ஒரு காட்டில் ஒரு பர்ணசாலையை அமைத்துக்கொண்டு வசிக்கலானார். தாம் உயிருக்குயிராய் நேசித்த சமஸ்கிருதத்தில் பேசுவதையும் எழுதுவதையும் படிப்பதையும் அறவே நிறுத்திவிட்டார்.
அந்தக் காட்டின் அருகில் வசித்த காட்டுப்புறத்து மக்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். அந்த வட்டார மொழியாகிய பைசாச்சி மொழியைத்தான் அவர்களும் பேசினார்கள்.
அது வளமற்றதொரு மொழி. கொச்சையான மொழி என்று அக்காலத்தினரால் கருதப்பட்ட மொழி. அதனால்தானோ என்னவோ அப்படி ஒரு பெயர்.
அம்மொழியில் அவரும் பேசினார். நாளடைவில் அம்மொழியில் சில சீர்திருத்தங்களைச் செய்தார்.
சமஸ்கிருததில் ஏதும் செய்யமுடியாமற் போய்விட்டது. ஆகவே அவருள் இருந்த கவிதா சாமர்த்தியமும் படைப்பாற்றலும் வெளிப்படுத்தப் படமுடியாமல் அமுங்கிக்கிடந்தன.
ஒருநாள் அவருடைய சாரஸ்வத்தியம் எனப்படும் ஆற்றல் உடைத்துக்கொண்டு வெளிப்பட்டது.
பைசாச்சியில் அது பரிணமித்தது.
கடல்மடை திறந்தன்ன அது பெருக்கெடுத்து ஓடியது.
ஒரு பெரும்காப்பியமாக உருவாகியது. இராப்பகலாக அதனை குணாட்டியர் இயற்றினார்.
தம்முடைய இரத்தத்தில் தூரிகையைத் தோய்த்து பூர்ஜபத்திரத்தில் அதனால் அவர் எழுதினதாகக் கர்ணபரம்பரைச் செய்தி சொல்லும். பூர்ஜபத்திரம் என்பது ஒருவகையான மரத்தின் பட்டையின் உட்புறமாக இருக்கும் மெல்லிய தோல் போன்ற பட்டை. ஒருவகை இலையையும் சொல்வார்கள்.
ஆனால் சில மாதங்களில் அவருக்கு ஒரு விரக்தி ஏற்பட்டது.
இதையெல்லாம் எழுதி என்ன செய்யப் போகிறோம்? இந்தக் காட்டில் யாராவது சிலாகித்துச் சிறப்பிக்கப் போகிறார்களா? இந்தக் காட்டு மொழியில் எங்கு எப்படி அரங்கேறமுடியும்? பாவம், இக்காவியத்தின் தலைவிதி. இது இந்த மொழியில் அமைந்துவிட்டதே.
இப்படி விரக்தி அதிகம் மேலிட்டு, ஒருநாள் அவர் சுள்ளிகளைப் போட்டு பெருந்தீயன்றை மூட்டி, அதில் அந்தக் காப்பியத்தின் ஓலைகளை ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்துவிட்டு நெருப்பில் போடலானார்.....
இதன் நடுவே.....
உஜ்ஜயினி மாநகரில் சந்திரகுப்தன் தன் மன அமைதியை இழந்தான்.
அவனைவிட பாணினி.
"ஒரு பெரும்புலவனை அவமானத்தால் குறுகச் செய்து அவனுடைய கவித்துவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு அவனுடைய வாழ்க்கையையும் எல்லாவகையிலும் பொருளற்றதாக்கி விட்டோமே. அதனால் சமஸ்கிருதத்திற்கு பேரிழப்பாயிறே?"என்று தூக்கமிழந்து தவித்தார்.
ஒருநாள் பாணினி, குணா¡ட்டியரைத் தேடிப்புறப்பட்டுவிட்டார்.
சிலநாட்களில் அவர் குணாட்டியர் தங்கியிருந்த காட்டுக்கு வந்து விட்டார்.
குணாட்டியர் இருக்குமிடத்துக்கு காட்டுவாசிகள் வழிகாட்ட வந்து சேர்ந்தார்......
குணாட்டியர் ஒவ்வொரு ஓலையாக எரித்துக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்துவிட்டார்.
விரைந்து சென்று குணாட்டியரின் கையில் இருந்த சுவடிகளைப் பறித்து எடுத்துக்கொண்டார். அவற்றை அவரும் பார்த்தார்.
அதிர்ந்து போனார்.
ஒரு கொச்சை மொழியில் இப்படிப்பட்ட உன்னதமானதொரு சிறந்த காவியத்தை உருவாக்கவும் முடியுமா?
உருவாகியிருந்ததே?
ஆனால் அந்த காவியத்தில் ஆறு லட்சம் கிரந்தங்கள் நெருப்பில் போடப்பட்டுவிட்டன.
மீதமிருந்த சுவடிகளை எடுத்துக்கொண்டு குணாட்டியரைக் கையைப் பிடித்து உஜ்ஜயினிக்கு அழைத்துவந்துவிட்டார்.
பைசாச்சி மொழியில் இஇருந்த அந்தப் பெருங்காப்பியம் அதன் கருப்பொருள்களுக்கேற்பப் பெயரிடப்பட்டது.
'பிருஹத்கதா'
என்னும் காப்பியம் அது.
'பெருங்கதை'
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$