பரமாச்சாரியார்
THE GURU WITHOUT A GURU
PART V
VIDYALANKARA
DR.S.JAYABARATHI
29-07-1939-இல்
கும்பகோணம் சென்றடைந்து தம்முடைய இருபத்தோராண்டு சங்கல்ப விஜய யாத்திரையை பூர்த்தி
செய்து கொண்டார்.
மீண்டும் தல
யாத்திரைகளை மேற்கொண்டார்.
1944-இல் காஞ்சி
காமாட்சி கோயிலுக்குகுடமுழுக்குச் செய்வித்தார்.
அதிலிருந்து
பல்லாண்டு காலம் இடைவிடாது தல யாத்திரைகளைச் செய்துகொண்டேயிருந்தார்.
மாங்காட்டில்
விளங்கும் காமாட்சியம்மன் சில நூற்றாண்டு காலமாக சரியான வழிபாட்டு முறைகள்
இல்லாமற்போனதால் சிறப்பிழந்து காட்சியளித்தாள். அங்குள்ள சிவாச்சாரியார்களிடம்
மீண்டும் ஆகம தந்திரங்களின்படி கிரமமான வழிபாட்டினை நிகழ்த்த வழி சொன்னார். ஆதிசங்கரரால்
அங்கு நிறுவப்பட்டிருந்த அர்த்தமேரு யந்திரம் இன்று லட்சக்கணக்கான மக்களைகவர்ந்து
இழுத்துக் கொண்டிருக்கிறது.
அம்பிகைக்குரிய
யந்திர சாதனங்களில் உயரியது ஸ்ரீசக்ரம் என்னும் யந்திரம். பொதுவாக யந்திரங்களிலேயே
உயரியது என்று கருதப்படுவதால் அதற்கு 'சக்ரராஜம்' என்ற பெயர்கூட உண்டு.
நாற்பத்துமூன்று முக்கோணங்களும் ஒன்பது ஆவரணங்களும் எட்டுத்தளம், பதினாறு
தளம் கொண்ட இரு தாமரைகளும் மூன்று வட்டங்கள், மூன்று சதுரங்கள் கொண்ட அமைப்புகள்
அதில் இருக்கும். மூன்று சதுரங்களும் நாற்புறமும் திறந்திருக்கும். இரண்டு
பரிமாணங்களில் இது விளங்கும்போது ஸ்ரீசக்ர
யந்திரம் என்று சொல்கிறோம்.
அதில் உள்ள
ஒன்பது ஆவரணங்களையும் ஒன்பது அடுக்குகளாக்கும்போது முப்பரிமாணத்தில் அது விளங்கும்.
அவ்வாறு விளங்குவதை 'ஸ்ரீசக்ரமேரு' என்று சொல்கிறோம்.
மாங்காட்டில்
உள்ள அர்த்தமேருவில் அடிவாரத்தில் உள்ள முதல் மூன்று அடுக்குகளும் முப்பரிமாணத்தில்
இருக்கும். அதற்குமேலுள்ள ஆறு அடுக்குகளும் மேலேயுள்ள சமதளத்தில்
வரையப்பட்டிருக்கும். பாதி மேரு - அதான் அர்த்தமேரு(ardhamEru).
பொருள்களை
வரவழைப்பதுபோன்ற சித்திகளைச் செய்து அவருடைய ஆற்றல்களை அவர் வெளியில் காட்டுவதேயில்லை.
ஆனால் அவருடைய அளவிடமுடியாத பேராற்றலினைப் பல சமயங்களில் பலருக்கும் அவர்
புரிந்துள்ளபேரருளின்மூலம் அவரவரே அறிவர்.
அவருடைய மிகக்கடுமையான
விரதங்களில் அவர் மேற்கொள்ளும் நிஷ்காம்ய மௌனமும் உண்டு. சாதாரணமாக வாய்
பேசாவிடினும் எழுதிக்காட்டல், சிந்தித்தல், பொருள்களின்மீது கவனத்தைச் செலுத்துதல்,
மற்றவர் சொல்வதைச் செவிமடுத்தல் போன்றவை சாதாரண மௌன விரதத்தில் நிகழ்ந்தவண்ணமிருக்கும்.
ஆனால் நிஷ்காம்ய
மௌனத்தின்போது கண்கள் திறந்திருந்தாலும்கூட முன்னால்போய் நிற்பவர்களைப் பற்றிய
எந்த உணர்வும் தோன்றாது. சலனமற்ற சஞ்சலமற்ற ஆழ்ந்த அந்த மோன நிலையில் ஞான
வரம்பினையும் தாண்டி நிற்பார், நம் பெரியவர்கள்.
தேனம்பாக்கம்
என்னும் சிற்றூர் அவருடைய மோனநிலைத் தவத்திற்கு நிலைக்களனாக விளங்கிவந்தது..
இந்து சமயத்துக்கு
ஆணிவேராக விளங்கும் வேதங்களின் பல பகுதிகள் மறைந்துவிட்டன. எஞ்சி நிற்பதில்கூட
சில பகுதிகள் மறையும் கட்டத்தில் உள்ளன. இருபதாம் நூற்றாண்டின் இடைப்
பகுதியில்கூட அப்படிப்பட்ட நிலைமை அதர்வ வேதத்துக்கு ஏற்பட்டது.
அந்த வேதத்தின்
குறிப்பிட்ட இரண்டு பாகங்கள் இருக்குமிடம் தெரியவில்லை. பெரியவர்கள் தேடச ்செய்தார்.
வடநாட்டில் ஒருமூலையில் இருந்த பண்டிதர் ஒருவருக்கு மட்டுமே அந்த பாகங்கள்
தெரிந்திருப்பதாக
அறிந்தார். ஆகவே வேதங்களைப் படித்திருந்த இரண்டு வித்தியார்த்திகளை (வேதப்பயிற்சி
பெறுபவர்கள்) இதற்காகவே அந்தப் பண்டிதரிடம் அனுப்பி, அவரிடமிருந்து கற்றுக்கொண்டு
வரச்செய்தார்.
பெரியவர்கள்
அவ்வாறு செய்திராவிட்டால் அதர்வ வேதத்தின் அவ்விரு பாகங்களும் அப்பண்டிதரின்
மறைவோடு அடியோடு போயிருக்கும்.
பரமாச்சாரியார் -#9
தமிழ் மக்கள்
நலமுடன் இருக்கவேண்டி சென்னை மாநகரில் அஷ்ட லட்சுமி கோயிலைக் கட்டச்செய்தார்.
தற்சமயம் வியக்கத்தக்க அளவிற்கு சென்னையில் பணப்புழக்கம் விளங்குகிறது.
பெரியவர்கள்
இதுவரையில் லட்சத்து மேற்பட்ட மைல்கள் பிரயாணம் செய்திருக்கிறார்.
பல்லாயிரக்கணக்கான
ஊர்களுக்கும் சென்றிருக்கிறார்கள். ஆனால் அவருடையயாத்திரையில் எந்த
இடத்திற்குமே அவர் விமானத்திலோ, காரிலோ, ரயிலிலோ சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பகாலங்களில் பல்லக்கைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பிற்காலத்தில் சற்று
ஓய்வெடுப்பதற்காக, கூடவே வந்துகொண்டிருக்கும் சைக்கிள் ரிக்ஷாவில் அமர்ந்துகொள்வார்..
ஆகவே அவருடைய பிரயாணத்தில் மிகப்
பெரும்பகுதி கால்நடையாகத்தான் நிறைவேறியுள்ளது.
இன்னொரு விஷயம்.
அவருடைய பிரயாணத்தின் பெரும்பகுதி 1950-க்கும் முன்னர் நடைபெற்றிருக்கிறது.
அக்காலத்தில் அவர் சென்ற பெரும்பான்மையான இடங்களில் நீர் வசதியோ மின்சார வசதியோ
கிடையாது. சரியான தார்ச்சாலைகள் கிடையாது. போகுமிடமெல்லாம் மடத்திலிருந்தே
பாத்திரங்கள், உணவுப்பொருள்கள் உடன்சென்றாலும்கூட அவர் ஒருவேளைதான் ஏதாவது
ஒரு வீட்டில் அல்லது பிற மனிதர் தரும் மிக எளிமையான உணவை பிட்சையாக உட்கொள்வார்.
பலநாட்கள்
உண்ணாவிரதம், மௌனவிரதம்; பல நாட்களில் அரிசிப்பொரியோ அல்லது வாழைக்காயி லிருந்து
தயாரிக்கபட்ட மாவினால் செய்யப்பட்ட கூழோதான் ஆகாரம். அவருடைய ஆகாரத்தில்
உப்பு, புளி, மிளகாய் இராது.
சில ஆண்டுகள்
வெறும் பசும்பாலை மட்டுமே பச்சையாக அருந்தினார். அன்னம் புசித்த நாட்களில்
மூன்றே கைப்பிடி அன்னமே உட்கொள்வார்.
தினமும் காலை
4-30க்குப் பேரிகை முழங்கும். அனைவரும் அப்போது எழவேண்டும். ஆனால் பெரியவர்களோ
அதற்கு முன்பே எழுந்து தியானத்தில் இருப்பார்கள்.
பிறகு, தான்
பூஜை செய்யும் ஸ்ரீமத் திரிபுரசுந்தரி, ஸ்ரீமத் சந்திரமௌளீஸ்வரர் சன்னிதியில்
கோபூஜை, கஜபூஜை; பின்னர் அவருடைய சொந்தப் பூஜை. காலை 7-30க்குச் சிஷ்யர்களுக்குப்
பாடம்; தத்துவ ஆராய்ச்சி. பலவித நூலாராய்ச்சி. எங்கு பயணம் செய்தாலும் அவருடைய
நூல்நிலையமும் பயணம் செய்யும்.
காலை 9-00க்குப்
பக்தர்கள் தரிசனம். பல்துறைக்கலைஞர்கள் சந்திப்பு. மதியம் நித்திய பூஜை 3-00
மணிவரை நடைபெறும்.
இதன்பின் 15
நிமிடத்தியானம். பிறகேமடத்து நிர்வாகம்; பத்திரிக்கைச் செய்திகள். மீண்டும்
பக்தர் தரிச்னம். அவரவர் மொழிகளில் பேசுவார்.
மாலை கஜபூஜை,
பஜனை, வரவு செலவு கணக்கைச் செவிமடுத்தல். பின்னர் மீண்டும் ஏகாந்த தியானம்.
இரவு 8-00 மணிக்கு இரவு பூஜை. அதன்பின்னர் இரவு 11-00 மணிவரை அருளுரை. பின்னர்
மக்களுக்கு
அறிக்கை. பத்திரிக்கைகளுக்கு அறிவிப்பு என்ற ஆலோசனைக்குப் பின்னர் மீண்டும்
ஏகாந்த தியானம். இரவு 9-00 மணி அளவில் ஓய்வு.
தரையின்மேலோ
பலகையின்மேலோ ஒரு காவித்துணியை விரித்து கண் அயர்தல் நடைபெறும்.
மீண்டும் காலை 4-30 பேரிகை
சத்தத்துக்குமுன்னதாக எழுச்சி.
1944 முதல்
1953வரை திருத்தல் யாத்திரைகளைச் செய்தார்.
காமகோடி பீடத்தின்
ஆரம்பநிலையமான காஞ்சிபுரத்திலேயே மீண்டும் ஸ்தாபிக்கவேண்டி காஞ்சி சென்றார்.
22-07-1953-யன்று
காஞ்சியில் மீண்டும் காமகோடி பீடம் சயல்படத்தொடங்கியது.
காஞ்சி சங்கராச்சாரியார்
என்றும் காஞ்சிப்பெரியவர்கள் என்றும் ஆச்சாரிய சுவாமிகள் என்றும் பரமாச்சாரியார்
என்றும், செல்லமாகப் 'பெரியவாள்' என்று அவாள் இவாள் நம்மவாளால் அழைக்கப்படும்
பெரியவர்கள் கடைசி சில ஆண்டுகள் தவிர மற்ற காலங்களில் தம்முடைய சுற்றுப்பயணங்களைத்
தொடர்ந்து செய்தே வந்திருக்கிறார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU