தனர். அப்போது அமராவதி எங்கிருந்தோ வந்தாள். அவளும் ஒரு
வட்டிலைச் சுமந்துகொண்டு ஏதோ பலகாரத்தைப் பரிமாற வந்தாள்.
அதைக் கண்ட அம்பிகாபதி தம்மை மறந்து,
இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய.........
என்று பாட ஆரம்பித்தார்.
சோழனுக்கு இதைக் கண்டு பொசு பொசுவென்று இருந்தது. இன்னும்
ஒரு விநாடிதான்.
கோபவெறி ஏற்பட்டிருக்கும். அதன் விளைவு விபரீதமாக இருந்திருக்கும்.
நிலைமையை உணர்ந்த கம்பர் உடனேயே இடைவெட்டிப் பாடினார்....
........................- கொட்டிக்
கிழங்கோ கிழங்கென்று கூவுவாள் தந்நாவில்
வழங்கோசை வையம்பெறும்.
அவர் பாடி முடிப்பதற்கு முன்னர் அவர்களுடைய போஜனசாலையின்
சாளரத்துக்கு வெளி
யிலிருந்து ஒங்கி ஒரு பெண் குரல் இனிமையாகக் கேட்டது..............
கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு!
கொட்டிக்கிழங்கோஓஓஓ...கிழங்கு!
கொட்டிக்கிழங்கோஓஓஓ...கிழங்கு!
விரைந்து சென்று வெளியில் எட்டிப்பார்த்தார் சோழர்.
அங்கு ஒரு பெண் வட்டிலைச் சுமந்துகொண்டு அதில் கோட்டிக்கிழங்குகளை
வைத்துக்
கொண்டு கூவி விற்றுக்கொண்டே வந்தாள்.
இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய - கொட்டிக்
கிழங்கோ கிழங்கென்று கூவுவாள் தந்நாவில்
வழங்கோசை வையம்பெறும்
கம்பன் கூறிய சொல்லை அவளே வந்து உண்மையாக்கி அவன் வாக்குக்கு
ஏற்றம் கொடுத்தாள்.
சாரஸ்வத்யம் உள்ளவர்கள் சொல்லும் சொல்லை தெய்வங்கள் காப்பாற்றி மெய்யாக்குவார்கள்.
அன்புடன்
ஜெயபாரதி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU