பதினெட்டாம்
நூற்றாண்டில் காஞ்சிப் பகுதியில் அடிக்கடி நிகழ்ந்த போர்களின்காரணமாகக் காஞ்சி
காமகோடி மடம் கும்பகோணத்துக்கு மாற்றப்பட்டது.
ஆகவே தலைமை ஸ்தானமாகிய
கும்பகோணத்துக்குச் சென்றார்.
அங்கு 9-5-1907
அன்று பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
ஆச்சாரிய பீடத்தில்
அமர்பவர்கள் சன்னியாசிகளாக இருந்தாலும்கூட அவர்கள் ஜகத்குருவாக விளங்குவதால்
அவர்களைச் சக்கரவர்த்திகளைப் போலவே பாவிப்பது நம் சமய மரபு. யானையின்மீது
பவனிவரும் உரிமையும் அரசர்களுக்குரிய விருதுகள், பரிவாரங்கள், இலச்சினை முதலிய
அனைத்துமே அவர்களுக்கு உண்டு.
பிற்காலத்தில்
தாமாகவே இவற்றையெல்லாம் பெருமளவில் குறைத்துக்கொண்டும் அடியோடு நிறுத்தியும்விட்டு
மிக எளிமையாக விளங்கினார் பெரியவர்கள்.
அடிக்கடி யாத்திரைகள்
செய்து மக்களிருக்கும் இடமெல்லாம் சென்று அவர்களுக்கு தரிசனம் கொடுத்து சமயப்பிரசாரம்
செய்து அருள்புரிவது அவர்களின் வழக்கம்.
முதல் வருகையை
அவர் திருவானைக்கா அகிலாண்டேசுவரி ஆலயத்துக்கு மேற்கொண்டார். அவர் முன்னிலையில்
அவ்வாலய குடமுழுக்கு நடைபெற்றது.
பின்னர் இராமநாதபுரத்தில்
உள்ள செட்டிநாட்டின் இளையாற்றங் குடிக்குச்சென்று, அங்கிருக்கும் 65-ஆவது
பீடாதிபதியின் சமாதி ஆலயத்துக்குச் சென்றார்.
திருவானைக்கா
ஆலயத்திருப்பணியை அக்காலத்திலேயே பல லட்சக்கணக்கில் செலவிட்டுச் செய்தநாட்டுக்கோட்டை
நகரத்தாரின் நெருங்கிய தொடர்பு இவ்வாறு ஆரம்பித்துத் தொடர்ந்தது. இந்த
நூற்றைம்பது ஆண்டுக் காலத்தில் இந்திய நாட்டின் பல நூற்றுக்கணக்கான கோயில்களில்
நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் தொடர்ச்சியாகச் செய்யப்பட்டுவரும் ஆயிரக்கணக்கான
திருப்பணிகளில் பலவற்றிற்குக்
காஞ்சிப்பெரியவர்களின் அருளாசியுடன்கூடிய வழிகாட்டலும் இருந்திருக்கிறது.
பிறகு கும்பகோணம்
திரும்பி, 1909-ஆம் ஆண்டு மகாமகத்தில் கலந்துகொண்டார். 1909 - 1910 ஆகிய ஈராண்டுகள்
கும்பகோணத்திலேயே தங்கி சமஸ்கிருத காவியங்கள், நாடகங்கள், வேதங்கள்
முதலியவற்றைக்
கற்றார்.
ஏகாந்தமாகவும்
ஆழமாகவும் கல்வி பயிலவேண்டும் என்று விரும்பிய பெரியவர்கள் 1911-ஆம் ஆண்டு
காவிரிக்கரையில் இருந்த மகேந்திர மங்கலம் என்னும் தனிமையான இடத்தில் பர்ணசாலை
அமைத்து,
அங்கே மிகச ்சிறந்த பண்டிதர்களிடமும் வித்வான்களிடமும் வியாகரணம், தர்க்கம்,
வேதாந்தம், மீமாம்சை, ஆங்கிலம், ஃபிரெஞ்சு, மராத்தி, முதலியவற்றைக் கற்றார்.
சில பெரும்புலவர்களை
வரவழைத்துத் தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் திருமுறைகள், திருக்குறள், திருவிளையாடல்
புராணம் போன்ற அனைத்து நூல்களையும் ஆராய்ந்து தெளிவுறக் கற்றார்.
ஓய்வு கிடைக்கும்போதெல்லாம்
ஒவ்வொரு கலையிலும் தேர்ச்சி பெற்ற நிபுணர்களிடம் பேசிஅக்கலையின் நுட்பங்களை
அறிந்துகொண்டார்.
ஒரு புகைப்பட
நிபுணரை வரவழைத்து அக்கலையையும் அவர் கற்றுக் கொண்டார். இக்காலத்தில்போல user-friendly
சமாச்சாரமெல்லாம் அப்போது கிடையாது. இப்போது நாம் இலக்கை நோக்கி கேமெராவைப்
பிடிக்கிறோம். அதுபாட்டுக்கு மற்றவற்றையெல்லாம் செய்து படமாகத் தருகிறது. ஆனால்
அப்போதெல்லாம்
அப்படியில்லை. நாம்தான் கேமெராவை அட்ஜஸ்ட் செய்து, லைட்டிங்கைச் சரியாக
வைத்து, அப்பெர்ச்சர், டைமிங்,ஃபோக்கஸிங் எல்லாம் செய்து படம் எடுக்கவேண்டும்.
சுருங்கச்சொன்னால்நாம்தான் படம் எடுப்போம். கேமெரா ஒரு கருவிதான். கருவிமட்டும்தான்.
ஜோதிடர்கள்,
வானநூலறிஞர்களைத் தம்முடன் பர்ணசாலையிலேயே தங்கவைத்துக்கொண்டு ஜோதிடம் வானநூல்
முதலியவற்றையும் ஆராய்ந்தார். இசையிலும் பெரும் புலமை பெற்றார்.
அடிக்கடி தியானம்
செய்தார்.
சாதாரணமாக ஆசிரியரை
மாணவர் பணிந்து வணங்கிக் கற்றல் வேண்டும். ஆனால் பெரியவர்கள் விஷயத்திலோ மாணவரை
ஆசிரியர்கள் வணங்கிப் பணிவுடன் கற்றுக்கொடுத்தனர்.
இவ்வாறு நான்காண்டு
காலம் தீவிரமாகக் கல்வி பயின்ற பெரியவர்கள் தம்முடைய இருபதாவது வயதில் சர்வ
சாஸ்திர விற்பன்னராகவும் பல்துறைப் பேரறிஞராகவும் ச்கலகலாவல்லவராகவும் விளங்கினார்.
மிகப்பெரிய விஷயங்களையும்
சிக்கலான விஷயங்களையும் மிக எளிதாகவும் மிக விரைவாகவும் கிரகித்துப் புரிந்து
நினைவில் வைத்துக்கொண்டுவிடுவார். சராசரி மனிதரைவிட அவருடைய மூளையின்
ஆற்றல் லட்சக்கணக்கான மடங்கு அதிகம். மிகவும் தீட்சண்யமான கவனமுடையவர்.
மிகவும் ஆழமான புரிதலும் ஆச்சாரியத்தக்க நினைவாற்றலும் கொண்டவர்.
மற்றவர்கள் பல்லாண்டுகாலம்
செலவிட்டுக் கற்றுக்கொள்ள வேண்டியவற்றையெல்லாம் அவர் அந்த ஏழாண்டுகளில் கற்றுக்கொண்டு
விட்டார். தியானம், ஆழ்ந்த சிந்தனை முதலியவற்றின்மூலம் கற்றவற்றை
இன்னும் விருத்தி செய்துகொண்டார்.
புராணங்கள்,
தலவரலாறு, தற்கால உலகஞானம், விஞ்ஞானம் ஆகியவற்றில் புலமை பெற்றார். மற்றவர்களின்
அறிவின் ஆழத்தைச் சட்டென்று சீர்தூக்கிப்பார்த்துவிடுவார்.
பேரரசன் ராஜேந்திர
சோழர் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம், உத்திரமேரூர் போன்ற கோவில்களுக்குச் சென்று
கோயில் நிர்மாணக்கலை, சிற்பக்கலை, கல்வெட்டியல், வரலாறு, முதலியவற்றையும்
சித்தன்னவாசல்,
குடுமியாமலையில் ஓவியக்கலையையும் ஆராய்ந்தார்.
பரமாச்சாரியார்-#5
நாட்டில் சமயம்
தழைத்தோங்கவேண்டி இருபத்தோரு ஆண்டுகளுக்கு நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்ய சங்கல்பம்
எடுத்துக்கொண்டார். பயணம் முழுமையும் கால்நடையாகவே செல்ல உத்தேசித்தார். மேலும்
சில விரதங்களையும் உறுதிகளையும் மேற்கொண்டார்.
1919-ஆம்
ஆண்டு மார்ச் மாதத்தில் சிவராத்திரி/அமாவாசையன்று தொடங்கிய இந்த யாத்திரை 1939-ஆம்
ஆண்டில்தான் பூரணமடைந்தது. அதுவரையில் கும்பகோணத்திலிருந்த தம்முடைய மடத்துக்கு
அவர் வரவேயில்லை.
பரிவாரங்களுடன்
ஊர் ஊராகச் சென்ற வண்ணம் 1922-ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தை அடைந்து வழிபாடுசெய்து
அங்கிருந்து கடல் மணலை அள்ளியெடுத்துக்கொண்டார்.இம்மணலை அவர்
செல்லுமிடமெல்லாம் கொண்டுசென்று பூஜையில் வைத்திருந்து பன்னிரெண்டு ஆண்டுகள்
கழித்து 1934-ஆம் ஆண்டு வட இந்தியாவின் அலஹாபாத் நகரில் கங்கையில் கரைத்துவிட்டார்.
தனுஷ்கோடியில்
கடலில் நீராடும்போது மடத்து அலுவலகர்களிடம் இரண்டு ஜோடி கதராடைகளைக் கொடுத்து,
உடுத்திக்கொள்ளுமாறும், மில் துணிகளைக் கடலில் எறிந்துவிடுமாறும் கட்டளையிட்டார்.
திருவானைக்கா
அகிலாண்டேஸ்வரிக்கு ஆதிசங்கரர் ஸ்ரீசக்கர தாடங்கங்களை அணிவித்திருந்தார். நாளடைவில்
அவை தேய்ந்துவிட்டதால் புதிதாகச் செய்து அவர் கையாலேயே அணிவித்தார், பெரியவர்கள்.
அங்கிருந்தபோது சகலகலாவல்லவர்களாகிய பெரியவர்கள் நம் சாஸ்திரங்களிலிருந்து பல
விஷயங்களை விஞ்ஞானபூர்வமான விளக்கத்துடன் நகைச்சுவையுடன் மிகவும் எளிமையாகவும்
அழுத்தம்
திருத்தமாகவும் விளக்கலானார். அந்த உத்தியையே கடைசிகாலம் வரைக்கும் கடைபிடித்துவந்திருக்கிறார்.
1924-ஆம்
காவிரியில் பெருவெள்ளமேற்பட்டது. ஆனால் அவருடைய சாதுர்மாஸ்ய விரதத்துக்குப்
பங்கம் வந்துவிடக்கூடாது என்று வெள்ளத்தின் நடுவிலும் இருந்துகொண்டு, தம்முடைய
விரதத்தையும்
பூஜையையும் தொடர்ந்து செய்துவந்தார். கடும்வெள்ளத்தால் பல இடங்களில் மாட்டிக்கொண்டுவிட்ட
மக்களுக்கு உதவிகள் சென்றடைய முடியவில்லை.
ஆகவே தன்னுடைய
யானைகளின் தலைகளின்மீது மடத்திற்குச் சொந்தமான அரிசிமூட்டைகளை ஏற்றி அந்த
இடங்களுக்கெல்லாம் அனுப்பி, அன்னதானம் செய்தார். இதைக் கேள்வியுற்ற மாநில
ஆங்கில
மேலதிகாரி பெரியவர்களைச் சந்தித்து பேட்டி கண்டு, பிரிட்டிஷ் அரசாங்கத்தின்
நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
வல்லம் என்னும்
ஊரில் கிருஸ்துவர்கள், முஸ்லிம்கள், ஹரிஜனங்கள் முதலிய அனைவரும் சேர்ந்து பெரியவர்களுக்கு
வரவேற்பளித்தனர்.
எந்த மதத்தினராக்
இருந்தாலும் சண்டையிடாமல் அவரவர் கோட்பாட்டின்படி கடவுளைத் தொழவேண்டும் என்றும்,
அவ்விஷயத்தில் கிருஸ்தவர்களும் முஸ்லிம்களும் இந்துக்களைவிட அதிக ஈடுபாடு
உள்ளவர்களாக இருப்பதைப் பார்த்து தாம்பாராட்டுவதாகவும், அவர்களைப் பார்த்து
இந்துக்களும் நடந்துகொள்ளவேண்டும் என்றும், அன்று ஆயிரக்கணக்கில் அங்கு கூடியிருந்தஹரிஜனங்களின்
வஞ்சனையற்ற விபூதி பூசிய முகங்களில்நல்ல அருளைத்தாம் காண்பதாகவும் ஹரிஜனங்களின்
நன்மைகளை இதர ஜனங்கள் கவனித்துச் செய்துகொடுக்கவேண்டுமென்றும் தகராறுகளைக்
கோர்ட்டுக்குக் கொண்டுசெல்லாமல் தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டுமென்றும்
கூறினார்.
அங்கு ஹரிஜனங்களுக்கென்று
தனிமையில்விபூதி பிரசாதம் வழங்கினார்.
இது நடந்தது
1924-ஆம் ஆண்டில்.
அவருடைய காலத்தில்
அவர் நிகழ்த்திய பல சமய சமுதாயப் புரட்சிகள் அந்தக் காலத்திலேயே ஆரம்பமாகிவிட்டன.
1925-ஆம்
ஆண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுவிழாவின்போது தமிழ்த் தாத்தா
உவெசாமிநாதய்யரவர்களுக்கு 'தக்ஷிணாத்ய கலாநிதி' என்னும் உயரிய விருதினை அளித்தார்.
1926-ஆம்
ஆண்டு முழுவதும் செட்டிநாட்டு கிராமங்களுக்கு விஜயம் செய்தார். அவ்வமயம் தென்கிழக்காசியாவில்
இந்து மதம் பரவியதைப் பற்றி ஆராய்ந்தார்.
1927-ஆம்
ஆண்டு, பாலக்காடு என்னும் ஊரில் மகாத்மா காந்தி பெரியவர்களைச் சந்தித்து நீண்ட
நேரம் பல விஷயங்களைப் பற்றி உரையாடினார். ஹரிஜனங்களின் ஆலயப்பிரவேசத்தைப்
பற்றியும் பேசினார்கள்.
தமிழ்நாடு கேரளம்
ஆகிய பிரதேசங்களில் நூற்றுக்கணக்கான ஊர்களுக்குப் பெரியவர்கள் சென்றபின்னர்
1931-ஆம் ஆண்டுதான் முதன்முதலாகக் காஞ்சிபுரத்துக்கு வந்தார். திருவண்ணாமலையைக்
கிரிவலம் வந்தபின்னர், திருக்காளத்தி, திருப்பதி முதலிய இடங்களுக்குச் சென்றுவிட்டு
சென்னை வந்தார்.
உடன் காசி யாத்திரையை
மேற்கொண்டார்.
முன்கூட்டியே
அனந்தகிருஷ்ணசர்மா என்பவரைக் கால்நடையாக அனுப்பி வழியை நன்கு தெரிந்துகொண்டுவருமாறு
செய்தார். இந்த யாத்திரையின்போது செல்லும் இடங்களிலெல்லாம் உதவி புரியுமாறு வழியில்
இருக்கும் அனைத்து மாநில ஆட்சியாளர்களுக்கும் மஹாராஜாக்களுக்கும் பிரிட்டிஷ்
அரசாங்கம் உத்தரவு அனுப்பி, மேலும் பல சலுகைகளை அளித்தது.