திருவண்ணாமலை
சென்று அங்கிருந்து ஆந்திரா வழியாக ஹைதராபாத் அடைந்தார்.
அக்காலத்தில்
உலகிலேயே மிகப்பெரிய பணக்காரராக விளங்கிய நிஜாம் மன்னர் பெரியவர்களுக்கு அரச
வரவேற்பளித்தார்.
ஜனசஞ்சாரமேயில்லாத
பிரதேசங்களில் பிரயாணம் செய்ய வேண்டியிருந்ததைமுன்னிட்டு, பெரியவர்கள் அவர்களுடைய
பரிவாரத்தில் ஒரு பகுதியையும் வண்டிகளையும் கால்நடைகளையும் சாமான்களையும்
ஹைதராபாத்திலேயே விட்டுவைத்தார். காசி யாத்திரை முடிந்து நான்காண்டுகள்
கழித்து திரும்பும்போது மீண்டும் பெற்றுக்கொண்டார்.
ஹைதராபாத்திலிருந்து
புறப்பட்டு சிக்கந்தராபாத்துக்குச் சென்றார்.
காடுமலைகளைக்
கடக்கும்போதெல்லாம் செஞ்சி குடியினரைப் போன்ற ஆதிவாசிகள் பாதுகாப்பாக உடன்
வந்து வழிகாட்டினர்.
நாக்பூரில்
ஆந்திரர், மராத்தியர், தமிழர் அனைவரும் சேர்ந்து பெரியவர்களை வரவேற்றனர்.
அதன்பின்னர்
விந்திய மலையைக் கடந்தார்கள். அப்போது அங்கு கடும் வரட்சி. 120 டிகிரி உஷ்ணம்.
ஆகவே பகலில் கூடாரங்களில் தங்கியிருந்துவிட்டு இரவிலேயே தீவட்டிகளைக் கொண்டு
பயணம் செய்ய வேண்டியிருந்தது.
அவருடன் வந்த
பரிவாரத்தில் வைதிக வாழ்க்கை மேற்கொண்ட ஆசாரசீலர்கள் பலர் இருந்தனர்.
நாளொன்றுக்கு பதினைந்து
மைல் தூரமே செல்லவேண்டிய திட்டத்தைக் கைவிட்டுவிட்டு இருபத்தைந்து மைல்களையாவது
கடக்கவேண்டியதாயிற்று. கடுங்கோடையால் பாதிக்கப்பட்டிருக்கும் அந்தப் பிரதேசத்தை
விரைவில் கடந்துவிடவேண்டும் என்ற நோக்கத்தினால் பயணத்தை விரைவுபடுத்திக்கொண்டார்.
கோடையையும் வழிநடையையும் தாங்கிக்கொள்ளமுடியாதவர்கள் ரயிலில் அனுப்பப்பட்டனர்.
தாம் மட்டும் சிலருடன் கால்நடையாகத் தம் பயணத்தைத் தொடர்ந்தார்.
ஜபல்பூரில்
நர்மதையாற்றில் நீராடியபெரியவர்கள் விரைந்து சென்று அலகாபாத்தை அடைந்தார்.
அங்கு திருவேணி
சங்கமத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடுமிடத்தில் ராமேஸ்வரத்திலிருந்து
கொண்டுவந்த கடற்கரை மணலை கங்கையில் கலந்துவிட்டார்.
அந்த மணல் அதுகாறும்
இருந்த வெள்ளிப்பேழையை அங்கிருந்த ஒரு பூசாரிக்கு தானமாகக் கொடுத்துவிட்டார்.
அங்கிருந்து
கங்கைநீரை ஒரு செம்பில் எடுத்துக்கொண்டார்.
காசியிலும்
கங்கைத்தண்ணீர் எடுத்துக்கொண்டார்.
இதை அவர் செல்லுமிடத்திற்கெல்லாம்
சகலமரியாதைகளுடன் கொண்டுசென்று, தினசரி பூஜை செய்துவந்தார்.
சில ஆண்டுகள்
கழித்து, தாம் மீண்டும் ராமேஸ்வரம் சென்றடைந்தபிறகு அந்த கங்கை நீரை ராமேஸ்வரக்
கடலில் சேர்ப்பித்துவிட்டார்.
அலகாபாத்தில்
பெரியதொரு ஆன்மீக, கலாசார கருத்தரங்கு நடைபெற்றது.
செல்லுமிடங்களிலெல்லாம்
தாமும் பல கருத்துக்களையும் ஆன்மீக அருளுரைகளையும் விளக்கங்களையும் அனைவருக்கும்
தந்ததோடு, மிகநுட்பமாக பல விஷயங்களை நேரடியாகத்
பார்த்தும், நேரடியாகத் தெரிந்துகொண்டும், மற்றவர்களிடம் கேட்டு அறிந்துகொண்டும்,
கருத்துப் பரிமாற்றங்கள் மூலமும் தம்முடைய விஷயஞானத்தைப் பெரிதும் விருத்தி
செய்துகொண்டார்.
Hands-on-training,
On-going Process என்றெல்லாம் இந்தக் காலத்தில் சொல்கிறோம்.
பெரியவர்கள்
அவற்றையெல்லாம் கடைபிடித்துத் தம் விஷயஞானத்தை விசாலப்படுத்திக்கொண்டார்.
'ஜகத்குரு' என்ற பெயரைப் பெற்றவர், பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டியதைத்
தயங்காமல் கேத்தும்த் தெரிந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அங்கிருந்து
3-10-1934-இல் காசியை அடைந்தார்.
பரமாச்சாரியார்-#7
The Making of a Paramacharyar - The Guru without a guru #7
அங்கிருந்து
3-10-1934-இல் காசியை அடைந்தார். அங்கிருந்த மிகப்பெரிய அறிஞர்களும் காசி ராஜா
உட்பட பல அரச்ர்களும் பெரியவர்களை வரவேற்றனர். காசியில் விஸ்வநாதரையும் அங்குள்ள
சங்கர மடத்திலுள்ள ஆதிசங்கரரின் திருவுருவையும் வழிபட்டார்.
நவராத்திரியையும்
அங்கேயே கொண்டாடினார். காசி இந்து சர்வகலாசாலையிலும் உபதேச மொழிகளையும் பொழிந்தார்.
காசி பண்டிதர்களின்
மகாசபையொன்றைக்கூட்டி ஆதிசங்கரரின் பீடங்களைப் பற்றி ஆராய்ச்சியொன்றை நடத்தினார்.
காஞ்சி காமகோடி பீடமே ஆதிசங்கரரின் சாட்சாத் பீடம் என்று அனைவரும் கையெழுத்திட்டுக்
கொடுத்தனர். ஆதிசங்கரர்ரின் அடிச்சுவட்டைப் பின்பற்றியே இந்த யாத்திரையை
மேற்கொண்டதாக இந்தியில் ஒரு பேருரையை ஆற்றிவிட்டு காசியைவிட்டு 1935-ஆம் ஆண்டில்
புறப்பட்டு புத்தகயா அடைந்தார்.
அங்கு புத்த சமயத்தினர் பெரும் வரவேற்பு தந்த பின்னர், புத்தர் ஞானம் அடைந்த
போதி மரத்தையும் புத்தரின் திருவுருவையும் தரிசித்து விட்டு கல்கத்தா சென்றார்.
கல்கத்தாவின்
பிரபலமான காளி கோயிலுக்கு அவர் சென்றிருந்த போது அங்கு நடைபெறும் உயிர்ப்
பலியைநிறுத்தக்கோரி, ஓர் இயக்கத்தினர் சத்யாக்கிரகம் செய்துகொண்டிருந்தனர்.
காளி கோயிலில்
அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது தேவிக்கு அர்ப்பணமாக பலியிடும் பழக்கம்
நமது நாட்டில் வெகுகாலம் இருந்துவருகிறது என்றும் சாஸ்திரங்களிலுள்ள நம்பிக்கையினாலேயே
புலால் உண்ணும் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இந்த வழக்கத்தை மேற்கொண்டுள்ளார்கள்
என்றும் இவ்விதம் பலியிடுவதால் பலியிடுவோர்களுக்கும் பலியிடப்படும் பிராணிகளுக்கும்
நன்மையே ஏற்படுமென்பது சாஸ்திரங்கள் அனுமதித்துள்ள உண்மையென்றும் ஜீவஹிம்சையைத்
தடுக்க அக்கறைகொண்டவர்கள் ஆகாரத்திற்காக கோடிக்கணக்காக உலகெங்கும் பிராணிகள்
கொல்லப்படுவதை ஏன் தடுக்க முயலக்கூடாது என்றும் கேட்டார்.
கல்கத்தாவிலிருந்து
பூரி வந்து சேர்ந்து, அங்கிருந்த ஜகந்நாத பிடத்தில் அத்வைத மட சந்நியாசிகள்
புடைசூழ வீற்றிருந்தருளினார்.
1939-ஆம் ஆண்டில்
திருக்காளத்தி, திருப்பதி திருத்தணி வழியாகக் காஞ்சிபுரத்தை அடைந்து காமாட்சியம்மனைத்
தரிசித்துக் கொண்டு சிதம்பரம் வந்து நடராஜ தரிசனம் செய்து அவ்வாண்டு ஜூலை
மாதத்தில் ராமேசுவரம் அடைந்து சமுத்திர ஸ்நானம் செய்து அங்கு கங்கையிலிருந்து
கொண்டுவந்த கங்கை நீரை கடலில் சேர்ப்பித்து விட்டார்.
இவ்வாறு அவருடைய
கங்கா யாத்திரையைப் பூர்த்தி செய்து கொண்டார்.
பின்னர் 29-07-1939-இல்
கும்பகோணம் சென்றடைந்து தம்முடைய இருபத்தோராண்டு சங்கல்ப விஜய யாத்திரையைப்
பூர்த்தி செய்துகொண்டார்.