நாடி ஜோதிடம்
பகுதி 5

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee


                நம்முடைய சாஸ்திரங்கள் கூறியிருப்பதன் சுருக்கம் இதுதான்:
                உயிர்களின் பிறவிக்கு மூல காரணம் -பிராரத்தம், சஞ்சிதம் ஆகாமியம் என்னும் மூவகையான வினைகள்தாம். இவற்றின் விளைவாகவே பிறவியும் அப்பிறவியில் உள்ள விதியும் நிர்ணயிக்கப்படுகின்றன.

                இவையெல்லாம் ஒரு Grand Design, ஒரு Master Plan இன் உட்கூறுகளாக, ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையாக, பின்னிப் பிணைந்து விளங்கும்.

                ஒரு Master Plan, Grand Design என்று இருந்தால் ஒரு Executor, Orchestrator இருந்தாகவேண்டுமே?

                ஒளவையார் கூறுகிறார்:

"மேலைத் தவத்தளவேயாகுமாம்
தான் பெற்ற செல்வம்."

                முற்பிறவியில் செய்த தவமே இப்பிறவியில் அடையும் செல்வத்தை நிர்ணயிக்கிறதாம்.

                இன்னும் கூறுகிறார்:

எழுதியவாறே காண் இரங்கு மட நெஞ்சே!
கருதியவாறாகுமோ கருமம்? - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை!

                நினைத்ததெலாம் கொடுக்ககூடியது, தேவலோகத்துக் கற்பகத்தரு என்னும் மரம். அத்தகைய மரத்தை நாடி அதன் பழத்தை நினைப்பவர்க்கு அது காஞ்சிரங்காய் ஈந்ததானால் அது முற்பிறவியில்செய்த வினை என்கிறார்.
                காஞ்சிரங்காய் என்பது கசப்பும் விஷத்தன்மையும் கொண்டதொரு காய்.

                இந்த பிறவி என்பது முற்பிறவிகளில் சேர்த்துவைத்த வினைகளின் கூட்டு விளைவு என்றாகிறது.

                கேட்பவர் ஒளவையார்.
                ஆமோதிப்பவர் திருவள்ளுவர்.

'"ஆகூழால் தோன்றும் அசைவின்மை, கைப்பொருள்
போகூழால் தொன்று மடி"

                இந்த "ஆகூழ்", "போகூழ்" என்று வள்ளுவர் குறிப்பிடுவதெல்லாம் சென்ற பிறவிகளில் செய்த நல்வினை தீவினைகளின் விளைவாக ஏற்பட்ட விதிப்பயனைத்தான்.

"வகுத்தான் வகுத்தவகையல்லாற் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தலா¢து."

                இவ்வாறெல்லாம் விரிவாக "ஊழ்" என்னும்அதிகாரத்தில் கூறிவிட்டுப் பெருமூச்சுடன் இறுதியில் நம்மிடமே கேட்கிறார் வள்ளுவர்.

"ஊழிற் பெரு வலி யாவுள?"

                முற்பிறவியில் செய்த நல்வினைகள்தீவினைகளால் மட்டுமே இப்பிறப்பில் எல்லாமே அமையும் என்றால் "அது வேண்டும், இது வேண்டும்" என்று ஏன் தெய்வத்தைக் கேட்க வேண்டும்? யாகம் ஏன்? பூசை ஏன்? ஹோமம்ஏன்? கேட்டாலும் கிடைக்காது எனின் கேட்பதால் ஆவதுதான் என்ன, முயற்சி எவ்வளவு செய்தாலும்ஆகமாட்டாது என்றிருந்தக்கால்?

'ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித்
தாழாது உஞற்றுபவர்"

                நல்ல முயற்சியுடையோர் ஊழையும்கூடப் புறமுதுகிடச் செய்து விடுவார்கள் என்றும்,

"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருந்தக் கூலி தரும்.

என்றும் வள்ளுவர் கூறியிருப்பது?

                வினைகளையும், பிறவிகளைய்ம், விதியையும் modify செய்து கொள்ள முடியுமா?

The Grand DEsigner, the Master Planner, the CEO of the the universe in its
entirity is brought into the play.

                மீண்டும் சாஸ்திரங்களுக்கே செல்கிறேன்.
                விதியை மாற்ற வல்லவன் இறைவன். விதியின் எந்த அம்சங்களையெல்லாம் மாற்றவேண்டும் என்று நினைக்கிறானோ, அவற்றையெல்லாம் மாற்ற வல்லவன் இறைவன்.

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில் அவை ஒன்றுமில்லையே!
பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணி நின்றறுப்பது நம சிவாயவே!

                அப்பர் வாக்கு. விண்ணளவுக்கு அடுக்கிவைத்த விறகுக் குவியல் எ¡¢ந்து கிளப்பும்நெருப்பு; சிந்தித்துப் பார்த்துச்சொல்லும்போது அது ஒன்றுமே இல்லை. நாதனின் நாமம் தீவினைகளை அழித்துவிடும்.

                இறைவனாலும் மாற்றியமைக்க முடியாததுவிதி என்றால், அது இறைவனின் இறைத்தன்மையையே கேள்விக்கு¡¢யதாகச் செய்யும்.

                இறைவனாலும்கூட விதியை மாற்ற முடியாது என்னும்போது, நமது சமயத்தின் அஸ்திவாரமே ஆட்டங்கண்டுவிடும். பிரார்த்தனைகளுக்கு அங்கு இடமே கிடையாது.

                வழிபாட்டில் காம்ய வழிபாடு, நிஷ்காம்ய வழிபாடு என்று இரு வகையுண்டு.
                எதையேனும் வேண்டி ,பெறுதலுக்காகச்செய்யப்படுவதே காம்யம்.
                For the sake of God, செய்யப்படுவது நிஷ்காம்யம்.

                கலையாத கல்வியும், குறையாத வயதும்,கபடுவராத நட்பும், என்ற பாடலில்
அன்னை அபிராமியிடம் நீண்ட பட்டியலிட்டு பதினாறு பேறுகளையும் நிறையவே கேட்கிறார், அபிராமி பட்டர்.

                இப்பாடலின் முடிவில் அபிராமி தோன்றி,
            "மகனே, சுப்பிரமணிய பட்டா! எல்லாமே விதிப்படிதான் நடக்கும். ஆகவே நீ கேட்பது எதையுமே என்னால் தர இயலாது" என்று கூறினால், எப்படியிருக்கும்?

                முற்பிறப்பில் செய்த வினைப்பயனால்இப்பிறப்பில் எதுவுமே நடக்கும் என்பது ஒரு பொது விதி.

                விதி என்றிருந்தக்கால், விதி விலக்கும் இருக்கும் அல்லவா? விதியிலுருந்து விலகி நின்று                                விதிக்கெல்லாம்  விலக்கு வழங்க வல்லான் இறைவன்.

                கந்தர் அனுபூதியின் கடைசிப்பாடலில்,

கருவாய் உயிராய், கதியாய் விதியாய்,
குருவாய் வருவாய்; அருள்வாய் குகனே!

                கதி என்பது மாற்றப்பட முடியாத General Plan.
                விதி என்பது அதற்குள் உள்ள மாற்றக்கூடியஅம்சம்.

                விதியை, மதியால் modify பண்ண முடியும். விதியை மாற்றுமாறு இறைவனை இறைஞ்சுவதும் கூட மதியினால் ஆவதுதான்.

                ஒரு space vehicleலின் design, construction, launching, flightprogramme, முதலிய பல விஷயங்களை NASA நிர்ணயிக்கிறது. இதில் Houston சர்வ வல்லமை படைத்தாக இருக்கிறது.
                அந்த space vehicleலின் உள்ளே பயணிக்கும்astronauts அதற்கெல்லாம் கட்டுப்பட்டே இருக்கவேண்டியுள்ளது.

                ஆனாலும்கூட அந்த space vehicleலின் உள்ளே செய்யக்கூடிய பல கா¡¢யங்களில் அவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. அவர்கள் இஷ்டப்படி முன்பின்னாகவோ அல்லது அவர்களின் சக்திக்கு உட்பட்ட விதத்திலோ அவர்களின் activitiesஐ modify செய்து கொள்ளமுடியும்.

                ஏன்? ஏதாவது ஏடாகூடமாகச் செய்து அந்த mission ஐயே abort செய்ய வைக்கமுடியும். அல்லது self-destructive ஆக ஏதாவது செய்து கொள்ளலாம்....
                ஆயுள் முடியுமுன் தற்கொலை செய்து கொள்வது போல.

                Houston கையில் கதியும் விதியும் இருக்கிறது.

                Astronauts கையில் விதியை modify செய்துகொள்ளும் சக்தி இருக்கிறது.

                மனித ஜாதகத்தில், பிறக்கும்போது இருந்த லக்னம், கிரகங்களின் நிலை கதியைக் குறிக்கும்.

                தசாபுக்திகள் எனப்படுபவை, விதியைக் குறிக்கும்.

                சந்திரனை அடிப்படையாகக் கொண்டுள்ள"கோசாரம்" மதியைக் குறிக்கும்.

                ஒரு சிறிய கதை......

                எழு நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. மைசூர்ப்பகுதியில் ஓர் ஏழை.
                செல்வம் வேண்டி நீண்டகாலம் திருமகளை உபாசித்துவந்தான். லட்சுமியும் தோன்றினாள்.
                " உனக்கு செல்வம் இந்த ஜென்மத்தில் கொடுத்து வைக்கவில்லை." என்று கூறினாள். Undaunted, அந்த  ஏழை, உடனடியாக ஆபத் சன்னியாச முறையில் தன்னையே சன்னியாசியாக்கிக ்கொண்டான்.
                 "அம்மா! சன்னியாசம் என்பது மறுபிறவிபோன்றதே! ஆகவே இப்பொது எனக்கு செல்வம் வழங்க அட்டியன்றும் இல்லையே?" என்று லட்சுமியைக் கேட்டான்.
                லட்சுமியும் பொன்மழையாகக் கொட்டச் செய்தாள்.

                அதை அள்ளப் போனவனிடம் கேட்டாள்,
                " சன்னியாசிக்கு ஏனப்பா இவ்வளவு செல்வம்?"
                (வித்யாரண்யர் அந்த செல்வத்தையெல்லாம் என்ன செய்தார் என்பது வேறொரு கதை).

                மணி, மந்திர, ஒளஷதங்கள் முதலிய முறைகளில் விதியை ஓரளவிற்கு மாற்றியமைக்கலாம்.

                இவை அனைத்துமே மனித முயற்சிகள்.

                ஒரு limit டுக்குள் திருவினையாகும்.
                (மணி = ஜோதிடம், gemmology,etc.;
                மந்திரம் = யாகம், பரிகாரம், வழிபாடு,etc.;
                ஒளஷதம் = மருந்து, மூலிகை, மருத்துவ முறைகள்)

                அடுத்து.....
                Heisenberg, etc,.....

> எல்லா உயி¡¢னங்களின் வருங்காலமும் பிறக்கும் முன்பே நிர்ணயிக்கப் பட்டிருந்தால், வாழ்க்கையின் பொருள் என்ன?

          One of the Imponderables of the Universe.
                தான் சார்ந்திருக்கும் சமயத்திலேயே இதற்கு¡¢ய பதிலைத் தானே தேடிக் கொள்வதே சிறந்தது.

>8. தனி உரிமை (free choice) இல்லாத உயிர்கள் எவ்வாறு பிறப்பு/இறப்பு என்ற சுற்று வட்டத்தில் இருந்து தப்பிக்க முடியும்?

                அடுத்த பிறவி எப்படியிருக்கவேண்டும்என்பதில் உயிர்களுக்கு ஓரளவிற்கு நிணயிக்க latitude உண்டு. நல்வினைகளைச்செய்து அடுத்த பிறவியை நல்ல பிறவியாகவோ அல்லது நன்மைகள் நிறைந்த பிறவியாகவோ ஆக்கிக்கொள்ளலாமே? பிறவியே இல்லாமற்போவதற்கு இறைவனிடம் பரிபூரண சரணாகதியையும், யோகமுறைகளினால் நிற்விகற்ப சமாதியையும் சாஸ்திரங்கள் கூறியுள்ளன.

>9. ஒரு மூலக்கூற்றின் (molecule) மின்னணுவின்(electron) இருப்பிடத்தைக் கூடத் திட்ட வட்டமாக நிர்ணயிக்க முடியாது என்று Heisenberg Uncertainty principle கூறும் போது, மானிடர் யாவரின் பிற்காலத்தைத் திட்ட வட்டமாகச் சொல்ல முடியும் என்பதற்கு என்ன நிறூபணம் காட்ட முடியும்?

                நாடி ஜோதிடத்தில் உள்ள paradox என்னவென்றால்,மிகப் பிற்காலத்தில் நடக்கப்போவதில் ஒரு பகுதியைச் சொல்லியிருப்பார்கள். அந்தப் பகுதியில் அந்த ஜாதகர் வந்து நாடியைப் பார்க்கும்வரையில் சொல்லப்பட்டிருக்கும்.
                அதிலிருந்து ஏற்படக்கூடிய future காணப்படமாட்டாது. அப்படியே சொல்லப்பட்டிருந்தாலும் அந்த பலன்கள் சரியாக இராது. இருவகையாக இதை விளக்கலாம். ஒரு மனிதர் ஓ¡¢டத்திற்குப் போனால் இறந்துவிடுவார் என்று விதி இருக்கிறது. அவர் போனால்தானே? போகாவிட்டால்? அல்லது எச்சரிக்கையோடு இருந்துவிட்டால்?

                வருங்காலம் என்பது பல possibilities உடன் கூடிய sequence of eventsதானே?
                பல Parallel Universes-இல் பல நிகழ்காலங்களும் பல பல வகையான வெவ்வேறு வருங்காலங்களும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
                ரிஷிகளால் அவற்றைப் பார்க்கமுடிந்தது.
                ஞானதிருஷ்டியின் மூலம் பார்த்தார்கள்.
                'தீர்க்கதரிசனம்' என்றும் குறிப்பிடப்பட்டது.
                ஆகையால்தான் அவர்களைத் 'திரிகாலஞானிகள்' என்று சொன்னார்கள்.
                'த்ரஷ்டா' என்னும் பழஞ்சொல்லும் இருக்கிறது. 'த்ரஷ்டா' என்றால் 'பார்ப்பவன்' என்று பொருள்.

                இன்னொரு approach: Heisenbergஐ இழுப்போம்.

                பார்க்கப்பட்டபின் அல்லது சிந்திக்கப்பட்டபின் அந்த மின்னணுவின் போக்குமாறுகிறது.
அந்த Schrodinger's பூனை காணப்படாமல் இருக்கும்போது உயிருடன் இருக்கும்/அல்லது உயிருடன் இல்லாமல் இருக்கும். பார்க்கப்பட்டவுடன் இறந்திருப்பதாகக் காணப்படுகிறது அல்லவா?

                காண்பானால் காணும்செயல் இயற்றப்படும்போது காட்சியின் தன்மை மாறிவிடுகிறது.
                காணும் செயல் நடக்கவில்லையானால்?
                அல்லது காண்பானே இல்லையென்றால்?
                 இந்த திரிபுடி sequence-இல் உள்ள தொடர்பில் சூட்சுமமான ரகசியம் அடங்கியிருக்கிறது. ரகசியமா அல்லது மர்மமா?
              பார்த்து உணர்வதற்கு மனது இல்லையென்றால் ஆகாயம் நீல நிறமாக இருக்குமா?

                அது போல விதியும்; பார்க்கப்படும்போது மாறிவிடுகிறது.
              

               ரிஷிகள் சம்பந்தப்படாத Future; ஜாதகரின் past ஆக நாடி ஜோதிட ஏடுகளில் காணப்படுகிறது. ஆனால் அதன் பின் uncertain ஆகிவிடுகிறது.

                On a broad basis, ஹைஸென்பெர்கின் Uncertainty Principle இல் அவர், "We can know, as a matter of principle, the past in all its details. We cannot know as a matter of principle , the present in all its details."

                பார்க்கவரும்வரையில் அந்த ஏடுகள் இருந்தனவா இல்லையா? - Schrodinger's Cat போல.
                பார்ப்பதற்கு ஆள் வருவான் என்பதற்காக ஓலை காத்திருந்ததா?
                பார்ப்பதற்கே ஆள் இல்லையானால்?
                நடந்தவை, நடப்பவை, நடக்கப்போகின்றவை அனைத்துமே space/time continuum எனப்படும் ஸ்தூல பிரபஞ்சத்துக்கு அப்பாலுள்ள Hyperspace அல்லது Superspace எனப்படும் பராகாச சூன்யத்தில் பல planeகளில் உள்ள பல parallel universeகளில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. They are frozen in time.

         Points போடப்படுவதற்கேற்ற வகையில் ரயில் வண்டி அந்தந்த தண்டவாளத்தில் மாறிமாறிச் செல்வதுபோல நாம் காலத்தின் வழியே சென்று கொண்டிருக்கிறோம்.

அன்புடன்

ஜேய்பி

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

PREVIOUS

RETURN TO MAIN MENU